புதன், 28 டிசம்பர், 2011

கயவர்களுடன் கள்ள தொடர்பை வெளியிட்டது நய் துன்யா நாளிதழ்


புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.

இந்நிலையில் அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலத்தில் செயல்படுகிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திக்விஜய்சிங் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் இணைந்து ஹஸாரே பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் 1983-ல் ஆர்.எஸ்.எஸ். பணிகளில் நானாஜியின் செயலராக ஹஸாரே இருந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள ‘நய் துன்யா’ பத்திரிகையின் முகப்புப் பக்கத்தைப் பாருங்கள்.

ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்பு இல்லை என ஹஸாரே மீண்டும் மீண்டும் கூறுகிறார். அவர் கூறுவதை நம்புவதா, இல்லை பத்திரிகையில் வெளியாகி உள்ள புகைப்படத்தை நம்புவதா? நான் ஏற்கெனவே கூறியது சரிதான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

புது டெல்லியில் அதிக குளிர் என்பதால் உண்ணாவிரதம் இருக்க மும்பையை ஹஸாரே தேர்வு செய்யவில்லை. அதிக நிதி திரட்டுவதற்காகத்தான் அவர் மும்பையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் திக்விஜய் தெரிவித்துள்ளார்.


dinaex.blogspot.com நன்றி

திங்கள், 26 டிசம்பர், 2011

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை வஞ்சித்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை நிலை நாட்டிட மறுத்து மெத்தன போக்குடன் நடக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமருக்கு தமுமுக வினர் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.

இதேபோல் காரைக்குடி வந்த பிரதமருக்கு தமுமுக வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் ..........


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சனி, 24 டிசம்பர், 2011

பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்! Read more about பரபரப்புக்காக பேருந்தில் வெடிகுண்டு வைத்த ஜூனியர் விகடன்!

ஜூனியர் விகடன்!

'புலானாய்வு' என்ற பெயரில் புடலங்காய் ஆய்வு செய்து குப்பை கொட்டிவரும் வாரப்பத்திரிக்கைகளுள் ஜூனியர் விகடனும் ஒன்று. கடந்த டிசம்பர்-7 ஆம் தேதியிட்ட இதழில் "'இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?'' என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் வாசித்தபோது ஜூனியர் விகடன் மதவெறி வெளிப்பட்டது. முழு கட்டுரையையும் வாசிப்போம்:
******************************

"இது வெடிகுண்டு மாதிரியில்ல இருக்கு?''கண்மாய்க்குள் தூக்கிப் போட்ட மாணவர்கள்!

போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இமாம் அலி, சதிச் செயல்களுக்காக வெடிகுண்டுகளை முதன் முதலில் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்த இடம், மதுரை மாவட்டம், ஓவா மலை. இப்போது, அதற்கு அருகிலேயே பஸ்ஸுக்குள் வெடிகுண்டு சிக்கியிருப்பது மதுரை மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்திருக்கிறது.


டிசம்பர் 6-ம் தேதி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்ட சூழ்நிலையில், அதற்கு மறுநாள் காலையில்தான் இந்தச் சம்பவம். குண்டு வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்ஸில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவர்கள் சயாரத்னம், அர்ஜூன் ஆகியோரிடம் நாம் பேசினோம். 'மேலூரில் இருந்து திருவாதவூர் வழியாக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற பஸ் அது. 7-ம் தேதி காலையில் 7.10 மணிக்கு திருவாதவூர் வந்த அந்த பஸ், 7.25 மணிக்கு அகதிகள் முகாம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தது. அப்போ ஸீட்டுக்கு அடியில், பாலிதீன் பை ஒண்ணு கிடந்தது. எங்களோடு பஸ்ல வந்த இலங்கை அகதியான நிஷாந்த் என்பவர் அதை எடுத்து, கண்டக்டர் விருமாண்டியிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த கண்டக்டர், 'இது வெடிகுண்டு மாதிரில்ல இருக்கு. உடனே வெளியே தூக்கிப் போடுப்பா’னு சொன்னார். உடனே டிரைவர் பஸ்ஸை நிறுத்த, சில மாணவர்கள் கீழே இறங்கி அந்த பார்சலை முத்தம்பட்டி கண்மாய்க்குள் போட்டார்கள்.


ஆனாலும், பயத்தில் பஸ்ஸுக்குள் வேறு எதுவும் இருக்கிறதா என்று தேடினோம். பயந்துபோன கண்டக்டர் மேலூர் டெப்போவுக்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னார். பஸ்ஸை நேராக ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டு, வெடிகுண்டு பற்றி போலீஸுக்குத் தகவல் கொடுத்து விட்டார்கள். பஸ் ஒத்தக்கடைக்கு போகும்போதே, எதிரே வெடிகுண்டு நிபுணர்கள் குழு திருவாதவூர் நோக்கிப் போனது...' என்றனர் திகிலுடன்!


அதற்குள்,வெடிகுண்டு நிபுணர்கள் கண்மாயில்கிடந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்து,ஒத்தக்கடைபோலீஸ் நிலையத்துக்குக் கொண்டுவந்தார்கள். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் கியூ பிராஞ்ச் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.


பரபரப்புக்காக குண்டு வைத்த ஜூனியர் விகடன்

பரபரப்புக்காக குண்டு வைத்த ஜூனியர் விகடன்

க்யூ பிராஞ்ச் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டோம். 'வெடிகுண்டை முழுமையாக சோதித்துப் பார்த்தோம். பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் ஒன்பது வாட்ஸ் திறன்கொண்ட நான்கு நிப்பான் பேட்டரிகள், கடிகாரத்தின் இயந்திரப் பகுதி, சில மின் வயர்களைப் பொருத்தி ஒரு சுவிட்ச்சோடு இணைப்புக் கொடுத்திருந்தார்கள். பகல் 12 மணிக்கு வெடிக்குமாறு கடிகாரத்தில் செட் செய்யப்பட்டு இருந்தது. சிறிதளவு மட்டுமே வெடிமருந்தை ஒரு காகிதத்தில் சுற்றி லட்சுமி வெடியில் இருப்பதுபோல உருளையாகச் செய்து இருந்தார்கள். அதற்கு இரண்டு வயர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த குண்டு வெடித்து இருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குண்டு வைக்கப்பட்டு இருக்கலாம்...'' என்றார்கள்.

சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னத் தகவல் அதிர்ச்சி ரகம். 'வெடிகுண்டு சிக்கிய திருவாதவூர் அருகில் உள்ள உலவுபிச்சான்பட்டிதான் இமாம் அலியின் சொந்த ஊர். பழனி பாபா குரூப்புடன் தொடர்பு வைத்து இருந்த இமாம் அலியும் ஹைதர் அலியும் சேர்ந்து, கடந்த 1990-ம் ஆண்டு ஓவா மலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது, அந்தச் சத்தம் ஊருக்குள் கேட்டது. இப்போது இருப்பதுபோல அப்போது அங்கு கிரானைட் குவாரிகள் எல்லாம் அந்த நாளில் கிடையாது. பீதி அடைந்த மக்கள் மலைக்குத் திரண்டு சென்றபோது, இமாம் அலி, ஹைதர் அலி மற்றும் அவர்களது கூட்டாளிகள் தப்பி ஓடினார்கள்.


பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டபோது, இமாம் அலி மட்டும் துணிச்சலாக, 'ஆமாம், வெடிகுண்டு சோதனைதான் நடத்தினோம். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று பதில் சொன்னார். பின்பு, அண்ணா பஸ் நிலையம் அருகே போலீஸ் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடியவர், பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்று பங்களாதேஷில் தங்கியிருந்தார். சி.பி.ஐ. போலீஸ், ஒரு கடிதம் மூலம் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கைது செய்தது. அப்போதும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து, போலீஸாரோடு துப்பாக்கிச் சண்டை போட்டு இமாம் அலியை மீட்டனர் அவரது கூட்டாளிகள். கடைசியில், இமாம் அலியை பெங்களூரில் கண்டுபிடித்துக் கதையை முடித்தது போலீஸ்.


அப்போதே, 'இமாம் அலி புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்’ என்று மதுரை வீதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினார்கள். அது உண்மைதான் என்பது போல, அடுத்தடுத்து மதுரையில் வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்.'' என்றார்.


மக்கள் நிம்மதிக்கு அரசுதான் வழி காட்ட வேண்டும்!

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

******************************

மேற்கண்ட கட்டுரையை நன்கு வாசித்தால் அதில் சொல்லப்பட்டுள்ள விசயம் மதுரை அகதிகள் முகாம் அருகே வெடிகுண்டு ஒன்றை பேருந்தில் வைத்திருந்ததை மாணவர்கள் கண்டு ,தகவல் தெரிவித்துள்ளார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ததோடு, பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் நோக்கில் விஷமிகளின் செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் முஸ்லிம் எவருமே இல்லாதபோதும், அதை போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இமாம் அலியுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது அப்பட்டமான விஷமத்தனம். மட்டுமின்றி இமாம் அலி முன்பு ஒருமுறை வெடிகுண்டை வெடிக்கச் செய்தாராம். அது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குத்தான் என்று சொன்னாராம்! பாபர் மசூதி இடிக்கப்பட்டது 1992 டிசம்பர்-6. ஆனால் இமாம் அலி அதற்கு "இரண்டு ஆண்டுகள்முன்பே" அதாவது 1990 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வெடிகுண்டு சோதனை நடத்தினாராம்! என்ன ஒரு மொள்ளைமாறித்தனம் பாருங்கள்!

எங்காவது வெடிகுண்டு வெடித்தாலோ அல்லது சோதனை நடத்தப்பட்டாலோ அதற்கு முஸ்லிம்களே காரணம் என்ற கருத்துருவாக்கம் செய்வதில் சங்பரிவார பிண்ணனி கொண்ட ஊடகங்கள் செய்துவருவதை அறிவோம். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக ஜூனியர் விகடனும் செயல்படுவது நடுநிலை வாசகர்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதை ஜூ.வி உணரவேண்டும்.

கட்டுரையின் கயமைத்தனத்தை வாசகர்கள் கருத்து பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தபோதிலும் கொஞ்சம்கூட வெட்கமின்றி சிறுவருத்தமோ திருத்தமோ செய்யாது விட்டுவைத்துள்ளதைப் பார்த்தால் டிசம்பர் முதல்வாரத்தில் பரபரப்புக்காக செய்தி வெளியிடவேண்டும் என்ற துர்நோக்கத்தில் ஜூனியர் விகடனேகூட அந்த வெடிகுண்டை பேருந்தில் வைத்திருக்குமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

- கலீல், மதுரை.


source : www.inneram.com

கேரள அரசை கண்டித்து மமக பேரணி

முல்லை பெரியார் ஆணை விவகாரம். கேரளா அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு தமுமுக மாநில செயலாளர் இ. உமர் தலைமை தாங்கினார். தமுமுக பொது செயலாளர் செ. ஹைதர் அலி பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தமிழக கேரளா எல்லையான ஆத்துப்பாலத்தில் ஆரம்பித்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததால் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் கைது செய்யப்பட்டனர்.

கேரள அரசை கண்டித்து மமக பேரணி

கேரள அரசை கண்டித்து மமக பேரணி

கேரள அரசை கண்டித்து மமக பேரணி

செவ்வாய், 20 டிசம்பர், 2011

காரை எடுத்துச் செல்வது தொடர்பாக ஆணையருக்கு பளார் விட்ட கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்நீடாமங்கலம் : ஆணையரை அதிமுக நகராட்சி தலைவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த ஜெயராஜ். இவர் கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர். கடந்த 14ம் தேதி நகராட்சிக்கு சொந்தமான காரை தலைவர் எடுத்துச் செல்ல தயாரானார். அப்போது அங்கு வந்த ஆணையர் நாராயணன், கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு தொடர்பான கூட்டம் இருப்பதால் அங்கு செல்ல கார் தேவை என்று தலைவர் ஜெயராஜிடம் கூறினார். அதற்கு ஜெயராஜ், வாடகை காரை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இதனால், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின் அன்று மாலை ஆணையரை தனது அறைக்கு அழைத்து சென்றார் தலைவர் ஜெயராஜ். சிறிதுநேரத்தில், தலைவர் அறையிலிருந்து, ஆணையர் நாராயணன் கன்னத்தை பிடித்துக் கொண்டு அலறியபடி வெளியே ஓடி வந்தார். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம், தலைவர் தன்னை அறைந்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த துணைத்தலைவர் முகமது அசரப் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று 2 பேரையும் சமாதானப்படுத்தினர்.

இது குறித்து, நகராட்சி ஆணையர் நாராயணன் நேற்று கூறுகையில், “காரை நான்தான் எடுத்துச் செல்வேன் என்று கூறியதால் என் கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளினார். இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்“ என்றார். கண்டித்தேன் அடிக்கவில்லை: நகராட்சி தலைவர் ஜெயராஜ் கூறுகையில், “நகராட்சி ஆணையர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக ஏராளமான புகார்களும் வருகிறது. இதனால் நான் அவரை எனது அறைக்கு அழைத்து கண்டித்தேன். அதை மறைக்க, நான் அடித்துவிட்டதாக அவர் கூறுகிறார். இதில் உண்மை இல்லை“ என்றார்.

நன்றி : http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=11290

திங்கள், 19 டிசம்பர், 2011

“இதோ, நீங்கள் ரகசியமாக அனுப்பிய ஆட்களின் பெயர்கள்! சரியா இவை?”


“சி.ஐ,ஏ. உளவாளிகளை நாம் பிடித்திருக்கின்றோம்” என்று ஹிஸ்பொல்லா அமைப்பு வெளியிட்ட தகவல் உண்மைதானா அல்லது போலியான திசைதிருப்பலா என்ற சர்ச்சைகள் மிகச் சூடாக சர்வதேச மீடியாக்களில் ஒரு ரவுன்ட் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த சூடே இன்னமும் ஆறவில்லை. அதற்கு அடுத்த இடியை இறக்கி சி.ஐ.ஏ.-யை பதற வைத்திருக்கிறது ஹிஸ்பொல்லா!

தாம் கைது செய்துள்ள உளவாளிகளின் பெயர்கள் உட்பட அனைத்து அடையாளங்களையும் டி.வி. ஒளிபரப்பு ஒன்றில் வெளியிட்டிருக்கிறது!


“லெபனானில் வேறு பெயர்களில் தங்கியிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகளின் நிஜமான பெயர்கள் இவை” என்று அறிவிப்போது இந்த விபரங்களை லெபனான் டி.வி. சேனல் ‘அல்-மனார்’ வெளியிட்டிருக்கின்றது.

அல்-மனார், ஹிஸ்பொல்லா அமைப்புடன் நெருக்கமான சேனல் என்பது சர்வதேச மீடியாக்களிடையே பிரசித்தம். இதனால், இந்த விபரங்களை வெளியிட்டு அதிர்வை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்பொல்லாவின் உளவுப் பிரிவுதான் முழு விபரங்களையும் அல்-மனாருக்கு வழங்கியுள்ளது என்பதில் ரகசியம் ஏதுமில்லை.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த Pizza Hut உணவகத்தை ரகசிய சந்திப்பு இடமாக வைத்திருந்து, சிக்கிக் கொண்ட உளவாளிகள் இவர்கள் (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்). இவர்களை ரகசியமாகக் கண்காணித்து, லெபனானில் சி.ஐ.ஏ. வைத்திருந்த உளவு நெட்வேர்க்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ஹிஸ்பொல்லா அறிவித்திருந்தது.

அல்-மனார் டி.வி. சேனல் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட டி.வி-ஷோவில், சிக்கிக் கொண்ட உளவாளிகளின் போட்டோக்கள் ஏதும் காண்பிக்கப்படவில்லை. மாறாக, அனிமேஷன் முறையில் கிராஃபிக் காட்சிகளாக, அவர்கள் கதையே காண்பிக்கப்பட்டது. அவர்கள் சி.ஐ.ஏ.-யினால் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, லெபனானில் தமக்கு தகவல் கொடுக்க லோக்கல் இன்ஃபோமர்களை தேடியது, Pizza Hut ஃபாஸ்ட்-ஃபூட் உணகத்தில் ரகசியமாக சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்தது, என்று விலாவாரியாக காட்டப்பட்டது.

இந்த டி.வி-ஷோ ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஏ. பெண் பேச்சாளர் ஜெனிஃபர் யங்பிளட், “தீவிரவாத அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் குறித்து ஏஜென்சி (சி.ஐ.ஏ.) கருத்து தெரிவிப்பது வழக்கமல்ல. ஹிஸ்பொல்லா அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களது பிரச்சார மீடியாதான் அல்-மனார் டி.வி. சேனல் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான். அதனால், அந்த சேனலில் வெளியிடப்பட்ட விபரங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட முடியாது” என்று நழுவிக் கொண்டார்.

“அல்-மனாரில் வெளியிடப்பட்ட பெயர்களில் சி.ஐ.ஏ. உளவாளிகள் லெபனானில் இருந்தனரா?” என்ற கேள்விக்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெனிஃபர்.

உளவு வட்டாரங்களில் விசாரித்தவரை, அல்-மனார் வெளியிட்ட பட்டியலில் உள்ள பெயர்களில், பெய்ரூட் சி.ஐ.ஏ. சீஃப்-ன் பெயர் மற்றும் அடையாளங்கள் துல்லியமானவை என்றே தெரிகின்றது. அவரது பெயர் சரியாக உள்ளதால், மற்றைய பெயர்களும் நிஜமான பெயர்களாக இருக்கவே சான்ஸ் உள்ளது. அந்த வகையில் இந்த ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு நிச்சயம் ஒரு பெரிய அவமானம்தான்.
நன்றி : http://viruvirupu.com

சனி, 17 டிசம்பர், 2011

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8 அன்று தொடக்கம்


பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2012 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி தொடங்கும் தேர்வுகள் மார்ச் 30 ஆம்திகதி வரை நடைபெறும்.இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வினை 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவ மாணவிகள் எழுத இருக்கின்றனர். இதில் 3,53,953 பேர் மாணவர்களும் 4,09,171 பேர் மாணவியர்களும் ஆவர்.

தேர்வு கால அட்டவணை :
மார்ச் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள்.
9-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.
12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
13-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.
16-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.
19-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
20-ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
22-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
26-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
28-ந் தேதி- கம்மியூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரிவேதியியல், சிறப்பு மொழித்தேர்வு, தட்டச்சு தேர்வு.
30-ந் தேதி - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

அனைத்து தேர்வுகளும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு வரை நடைபெறும். மாணவ-மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு அறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டு 10.10 மணி வரை வினாத்தாளினை மாணவ மாணவிகள் வாசிக்க நேரம் கொடுக்கப்படும். 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடை எழுதக் கொடுக்கப்படும் தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் எழுத நேரம் தரப்படுகிறது.

‘எங்களது உரிமையை எச்சூழலிலும் விட்டுத்தரமாட்டோம்’ – தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் விவகாரத்தில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்று சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. முதலில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் கருப்பசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்கு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதன்பின்பு, பேரவை கூடியதும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.

தீர்மானத்தின் விவரம்:

தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளின் வாதங்களையும், வல்லுநர்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதால், அதன் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும், எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி
27-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவை நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில், “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 2006″ என்ற சட்டத்தை இயற்றி அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று உண்மைக்கு மாறான பிரசாரம் மூலம் கேரள மக்களிடையே அந்த மாநில அரசு பீதியை கிளப்பி விடுகிறது.

புதிய அணை கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட கேரள சட்டப் பேரவையை கண்டிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. எனவே, அந்தத் தீர்மானத்தின் மீது தமிழக மக்களின் வருத்தத்தை தெரிவிக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள அரசு உண்மைக்கு மாறான பிரசாரத்தை மேற்கொண்டு இருப்பதை ஒட்டி, தமிழகத்திலும், கேரளத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பொருட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை, அந்தப் பகுதிக்கு உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக 2006-ம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை கேரள அரசு மேற்கொள்ள வேண்டும்.

அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, எஞ்சியுள்ள நீண்டகால அணைப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு தமிழகத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழகம் தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீது பேரவையில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பேசினர். பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), மு.க.ஸ்டாலின் (திமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜெ.குரு (பாமக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்குநாடு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசினர்.

அவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். பின்னர், இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

முல்லை பெரியாறு அணை விவகாரம்-சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை


தமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏழு கோடி தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நான்கு அம்சங்கள் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக முதலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் கூட வீணாக கடலில் போய் சேரும் 1500 டி.எம்.சி. தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்காக நாம் முற்றிலும் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், 116 ஆண்டுகளுக்கு முன்பு 1789ல் இராமநாதபுரத்தின் முத்து ராமலிங்க சேதுபதி மன்னரின் உத்தரவின் பேரில் அவரது தலைமை அமைச்சராக இருந்த முத்துஇருளப்ப பிள்ளை, அரபிக் கடலில் வீணாக கலக்கும் ஆற்று நீரை தடுத்து நிறுத்தி பாசனத்திற்காக பயன்படுத்துவது குறித்து ஆய்வுகளைச் செய்து திட்டங்களை வடிவமைத்தார். ஆனால் பொருளாதார பிரச்சனையின் காரணமாக அதற்கு செயல்வடிவம் கொடுக்க இயலவில்லை. பின்னர் ஆங்கிலேய இராணுவப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக் இதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.


தமிழகத்தில், சிவகிரியில் தொடங்கி முல்லை ஆற்றுடன் இணைந்து பிறகு பெரிய ஆறாக கேரளாவில் பெருக்கெடுத்து அரபிக் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை வறட்சியின் காரணமாக வாடிநிற்கும் தென் தமிழகத்திற்கு பயன்தரும் வகையில் முல்லை பெரியாறு அணையை தனது மனைவியின் நகைகளை கூட விற்று பென்னி குயிக் கட்டி முடித்தார்.


முல்லை பெரியார் அணையை கட்டும் பணியில் ஈடுபட்ட 483 தொழிலாளர்கள் மர்மக் காய்ச்சலுக்கு பலியானார்கள். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த அணையை உலகமே வியப்புடன் பார்த்தது. "This is one of the most extraordinary feats of engineering ever performed by man" மனிதனால் நிறைவேற்றப்பட்ட அசாதாரணமான பொறியியல் சாதனைகளில் முல்லைப் பெரியாறு அணையும் ஒன்று என்று The Institute of Royal Engineers நிறுவனம் வெளியிட்டுள்ளThe Military Engineer in India vol 11ல் லெப்டினென்ட் கர்னல் சான்டஸ் குறிப்பிட்டுள்ளார். ரூ84.71 லட்சம் மூலதனச் செலவுடன் 116 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பலம் வாய்ந்த அணையை ரூ40 கோடி செலவில் இடிப்போம் என்று கேரள அரசு கூறிவருவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வைக்கப்படும் பேரிடியாகும்.


முல்லைப் பெரியார் அணையை இடித்து விட்டு புதிய அணையை கட்டி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தருவோம் என்று கேரளா அரசு சார்பில் தெரிவிக்கப்படும் கருத்து ஒரு ஏமாற்று வித்தையாகும். முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட ஒரு தடுப்புச் சுவரே ஆகும். இதிலிருந்து தேக்கடி மதகு வாயிலாக சுரங்கப் பாதை வாயிலாக தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகின்றது. முல்லை பெரியாறு அனையின் நீர் மட்டம் 104 அடிக்கு மேலேச் சென்றால் தான் அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். புதிதாக கட்டப் போவதாக சொல்லப்படும் அணை, பெரியாறு அணையிலிருந்து 350 மீட்டர் கீழ்பகுதியில் அமையபோகின்றது. புதிய அணையின் மட்டம் பெரியாறு அணையை விட 50 அடி குறைவு. எனவே புதிய அணையில் தண்ணீர் மட்டம் 150 அடிக்கு மேலே சென்றால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க இயலும். ஆனால் இதற்கு வழியே இல்லை. ஏனெனில் அவர்கள் கட்டப்போகும் அணையின் உயரமே 140 அடிதான். ஆனால், இந்தப் புதிய அணையைக் கட்டுவதற்கான உத்தரவு ஏதும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்காத சூழ்நிலையிலே, சில ஆண்டுகளுக்கு முன்னால், புதிய அணையைக் கட்டுவதாக சொல்லப்படக்கூடிய பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அங்கே ஒரு மரத்தைக்கூட வெட்டக்கூடாது. மத்திய அரசாங்கத்தினுடைய சுற்றுச்சூழல் இலாகாவின் கீழ் இருக்கக்கூடிய ஒரு பகுதி. ஆனால் கேரள அரசு எல்லாவற்றையும் மீறி அங்கே புதிய அணையைக் கட்டுவதற்கான feasibility study ஐ பூர்வாங்க ஆய்வுகளையெல்லாம் மரங்களை வெட்டி மண்ணைப் பாழ்படுத்திச் செய்திருப்பதையும், அதை மத்திய அரசு கண்டிக்காததையும் இங்கே வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.


தமிழகத்திற்கு புதிய அணையிலிருந்து தண்ணீர் தருவோம் என்று கேரளா சொல்வது ஒரு ஏமாற்று வித்தை என்று சொன்னேன். அதற்கு ஆதாரமாகவே கேரள அரசாங்கமே நீதி அரசர் ஆனந்த் அவர்கள் குழுவிடம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மனுவை அளித்திருக்கின்றார்கள். அந்த மனுவினுடைய 37ம் பக்கத்திலே "முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது'' என்றும், அந்த அறிக்கையின் 23ம் பக்கத்தில் "தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தே ஆகும்'' எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இப்படி தொடர்ச்சியாக, குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தர மறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய அனுமதி மறுக்கும் கேரளம், கொங்குச்சீமையில் பாம்பாற்றுக்குக் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செயும் கேரளம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபடாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கின்றோம் என்பதை நிலைநாட்டக்கூடிய வகையிலே இன்று நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய தீர்மானம் அமைந்திருக்கின்றது.


கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் இதனால் கேரளாவில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரளா அரசு அம்மாநில மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. சு. குணசேகரன் அவர்கள் குறிப்பிட்டதைப் போலத்தான் எழுத்தறிவில் இந்தியாவில் முதன்மையாக விளங்கும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் இந்த வதந்தியை நம்பி வருவது துரதிருஷ்டவசமானதாகும். ஒரு கட்டடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாகத்தான் சோதனை செய்து ஒரு முடிவைத் தர முடியும். தமிழக பொதுப்பணித் துறையினுடைய முன்னாள் பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒரு சிறப்பான ஆவண வீடியோ படத்தை தயாரித்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை முற்றிலுமாக இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே தவிர கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.


இதில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இந்த ஆவணப் படத்திலே நம்முடைய தமிழக பொதுப்பணித் துறையினுடைய முன்னாள் பொறியாளர்கள் சொல்லியிருக்கக்கூடிய கருத்தை கேரள மாநிலத்தினுடைய பேரிடர் மேலாண்மைத் துறையினுடைய செயலாளர், எல்லோருக்கும் பிரபலமாக கேரளா உயர்நீதிமன்றத்திலே அதனுடைய அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அவர்கள் சொன்ன கருத்துதான் வெளியே தெரிந்திருக்கின்றது. அதே வழக்கில் கேரள மாநிலத்தினுடைய பேரிடர் மேலாண்மைத் துறையினுடைய செயலாளர் ஒரு கருத்தைச் சொல்கின்றார். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதிலிருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையைச் சென்றடைய 4 மணி நேரமும், செறுதோணி அணைமூலம் அரபிக் கடலைச் சென்றடைய 10 முதல் 12 மணி நேரமும் பிடிக்கும். எனவே, மக்களுக்கு எத்தகைய அபாயமும் ஏற்படாது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.


இந்தச் சூழலே மிகப்பெரிய ஒரு பீதியை கேரள அரசாங்கம் பரப்பிவரக்கூடிய சூழ்நிலையிலே அதற்கான ஒரு திரைப்படமும் டேம் 999 என்ற பெயரிலே வந்திருக்கக்கூடிய நிலையிலே தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கை என்னவென்றால், நம்முடைய தமிழ்நாடு அரசு தமிழக பொதுப்பணித் துறையினுடைய முன்னாள் பொறியாளர்கள் தயாரித்திருக்கக்கூடிய இந்த வீடியோ படம் தமிழிலே வந்திருக்கின்றது. வெறுமனே ஆங்கில சப் டைட்டில் போட்டிருக்கின்றார்கள். அதை முழுமையாக அல்லது அதைவிட இன்னும் மெருகூட்டி சிறப்பான ஒரு ஆவணப் படத்தை ஆங்கிலத்திலே தயாரித்து, நம்முடைய உரிமை நியாயமானது என்பதை இந்திய மக்கள் உணரவைப்பதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.


கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நதி நீர் ஆணையத்தின் தலைவர் முனைவர் கே.சி. தாமஸ் அவர்கள் டிசம்பர் 13ல் வெளியான டெக்கான் கிரானிகிள் நாளிதழில், தொழில்நுட்பம் வளர்ந்திராத காலத்தில் 1895ல் கட்டப்பட்ட முல்லைப் பெரியார் அணை 2011லிலும் ஸ்திரமாக நின்றுக் கொண்டிருப்பது அதன் வடிவமைப்பும் கட்டுமான நுட்பமும் வலுவானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதற்கு அத்தாட்சியாகும் என்று குறிப்பிட்டிருப்பதோடு அணையை பலப்படுத்தக்கூடிய முயற்சிகள் நவீன காலதரத்திற்கு அந்த அணையை உயர்த்தியுள்ளது எல்லாவகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலமானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


கேரள அரசாங்கத்தினுடைய நடவடிக்கை இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலைவைக்கும் கொடிய அரசாக கேரளா விளங்குகிறது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. ஏறத்தாழ 10 இலட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமலும், 85லட்சம் மக்கள் குடிநீருக்கு வழியில்லாமல் அல்லல்படக்கூடிய ஒரு வேலையைத்தான் கேரள அரசு செய்து வருகிறது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் தென்பகுதி காலப்போக்கில் பாலைவனமாக மாறநேரிடும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய இந்தத் தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக வரவேற்பதுடன், ஒரே ஒரு கோரிக்கையை நான் இங்கே வைக்க விரும்புகின்றேன்.


மத்திய அரசு மீனவர் பிரச்சினையிலே சரியான முறையிலே அணுகுமுறையை தமிழக மீனவர்களுடைய நலனைக் காப்பாற்றுவதிலே அக்கறை இல்லாமல் இருப்பதுபோல் இல்லாமல் இப்போதுகூட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீது ஒரு பொய்வழக்குப் போட்டு, இலங்கைச் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கான உருப்படியான வழியைச் செய்யாதது போலத்தான் இப்போது இந்த முல்லைப் பெரியாறு விஷயத்திலும் இருக்கின்றது. எனவே, சட்டசபையில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாமல், சட்டப்பேரவைக்கு வெளியில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலே டெல்லிகுச் சென்று, நம்முடைய கோரிக்கைகளை பிரதமர் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதற்கும் வழிவகுக்க வேண்டுமென்றுச் சொல்லி இந்தத் தீர்மானத்தை முழுமையாக வரவேற்று அமர்கின்றேன். நன்றி.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

திருவாருரில் தமுமுக சார்பில் நடைபெற்ற டிசம்பர்-06 ஆர்ப்பாட்டத்தின் புகைப்படக் காட்சிகள்.“டிசம்பர் 6“ – பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

5
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.

2இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது. அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

1
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன. அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை. அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும். அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

6
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

7
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.

இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர். கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?

இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
10
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார். அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
9
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம். உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.

பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
8
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல. பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை. எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

Source: www.tntj.net ….. நன்றி

திங்கள், 5 டிசம்பர், 2011

டிசம்பர் 6 ல் – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இறைவனின் திருப்பெயரால்..
டிசம்பர் 6 ல் – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இழந்த உரிமையை மீட்போம்… இருக்கும் உரிமையை காப்போம்..

நாங்கள் ராமருக்கோ, ராமர் கோயில் கட்டப்படுவதற்கோ, எதிரானவர்கள் அல்லர். உண்மைக்கு மாறாக, ஆங்கிலேய வரலாற்றுப் புரட்டர்களின் பிரிவினைவாத சூழ்ச்சிகளை நம்பி பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையும், அங்குதான் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்பதையும் தான் எதிர்க்கிறோம்.

அயோத்தியில் உள்ள பிற ராமர் கோயில்களுக்கு நிலங்களை வாரி வழங்கிய பாபர், இந்துக்களின் மீது அன்பைப்பொழிந்தவர். தன் மகன், முகலாய மன்னர் ஹூமாயூனுக்க எழுதிய ஒரு கடிதத்தில், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மாட்டுக்கறி உண்பதைக் கைவிடு என்று கட்டளையிட்டவர். அப்படியிருக்கையில், எப்படி ராமர் கோயிலை இடித்து, மசூதி கட்ட முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.

டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜிதை முன்னிறுத்தி நடத்தும் அறவழிப்ட போராட்டங்கள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வரலாற்று உண்மைகளைப் புரியவைக்க, சட்டத்தின் நீதியை நிலைநாட்ட, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்னையைக் காக்க, இந்தியாவின் பாரம்பரிய புகழின் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க, நல்லிணக்கத்தை வலிமைப்படுத்த நடக்கும் போராட்டம் என்பதை மறக்காதீர்.

அக்டோபர் 30 – 2010 அன்று 61 ஆண்டு கால இவ்வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய வினோத தீர்ப்புக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தது. இப்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு சமூகம், தன்னை நிரபராதிகள் என நிரூபிக்கத் துடிக்கிறது. அறவழிப்போராட்டங்கள் மூலம் விரைவாக நீதியைப் பெற விரும்புகிறது. எனவே..

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருவாரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை திருவாரூர் மாவட்ட நீதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

நேற்று மாலை 5 மணிக்கு முத்துப்பேட்டை தமுமுக அலுவலகத்தில் திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினை சார்ந்த சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

முத்துப்பேட்டை தமுமுக நகர தலைவர் ஜனாப். சம்சுதீன் அவர்கள் கூறுகையில், திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் மற்றும் ஏனைய சகோதரர்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும், அதற்கான ஏற்பாட்டினை முத்துப்பேட்டை தமுமுகவானது செய்து கொண்டு வருகிறது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையினை தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை. மஜீது நிகழ்த்த உள்ளார் என்ற தகவலையும் நமது செய்தியாளரிடம் தமுமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை. முஹம்மது மாலிக் அவர்கள் கூறினார்.

நியாயவான்களே.. பங்கேற்பீர்..
அழைக்கிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். திருவாரூர் மாவட்டம்

செவ்வாய், 22 நவம்பர், 2011

அடிப்படை வசதிகள் இல்லாத கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை சரி செய்யக் கோரி மனு – மரக்கடை லட்சுமாங்கு கிளை , பத்திரிக்கை செய்தி!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த மருத்துவனை. 1952 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை கட்டிடம் கட்டபப்ட்டது.

தற்போது இந்த மருத்துவமனையில் அடிப்படைய வசதிகள் ஏதும் இல்லாமலும், சுகாதரமற்றும், கட்டிடம் மிகவும் பழுந்தடைந்தும் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதையரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லட்சுமாங்கு கிளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பிரச்சனையை புகைப்பட ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி கடந்த 15-11-2011 அன்று புகார் அளித்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த புகார் குறித்து தினகரன் தமிழ் முரசு போன்ற பத்தரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது.