செவ்வாய், 26 ஜூன், 2012

NWF-ன் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மீட்பதற்கான போராட்டம்கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது.

மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக்கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மத ரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க. அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட வேண்டும். ஆகவே விடுதலைக்குத் தகுதியுள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், முஸ்லிம் சிறைவாசிகளின் அவலம் நீங்கிட வேண்டுமெனில் அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் 7 ஆண்டுகள் கழிந்த 49 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திடுமாறு பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சார்பாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கின்றது.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் V.S.T.பள்ளிவாசலில் இருந்து பேரணியாக தொடங்கி ஆஸாத் வீதி வழியக பஜார் திடலில் நிறைவடைந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.கைசர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டதிற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் N.ஜன்னத் ஆலிமா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட தலைவர் M. மும்தாஜ் ஆலிமா வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். இறுதியாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட செயலாளர் நஸ்ரத் நன்றியுரையற்றினார். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்

முத்துபேட்டையில் மற்றும் அதிரையில் நூதன விபச்சாரம்


தஞ்சை ஜோஸ் ஆலுக்காசில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீநாத் என்ற ஒரு ஐயர், இவர் கேரளாவை சேர்ந்தவர், இவருடைய வேலை சீட் பிடிப்பது அதுவும் அதிகமாக முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியான முத்துப்பேட்டை & அதிராம்பட்டினம் தான், இவர் சும்மார் மூன்று நாட்களுக்கு முன்பு முத்துபேட்டையில் நம் முஸ்லிம் பெண்ணிடம் விபசாரத்திற்கு முயன்றபோது சரியான தருணத்தில் பிடிபட்டார், இவரை பிடித்து விசாரித்தபொழுது இவருக்கு முத்துபேட்டை மற்றும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த பல பெண்களிடம் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது, அப்பொழுது அவருடைய மொபைலை செக் பண்ணும்பொழுது மெமரி கார்டில் நம் 6 இஸ்லாமிய பெண்களுடைய புகைப்படங்கள் இருந்தது, இதனால் MTT LOVE உங்களுக்கு தெரிய படுத்துவது என்னவென்றால் தயவு செய்து எந்தஒரு சீட் பிடிப்பவரையும் நம்பவோ & உள்ளேயோ விட வேண்டாம், இவருடைய புகை படம் இதோ
 


இந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு வெளியிடப்பட்டுள்ளன

http://adiraithunder.blogspot.com/2012/06/blog-post_8572.html

செவ்வாய், 19 ஜூன், 2012

மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சபட்ச நிலையில் இருந்த நிலையில் கத்தாரில் இருந்த நானும் அ. அஸ்லம் பாஷாவும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து வந்ததும் தகவல் தருவதாக கூறினார். இதன் பிறகு அமைச்சரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு 10A 1 விதிமுறையின் படி ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 மருத்துவர்களும் திறந்த போட்டியில் (Open Competition) 28 மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து எழுத்துபூர்வமாக தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம். புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பியவுடன் தகவல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை திரும்பிய பிறகு அவரை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் கல்வி வழிகாட்டித் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எப். கான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர் 688 மருத்துவர்களில் 52 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட பட்டியலை வழங்கினார். அமைச்சர் அளித்த பட்டியலை நாம் ஆய்வுச் செய்ததுடன் மருத்துவர் நியமன வாரியத்தின் அதிகாரிகளுடன் பேராசிரியர் எம்.எப். கானும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளுர் இஸ்மாயிலும் விளக்கம் கேட்டனர். பேராசிரியர் காதர் மைதீனும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இவர்கள் வெளியிட்ட அறிக்கையை நம்பி ஆய்வுச் செய்யாமல் முற்றுகை போராட்டம் அறிவித்த ஜைனுல் ஆபிதீனும் விவரம் என்னவென்று அறியாமல் விசாரணை எதுவும் செய்யாமல் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.
மக்கள் நல்வாழ்வு துறையின் இணையத் தளத்தில் தற்காலிக மருத்துவர் நியமனத்திற்காக மார்ச் 26 மற்றும் 27ல் கலந்தாலோசனைக்கு (counselling) தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 1384 மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஆனால் இது நியமனம் பெற்றவர்களின் ப்ட்டியல் இல்லை. கலந்தாய்விற்கான பட்டியல் தான். இந்த பட்டியல் பல்வேறு கட்டங்களாக ஜனவரி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வில் கடைசி 2 கட்டங்களுக்கான கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டவர்களின் பட்டியல். அப்போது ஏன் முஸ்லிம்கள் ஒருவர் கூட இந்த பட்டியலில் இல்லை என்றால் இந்த கடைசி 2 கட்ட கலந்தாய்வுக்கு முன்பாகவே முஸ்லிம் மருத்துவர்கள் 52 பேர் நாம் முன்பே குறிப்பிட்டது போல் நியமனம் செய்யப்பட்டு விட்டார்கள. இப்படி நாம் சொல்லும் போது இந்த 1384ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லையா என்ற கேள்வி எழும். இந்த 1384 பேரையும் சேர்த்து கலந்தாய்வுக்காக 5856 மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களில் 1963 மருத்துவர்கள் மட்டுமே 2012 ஜனவரி 20, 21, 22. 23 மற்றும் மார்ச் 22, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்குக் கொண்டார்கள். இவர்களில் கலந்தாய்வுக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 835 இடங்களுக்கு 688 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதை மருத்துவத் துறை நமக்கு விரிவாக பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலின் சுருக்கும் இதோ688 மருத்துவர்களில் திறந்த போட்டியில் 28 பேர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேர் ஆக மொத்தம் 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விபரம் வருமாறு
1. சமீமா 2. சைய்யது அப்துல் காதர் 3. அஹ்மது ஷேக் 4.ஜின்னா 5. எஸ்.எம். இம்தியாஸ் 6.எஸ. நர்கீஸ் 7. எஸ். சையது பாகர் 8.ஆர். மன்சூரா சாஹிபா 9. ஏ. உஸ்மான் 10.முஹம்மது மீரான் 11. ஏ. கதீஜா சமீஹா 12. பி. சமீமா 13. ஏ. அர்ஷியா தபசும் 14.ஏ. ஆரிப் உதுமான் முகைதீன் 15. எம் ஆசிக் அல் முஹம்மது 16.நிலோபர் நிஷா 17.எஸ். அலிமா பானு 18.ஏ. அஸ்கர் அலி 19.பி. சாகுல் ஹமீத 20.எம். சபீனா 21.ஏ. மரிஜியா 22.ஷேக் முஹம்மது ராஜா 23. ஏ. சலீம் 24. ஆர். முஹம்மது ஹில்மி 25. சைய்யது அப்துல்லா முஹம்மது அமீன் 26. சைய்யது நிஷான் பாத்திமா 27. பி.ஐ. சாஜித் அலி 28.எம். பைரோஸ் 29.எம. முஹம்மது இப்ராஹீம் 30.எம.ஜி. ஷாஹித் அப்துல்லா 31. சாஜிதா நஸ்ரின் 32.அஜ்மல் கான் 33. ரியாஸ் சுல்தானா 34. எப். முஹம்மது ரபி 35.எஸ். பகிருத்தீன் ஆரிப் கான் 36. எ. அபுல் ஹசன் 37. முனவர் அலி மித்ஹத் ஹப்சா 38.எம். மஜிதா பேகம் 39. டி.ஏ. ரிஸ்வான் அஹ்மது 40.ஹெச். சாஜிதா பர்வீன் 41. எ. நசுரீன் 42.எஸ். தய்யுபா பாத்திமா 43. ஜே.ஏ.எம்.சையத் இப்ராஹீம் ஷா 44.எஸ்.ஐ. சாஹித் அக்பர் 45.ஆர். பர்கத் 46. கே. ரியாஸ் பாத்திமா 47.ஏ. சுல்தான ராஜா 48. ஏ. ஆசிபா பேகம் 49. ஏ. பர்கத் நிஷா 50. எ. அப்துல் ரஹீம் 51. எல். சப்னம் 52. அஹ்மது பாசில்

ஜனவரி 2 2012ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எம்.எஸ். 2ன் படி 835 மருத்துவர்கள் நியமனம் செய்யயப்பட வேண்டும். இதில் மேற்கண்டவாறு 688 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 147 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து கண்காணித்து வரும். இதில் துரோகம் இழைக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் ஆய்வுச் செய்யாமல் மலிவான விளம்பரத்தில் ஈடுபட மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

திங்கள், 18 ஜூன், 2012

திருந்த மாட்டீர்களா சகோதரிகளே ???

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இந்த பதிவு..ஃபேஸ்புக் மூலம் நடந்த மற்றொரு பலாத்காரமும், கொலையும்..!


பிரமீளா என்ற இளம் பெண் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டு கிடந்தார், என்பது தான் அச் செய்தி..போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த தந்தை தன் மகள் வெளியில் எங்கும் போகாதவள் என்றும் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் எந்நேரமும் ஃ பேஸ்புக்கில் இருப்பதும் தன்னுடைய ஒவ்வொரு செய்கைகளையும், அதில் பதிவு செய்வது மட்டும் தான் என்பது..

அப்பெண்ணின் கம்ப்யூட்டரை ஓபன் செய்து பார்த்ததில் கடைசியாக இருந்த பதிவில் இங்கு காலிங்பெல் அடிக்கிறது யார் என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று இருந்தது..அதற்கு லைக் போட்டவர்களை முழுமையாக விசாரிக்கும் போது அவர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் ஆண்கள் என தெரிய வந்து, அவர்களை பிடித்து விசாரிக்கும் போது ஆமாம் நாங்கள் தான் அக்கொலையை செய்தோம் என்ற உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்கள்..

அவர்களின் வாக்குமூலம்..         
நாங்கள் பெண்கள் பெயரில் மெயில் ஓபன் செய்து கொண்டு அதன் மூலம் ஃபேஸ்புக்கில் பெண்களின் ஃப்ரெண்டாக சேர்ந்து கொள்வோம்.சில பெண்கள் தன் ஒவ்வொரு செயலையும் ''வால்''லில் பதிவு செய்வார்கள்..அவர்களிடம் நல்ல முறையில் பழகி அவர்கள் நாங்கள் தனியாக இருக்கிறோம் என பதிவு செய்யும் போது அவர்கள் வீட்டுக்கு கொரியர் கொடுப்பது போல போய் கத்தியை காட்டி அவர்களை அனுபவித்து விடுவோம்..இது போல பல முறை நடத்தி இருக்கிறோம்..ஆனால் யாரும் இது வரை போலீசுக்கு போனதில்லை..அதே போல பிரமீளா வீட்டுக்கும் போனோம்..ஆனால் அந்த பெண் சுதாரித்து போன் செய்ய போனதால் நாங்கள் கத்தியை வைத்து அந்த பெண்ணின் கையை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண்ணை அனுபவித்தோம்..பிறகு அந்த பெண் காட்டி கொடுப்பார் என தோன்றியதால் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து விட்டோம் என்பது தான் அந்த வாக்கு மூலம்..இதே போல எத்தனை மோசமான கதைகள் இந்த ஃ பேஸ்புக் மூலம்..! ஆனாலும் பெண்களுக்கு புத்தி வந்த மாதிரி தெரிய வில்லை ..இந்த விசயத்தில் தன் சுய அறிவை உபயோகிப்பதில்லை என்ற முடிவில் இருப்பார்கள் போல உள்ளது.. ! தன்னை மிகவும் விரும்பும் தாய்,தந்தை உடன் பிறந்தவர்கள்,தாத்தா,பாட்டி,மற்றும் உறவுகளுடன் பேச முடியாத இவர்கள் போலித்தனமான பாசங்களையும்,காரியத்திற்காக புகழப்படும் புகழ்ச்சிகளையும்,ஒன்றுக்கும் உதவாத நட்புகளையும் உண்மை என நம்பி கொண்டு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தன் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் இவர்களை நினைத்தால் மிகவும் கவலையாகவும் கோவமாகவும் வருகிறது..!

இதன் மூலம் வரும் பின்விளைவுகள் தெரிந்தே சில பேர்..! தெரியாமலே சில பேர்..! எல்லாஇடங்களிலும் ஆட்டு முகம் பொருத்திய ஓநாய் மனிதர்கள் இருக்கிறார்கள், என தெரியாமல் போலித்தனமான,கேவலமான மனதுடைய  மனிதர்களை நம்பி தன் புகைப்படம் முதற்கொண்டு தன் வீட்டு விவரங்கள் யாவற்றையும் பொதுவில் பந்தி வைக்கும் இவர்களை என்ன செய்வது..? இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என எப்படி அறிவது..? 

அப்படி தனக்கு வேண்டியவர்களுக்கு தெரிவிப்பதற்கு தான் நிறைய தனிப்பட்ட  வழிமுறைகள் இருக்கிறதே பின் என்ன வந்தது இவர்களுக்கு..? அந்த காலத்தில் படிக்காதவர்களான நம் பாட்டிகளிடம் இருந்த ,எதை வெளியில் சொல்ல வேண்டும்,எதை வெளியில் சொல்ல கூடாது என்ற தெளிவும்,அறிவும்,அதிகம் படித்த இந்த மாதிரி பெண்களிடம் இல்லை என்பதே உண்மை .இவர்கள் நிஜத்துக்கும் ,நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத படித்த மேதைகள்..! 
இன்னும் வேறு வகை பெண்கள் சிலர் இங்கு உண்டு ..காதல் மொழி பேசி வரும் நபரிடம் தன்னை பற்றி அனைத்தையும் சொல்லி உருகி உருகி காதலித்து பின் வெளி இடங்களில் இருவரும் பல முறை சந்தித்து,தன் கற்பை இழந்த பின் அவனுக்கு இவள் அலுத்து அவன் தன் சுயரூபத்தை காட்டியதும் கண்ணீர் விட்டு அழுது மனம் நொந்தபடி கிடப்பது என்று...! இதில் சில தைரியமான பெண்கள் தன் முகத்தை மூடி கொண்டு போலீசில் புகார் கொடுக்க வரும் போது உங்கள் சிந்திக்கும் திறனை எங்கு அடகு வைத்தீர்கள் என கேட்க தோன்றுகிறது...! 

இரைக்காக காத்து இருக்கும் வேடன் போல, பெண் மூலம் தேவையை விரும்புபவன், தேன் சொட்டும்,ஆசை வார்த்தைகளையும்,அதிக படியான வீண் புகழ்ச்சியையும்,பசப்பலான நடிப்பையும் வெளிப்படுத்த தான் செய்வான்..அவனுக்கு தேவை இரை ..அதற்காக என்ன வேண்டுமாலும் செய்வதற்கு தயாராக தான் இருப்பான்..நோக்கம் நிறைவேறியதும் வேறு ஒரு புதிய இரையை தேட போய் விடுவான்..இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்க படுவதென்னமோ பெண் தான்..வாழ்வில் சில விஷயங்களை நாம் இழந்தால் இழந்தது தான்..! அதை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது..! 


தவறு செய்யும் சில ஆண்களை குற்றம் சொல்லும் இந்த இடத்தில் இதே போல குற்றம் செய்யும் பெண்களையும் குறிப்பிட வேண்டும்.. தன் அழகால் வசீகர பேச்சால் ஆண்களை தன் வலையில் விழ வைத்து அவர்களின் பணத்தை சூறையாடும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்...! தன் குடும்பத்தை விட்டு தன்னந்தனியாக,தனக்கு என்று பெரிதாக ஆசை படாமல் தன் குடும்ப கஸ்டத்தை மட்டுமே மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் பலர் இங்கு உண்டு..

வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சில ஆண்கள் கூட,பெண்களின் மோக வலையில் சிக்குவது என்பது நாம் அனைவரும் நடைமுறையில் அறிந்த ஒன்று..இந்த பலகீனம் உள்ளவர்கள் தான் இந்த மாதிரி பெண்களின் இலக்கு ..அவர்கள் தன் உதிரத்தை வியர்வையாக்கி சம்பாதிக்கும் பணத்தை இந்த பெண்கள் தன் பேச்சு திறமையாலும்,தன் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் எளிதில் கவர்ந்து விடுகின்றனர்..இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அப்பாவிகள் பலர்..! சில பெண்கள் சமத்துவத்தை இந்த விஷயத்திலும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்..ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது..!  
இந்த ஃ பேஸ்புக்கால் நன்மை எதுவும் இல்லையா..? என்றால் கட்டாயம் இருக்கிறது..! இங்கு எத்தனையோ சகோதர சகோதரிகள்,தங்களுடைய பல வேலை பளுக்களுக்கு இடையில் நல்லதை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயலாற்றி கொண்டு இருக்கிறார்கள்..! மேலும்  இதன் மூலம் பல நல்ல சமுதாய மாற்றங்களும்,, கல்வி உதவிகளும்,உயிர் காக்கும் பல மருத்துவ தேவைகளும்,பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது ..எந்த ஒன்றும் நாம் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்பது போல இந்த ஃபேஸ்புக்கையும் நாம் பல நல்ல ஆக்கபுர்வமான விசயங்களை தெரிந்து கொள்வதற்கும்,பகிர்ந்து கொள்வதற்கும் பயன் படுத்தலாம்..
மேலும் இங்கு பல  நல்ல நட்புகள் உள்ளன.. நல்லதை எடுத்து சொல்லி அடுத்தவர் தவறு செய்யும் போது தனி பட்ட விதத்தில் திருத்தும் அருமையான நட்புகள் உண்டு..என்னை போல நல்ல நட்பின் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொண்ட பலர் இங்கு உண்டு ..வரம்பு மீறாத தன்மையோடும் சரியான புரிதலோடும்,எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இறைவனுக்கு மட்டுமே பயந்து நட்பு கொண்ட பலர் இங்கு உண்டு ..
ஆனால் சமீப காலங்களாக கேள்வி படும் விசயங்கள் நன்மையை விட இந்த இடம் பல தப்பான செயல்களுக்கு தான் அதிகம் துணை போவதாக  தெரிகிறது..எல்லா இடத்திலும் எந்த வழியை தேர்ந்தெடுக்க போகிறோம் என்பது நம் கையில் இருக்கிறது..முக்கியமாக பெற்றோர்கள் தன் பிள்ளைகள் எந்த வழியில் இருக்கிறார்கள் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..எந்த வழி சரியான வழி என்பதை சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது..
அனைவருக்கும் தெரிந்த உவமை தான் ஆனால் நல்ல உவமை :-
சேலை முள்ளில் மீது பட்டாலும் இல்லை,முள் சேலை மீது பட்டாலும் பாதிப்பு என்னவோ சேலைக்கு தான்..!

டிஸ்கி:-தன் பொறுப்புகளையும்,தன் கடமைகளையும்,புறக்கணித்து, நாளை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற நிலை மறந்து,இந்த மாய உலகத்தில் தன்னை முழுவதுமாக மூழ்கடித்து தன் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் யாராவது ஒரு சகோதரி இந்த பதிவை படித்து விட்டு தன்னை மீட்டெடுத்து கொண்டார் எனில் அது தான் இந்த பதிவின் நோக்கமும் வெற்றியும்..!

நன்றி---சிநேகிதி பத்திரிகை..  
உங்கள் சகோதரி..
ஆயிஷா பேகம்..
நன்றி http://kaiyalavuulagam.blogspot.com/2012/06/blog-post.html

புதன், 13 ஜூன், 2012

திருச்சியில் த.மு.மு.க சார்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி கல்வி விருது 2012

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழம் திருச்சி மாவட்டம் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் த.மு.மு.க ஆழ்வார் தோப்பு கிளை அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்களின் தலைமையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி....ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் மற்றும் 10 வகுப்பு 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது.
அதைபோல் 6 முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணமாக ரூ 2,00,000 (இரண்டு லட்சம்) வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட செயலாளர் (ம.ம.க) பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ், கிளை தலைவர் முஹம்மது பாபு, கிளை செயலாளர் அப்துல் நாசர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணிச்செயலளர் காஜா மொய்தீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும்,மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது அவர்களும்,மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக கிளை மாணவரணிச்செயலாளர் மன்சூர் பாபர் அவர்கள் நன்றி கூறினார்.

செவ்வாய், 12 ஜூன், 2012

மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு - தமுமுக கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 1349 மருத்துவர் பணியிடங்களில் ஒரு மருத்துவரும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் இல்லை என தெரியவருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1349 மருத்துவர் பணியிடங்களில் 47 பணியிடங்கள் சிறுபான்மை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் பொதுப்பிரிவிலும் சிறுபான்மையின முஸ்லிம் இனத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஒருவரும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய முதல்வரும் அறிவித்தார்கள். இந்நிலையில் மருத்துவர்கள் தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமளிப்பதுடன் திட்டமிட்டு முஸ்லிம் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கருதுவதுடன் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இச்செயலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவர்களின் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.

அன்புடன்
(ப. அப்துல் சமது)

திங்கள், 11 ஜூன், 2012

சிறைவாசிகளை விடுதலை செய்க!

இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் J.S. ரிபாயி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

சனி, 9 ஜூன், 2012

ஆபாசப் பேச்சு கேட்க வா! இளசுகளைக் கெடுக்கும் செல்போன் நட்பு

தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது பணம் பறிக்கின்றன, சில செல்போன் நிறுவனங்கள்! 
புதுப்புது ஐடியாக்களில் காசைக் கறப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரு நிறுவனம் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், அடுத்த சில நாட்களிலே மற்ற நிறுவனங்களும் அதே திட்டத்தை, வேறு பெயரில் அறிமுகம் செய்துவிடும். அந்த வகையில் இப்போது இளைஞர்களைக் குறிவைத்துக் காசைக் கறக்கும் புதிய திட்டத்தின் பெயர், 'நட்பு வட்டம்.’
இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு, இந்த நட்பு வட்டம் குறித்து ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். வந்து இருக்கலாம். அல்லது விரைவில் வரும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாமல் எஸ்.எம்.எஸ். வரும். அந்தக் குறுந்தகவலை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் ஆர்வக்கோளாறில் பதில் அனுப்பிவிட்டால், உடனே உங்களுக்கு 13 இலக்கங்கள்கொண்ட ஓர் அடையாள எண் வழங்குவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பில்லில் 30 ரூபாய் ஏறி இருக்கும். அதன்பிறகு, உங்களுக்கு ஏராளமான மிஸ்டு கால்கள் வரத் தொடங்கும். அந்த எண்களுக்கு நிச்சயமாக நீங்கள் டயல் செய்வீர்கள். அப்போது எதிர்முனையில் ஸ்வீட் வாய்ஸில் ஒரு பெண் கொஞ்சுவார்.
நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுமாதிரி மென்மையாகப் பதில் சொல்வார். நீங்கள் நாகரிகம் மறந்து ஆபாசமாகப் பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். எதற்காகவும் கோபப்பட மாட்டார். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் செக்ஸியாகப் பதில் வந்துகொண்டே இருக்கும். நீங்கள் உடனே சுதாரித்து உங்கள் செல்போன் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கில் பணம் எகிறிக்கொண்டே இருக்கும்.
வழக்கமாக ஏதாவது ஓர் எண்ணுக்கு நீங்கள் அழைத்தால், எதிர்முனையில் இணைப்பு கிடைத்த பிறகுதான் மீட்டர் ஓடும். ஆனால் இந்தத் திட்டத்தில் மட்டும், நீங்கள் டயல் செய்த உடனே மீட்டர் ஓடத் தொடங்கும். ஒரு நிமிடத்துக்கு இரண்டு ரூபாய் கட்டணம். எஸ்.எம்.எஸ். கொடுப் பதற்குக் கட்டணம் ஒரு ரூபாய். வெவ்வேறு எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். எடுக்கவும் முடியாது, எடுக்காமல் இருக்கவும் முடியாது என்று தடுமாறி ஏமாறுபவர்கள் அதிகம்.
இந்த நட்பு வட்டார சீட்டிங் குறித்து ஏராளமான நபர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தொலைத்து, நமக்குப் புகார் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். களம் இறங்கினோம்.
வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த 'செக்ஸ் கால்’ என்பதைத்தான் 'நட்பு வட்டம்’ என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இங்கு களம் இறக்கி உள்ளனவாம். நட்பு வட்டப் பெண்கள் பேசும் அத்தனையும் அதிர்ச்சி ரகம்!
காலர் 1 - மேலூர் அமுதா:
ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசியவர், தனது பெயர் சசிகலா, வயது 22 என்று முதல் தூண்டிலைப் போட்டார். அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பேசியபோது, கொஞ்சம் கொஞ்சமாகப் புதுப்புதுத் தகவல்களைச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார். அதன் பிறகு நம்மைப் பற்றி அறிமுகம் செய்து உண்மையைக் கேட்டோம். மிகவும் தயக்கத்துக்குப் பிறகு பேசினார். ''என் நிஜப் பேர் அமுதா. எனக்கு 38 வயசாச்சு சார். ஏற்கெனவே கல்யாணம் ஆன ஒருத்தனுக்கு விஷயம் தெரியாமக் கழுத்தை நீட்டிட்டேன். ஒரு புள்ளையக் குடுத்துட்டுப் போயிட்டான். கிடைச்ச வேலைகளுக்குப் போய் என் புள்ளையையும், என்னோட அம்மாவையும் காப்பாத்திட்டு வந்தேன். அப்போ எனக்குத் தெரிஞ்சவங்கதான் இந்த ஸ்கீம்ல சேர்த்துவிட்டாங்க. தினமும் நெறைய போன் வருது. சின்னச் சின்னப் பசங்கல்லாம் நேரம் காலம் பாக்காமக் கூப்பிடுறாங்க. நேத்து ராத்திரி எட்டாம் வகுப்பு படிக்கிறேன்னு சொன்ன ஒரு பையன், 'ஏய்... எங்கிட்ட வர்றியா? அஞ்சாயிரம் ரூபா தர்றேன்’னு சொல்றான். இதெல்லாம் எம் புள்ளைங்க மாதிரி இருப்பாங்க. ஆனா ஏதேதோ பேசுறாங்க.....'' என்று கதறினார்.
''எங்களுக்கு மாசத்துக்கு 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்றாங்க. நிஜப் பேரையும் எங்க செல்போன் நம்பரையும் யாருகிட்டேயும் கொடுக்கக் கூடாது. எப்படிப் பேசுறதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க. மாசத்துக்கு 3,500 ரூபா சம்பளம் குடுக்குறாங்க. தமிழ்நாடு மட்டும் இல்லே சார்... பாம்பே, டெல்லியில இருந்து எல்லாம் பேசுறாங்க. நெறையப் பேரு பணம் அனுப்புறேன்னு அட்ரஸ் வாங்குறாங்க, ஆனா அதோட அவ்வளவுதான். எனக்கு இந்த நம்பர் குடுத்த மேடம்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். 'கம்பெனி ரூல்ஸ் படி உன் அட்ரஸை யாருகிட்டயும் கொடுக்கக் கூடாது. இந்தத் தடவை மன்னிச்சுடுறேன்’னு சொல்லிட்டாங்க.  இப்போதான் பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே, மாசாமாசம் அதுல சம்பளம் போடுவாங்களாம்'' என்றார் அப்பாவியாக!
காலர் 2 - ஸ்ரீரங்கம் பிரியா:
தொடர்ந்து 10 நாட்கள் பேசிய பிறகும், இவரிடம் இருந்து உண்மையைப் பெற முடியவில்லை. அதன் பிறகு செல்போன் நிறுவனத்தில் இருந்து நாம் பேசுவதாகவும், செக் செய்வதற்காகத்தான் இத்தனை நாட்கள் பேசியதாகவும், மிகத் திறமையாக வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதாகச் சொல்லிப் பாராட்டினோம். ''மாதச் சம்பளம் 5,000 சரியாகக் கிடைக்கிறதா?'' என்று கேட்டதும், ''அய்யய்யோ... 3,500தான் தர்றாங்க'' என்று அலறினார். இரண்டு குழந்தைகளையும் சென்னையில் இருக்கும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, கணவனுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். கணவனுக்குத் தெரிந்தேதான் இந்த நட்பு வட்டத்தில் பேசுகிறாராம் பிரியா. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டும் படுசெக்ஸியாகப் பேசுவாராம். பணம் கிடைப்பதைவிட, இப்படிப் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் பிரியா!
காலர் 3 - ரம்யா, கல்லூரி மாணவி:
முதலில் தன் பெயரை ரேவதி என்று கூறியவர், நீண்ட முயற்சிக்குப் பிறகு உண்மையைச் சொல்ல ஆரம்பித்தார். இவரது பேர் நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமாம். எந்த நேரமும் செல்போனும் கையுமாகவே அலைவதால் வீட்டிலும் ஏக அர்ச்சனை. இந்த வட்டத்தில் சேர்ந்ததில் இருந்து கல்லூரி வகுப்புகளை அதிகமாகப் புறக்கணித்து வருகிறாராம்.  ''காலர்ஸ்கிட்ட நான் சொல்றது எல்லாமே பொய்தாங்க. உங்ககிட்ட மட்டும்தான் என் பேரையும், மதுரையில இருக்கேன்னு உண்மையும் சொல்லி இருக்கேன். செக்ஸியாப் பேசுற துக்கு ஆரம்பத்துல ரொம்பத் தயக்கமா இருந்துச்சு. என் ஃபிரண்ட்தான் ட்ரெய்னிங் குடுத்தா. அவ ரொம்ப நல்லாப் பேசுவா. இப்போ அவளையே மிஞ்சுற அளவுக்கு நான் பேசப் பழகிட்டேன். இப்போ இது எனக்கு ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்.
நட்பு வட்ட எண்களில் தொடர்பு கொண்டு இன்னும் நிறையப் பெண்களிடம் பேசினோம். அதில், பலர் பேசியதை அச்சில் ஏற்றவே முடியாது. அந்த அளவுக்கு படுக்கையறைப் பேச்சு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்தான் அதிக அளவில் இந்த நட்பு வட்டத்துக்குள் வருகிறார்கள்.
இதுபோன்ற ஆபாசப் பேச்சு வியாபாரத்துக்குத் தடை விதிக்க முடியாதா? சென்னை சைபர் கிரைம் கூடுதல் உதவி கமிஷனர் சுதாகரைச் சந்தித்தோம். ''வேல்யூ ஆடட் சர்வீஸ் என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற பல சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், இந்த சேவை அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
சட்டப்படி இதைத் தடுக்க என்ன வழி? பதில் சொல்கிறார் வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.  ''இந்த சேவை குறித்து பலர் எங்களிடம் முறையிட்டு உள்ளனர். நிச்சயமாக இது தடை செய்யப்பட வேண்டிய சேவை. ஆனால், செல்போன் நிறுவனங்கள் எந்த மாதிரியான சேவைகள் எல்லாம் வழங்கலாம் என்று 'டிராய்’ விதிமுறை எதுவும் வகுக்கவில்லை. அதனால், இந்த சேவையில் பணத்தைத் தொலைத்தவர்கள் டிராய் மற்றும் போலீஸில் புகார் செய்ய வேண்டும். இதுபோலத்தான், மார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ். சேவையும் இருந்தது. தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த பிறகுதான், டிராய் தனது சாட்டையைச் சொடுக்கியது. ஒரு காலத்தில் வெளிநாட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, 'செக்ஸ் கால்’ என்று நாளிதழ்களில் ஏராளமான விளம்பரங்கள் வரும். அதைப்போலத்தான், இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் டிராய்க்கு இ-மெயிலில் புகார் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.
கோடிகளில் கொழிக்கும் செல்போன் நிறுவனங் கள், சில கோடி ரூபாய் லாபத்துக்காக இப்படி இளைய தலைமுறையைச் சீரழிப்பது நியாயமா?
- தேவதத்தன்
 source : http://velichamstudents.blogspot.com/2012/06/blog-post_08.html

செவ்வாய், 5 ஜூன், 2012

மன்ப உல் உலா ,ஆக்ஸ்போர்ட் மேனிலை பள்ளிகள் SSLC தேர்வில் சாதனை

மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் ஆங்கில வழி கல்வி பாடபிரிவில் 100 சதவிதம் தேர்ச்சி! தமிழ் வழி பாட பிரிவில் 99 சதவிதம் தேர்ச்சி !!

ஆக்ஸ்போர்ட் மேனிலை பள்ளி மாணவ மாணவியர் 98 சதவிதம் தேர்ச்சி ! OXFORD இப்பள்ளியில் 469 மதிப்பெண் பெற்று A.M நூருல் ஹுதா முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார் .
இது தவிர 15 மாணவ மாணவியர் 450 கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளது குறுப்பிட தக்கதாகும் . ஏறக்குறைய 50 மாணவ மாணவியர் இப்பள்ளியில் தேர்வெழுதினர் .

மன்ப உல் உலா மேனிலை பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் முஹமது சிக்கந்தர் பாஷா 470 மதிப்பெண் பெற்று வாகை சூடினார். இது தவிர இப்பள்ளியில் 3 மாணவர்கள் சோசியல் சயின்ஸில் 100 மார்க் மேத்ஸ் ஒரு மாணவர் 100 மார்க் . ஏறக்குறைய பத்து லெட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 54,500 மாணவ மாணவியர் மட்டும் சென்டம் என்று சொல்லகூடிய 100 ku 100 மார்க் வாங்கியவர்கள்.இதிலே 4 மாணவர்கள் நமது மன்ப உல் உலா மாணிக்கங்கள்
மட்டிலா மகிழ்ச்சியின் அடையாளங்கள் !

இப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் 109 மாணவர்கள் SSLC தேர்வெழுதி 108 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .

இங்கிலீஷ் மீடியத்தில் 37 மாணவர்கள் 37 பெரும் வெற்றி .

அதே நேரத்தில் அரசு ஆண்கள் மேனிலை பள்ளியில் 71 % வெற்றியும் அரசும் பெண்கள் மேனிலை பள்ளியில் 76 % தேர்ச்சியும் பெற்றுள்ளனர் .

நேஷனல் இங்கிலீஷ் ஸ்கூலில் 100 சதவிதம் வெற்றி பெற்றுள்ளது அதாவது (16 கு 16 ) மற்றெரு மைல் கல்லாகும் .