சனி, 31 அக்டோபர், 2009

பாஜக ஆட்சியில் ரூ. 1,60,000 கோடி ஊழல்!

பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவு முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது.

2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் செüரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் செüரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.


நன்றி:
http://www.dinamani.com

தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் BJP

வடக்கில் பா.ஜ.க தங்களுக்குள் அடித்துக்கொள்வது போதாதென்று தெற்கேயும் அடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது.

தற்பொழுது கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பாவிற்கும் கர்நாடக கேபினெட் அமைச்சர்களான செல்வ செழிப்புமிக்க பெல்லாரி மாவட்டத்தின் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையை தீர்த்து வைக்க பா.ஜ.க வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லீ கர்நாடகா விரைந்துள்ளார்.

பா.ஜ.க வில் ஏற்பட்டு வரும் உட்கட்சி பூசல் புற்று நோய் போல் நாளுக்கு நாள் பரவி வருகின்றது. இந்த உட்கட்சி பூசலால் அந்த கட்சி ஒவ்வொரு மாநில தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க பா.ஜ.க மத்தியிலிருந்து அருண் ஜெட்லியை கர்நாடகாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

கர்நாடகாவில், எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் ஏற்கனவே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறை இவர்களுக்கிடையே கிளம்பியிருக்கும் பிரச்சனை கர்நாடக அரசு புதிதாக விதித்துள்ள வெல்ல நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வண்டிகளுக்கான வரியால் ஏற்பட்டுள்ளது. இந்த வரி இரும்புச் சுரங்கத்தில் செல்வாக்கு மிகுந்து திகழும் தங்களை நேரடியாக பாதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த பிரச்சினையை அடுத்து ரெட்டிக்கு நெருக்கமான கலெக்டரும் காவல் துறை ஆணையரும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக முதல்வரிடம் இது பற்றி கேட்டதற்கு, அவர் இதனை மறுத்துள்ளார். அருண் ஜேட்லியின் வரவு பா.ஜ.க விற்கு எதிராக கிளப்பப்பட்டு வரும் புரளிகளைப் பற்றி விசாரணை செய்வதற்காக என்று அவர் கூறினார்.

நன்றி,
NDTV.

மோடிக்கு பன்றி காய்ச்சல்

குஜராத் முதலமைச்சர், படுகொலைப் புகழ் மோடி "பன்றி" காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.

குஜராத் அரசின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், "மோடி 7 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார். அவசரமான சூழ்நிலைகளில் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வார்" என்று அவர் கூறினார்.

அவரது சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் அவரது உடல் நிலை குணமடைய விசேஷ பூஜைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பூஜைகள் வைரசின் தாக்கத்தை மாற்றி அமைக்கும் என்று நீளம் படேல் என்ற பா.ஜ.க வின் யுவ மோட்சா தொண்டர் ஒருவர் கூறினார்.(?)

நன்றி,
NDTV.

கடுமையான தண்ணீர் நெருக்கடியில் பாலஸ்தீன்

பாலஸ்தீனியர்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது கனவாகிக் கொண்டிருக்கிறது. "பாலஸ்தீனின் பெரும்பகுதியை மக்களுக்கு குடிப்பதற்கு கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் செய்த அதே வேளையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தடையில்லாத தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது இஸ்ரேல்.

மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நீச்சல் குளம், நன்றாக தண்ணீர் விடப்பட்ட புல் தரைகள், மேலும் விவசாய நிலங்கள் என்று தண்ணீர் கணக்கில்லாமல் செலவிடப்படும் நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை" என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.

"மேற்குக் கரையிலுள்ள 180,000 - 200,000 பாலஸ்தீனியர்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள குழாய்களும் காய்ந்து கிடக்கின்றன" என்றும் அந்த மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.

மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் உள்ள ஒரு பாலஸ்தீனிய குடிமகன் ஒரு நாளைக்கு பயன் படுத்தும் 70 லிட்டர் தண்ணீரை விட ஒரு இஸ்ரேலிய குடிமகன் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவு நான்கு மடங்கு அதிகம்.



மேலும் மேற்குக்கரையின் பிரதான தண்ணீர் ஆதாரத்திலிருந்து இஸ்ரேல், தான் ஆக்கிரமித்த இடத்தில் குடியமர்த்திய யூதர்களுக்கு 80% தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றது. இஸ்ரேலிற்கு இதை தவிர வேறு தண்ணீர் ஆதாரங்கள் இருந்த போதும் மேற்குக் கரையின் இந்த தண்ணீர் ஆதாரத்தை பயன்படுத்துவது அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசா பகுதியின் தண்ணீர் சுத்திகரிப்பை சீர்செய்யும் பணி 2007 இல் இஸ்ரேல் விதித்த தடையினால் பாதிக்கப்பட்டது. மேலும் இஸ்ரேல் அந்த சுத்திகரிப்பு பணியை சரி செய்வதற்கு தேவையான பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்காமல் தடை செய்து வருவது இந்த தண்ணீர் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் காசா மீது இஸ்ரேல், இந்த வருட தொடக்கத்தில் தொடுத்த போரினால் கிணறுகள், குளங்கள், மற்றும் நீர் ஆதாரங்கள் பழுதடைந்துவிட்டன.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இது பற்றி கூறுகையில், "காசா பகுதியின் நீர் ஆதாரங்கள் 90 - 95 % தூய்மையற்ற நிலையில் உள்ளன" என்று கூறியுள்ளது.

இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை வழக்கம் போல் மறுத்துள்ளது.

நன்றி,
அல்ஜசீரா.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
மேலப்பாளையத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், 29வது வார்டு மற்றும் 33வது வார்டு பகுதி மக்களுக்கு இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு வழங்காததை கண்டித்தும், மேலப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஆடறுப்பு மனையை உடனே திறக்க வலியுறுத்தியும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.10.2009 காலை 10 மணிக்கு மேலப்பாளையம் சந்தை முக்கில் வைத்து நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கே.எஸ்.காசீம் பிர்தௌசி, செயலாளர் இ.எம்.அப்துல் காதர், பொருளாளர் ஏ.காஜா, துணைத்தலைவர் கே.கே.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் ஏ.வாகித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் புளியங்குடி செய்யது அலி சிறப்புரையாற்றினார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.மைதீன் சேட்கான், த.மு.மு.க.மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாரூக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


மதரசாக்களை விரும்பும் இந்து மாணவர்கள்..

உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது. இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.

இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.

இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.

UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது. இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.

UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

நன்றி,
Daily Times.

ஜார்கண்ட் - தேர்தல் தேதியை தள்ளிப் போட முஸ்லீம்கள் வேண்டுகோள்

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முஸ்லீம்களும் சில அரசியல் கட்சிகளும் கூறியுள்ளன.

ஜார்கண்ட் மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேதியை தேர்தல் ஆணையம் நவம்பர் 27 ஆக முடிவு செய்துள்ளது. இது ஹஜ்ஜுப் பெருநாளின் முந்தைய நாள் என்பதாலும் வெள்ளிக்கிழமை (ஜும்மா) என்பதாலும் ஜார்கண்ட் முஸ்லீம்கள் இதனை வன்மையாக கண்டித்துள்ளனர்.

இந்த தேதிகளை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

முஸ்லீம்களின் இந்த கோரிக்கையை காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோட்சா ஆகிய அரசியல் கட்சிகளும் ஆமோதித்துள்ளன.

கூடவே பா.ஜ.க வும் இந்த தேதியினை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றது. நவம்பர் 27 சுப முகூர்த்த நாள் என்பதால் என்றும் அதிகமான திருமணங்கள் அன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் தேர்தல் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சி கருதுகிறது.

கடந்த ஞாயிறு 28 இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்த தேதியில் தேர்தல் நடத்தப்படுவதினால் முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தேர்தல் ஆணையத்திடமும், பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்ததேதி மாற்றப்படவில்லை என்றால் தாங்கள் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப் போவதாக கூறினர்.

ஐந்து கட்டங்களில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் நவம்பர் 27 ல் தொடங்கி டிசம்பர் 18 ல் முடியும். இந்த டிசம்பர் 18-ம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் அந்த தேதியினையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து ஜார்கண்ட் ஹஜ் கமிட்டியின் தலைவர் ஹாஜி ஹுசைன் அன்சாரி கூறுகையில், "தேர்தல் ஆணையம் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையினை கணக்கில் கொள்ள வேண்டும், நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 18 ஆகிய இரண்டு தினங்களும் வெள்ளிக்கிழமை வருகின்றதால் அந்த இரு தினங்களையும் மாற்ற வேண்டும்" என்று கூறினார்.

ஜார்கண்ட் தஞ்சிமின் தலைவர் ஷம்செர் ஆலம் இது குறித்து கூறுகையில், "நாங்கள் இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் இந்த தேதி மாற்றப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறினார். மேலும் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லீம்கள் இரண்டு மணி நேரம் ஜும்மா தொழுகைக்காக செலவிடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.

நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா.

மோடியை நாங்கள் அழைக்கவில்லை!- ஓமன் தூதரகம் விளக்கம்


ஓமனின் ஷோகர் சிட்டி சம்பந்தமான திட்டப் பணிக்கு குஜராத் முதல்வர் ந(ர)ரேந்திர மோடியை ஓமனின் தொழிற்த்துறை அமைச்சர் மஃஹ்புல் அலி சுல்தான் செப்டம்பர்9 அன்று காந்திநகர் வந்தபோது அழைப்பு விடுத்ததாகவும் அதனை ஏற்று மோடி அக்டோபர் மாதம் ஓமனுக்கு செல்லவிருப்பதாகவும் குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈவு இறக்கம்,மனிதாபிமானம் இல்லாத இந்நூற்றண்டின் இன வெறியனை அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளே தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கவில்லை.

ஆனால் ஓமன் (அரேபிய உறுப்பு நாடுகளில் ஒன்று) மோடிக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தியால் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உலகின் பல்வேறு நாட்டு மக்களின் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புக்கு உள்ளாகியது.
இந்நிலையில் நேற்று முன் தினம் டெல்லியிலுள்ள ஓமன் தூதரகம் தி ஹிந்து நாளிதழில் வெளியிட்ட அறிக்கை செய்தியொன்றில் ஓமன் ஒருபோதும் மோடியை அழைக்கவில்லை. 'Dutch Norterdam' என்ற நிறுவனத்திற்கும் குஜராத் அரசிற்கும் திட்டப் பணி சம்பந்தமாக ஒப்பந்தம் இருப்பதாகவும் இதனால் தான் அவர் அங்கு வருவதாகவும், ஓமன் ஒருபோதும் மோடியை ஒரு விருந்தாளியாக அழைக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
source:twocircles

காஷ்மீரில் இராணுவத்தினர் மீண்டும் வெறியாட்டம் - ஒருவர் கொலை

காஷ்மீரில் இராணுவத்தினரின் வெறியாட்டம் மீண்டும் தன் கைவரிசையை காட்டியுள்ளது.
காஷ்மிரில் 21 வயது மதிக்கத்தக்க மனநலம் குன்றிய ஒரு நபரை தங்களை தாக்க வந்ததாக கூறி இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியின் MLA தலைமையில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஷ்டிரிய ரைபிள் பிரிவை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றும் படியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை அடுத்து, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது, மேலும் போலீஸார், இராணுவம் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பிரதமர் மன்மோகன் சிங் ஜம்மு காஷ்மீருக்கு வருகிற 28 ஆம் தேதி சுற்றுப்பயணம் வைத்திருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் மோசமானது.

இது குறித்து இராணுவ தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட அந்த மனிதர் அவர்களுடைய முகாமிற்குள் புகுந்ததாகவும் அங்கிருந்த ஒரு இராணுவ வீரரை கோடாரியால் தாக்க முயன்றதாகவும்" கூறுகின்றனர்.

ஆனால் இதனை பொது மக்கள் நம்ப மறுக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை, நாங்கள் பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் கேட்கும் கேள்வி, "இது போன்ற நிகழ்வுகளுக்கு உங்களது பதில் என்ன? என்பது தான்" என்று MLA ரஷித் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் காஷ்மீர் அரசு மக்களுக்கு நீதி வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி,
NDTV.

அலிகார் முஸ்லீம் பல்கலை-மாணவர் சுட்டு கொலை

அலிகார்: வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

நேற்று இரவு அலிகார் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக புராக்டர் பேராசிரியர் முசாபர் சித்திக்கி கூறுகையில், பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஷானவாஸ் என்பவர், அந்த ஹோட்டலுக்குப் போயிருந்த போது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது அவருக்கும், இன்னொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் ஷானவாஸை துப்பாக்கியால் சுட்டு விட்டார்.

இதையடுத்து உடனடியாக அவரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஷானவாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்றார்.

ஷானவாஸை சுட்டுக் கொன்ற நபரின் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும், ஒரு நபரை இதுதொடர்பாக பிடித்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

திங்கள், 26 அக்டோபர், 2009

பரிதாபத்திற்குரிய பால்தாக்கரே!

நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் வழக்கம்போல் பாரதீய ஜனதா கட்சி மண்ணை கவ்வியுள்ளது. அதிலும் குறிப்பாக அக்கட்சியுடன் கூட்டணி கண்டு களம்கண்ட இந்துத்துவா கட்சியான சிவசேனா மராட்டியத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு நாணப்பட்டு நிற்கிறது. அவரது கட்சியின் இந்த படுதோல்விக்கும் காங்கிரஸ் பலதொகுதிகளில் வெல்வதற்கும், பால்தாக்கரேயின் கொள்கை வாரிசான ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மான் கட்சியே காரணம் என்பதால் பால்தாக்கரேயை இந்த தோல்வி பெரிதும் பாதித்துள்ளது.'மராட்டியம் மராட்டியர்களுக்கே' என்ற கொள்கையுடைய பால்தாக்கரே, இன்று மராட்டியம் கைவிட்டதால் மனமுடைந்து புலம்புகிறார். அவரது 'சாம்னா' பத்திரிக்கையின் தலையங்கத்தில் அவர் தீட்டியுள்ள விஷயங்கள் அவரது நிலையை தெளிவுபடுத்துகிறது.

'மராட்டியர்கள் தான் என் முதுகில் குத்தி விட்டனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு தீய சக்தியானது மராத்தி மக்களிடம் இருந்து என்னை பிரித்து விட்டது. நம்முடைய மனங்கள் சேராமல் தடுத்து விட்டது.எனக்கு மராத்தியர்கள் மீதும், கடவுள் மீதும்... ஏன் எல்லாவற்றிலுமே நம்பிக்கை போய் விட்டது. இதைச் சொல்வதற்காக மிகுந்த வேதனைப்படுகிறேன். அதேசமயம் உண்மையை மறைக்கவோ, அல்லது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதையோ நான் விரும்பவில்லை.சிந்தனைகள் செத்து விட்டதுஎன்னுடைய வாழ்க்கையில் உங்களுக்காக (மராத்தியர்கள்) 44 வருடங்கள் அர்ப்பணித்து இருக்கிறேன். நான் எங்காவது தவறாக நடந்து இருக்கிறேனா? அல்லது நான் செய்த தவறு என்ன? என்று தெரியவில்லை. மராத்தி மக்களுக்காக அனைத்து வழிகளிலும் பாடுபட்டு வரும் சிவசேனாவுக்கு மண்ணின் மைந்தர்கள் ஏன் ஓட்டுப் போடவில்லை? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்று கூறியுள்ளார் பால்தாக்ரே!

இந்த தோல்வியின் மூலம் பால்தாக்கரே பல படிப்பினை பெற வேண்டியுள்ளது. வெறுமனே மதவாதம்-இனவாதம்-மொழிவாதம்-மாநிலவாதம் பேசுவது மட்டும் மக்களிடம் எல்லாகாலகட்டத்திலும் வெற்றியை பெற்றுத்தந்துவிடும் என்ற எண்ணம் தவறானது என்பதை முதலில் புரியவேண்டும். மக்களின் உணர்ச்சி தீயை தூண்டிவிட்டு அதில் நாற்காலி சுகம் காணும் கனவு கானல் நீராகவே முடியும் என்பதை பால்தாக்கரே மட்டுமன்றி, அத்வானி வகையறாக்களும் உணர்வது அவர்களுக்கு நல்லது.

அடுத்து தோல்வியை சந்தித்தவுடன் மராட்டியர்கள் மீது மட்டுமல்ல. கடவுள் மீதே நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறுகிறார் பால்தாக்கரே! ஆக அவர் ஒருவரையோ-அல்லது கடவுளையோ நம்புவது அவர்கள் மூலம் தனக்கு ஆதாயம் வரும்வரை தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இந்தநேரத்தில் பால்தாக்கரே முஸ்லிம்களின் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒரு முஸ்லீம் தனது வெற்றிக்குரிய எல்லா காரியங்களையும் [மார்க்க வரையறைக்குட்பட்டு]செய்வான். அதே நேரத்தில் அவனது காரியம் தோல்வியில் முடியுமானால் துவண்டுவிடமாட்டான். ஒரு உண்மையான முஸ்லீம் தனக்கு தோல்வியோ, இழப்போ ஏற்ப்பட்டதற்காக தனது இறைவனை ஒரு போதும் நிராகரிக்கமட்டான். இறைவன் மீது நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று கூறமாட்டான். காரணம் அவன் ஏற்றுக்கொண்டிருக்கும் இறைவன்தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுடைய உள்ளத்தில் இருப்பதால், அவனுக்கு வெற்றி கிடைத்தால் அது மமதையை தராது; அவனுக்கு தோல்வி கிடைத்தால் அது அவனுக்கு வெறுப்பையும் தராது. காரணம் அகிலத்தை படைத்த அல்லாஹ் தன் அருள்மறையில் இப்படி கூறுகின்றான்;

[நபியே] நீர் கூறுவீராக; அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகின்றாய்; நாடியவர்களிடமிருந்து பறித்தும் விடுகின்றாய். நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியோரை இழிவு படுத்தவும் செய்கின்றாய். நன்மைகள் யாவும் உன் கைவசமே உள்ளன. அனைத்து பொருட்களின் மீதும் நிச்சயமாக ஆற்றல் உடையவனாக இருக்கின்றாய்.
[அல் குர்ஆண்-3 ;26 ]

இந்த வசனம்தான் முஸ்லிம்களை வெற்றியின் போதும், தோல்வியின் போதும் நிலைதடுமாறாமல் நிலைத்திருக்க செய்கிறது. எனவே பால்தாக்கரே உண்மையான கடவுளை நோக்கி, அதாவது சத்திய இஸ்லாத்தை நோக்கி வருமாறு சகோதர வாஞ்சையுடன் அழைக்கிறோம்.

எமதர்மனை ஏற்றுக்கொள்கிறாரா கலைஞர்...?


இன்று நாளிதழ்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் காலம் வீசும் கயிற்றை தடுக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற வர்ணனையோடு எமதர்மன் எருமை வாகனத்தில் வந்து ஒரு வயோதிகர் மீது 'பாச[?] கயிறை வீசுவது போலவும், அதை கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்ற கேடயம்[அதாவது கலைஞர்] தடுப்பது போலவும் படம் வெளியாகியுள்ளது.

உயிரை வாங்குபவர் எமதர்மன் என்றும், அவர் எருமை வாகனத்தில் வருபவர் என்றும் ஒரு நம்பிக்கை இந்து சமுதாய மக்களிடம் உண்டு. அதை நாம் தவறென்று சொல்லமாட்டோம். அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். அதே நேரத்தில் அனைத்து மதத்தவருக்கும் பொதுவான மத சார்பற்ற அரசு, அதிலும் குறிப்பாக தன்னை பகுத்தறிவாளர் என்று பறைசாற்றிக் கொள்ளும் கலைஞர் அரசு, இத்தகைய விளம்பரம் செய்துள்ளது வியப்பாக உள்ளது. இதன் மூலம் எமதர்மன்தான் உயிரை வாங்குபவர் என்ற சித்தாந்தத்தை ஏற்பது போன்ற தோற்றத்தை இந்த விளம்பரம் தருவதை மறுக்கமுடியாது. ஒரு மத சார்பற்ற அரசு தனது எந்த ஒரு செயல்களிலும் ஒரு சின்ன அளவு கூட மதத்தை பிரதிபலிக்கும் செயல் வந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தவேண்டும். என்ன செய்வது..? அரசின் சின்னமே ஆண்டாள் கோவிலாக இருக்கும்போது இதெல்லாம் 'ஜுஜுபி' என்கிறீர்களா..?

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

நானும் ஒரு தீவிரவாதி! வா,வந்து என்னைச் சுடு!

-ஷப்னம் ஹாஷ்மி
ஷப்னம் ஹாஷ்மி
பாகிஸ்தான், துபை, குஜராத்திலிருந்து உங்களுக்கு அழைப்புகள் வருகின்றனவா?

... ஒரு நிமிஷம்! குஜராத்தில் எங்கிருந்து? கோத்ரா, ஹிம்மத் நகர், சூரத், அஹ்மதாபாத், வடோதரா, தலோல், தஹோட், சபர்கந்தா, பனஸ்கந்தா ஆகிய இடங்களிலிருந்தா?

இங்கிருந்து அழைப்பவர்கள் தொண்ணூறு விழுக்காட்டினர் முஸ்லிம்கள்! மூன்று நாட்களுக்குமுன் அமெரிக்காவில் இருந்து காலை 2 மணிக்கு அழைப்பு, அழைத்தவர் ஒரு முஸ்லிம்; இன்று கராச்சியிலிருந்து, நேற்று காஷ்மீரிலிருந்து.

உங்கள் மின்மடல்களைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன!

ஆட்வாணி, வாஜ்பேயியைக் கேலியாகப் பேசுகிறீர்களா?

மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்களா?

தொகாடியாவைக் கைது செய்ய வேண்டும் என்கிறீர்களா?

உங்கள் புத்தக அலமாரியில் அரபி, உருது புத்தகங்கள் இருக்கின்றனவா?

உருது புத்தகம் கவிதைப்புத்தகமா? நம்ப முடியாது! கவிதை வடிவில் ஒரு பயங்கரவாதச் செயலுக்கான திட்டம் நிச்சயம் இருக்கும்!

அருகிலிருக்கும் புத்தகத்தில் ஹிட்லர் பெயர் அடிக்கோடிடப்பட்டுள்ளதே! என்ன சொன்னீர்கள்? மோடி ஹிட்லருக்கு ஒப்பானவரா? நிச்சயம் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்!

என்னது? உங்களிடம் கோத்ரா சம்பவம் குறித்த ஆவணங்கள் உள்ளனவா? அதுகுறித்த இவ்வளவு வீடியோ போட்டோக்கள் உங்களிடம் எதற்கு? மோடியின் பெயரைக் களங்கப்படுத்தும் சதி தானே இது? ஐஎஸ்ஐ யுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கும் சாத்தியம் உள்ளது.

இதென்ன மும்பை, கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூர் வரைபடங்கள்? எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் எனத் திட்டம் தீட்டத் தானே?

நாள் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்தவாரம் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எதற்கா? வேறு எதற்கு? வழியில் உங்களை விடுவித்ததாகச் சொல்லி நீங்கள் நகரும் போது என்கவுண்டரில் போட்டுத் தள்ளத்தான்!

உங்களிடமிருந்து கைப்பற்றப் படப்போகும் ஆதாரங்களைப் பற்றிக் கேள்வி வேண்டாம். உங்கள் கைகளிலும் பைகளிலும் எங்கள் இருப்பில் இதற்காகவே சேர்த்து வைத்திருக்கும் நிறைய வெடிபொருள்களையும் ஏகே47 ரக துப்பாக்கிகளையும் நாங்களே திணித்து விடுவோம். பிரபல தொலைக்காட்சி சேனல்களுக்கு முன்னதாகவே தகவல் சொல்லி விடுவோம். அடுத்த நாள் முழுக்க நீங்கள்தான் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தெரிவீர்கள் - பிணமாகத்தான், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்!

தலைப்பு என்னவா? தயார் செய்துவிட்டோம்!

கொடிய பெண் தீவிரவாதி என்கவுண்டரில் கொலை!

ஃஃஃஃஃஃஃ

இன்னும் என்ன தயக்கம் நீதிமான்களே, காவலர்களே?

என்னிடம் உருது நூல்கள் நிறைய உள்ளன;

எனக்கு அமெரிக்காவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் முஸ்லிம்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன;

நான் படித்தவள்; இருகுழந்தைகளின் தாய்; ஓர் அறிவியலாரின் மனைவி; நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்! என்னிடம் உருது நூல்கள் உள்ளன;

இந்தியாவின் முக்கிய நகரங்களின் வரைபடங்கள் உள்ளன!

வேறென்ன வேண்டும் பொதுமக்களைக் காக்கும் கடமை தவறாக் காவலரே!

வா, வந்து என்னைச் சுட்டுக் கொல்!

-ஷப்னம் ஹாஷ்மி


-------------------------------------

I Am A Terrorit: Come shoot Me

By Shabnam Hashmi

26 June, 2004
Countercurrents.org

THE ORIGINAL VERSION OF SHABNA'S ARTICLE WITH PERSONAL LETTER

Dear Friends,

A slightly edited version of this article was published yesterday in Hindustan Times. Some friends wanted to see the original, so I am sending it. HT by mistake printed - Shabnam Hashmi-Secretary SAHMAT. I resigned from SAHMAT in January 2003 and am no longer associated with the organisation. March 2003 onwards I have been working with ANHAD ( Act Now for Harmony and Democracy), 4, Windsor Place, New Delhi-110001. Tel- 23327366/ 67/ 9811807558/ e-mail: anhadinfo@yahoo.co.in, anhad_del@yahoo.co.in, shabhashmi@hotmail.com .

Sincerely

Shabnam Hashmi


======================

In coming calls from Pakistan, Dubai, Gujarat. Gujarat ? Yes from Godhra, Dahod, Kalol, Sabarkantha, Banaskantha, Himmat Nagar, Surat, Ahmedabad, Vadodara. Ninety percent Gujarat calls by Muslims! This number belongs to S.., the son of the accused in Godhra case, and this one is of L.., her mother was very active with so and so in the camp, also has to be an accused. This call was received at midnight, this at 2am. Three days ago a call came from US at 5am, it was a Muslim calling. Last week an outgoing call to Karachi at 11pm and today three calls to Kashmir.

We are constantly watching the e-mails, intercepting them. This one has come from a Muslim organisation from USA. This one is demanding prosecution for Modi. Here it is making fun of Advani and Vajpayee. This one is abusing VHP and Togadia. This is some charter of demands on Gujarat. Asking for repealing of POTA?

The bookshelf, there are more than 200 books in Urdu, loads of handwritten papers in Urdu, even the computer has the Urdu font, this looks like a book, Urdu poems, no must be some secret behind that, an assassination plot written in verse. There are books in Gujarati. Text books from Gujarat. Hitler's name is underlined in this book. Didn't the e-mail say Modi is like Hitler. Do you see the connection? There is a folder full of articles on RSS . E-mails from Afghanistan.

And what is this. My God hundreds of tapes and CDs- there is footage of Gujarat riots, there are hundreds of photographs, photographs of S-6, Sabarmati, taken from every angle. What is this footage? Mass graves? How could anyone get this? Who could have shot, there was hardly anyone from outside at that point? Has to be an ISI conspiracy to malign Modi.

My dear friend, remember I called you two days ago and I said I have the information that before the so-called 'encounter' on June 15, the 'terrorist' were interrogated in the crime cell of the Police Commissioner's office in Surat. You gave me a long list of 'police' proofs of their having links with some terrorist organisation.

I request you friend, please kill me. I am a Terrorist too. Please organise an encounter. It will take you 5 minutes to prove that I was a terrorist. I will fit into the latest design, an educated woman, from middle class, mother of two, scientist's wife, connection with terrorists! Sells well, doesn't it? Please go ahead.

Here is the proof. I am making your life easier. You won't have to ask your local reporter to go to the local police for information. Also you will have one person less pointing out to you that your reporting is biased.

Yes, my mobile works 24 hours. Yes, I talk to Muslims from every corner of the world including Pakistan, Dubai, Gujarat. Yes, families of the so-called accused, who are arrested under POTA in Godhra , call me. They call me at 5 am and they call me at 2am. I receive calls from different parts of Gujarat, from all corners of the world throughout the night.

My house is full of Urdu books, I have loads of Gujarat footage. I abuse Modi, Advani and Vajpayee in my mails. I accuse Modi for Genocide, I talk to people to try him for that. I carry thousands of papers with me about the Godhra case. I have maps of every corner of not only Gujarat but other states too. My visiting cards, my e-mail id, my mobile number is with hundreds of people in Gujarat.

I even went to Pakistan a few months ago. I have friends in Dubai. Some of my articles were even picked up by Pakistani papers like Jang. I leave home early, sometimes even at 4 and return at all odd hours. For days I come back well past midnight. I got o Nizamuddin Basti, isn't it a basti full of maulavis. The place from where I buy kababs, has to be a joint for exchanging notes.

I, like all modern terrorists on a mission, always carry my identification card, so that the police can recover it after shooting me. Just give me time to buy a new pair of shoes, mine are broken.

What more proof you need to call me a terrorist?

Come, shoot me.

I will make a good story.

மராட்டிய தேர்தல்: 11 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி

மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஐவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்;, மூவர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள்,இருவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்கள், ஒருவர் ஜன் சூரியா சக்தி கட்சியைச் சேர்ந்தவர்; ஆவர். வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் விவரம்:
வ.எ
தொகுதி கட்சி
வெற்றிப் பெற்ற வேட்பாளர்
பெற்ற வாக்குகள்
1 மாவேகான் மத்தி
ஜன் சூரிய சக்தி
முப்தி முஹம்மது இஸ்மாயில் காலிக் 71157
2 வாந்த்ரே மேற்கு
காங்கிரஸ் ஜியாவுத்தீன் சித்தீக் 59659
3 மலத் மேற்கு காங்கிரஸ்
அஸ்லம் ஷேக் 51635
4 அணுசக்தி நகர் தேசியவாதி காங்கிரஸ் கட்சி நவாப் மாலிக் 38928
5 மும்பா தேவி காங்கிரஸ் அமீன் படடேல்
45285
6 பீவண்டி கிழக்கு சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி
37584
7 பீவண்டி மேற்கு சமாஜ்வாதி கட்சி அப்துல் ரசீத் தாஹிர் முமீன்
30825
8 சுhந்திவல்லி காங்கிரஸ் கான் முஹம்மது ஆரிப்
82616
9முன்குருத் சிவாஜிநகர்
சமாஜ்வாதி கட்சி அபு ஆசிம் ஆஜ்மி 38435
10 சிலோத் காங்கிரஸ் முஷ்ரிப் ஹஸன் 104241
11 சிலோத்
காங்கிரஸ் அப்துல் சத்தார் அப்துல் நபி 98131

மராட்டிய மாநிலத்தில் 1 கோடியே 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2001 அரசு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி மராட்டிய மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 10.6 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டிய சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் உள்ளனர். முஸ்லிம்களின் மக்கட் தொகையுடன் ஒப்பிடும் போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆனால் 1952 முதல் 1999 வரை மராட்டிய சட்டமன்றத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 9.5 ஆக மட்டுமே இருந்துள்ளது. 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் அது 12 ஆக உயர்ந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அபு ஆசிம் ஆஜ்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதையும் கவனத்தில் எடு;த்துக் கொள்ள வேண்டும்.

ஹரியான சட்டமன்றத் தேர்தல்: 5 முஸ்லிம்கள் வெற்றி

ஹரியான மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஒருவர் போட்டி காங்கிரஸ் வேட்பாளரான ஜாலிப் கான் ஆவார். காங்கிரஸ் கட்சி இவரை வேட்பாளராக நிறுத்த மறுத்ததினால் சுயேட்சையாக ஹாத்தின் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷ் குமாரை ஜாலிப் கான் தோற்கடித்தார். வெற்றிப் பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

தொகுதிவெற்றிப் பெற்றவர்
வாக்கு வித்தியாசம்
கட்சி
1 பெரொஸ்புர்
ஜிர்கா நஸீம் அஹ்மது 18,194
இ.தே.லோக் தளம்
2 ஹாத்தின் ஜாலிப் கான் 6,473 சுயேட்சை
3 ஜகாத்ரி அக்ரம் கான் 4.378 பகுஜன் சமாஜ்
4 நூஹ் அப்தாப் அஹ்மது 16904 காங்கிரஸ்
5 புனஹானா முஹ்மமது இல்யாஸ் 2688 இ.தே.லோக் தளம்

2005ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 3 முஸ்லிம்களே வெற்றிப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவின் மொத்த மக்கட் தொகையில் 5.8 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்று 2001 அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் 5 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இந்த முறை ஹரியானா சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் மக்கட் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓச்சிரா வழக்கு: அப்துன் நாஸர் மாதனி விடுதலை

1992ல் ஐ.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக அப்துன் நாஸர் மாதனி இருந்த போது அவர் மீது காவல்துறை போட்ட ஒரு வழக்கில் தற்போது அவர் விடுதலை ஆகியுள்ளார்.


1992ல் உ.பி. மாநிலம் பைசாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2, 1992ல் கேரளாவில் முழு அடைப்பிற்கு இஸ்லாமிக் சேவக் சங் (ஐ.எஸ்.எஸ்.) அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முழு அடைப்பின் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அடைப்பின் போது ஏற்பட்ட கலவரத்தில் பல காவலர்கள் காயமடைந்தனர். முழு அடைப்பின் போது ஒச்சராவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்த அப்துன் நாஸர் மாதனி தான் வன்முறையை துண்டினார் என்று அவர் மீது காவல்துறை வழக்கு பதிவுச் செய்தது. முழு அடைப்பின் போது காவல்துறை வாகனங்களுக்கும், அரசு பேரூந்துகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன என்றும் காவல்துறை கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை கூட பயன்படுத்தவில்லை என்றும் வானத்தை நோக்கி மட்டும் சுட்;டதாகவும் காவல் தரப்பில் வாதிக்கப்பட்டது.


கொல்லம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சரியான சாட்சியங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என்றும் சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்ட இயலவில்லை என்று கூறி அப்துன் நாசர் மாதனி உட்பட அனைவரையும் நீதிபதி இ.பைஜுவிடுதலைச் செய்தார். இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆனது குறித்து அப்துன் நாஸர் மாதனி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சனி, 24 அக்டோபர், 2009

விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற 10 கிலோ தங்கம் பயணியிடம் ஒப்படைப்பு

துபாய் : கடந்த செவ்வாய் அன்று துபாய் விமான நிலையத்தில் 10 கிலோ தங்கத்தை மறந்து விட்டு ஈராக் செல்ல இருந்த ஈராக்கிய வணிகர் மறந்து விட்டு சென்ற 10 கிலோ தங்கத்தை துபாய் விமான பாதுகாப்பு துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் ஒமர் அல் அத்தரிடமிருந்து பெற்று கொண்டார்.


ஈராக்கிய வணிகர் துபாய் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த தங்கத்தில் 10 கிலோ தங்கத்தை விட்டு விட்டு சென்றார். விமான நிலைய காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தங்கமும் அதனோடு அவ்வணிகரின் பாஸ்போர்ட் நகலும் இருந்த்தை கண்டு பிடித்தனர்.

அப்பாஸ்போர்ட் நகலில் இருந்த விபரங்களின் உதவியுடன் துரித கதியில் சம்பந்தப்பட்ட விமான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் முன்னரே விமானத்தில் உட்கார்ந்திருந்த பயணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் அதை பெற்றுக் கொண்டார். ஒமர் அல் அத்தார் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார்.

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி

மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் மாலேகான் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.

2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள். காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.

மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.

அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது.

வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!

சென்ற 17.10.09 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரே பரபரப்பு!

என்னவென்று நினைக்கிறீர்கள்?

"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.

அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?


கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான மல்கோண்டா பட்டேல் மற்றும் யோகேஷ் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.

இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.

இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.

***

"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:

சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:

  • ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

  • பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.

  • பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.

  • திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

  • பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

  • பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.

  • ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

  • முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.

- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்

[குறிப்பு : கட்டுரை மிகச்சில மாற்றங்களுடன் சுட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன - சத்தியமார்க்கம்.காம்]

தேங்க்ஸ் டு : சத்தியமார்க்கம்.காம்

வியாழன், 22 அக்டோபர், 2009

உய்குரில் காணாமல் போகும் முஸ்லீம்கள்

சீன போலீசாரால் கைது செய்யப்பட்ட உய்குர் முஸ்லீம்களில் பலர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதனை மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பு புதன் கிழமையன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் "43 உய்குர் முஸ்லீம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சீன போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பிறகு காணவில்லை என்றும் அரசு ஆவணங்களிலும் அவர்களின் பெயர்கள் இல்லை" என்றும் கூறியுள்ளது.

"இந்த எண்ணிக்கை வெறும் சொற்பமாக கணக்கிடப்பட்ட அறிக்கையின் முடிவு தான் என்றும் தீவிரமாக இந்த காணாமல் போனவர்களை ப்பற்றி கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை இது போன்று பல மடங்கு அதிகமாகக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற காணாமல் போனவர்கள் பொதுவாக அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும், சட்டத்துக்கு புறம்பாக கொலை செய்யப்படுவதும் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது.

ஜூலை மாதத்தில் நடந்த கலவரத்தை அடுத்து சீன காவல்துறை அதிகாரிகள் ஜின்ஜியாங் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கலவரம் சீனாவின் உய்குர் முஸ்லீம்களுக்கும் சீனாவின் பாரம்பரிய தான் இனத்தவருக்கும் இடையே நடைபெற்ற மோதலாகும். இதில் அரசு அறிவிப்பு படி சுமார் 200 தான் இனத்தவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகின்றது.

இந்நிலையில் காவல் துறையின் தேடுதல் வேட்டையின் பின்பு கைது செய்யப்பட்டவர்களில் பலரின் நிலை என்ன வென்று தெரியவில்லை. உய்குர் முஸ்லீம்கள், காணாமல் போனவர்களை தேடுவதற்கு கூட அச்சப்பட்டு இருக்கின்றனர் என்று Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

காவல் துறையின் இந்த தேடுதல் வேட்டையை பார்த்த பலர், "அவர்கள் வீட்டினுள் சென்று ஆண்களை எல்லாம் பிடித்து சென்றனர். அவர்கள் ஆர்பாட்டத்தின் போது வீட்டில் இல்லாதவரையும் கூட கைது செய்து சென்றனர் என்று கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் எங்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வர சொன்னார்கள். பெண்களையும் வயதானவர்களையும் தனியே நிற்க சொல்லிவிட்டு, 12 வயது முதல் 45 வயதிலான எல்லா ஆண்களையும் அவர்கள் கைது செய்து சென்றனர்.

அவர்கள் அனைவரையும் சுவற்றை நோக்கி வரிசையாக நிற்க வைத்தனர். பலர் முழங்காலில் நிறுத்தப்பட்டனர், பலரை தரையில் கிடத்தி அவர்களின் கைகளை பின்புறம் கட்டையை வைத்து கட்டினர்" என்று ஐசானம் என்ற உய்குர்வாசி கூறினார்.

இது போன்ற மற்றுமொரு நிகழ்வில் 14 வயது சிறுவனான ஷராபுதீனை போலீஸார் கைது செய்து சென்றனர். அன்றிலிருந்து அவனைப் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை.

அந்த சிறுவனின் தந்தை அப்பகுதி காவல் துறையிடம் அவனைப்பற்றிய தகவலை கேட்டால், "அவனது பெயர் தாங்கள் கைது செய்தவர்களுடைய பெயர் பட்டியலில் இல்லை" என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வுகளை குறித்து கருத்து தெரிவித்த Human Rights Watch இன் இயக்குனர் Brad Adams கூறுகையில், "சர்வதேச சமுதாயம் சீனாவிடம் இது போன்ற காணாமல் போனறவர்கள் பற்றி சீன அரசாங்கம் பதிலளிக்க வற்புறுத்த வேண்டும்" என்று கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

சீன அரசாங்கம் ஜூலையில் நடந்த கலவரத்திற்காக இது வரை 12 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி,
அல் ஜசீரா.

இந்துத்துவ தீவிரவாதம் - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்

தீவிரவாதம் என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இந்திய மக்கள் அனைவருமே நம்பிக் கொண்டிருந்த வேளையில் இந்துத்துவ தீவிரவாதம் என்ற உண்மையை மக்களுக்கு அறிமுகம் செய்த மாவீரர் ஹேமந்த் கர்கரேவிற்கு நன்றி.(அவரது மறைவிலும் பல மர்மங்கள் உள்ளன). கர்கரே தான் இந்த உலகத்திற்கு இந்துத்துவா தீவிரவாதத்தின் அபாயத்தினை உணர்த்தினார்.

மலேகான் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட கார் பிரக்யா சிங் என்ற பெண் சாது (அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்) விற்கு சொந்தமானது என்றாலும் அவர் அது தனக்கு சொந்தமானது என்பதினை மறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியே மிஞ்சியது.இவரின் இந்த முயற்சியினை கர்கரே மலேகான் குண்டு வெடிப்பிற்கு பின் கூறினார்.

இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில், இந்த குண்டு வெடிப்பில் இந்த பெண் சாமியாருடன் இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தான். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் அபினவ் பாரத் என்ற அமைப்பு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த அமைப்பின் மேல் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.. (ஆனால் ஒன்றும் செய்யாத பழி பாவங்களுக்காக பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.)

இது போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினற்கு பா.ஜ.க மட்டுமல்ல பெருவாரியான முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரசும் குறுக்கே நிற்கிறது என்பது தான் உண்மை.

சமீபத்தில் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஒரு இந்துத்துவ தீவிரவாதிக்கு சொந்தமானது. (அந்த தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் இறந்து போனது நாமும் நம் நாட்டு மக்களும் செய்த புண்ணியம்). இந்த தீவிரவாதிகள் சனாதன் சன்ஸ்தா என்ற ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தும் இன்னமும் அந்த அமைப்பின் மேல் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. (அவர்கள் தங்களை பாதுகாத்து உத்தம வேஷம் போட போதுமான அவகாசத்தை அரசாங்கமே வழங்குகிறது. )

இந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினரின் கை ரேகைகள் மகாராஷ்டிரத்தின் மிராஜ் மற்றும் சங்கலி பகுதிகளில் நடந்த மதக்கலவரங்களில் இருப்பதாக காவல் துறை கூறுகின்றது.

இந்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் மேல் இவ்வளவு குற்றங்களும் தேச துரோக கறைகளும் இருந்தாலும் மாநில அரசாங்கம் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.

இது பற்றி சன்ஸ்தா கூறுகையில், "நாங்கள் கல்வி அறிவு படைத்தவர்கள், நாங்கள் கடந்த 10 - 15 வருடங்களாக எங்கள் மதத்திற்காக பாடுபட்டு வருகிறோம்" என்று கூறுகின்றனர்.(அவர்கள் குண்டு வைத்தும், மதக்கலவரங்களை தூண்டியும் தான் பாடுபடுகிறார்கள் போலும்.)

காவல்துறையோ, "இது போன்ற அமைப்புகள் தங்களது ஆதிக்கத்தை கோவாவிலிருந்து மலேகான் வரை பரப்பி வருகின்றன என்றும் இவர்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் இவர்கள் தேசத்திற்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் தான்" என்று கூறுகின்றனர்.

நன்றி,
NDTV.

உயிருடன் புதைக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள்


கடந்த டிசம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது அநியாயமாக நடத்திய ஆக்கிரமிப்பு போரில் பல பாலஸ்தீன அப்பாவி பொது மக்களை வேண்டுமென்றே கொன்றுள்ளனர் என்றும் பலரை உயிருடன் புதைத்துள்ளனர் என்றும் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர் நஷாத் அல் வாஹிதி தெரிவித்தார்.

வாஹிதி அவருடைய அறிக்கையில், "பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கைதிகளாக பிடித்து அவர்களை கொன்று குவித்துள்ளனர்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, "காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஜைத்தூன் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகள் காயம் பட்ட பல பாலஸ்தீன பொதுமக்களை உயிருடன் புதைத்துள்ளனர்.

மேலும் , காசா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலிற்கு பிறகு பல பாலஸ்தீன பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது என்று கூறினார்.

இவர்கள் கொல்லப்பட்டுவிட்டனரா இல்லை இஸ்ரேலிய ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனரா என்று தெரியவில்லை.

நன்றி
Palestine Info.

ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கி 6பேர் பலி

ஷார்ஜாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6பேர் பலியாயினர்.
இன்று(அக்:21) மதியம் 2மணியளவில் ஷார்ஜா சர்வதேச விமானநிலையத்திலிருந்து சூடான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு சிறிதுதூரம் உயரே சென்றதும் கீழே விழுந்து நொறுங்கியது.இதில் பயணித்த விமானிகள் உட்பட 6பேர் பலியாயினர். விபத்திற்காண காரணம் தெரியவில்லை.

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!

வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்பைக் கொடுக்க முயன்றதாக நோசட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வந்த நோசட், நாசாவிலும் இடம் பெற்றிருந்தார்.52 வயதாகும் நோசட், திங்கள்கிழமை எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்ய்பட்டார்.

இதுகுறித்து இஸ்ரோ அறிவியல் செயலாளர் பாஸ்கர நாராயணா கூறுகையில், இஸ்ரோ மையங்களுக்கு இருமுறை நோசட் வந்துள்ளார். இருப்பினும் முக்கிய மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. இஸ்ரோவின் பாதுகாப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், இஸ்ரோவின் திட்டங்கள் தொடர்பான எந்த முக்கியத் தகவலும் அவரிடம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நோச்ட கைது நாசாவின் உள் விவகாரம். இதுகுறித்து நாம் கருத்து கூற முடியாது என்றார்.

"எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னியுங்கள்"


திருவனந்தபுரம். அக்.21

கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் நாஸர் மதானி. 1992-ல் ஜுன் 6 ம் தேதி கொல்லம் அருகே இவர் காரில் சென்ற போது ஒரு கும்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்துல் நாஸர் மதானி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் மாதானியின் இரு கால்களும் ஒடிந்தன. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செயற்கை கால்கள் பொருத்திக் கொண்டார்.

இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கொல்லம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலிசாரின் விசாரணையில் ஆர்.ஸ்.ஸ். தலைவர் சந்திரபாபு தலைமையில் எட்டு பேர்கள் கொண்ட கும்பல் தான் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதனால் அந்த எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கோர்ட்டில் மனு:
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பான வழக்கு கொல்லம் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி வாசன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்துல் நாஸர் மதானி எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் தனது விருப்பத்தை அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இவர் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நயவஞ்சகமாக சேர்க்கப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் கைதியாகவே சிறையில் இருந்து, குற்றம் நிரூபிக்கப்படாமல் பின்னர் விடுவிக்கப்பட்டார். பெரிய மனுசன்னா இவர் தாங்கோ...

புதன், 21 அக்டோபர், 2009

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த இடத்திற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இங்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இங்கு வந்து சென்ற வெளிநாட்டவர் குறித்து அறிய காவல்துறையினர் முயன்றனர். ஆனால் ஆசிரமத்தில் இதுபற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது சனாதன் சான்ஸ்தா என்ற அமைப்புதான் என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய அந்த அமைப்பைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் சிலர் இது தொடர்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இனிமேல்தான் முறைப்படி கைது செய்யப்பட வேண்டும். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து அறிவது மிகவும் முக்கியம் என்றும் ரவி நாயக் கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் மூன்று பிரெஞ்சுக்காரர்கள் தங்கியிருந்தார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது அவர் கூறினார்.
இந்த அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து அரசு ரீதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கோவா மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சுபோத் கான்டக் திங்கள் கிழமையன்று கூறினார்.இந்த அமைப்பை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டுமா அல்லது கோவா மாநிலத்தில் மட்டும் தடை செய்யலாமா என்பது குறித்து மாநில சட்ட அமைச்சகம் ஆய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தீபாவளி அன்று மார்கோவாவில் நடைபெற்ற இருவரைப் பலிவாங்கிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சனாதன் சான்ஸ்தா அமைப்பு மாநிலக் காவல்துறையால் தீவிரமாகக் கன்காணிக்கப்பட்டு வருகிறது.
source:inneram