பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், ஜாமியத்துல் அஹ்லே குர்ஆன் வல்ஹதீஸின் தலைவருமான மவ்லவி. எஸ். கமாலுதீன் மதனீ அவர்களை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களுரில் ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக சென்றிருந்தவருக்கு, லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது. பிறகு அவர் சேலத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அது பெரும் வலியாகி அவரை சிரமப்படுத்தியது.
உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரை தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, ம.ம.க பொதுச் செயலாளர் அப்துஸ் சமது ஆகியோர் நலரம் விசாரித்தனர்.
அப்பழுக்கற்ற அந்த ஊழியரின் உடல்நலம் மேம்பட இறைவனிடம் பிரார்த்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக