புதன், 31 ஆகஸ்ட், 2011

அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஆன்மிக வியாபாரம்!

கவான் என்றும் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திய நல்லவர் என்றும் அப்பாவி பக்தர்களால் ஒரு பக்கமும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தந்திரங்கள் மூலம் அவர்களை ஏமாற்றித் தன்னை வளமாக்கியதோடு அரசியல்வாதிகளை வசியம் செய்து அதிகார தரகராக விளங்கியதாக மறுபக்கமும் பெரும் சர்ச்சைக்குள்ளான சாய்பாபா மரணமடைந்து சில மாதங்களாகியும் அவர் ஆசிரமத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் திகில் படத்திற்கு ஒப்பாக உள்ளது.
சாய்பாபாவின் சகோதரி மகள் சைதன்யா சமீபத்தில் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் சாய் பாபா டிரஸ்டின் உறுப்பினர்களாலேயே தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறிய போது பாபாவை உண்மையான ஆன்மிகவாதியாக கருதிய அப்பாவி பக்தர்களுக்கு அதை நம்புவது கடினமாக இருந்திருக்கும். ஏனென்றால் உலக பற்றில் மூழ்கியிருப்பவர்களைப் பேராசை, பொறாமை போன்ற தீமையிலிருந்து விடுபட வைத்து உலக பற்றற்றவர்களாக மாற்றுவது தான் உண்மையில் ஆன்மிக வாதிகள் செய்ய வேண்டிய காரியம்.

ஆனால் நிலைமை என்னவென்றால், பக்தர்களை உலக பற்றிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கை வாழச் சொல்லும் சாமியார்கள் உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களாய் மாறியுள்ளார்கள். பிரம்மச்சார்யமே முக்தி பெற சிறந்த வழி என்று உபதேசிப்பவர்கள் சாதாரண சம்சாரியையும் விஞ்சி தன் பக்தர்களையும் அடுத்தவர்களின் மனைவிகளையும் தன் ஆசை நாயகிகளாக அந்தப்புர தோழிகளாக மாற்றி கொள்ளும் நிலைமையையும் சர்வசாதாரணமாக பார்க்கின்றோம்.

ஏனென்றால் நவீன இந்தியாவில் ஆன்மிகம் என்பது காஸ்ட்லியான வியாபாரம் ஆகி வெகு நாட்களாக ஆகி விட்டது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்ட பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட இந்தியர்களும், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளிலும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு புதிய தலைமுறை மத்திய தர வர்க்கத்தை உற்பத்தி செய்தன. ஆம். ஒப்பீட்டளவில் பொருளாதார செழிப்புடன் காணப்பட்ட இவர்கள் அதற்காக எவ்வித ஓய்வும் இல்லாமல் மன உளைச்சல், டென்சன், பரபரப்பு, மனசிதைவு என உலா வந்தனர்.

இவர்களின் பலவீனத்தைப் புரிந்து ஆன்மிகத்தை இவர்களுக்கேற்ற வகையில் ஹைடெக்காக "வாழும் கலை" எனும் பெயரில் ஆரம்பித்த ரவி சங்கரின் வர்த்தக வருமானம் ஆண்டுக்கு 400 கோடியாகவும் கட்டி பிடி வைத்தியத்தைப் பிரபலமாக்கி தொலைக்காட்சி சேனல், கல்லூரி என தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அமிர்தனாந்த மாயியின் சொத்து மதிப்பு 1200 கோடியாகவும் உள்ளது.

நம் தமிழகத்தையே எடுத்து கொள்வோம். மருத்துவமனை, கல்லூரி, உணவு விடுதிகள் என்று ஓர் ஊரையே தன் வசமாக்கி கொண்ட பங்காரு அடிகளார் ஆகட்டும், பிரம்மச்சார்யத்தை ஊருக்கு போதித்து பிரபலங்களுடன் கொஞ்சி குலவி, ‘கதவை திற காற்று வரும்’ என்று சொல்லி காற்றை மட்டுமல்ல அதை தாண்டியும் உள்ளே விட்ட நித்தியானந்தா ஆகட்டும், சங்கர்ராமன் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றாலும் இன்னும் மவுசு குறையாமல் இருக்கும் சங்கராச்சாரியாகட்டும், இவர்களனைவரும் சாதாரண பொதுமக்களை விட செல்வ, செழிப்புடன் உலாவருவதைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆன்மிகத்தைப் போதிக்க வேண்டிய சாமியார்கள் தற்போது அரசியல் ரீதியாகவும் களம் இறங்கும் ஆபத்தைச் சந்தித்து வருகிறோம். ராஜீவ் காந்தி கொலையிலேயே சந்தேகிக்கப்பட்ட சந்திராசுவாமி முதல் 1200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து தன் ஊழியர்களுக்கே சம்பளம் ஒழுங்காக தராமல் ஊழலுக்கு எதிராக போர் தொடுக்கும் ராம்தேவ் வரை இதற்கு உதாரணங்கள் நீளும். இச்சாமியார்களை இந்தளவு உச்சாணி கொம்புக்கு உயர்த்தியதில் ஊடகங்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

தன் ரசிகர்களுக்கு ஆன்மீக பகுதியை வழங்குகிறோம் எனக் கூறி குமுதம், நக்கீரன், கல்கி போன்ற இதழ்கள் நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றோரின் ஆன்மீக கட்டுரையை வெளியிட்டு ஒரு காலத்தில் நன்கு காசு பார்த்தன. காலம் மாறி காவி உடைகளின் பின்னணியிலுள்ள காமபைத்தியங்களின் முகம் வெளிச்சமானவுடன், அதே நித்யானந்தா - ரஞ்சிதா உல்லாச காட்சியைக் காண சிறப்பு சந்தா திட்டம் வெளியிட்டு வசூல் செய்தும் காசு சம்பாதித்தன சில ஊடகங்கள். எவ்வித சமூக நோக்குமின்றி தம் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அலையும் இதுபோன்ற கீழ்த்தர ஊடகங்களின் ஒத்துழைப்பின்றி, அப்பாவி மக்களை ஏமாற்றி கல்லா கட்டுவது ஆன்மீக வியாபாரம் புரியும் சாமியார்களுக்குச் சாத்தியமில்லை என்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது!

இப்போது சாய்பாபாவின் மறைவுக்குப் பின் சாய்பாபாவின் அறையினுள் கண்டெடுக்கப்பட்ட கிலோ கணக்கான தங்கங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும், வண்டியில் கடத்தி செல்லப்பட்ட கோடிகளும் சாமியார்களின் வெளிப்படையற்ற தன்மையையும் அப்பாவி மக்களைப் பக்தி என்ற பெயரில் ஏமாற்றிக் கோடிகளைச் சுருட்டும் அவர்களின் உண்மையான முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. பக்தர்களிடமிருந்து முறைகேடாக இவர்களால் பிடுங்கப்பட்ட வரிகட்டப்படாத இந்தக் கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டிய அரசாங்கங்களோ சாமியார்களின் ட்ரஸ்ட்களுக்கு அணுசரணையாய் நடந்து கொள்கிறது.

மத சார்பின்மை நாட்டின் அரசியல்வாதிகள் சாமியார்களின் காலில் விழுவதும், அவர்களின் விழாக்களில் அரசு விமானங்களைப் பயன்படுத்தி கலந்து கொள்வதும் நமக்கு தெரிந்த ஒன்றே. பகுத்தறிவு பேசும் பகலவன்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது தான் வேதனையான செயல். தங்களுக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களில் சில இலட்சங்களை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்து மக்களின் குறை தீர்க்கும் அவதாரங்களாக காட்டி கொள்கின்ற காரணத்தால் தான் இச்சாமியார்கள் மாட்டி கொண்டாலும் மவுசு குறையாமல் இருக்கின்றனர்.

மனிதனை நெறிப்படுத்த ஆன்மிகம் அவசியமே. அதே சமயம் மனிதனை நெறிப்படுத்துகிற ஆன்மிகத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் போலி ஆன்மிகவாதிகள் அடையாளப்படுத்துப்படுவதும் அவசியம். வாயில் லிங்கத்தை எடுத்து மேஜிக் காட்டும் சாமியார்களானாலும், சாம்பிராணி புகை போட்டு குறை தீர்ப்பதாக சொல்லும் தர்கா பாபாக்களானாலும், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் அருளாசியினாலேயே குணமாக்கி விடுவேன் என்று சொல்லும் தினகரன்களானாலும், எம்மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் மக்கள் இவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்துக்காக இவர்களை ஊக்குவிக்காமல் ஒரு அடி தள்ளி நிற்க வேண்டும். மக்களுக்காக பேனாவை கொண்டு போராட வேண்டிய ஊடகத்துறை, தங்கள் வியாபாரத்தை மையப்படுத்தி இயங்காமல் சமூக அக்கறையோடு இத்தகைய ஆன்மிக வியாபாரிகளின் உண்மையான முகத்தை மக்களிடத்தில் தோலுரிக்க வேண்டும். இவற்றிற்கு எல்லாம் மேலாக மக்களும் தங்கள் பிரச்னைகளை தங்களைப் போன்ற இன்னொரு மனிதனால் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து உண்மையான ஆன்மிகத்தைக் கடைப்பிடித்தால் இத்தகைய களைகள் பிடுங்கியெறியப்படுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்தும் நிம்மதி, மகிழ்ச்சி இல்லாமல் இது போன்ற பெண் பித்தர்களிடமும், மோசடிப் பேர்வழிகளிடமும் சென்று ஏமாறும் அப்பாவி பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் அடிபட்டு கிடப்பவனிடம் ஒரு கிலோ பழம் வாங்கிக் கொடுத்து அவனிடம் இன்முகத்துடன் நலம் விசாரிக்கும் போது அவன் முகத்தில் தெரியும் மலர்ச்சியில் கிடைக்காத நிம்மதியா, இந்தப் பெண்பித்தர்களிடமும் ஏமாற்றுப்பேர்வழிகளிடமும் கிடைத்து விடப் போகிறது என்பதைச் சிந்தித்து உணரவேண்டும்.

ஒரு ஏழை மாணவனின் கல்விக்கு உதவி; பசியோடு இருப்பவனுக்கு ஒருவேளை வயிறார உண்ண உணவு; சாலையில் அடிப்பட்டு கிடப்பவனுக்கு இயன்ற சிறு உதவி; இப்படி எண்ணற்ற அறக்காரியங்களில் கிடைக்கும் நிம்மதியினையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தறியாமல், நிம்மதியைத் தேடி என்ற பெயரில் ஆன்மிக வியாபார சாமியார்களைத் தேடிச்சென்று நம் பணத்தை வாரியிறைப்பதன்மூலம் அவனின் மோசடிப் பித்தலாட்டங்களுக்கு ஒரு வழியில் நாமும் காரணமாகிறோம் என்பதை மட்டும் மறந்து விடலாகாது!
தேங்க்ஸ் : http://www.inneram.com/2011062517493/religious-business

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா...

வே.மதிமாறன் பதில்கள்


அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே?

-ஸ்ரீதர், சென்னை.

காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல.

டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் ஒருத்தர் பிரபலமாகி, தலைவராகவும் ஆகிவிடுவதுப்போல், வெறும் ஊடகங்கள் மூலமாக மூனே மாசத்துல பெரிய தலைவராயிட்டாரு இந்த இந்தியன் தாத்தா.

என்னமோ இந்தியாவுல ஊழல் நாலுமாசமாத்தான் நடப்பதுபோல், இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு, இப்போ தீடிருன்னு ஊழலுக்கு எதிராக சோர்ந்து படுத்திருக்கிறார் இந்த தாத்தா.

ஒரு வேளை நாலு மாசத்துக்கு முன்னாலதான் பொறந்தாரோ, அப்போ பொறக்கும்போதே கிழவனாவே பொறந்துட்டாருபோல.

குறிப்பு:

சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயெந்திரன், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்

நன்றி : வே.மதிமாறன்

http://mathimaran.wordpress.com/2011/08/25/431/

.

இராமநாதபுரம் பாதாளச் சாக்கடைத் திட்டம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் சட்டபேரவையில் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடந்த 25.08.2011 சட்டபேரவையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எழுப்பிய வினா

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் நகரத்திற்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம், சென்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, 2005ல் அந்த திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியிலே பணிகள் சரிவர செய்யாத நிலையிலே, இப்போது மழை பெய்யக்கூடிய நேரத்திலே இராமநாதபுரம் போவதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் நகரத்தில் பல்வேறு இடங்களிலே வெள்ளக்காடாக ஆகக்கூடிய ஒரு சூழல் இந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் போர்க்கால அடிப்படையிலே இராமநாதபுரம் நகரத்திலே விரைந்து முடித்தால் இந்த நிலை சீராகும் அதற்கு அரசு ஆவன செய்யுமா என்று உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.பி.முனுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் தொகுதியினுடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், ஏற்கெனவே முன்தைய ஆட்சியிலே துவக்கப்பட்ட அந்த பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் கூட முடிவு பெறவில்லை என்று சொன்னார்கள். அதோடுமட்டுமல்லாமல், அங்கு செல்வதற்கே பயமாக இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் எல்லா இடத்திற்கும், எந்த நேரத்திலும் தைரியமாகச் செல்லாம், அதற்கேற்றத் திட்டங்களைத்தான் முதலமைச்சர் அவர்கள் கொண்டுவரயிருக்கிறார்கள்(மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஏற்றவாறு விரைவாக இராமநாதபுரம் நகரத்தினுடைய பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயக் கடனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அஸ்லம் பாஷா எம்.எல்.ஏஅ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நடத்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே, புதிதாக உருவான ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளித்த என் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்கு அயராது உழைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என் வெற்றிக்கு அயராது உழைத்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் முதலிய கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2011-12 ஆம் ஆண்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதை, மனிதநேய மக்கள் கட்சி மனதார வரவேற்கின்றது.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, கடந்த திமுக ஆட்சியிலே, ரமலான் மாதத்திலே பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான அரிசி, ரமலான் நோன்பு ஆரம்பித்த 10 நாட்களுக்குப் பிறகுகூடப் கிடைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய நல்லாட்சியிலே நோன்பு ஆரம்பிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அரிசி வழங்கவேண்டுமென்ற ஆணையைப் பிறப்பித்திருப்பதற்கு (மேசையைத் தட்டும் ஒலி) மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, நேற்றையதினம் நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கையிலே, ஆம்பூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்களைப் பராமரிப்பதற்காக 48 இலட்சம் வழங்கியதற்கு என் சார்பாகவும், தொகுதி மக்களின் சார்பாகவும், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவிலே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்திலே கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கோமா ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே அந்த கோமா ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துவிட்டு, இன்றைக்கு ஒரு நல்லாட்சியைத் தமிழகத்தில் தந்திருக்கின்றார்கள், சிறப்பான ஆட்சியை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய நல்ல ஆட்சியிலே இந்தக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மிகச் சிறப்பாகச் செயலபடுகிறது என்பதை நான் வரவேற்கிறேன். அவற்றில் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன், தொடங்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், முதலீட்டுக் கடன் 300 கோடி ரூபாய் அளவிற்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளதை மனிதநேய மக்கள் சார்பாக வரவேற்கிறேன். விவசாயிகளுக்குக் கடன் அட்டை வழங்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தானிய ஈட்டுக் கடனாக 100 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பூ வணிகம், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடை நடத்துதல் போன்ற தொழில்களைச் செய்ய சிறு வணிகர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க இத்திட்டத்தில் 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை மனமார வரவேற்கிறேன்.

சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் திட்டம், பணிபுரியும் மகளிர் கடன் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கது. கொள்முதலை அதிகரிக்கும் நோக்கத்துடன் காவிரிப் பாசனப் பகுதியல்லாத இடங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க உதவும் நோக்கத்துடன் காஞ்சிபுரம், வேலூர், மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளுக்குத் தரமான விதை இன்றியமையாததைப்போல், இடுபொருளும் முக்கியமானதாகும். நெல்லை தவிர, பருப்புவகைகள் எண்ணெய் வித்துக்கள், தானிய வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் தரமான விதைகள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விற்க 41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.

அதேசமயம், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள (Joint registrar, Deputy registrar Co-operative register) போன்ற பதவிகளை நிரப்பி, கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகள் நகை; கடன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வங்கிகளில் விவசாயத்திற்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகள், கிராமப்புறங்களில் இருக்கும் இவ்வங்கிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த முன்வர வேண்டுமென்றால், அவர்களுக்கு விவசாயக் கடன் வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்கள் பெறுவதற்குப் பதிலாக, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும், நிலவள வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் இலாபத்தில் இயங்க, அதிக அளவில் விவசாயக் கடன்கள் கொடுக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.

போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்-ஆம்பூர் MLA அஸ்லம் பாஷா வலியுறுத்தல்.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக ஆட்சியிலே திடீரென்று ஆய்வு செய்கின்றோம் என்ற பெயரிலே உண்மையான குடும்ப அட்டைகளெல்லாம் இரத்து செய்யப்பட்டு போலியான குடும்ப அட்டைகளையெல்லாம் உண்மையான குடும்ப அட்டைகளாக இன்றைக்கு பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு திமுக கவுன்சிலர் வீட்டிலும் 100 கார்டுகள், 150 கார்டுகள் இன்றைக்கும் கூட இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு இந்தப் போலியான குடும்பக் கார்டுகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று நான் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். போலி குடும்ப அட்டைகளைப்பற்றி தகவல் கொடுக்கின்றவர்களுக்கு தற்போது ரூ.500 சன்மானமாக வழங்கப்படுகிறது. அதை ரூ.1000 ஆக உயர்த்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளை ஒருவரே கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு கடைக்கு ஒருவரே பொறுப்பு என்ற நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ரேஷன் பொருட்களின் எடை அளவைச் சரியாகப் பராமரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ரேஷன் கார்டுகள் பற்றி உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால்இ அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலையும் போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும் கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.

இப்பிரச்னையைக் களைய தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பு மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்யும் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகஇ மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி இடிக்க இந்து முன்னணி முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழ‌டைந்து போனது.

இந்நிலையில் அந்த ஊரில் தற்போது வசிக்கும் 6 முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியைப் புனரமைப்பதற்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பாப்புலர் ப்ரன்ட் என்ற இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக பாப்புலர் ப்ரன்ட் அம்மசூதியை ட்ரஸ்டின் கீழ் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மசூதி புனரமைக்கும் பணியில் ஈடுபடவே அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மசூதி இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடினார். பஞ்சாயத்திடம் அனுமதி கேட்காமல் மசூதி கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அதனை இடிக்க வேண்டும் என பஞ்சாயத்திடம் புகாரும் கொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு இந்து முன்னணி தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது இப்பிரச்சினையை பூதாகரமாக்கவே அப்பகுதியில் வகுப்பு கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. "மசூதியினைப் பஞ்சாயத்து நிர்வாகம் இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்" என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

காவேரிபாக்கம்: 400 ஆண்டுகால பள்ளிவாசல் தமுமுகவால் மீட்பு

தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களில் முதல் ஐந்தில் இடம் பெறுகிறது வேலூர் மாவட்டம். இப்பகுதி முகலாய மன்னர் ஓளரங்கசீபின் காலத்திலிருந்து ஆற்காடு நவாப் காலம்வரை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான், தென்னக வேங்கை மருதநாயகம் உள்ளிட்டவர்கள் களமாடிய பகுதியும் கூட.


இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதி முஸ்லிம்களிடம் ஏற்பட்ட அரசியல் சோர்வு மற்றும் சமூக அக்கறையின்மையின் காரணமாக பல நூறு மில்லியின் ரூபாய் மதிப்புள்ள வக்பு சொத்துக்கள் பாதுகாப்பை இழந்து பறிபோனது. பல மதரஸாக்கள் மூடப்பட்டு பின்னர் தானாகவே அழிந்தது. அதே போல் ஏராளமான பள்ளிவாசல்களும் செயல்பாடுகளை இழந்து பின்னர் இடிந்து அழிந்து போனது.


பல பள்ளிவாசல்கள் குடோன்களாகவும், பாழடைந்த கட்டிடங்களாகவும் பயன்பாட்டுக்கு ஒத்துவராத இடிபாடு களாகவும் மாறி ஆடு, மாடுகளின் தொழுவங்களாக இருந்து வருகிறது.


இந்நிலை வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் அதிகளவிலும் திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் குறைந்தளவிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர்(கிழக்கு) மாவட்ட தமுமுக&வினர் தங்கள் மாவட்டத்தில் எங்கெல்லாம் இத்தகைய இடங்கள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து வருகிறார்கள்.


அந்த வகையில் ராணிப்பேட்டையில் ஒரு பள்ளிவாசலையும், ஆற்காட்டில் இரண்டு பள்ளிவாசல்களையும் மீட்டெடுத்து அதை புனரமைத்து, ஜமாத் ஒன்றையும் உருவாக்கி பொதுமக்களின் வழிபாட்டுக்கு அர்ப்பணித்துள்ளனர். அதனைச் சுற்றிலும் உள்ள கபரஸ்தான் இடங்களையும் கைப்பற்றி ஜமாத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். வக்பு ஆவணங்களில் உள்ளபடி பல ஏக்கர் சொத்துக்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்பட்டுவிட்டதால், எஞ்சிய சில ஏக்கர்களை மட்டுமே தமுமுகவினர் மீட்டுள்ளனர்.


இந்நிலையில் தான் காவேரிப்பாக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று நான்காவதாக ஒரு பள்ளிவாசலை தமுமுகவினர் மீட்டுள்ளனர்.


ஆற்காடு நவாப் தன் ஆட்சிக்காலத்தில் 50 முதல் 100 பேர் தொழக்கூடிய அளவில் 365 பள்ளிவாசல்களை கட்டினாராம். அதனைச் சுற்றிலும் 10 முதல் 100 ஏக்கர்வரை நிலங்களையும் தானம் செய்துள்ளார். அங்கு தினமும் அன்னதானத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.


இதன் நோக்கம் என்னவெனில், தன் ஆட்சிப்பகுதிக்கு வருபவர்கள் தினம் ஒரு பள்ளிவாசலில் தங்கினாலும் ஒரு வருடம் முழுவதும் சிரமமின்றி சுற்றி வர வேண்டும் என்பதுதான். அப்படி கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் இன்று 90 சதவீதம் காணாமல் போயிருக்கிறது அல்லது இடிந்து பாழ்பட்டு கிடக்கிறது.


காவேரிப்பாக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் கிளைவின் படைகளுக்கும், முஸ்லிம் படைகளுக்கும் மோதல் நடந்தபோது இவ்வூர் முஸ்லிம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளனர். தொழுவதற்கு ஆள் இல்லை. பிறகு இப்பள்ளி பயனற்று போய் அது தொடர்ந்த நிலையில்தான், அதை மீட்க பிற்கால முஸ்லிம்கள் ஆர்வம் காட்டவில்லை.


தமுமுக அவ்வூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வேலூர் கோட்டைப் பள்ளிவாசல் மீட்பு நடவடிக்கை தொடங்கிய நேரத்தில், இவ்வூர் பள்ளியையும் மீட்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இப்பள்ளியின் நிலங்கள் அப்பகுதியின் பல்வேறு சமூகங்களால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் மேலே பெரிய மரங்கள் முளைத்திருந்தது.


இதனைச் சுற்றியுள்ள இந்துக்களிடம் தமுமுகவினர் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். முஸ்லிம்களின் நியாயத்தைப் புரிந்து கொண்ட அம்மக்கள், பள்ளிவாசலை ஒப்படைக்க சம்மதித்தனர். அதனடிப்படையில் கடந்த 15 நாட்களாக தமுமுகவினர் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியைச் செய்தனர்.


கடந்த 21.08.2011 ஞாயிறு அன்று தமுமுக துணைப்பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி தலைமையில் 800க்கும் மேற்பட்டோர் அப்பள்ளிக்கு வருகை தந்தனர். மாலை 5 மணிக்கு அழகிய குரலில் ஒரு சிறுவன் பாங்கொலி எழுப்ப, எல்லோரும் உணர்ச்சிமயமாகினர். அவ்வூர் மக்கள் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்துக் கொண்டனர்.


5:15 மணிக்கு மமக மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரீ தலைமையில் அஸர் தொழுகை நடைபெற்றது. பள்ளியில் அதிகபட்சம் 80பேர் மட்டுமே தொழ முடியும். அங்குள்ள இந்துக்கள் பக்கத்திலிருந்த திறந்தவெளி மனையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தனர். எனவே தொழுகை சிறப்பாக நடைபெற்றது.


அதன் பிறகு மமக துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, ஆம்பூர் மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா, வேலூர் மாவட்ட பொறுப்பாளரான மாநில துணைச்செயலாளர் பீ.எல்.எம்.யாஸீன், முன்னாள் மாநில துணைச்செயலாளர் அவுலியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


6:35 மணியளவில் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது, அப்போது கூட்டம் மேலும் திரண்டது. நட்பையும், நன்றியையும் வெளிக்காட்டும் வகையில் அப்பகு தியில் குடியிருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் நோன்பு கஞ்சி, சமோசா, குஸ்கா, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சுற்றிலும் நின்று அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாகப் பார்த்துக் கொண் டிருந்தனர்.


இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹமது, மாணவரணி நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், அமீன், மாவட்ட தமுமுக செயலாளர் குஸ்ரு கவுஸ் மைதீன், மமக மாவட்ட செயலாளர் கே.எம்.சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் ஜாகிர் உசேன், சத்தார் உசேனி, மஸ்தான், செய்யது கிதர் அஹமது உள்பட அனைத்து நிர்வாகிகளும் மாவட்டம் முழு வதிலிருந்தும் தமுமுகவினர் பங்கேற்றனர்.


நல்ல அணுகுமுறைகளும், அர்ப்பணிப்புடன் கூடிய திட்டமிட்ட உழைப்பும் இருந்தால் எந்த சவாலான காரியத்தையும் செயல்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணமாகும். இதுபோல் பாழடைந்து கிடக்கும் மேலும் பல பள்ளிவாசல்களை மீட்போம் என்று வேலூர் தமுமுக சூளுரைத்துள்ளது.

புதன், 24 ஆகஸ்ட், 2011

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்

26IN_ROY_275742e

ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

’தி ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை ஹசாரே மீது சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: ‘நாட்டில் அவசரமாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயத்தில் கூட ஹஸாரே குரல் எழுப்பவில்லை. தனது மாநிலமான மஹாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக ஹஸாரே வாயை திறக்கவில்லை. ஹஸாரே முன்வைக்கும் லோக்பால் மசோதா காந்தியடிகளின் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு எதிரான அடக்கியாளும் சட்டமாகும்.

அரசின் பாரம்பரிய பொறுப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கும், அரசு சாரா நிறுவனங்களுக்கும் பெருமளவில் பகிர்ந்தளிக்கும் சூழலில் ஹஸாரேவின் லோக்பால் மசோதா கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் முற்றிலும் தவிர்த்துள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுமக்களின் விருப்பங்களை கட்டுப்படுத்த முயலும் வேளையில் ஊடகங்களையும், கார்ப்பரேட்டுகளையும், அரசு சாரா நிறுவனங்களையும் லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக ஹஸாரே இவற்றை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள ’யூத் ஃபார் இக்யுவாலிட்டி’ என்ற அமைப்புடன் ஹஸாரே குழுவினருக்கு தொடர்புள்ளது. இவ்வமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு கொக்கோ கோலா, லெமன்ப்ரதர்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து பெருமளவிலான பணம் கிடைக்கிறது.

ஹஸாரேவின் குழுவைச் சார்ந்த அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பு ஃபோர்ட் ஃபவுண்டேசனிலிருந்து நான்கு லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளது. ஹஸாரேவின் போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் ’இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷன்’ என்ற அமைப்பு பெரும் இந்திய நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்றுவருகிறது. இப்பொழுது ஊழல் வழக்கிலும், இதர குற்றங்களிலும் சிக்கி விசாரணையை எதிர்கொள்பவர்களும் இதில் உட்படுவர்.

ஹஸாரே கைதுச் செய்யப்பட்டவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்குரிய உரிமைக்கான போராட்டமாக மாறிவிட்டது. ஆனால், இந்த ஆதரவு, போராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் போஸ்கோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை திரும்ப பெறுவதற்காக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அருந்ததிராய் கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்புக்கு “ஹவாலா”பணம்வந்தது:சி.பி.ஐவிசாரணையில்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது யார்? மசூதியை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர்.சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ந் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள சி.பி.ஐ, விரைவில் பாபர் மசூதி இடிப்பு பின்னணியில் உள்ள சில தகவல்களை வெளியிடும் என்று தெரிகிறது.குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. எந்த நாட்டில் இருந்து யார் மூலம் அந்த ஹவாலா பணம் வந்தது? மசூதியை இடித்த கரசேவகர்களுக்கு அந்த பணம் எப்படி பட்டுவாடா செய்யப்பட்டது? என்பன போன்ற தகவல்களை சி.பி.ஐ. கசியவிடும் என்று தெரிகிறது.சி.பி.ஐ. தன் முதல் தகவல் அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், உள்பட 48 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளது. லிபரன் கமிஷன் 68 பேரின் பெயர்களை கூறியுள்ளது. அவர்களை பற்றி மீண்டும் சி.பி.ஐ. தகவல்களை திரட்டுவதாக தெரிகிறது

சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பா.ஜ.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்ப இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.பாபர் மசூதி இடிப்புக்கு “ஹவாலா” பணம் வந்தது: சி.பி.ஐ. விசாரணையில் கண்டுபிடிப்பு

இஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும்?. இதோ உங்களுக்கு ஒரு வீடியோ!!.

மாஷா அல்லாஹ்!. ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமும், அது இந்தியாவிலேயே எப்படி நடைபெறுகின்றது என்ற ஆதாரத்துடன் உங்களுக்காக வழங்குகின்றோம். இதை தமிழக முஸ்லிம்கள் குறிப்பாக அதிரை,முத்துப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர், மேலப்பாளையம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரிலாவது நடைமுறை படுத்த முன்வரவேண்டும்.

நன்றி :www.muthupet.org

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

துபாய் சர்வதேச அல் குர்ஆன் பரிசை இலங்கை மாணவர் வென்றார்

துபாயின் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் அவாட் Dubai International Holy Quran Award (DIHQA) பரிசை இலங்கையை சேர்த்த அப்துல் காதர் முகம்மத் அஸ்மி பெற்றுக்கொண்டுள்ளார். என்று துபாய் தகவல்கள் தெரிவிக்கின்றது. கொழும்பு மாளிகாவத்தை சேர்ந்த இவர் மிகவும் சிறந்த முறையில் போட்டில் கலந்து கொண்டு நான்காம் இடத்தை பெற்றுகொண்டதன் மூலம் ரூபா 1,950,000 பரிசையும் வென்றுள்ளார்.

இந்த Dubai International Holy Quran Award (DIHQA) என்ற துபாய் சர்வதேச அல் குர்ஆன் அவாட் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 15 ஆண்டுகளாக துபாய்யில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் 92 வீதமான புள்ளிகளை பெற்று லிபியா நாட்டை சேர்ந்த போட்டியாளர் காலித் முகம்மத் முதலாமிடத்தை பெற்று 250,000 திர்கம் பரிசு தொகையை வென்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை கட்தார் நாட்டு அப்துல்லாஹ் ஹாமத் அபூ ஷாரிதா பெற்று 200,000 திர்கம் பரிசுத் தொகையையும் துருக்கி நாட்டைச்சேர்ந்த அஹமத் ஷரிகை மூன்றாம் இடத்தைபெற்று 150,000 திர்கம் பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்கள். இலங்கையை சேர்ந்த ஹாபிழ் அப்துல் காதர் முஹம்மத் கனி முகம்மத் அஸ்மி நான்காம் இடத்தை பெற்று 65,000 திர்கம் பரிசுத் தொகையை வென்றுள்ளார். முகம்மத் அஸ்மி கொழும்பு மருதானை குல்லியதுள் இமாம் ஷாபி மதரசாவை சேர்ந்த மாணவர். இவர் இந்த மதரஸாவின் பதி நான்கு வயது ஹிப்ழ் – அல் குர்ஆன் மனனம் மற்றும் முரத்தல் பிரிவு மாணவனாவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இடம்பெற்ற போட்டில் முதல் தடவையாக இரண்டு போட்டியாளர்கள் பார்வை குறைபாட்டுடன் கலந்துகொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளார்கள் என்பது குறிபிடதக்கது. இந்த மாணவனுக்கு அவரின் மதரஸாவுக்கும் lankamuslim.org, knrtimes.blogspot.com தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றதுநன்றி : lankamuslim.org

சனி, 20 ஆகஸ்ட், 2011

கேஸ்... கேஸ்... கேஸ்...ரூ.6 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை விலக்கிக்கொள்வது பற்றி மத்திய அமைச்சர்கள் குழு விவாதித்துள்ளது. இதன்படி, இக்குடும்பத்துக்கு ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் அளிப்பது என்றும், அதற்குக் கூடுதலாகப் பெறும் சிலிண்டர்களை முழுத் தொகையைச் செலுத்தி மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தால் என்ன என்று அரசு சிந்திப்பதாகத் தெரிகிறது.அதாவது இப்போது ரூ.642 விலையுள்ள வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) ரூ.395-க்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் என்று கட்டுப்படுத்துவதன் மூலம், கள்ளச் சந்தையை ஒழித்துவிடலாம் என்று அமைச்சர்கள் குழு கூறுவதும், ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்திருக்கும் கருத்தும் மத்திய அமைச்சரவையும், நமது அதிகாரவர்க்கமும் எந்த அளவுக்கு யதார்த்த நிலைமைகளிலிருந்து விலகிச் சிந்திக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.வீட்டு இணைப்பைப் பொறுத்தவரை, ஒரு நுகர்வோர் தனக்கு சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட நாள் முதல் 21 நாள்கள் முடிந்த பின்னர்தான் இன்னொரு சிலிண்டருக்குப் பதிவே செய்ய முடியும் என்று ஏஜன்ஸிகள் கூறுகின்றன. அப்படிப் பதிவு செய்தால், குறைந்தபட்சம் 10 நாள்களுக்குப் பிறகுதான் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அதாவது ஒரு சிலிண்டருக்கு 30 நாள் ஆகிறது. இந்த வகையில் எந்த நுகர்வோராக இருந்தாலும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே பெற்று வருகிறார்.சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருதோடு, இந்த ஏஜன்ஸிகளுடன் மல்லுக்கட்டி மாய்ந்துபோன நுகர்வோர் - குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறவர் என்றால் - சமையல் எரிவாயு பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும் வகையில், எலக்ட்ரிக் குக்கர், இன்டக்ஷன் ஸ்டவ் என்று சின்னச் சின்ன பயன்பாடுகளுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தவும், வெந்நீருக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்தவும் தொடங்கிவிட்ட இந்நாளில், ஒரு குடும்பம் சராசரியாக ஆண்டுக்கு 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுகின்றன என்று சொல்லும் அமைச்சர் குழு எந்த அளவுக்கு உண்மை நிலையைப் புரிந்துகொண்டு பேசுகிறது? வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டுத்தனமாக வணிகப் பயன்பாட்டுக்காக ஒட்டல்கள், பலகாரக் கடைகள், வண்டிக்கடைகள், கல்யாண சமையல் வேலைகள், சில தொழிற்சாலைகள், கார்கள் ஆகியவற்றுக்காகத் திசைதிருப்பப்படுவதால்தான் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மிக அதிக அளவில் ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்துவதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்கின்ற உண்மையையும் புரிந்துகொள்ளாமல் இருக்கும் மத்திய அமைச்சர்களை என்னவென்று சொல்வது?வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை இப்போது ரூ.1,280. ஆனால், 14.2 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு விலை, மானியத்தின் காரணமாக ரூ.395. ஆகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திசைதிருப்பி, வணிக சிலிண்டர்களில் நிரப்புகிறார்கள். இதைச் செய்யும் தொழில்நுட்பம் காஸ் விநியோகத்தில் உள்ள ஊழியர்களுக்கு அத்துப்படி. இவ்வாறு சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட வணிக எரிவாயு சிலிண்டர்களை (14.2 கிலோ) ஓட்டல்கள், தள்ளுவண்டிக் கடைகள், பலகாரக் கடைகள், கல்யாண மண்டபங்களுக்குக் குறைந்தது ரூ.800 முதல் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அந்தந்த நாளின் தேவைக்கேற்ப விலை நிர்ணயித்து விற்கிறார்கள். இது நமது பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடக்கும் துஷ்பிரயோகம்.ஒரு சிலிண்டருக்குக் குறைந்தது ரூ.400 வீதம் ஒரு நாளைக்கு 25 சிலிண்டர்களை ஒரு காஸ் ஏஜன்ஸி திசை திருப்பினால் ஒரு நாளைக்கு ரூ.10,000 கிடைக்கும். ஊழியர்களுக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும், உள்ளூர் வட்டாட்சியர்களுக்கும் உரிய பங்கைப் பிரித்துக்கொடுத்ததுபோக, இத்தகைய மோசடியில் ஈடுபடும் காஸ் ஏஜன்ஸிக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 (குறைந்தபட்சம்) லாபம் கிடைக்கிறது என்பது நமது மத்திய அமைச்சரவைக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும்தான் தெரியாது.இந்த மோசடியைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவன ஊழியர்களை முடுக்கிவிட வேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அத்தகைய அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஏஜன்ஸியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், ஆண்டுக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் என்று சாதாரண மக்களிடம் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது மத்திய அரசு.வீட்டுச் சமையல் எரிவாயு இணைப்புப் பெற்ற குடும்பங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 1.18 கோடி. ஆனால், வணிக இணைப்பு பெற்ற நிறுவனங்கள் எத்தனை? அதுபற்றி இந்த எண்ணெய் நிறுவனங்களும் வெளிப்படையாகப் பேசுவதே இல்லையே, ஏன்? ஒட்டல்கள், பலகாரக் கடைகள், வண்டிக்கடைகள், மெஸ்கள், கல்யாண சமையற்கூடங்கள் என எல்லா இடங்களிலும் சோதனை செய்து, அவர்கள் வணிக இணைப்புப் பெற்றவர்களா என்பதையும், அவர்கள் பாஸ்புத்தகத்தில் எப்போது கடைசியாக சிலிண்டர் வாங்கப்பட்டது, எத்தனை சிலிண்டர் வாங்கப்பட்டது, அந்த நிறுவனத்தின் அளவுக்கும் அவர்கள் வாங்கியுள்ள சிலிண்டர்கள் எண்ணிக்கை சரியா, அல்லது ஒப்புக்கு பாஸ்புத்தகம் வைத்துக்கொண்டு கள்ளச் சந்தையில் வாங்கி, வணிக சிலிண்டரில் நிரப்புகிறார்களா என்பதையெல்லாம் ஆய்வு செய்தால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். அதைவிடுத்து சாதாரண குடும்பங்கள் மீது நிதிச்சுமையை ஏற்றுகிறார்கள்.ஏனென்றால், சாதாரண குடும்பங்கள் சிலிண்டரைக் கொண்டுவந்து போடும் ஊழியருக்கு மட்டும்தான் ரூ.10 "எக்ஸ்ட்ரா' கொடுக்கின்றன. காஸ் ஏஜன்ஸிக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் போய்ச் சேருகிறார்போல கணிசமான லஞ்சத்தைக் கொடுக்க சாதாரண குடும்பங்களால் முடியாது. தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாத மக்களுக்கு எதற்கு மானியம் என்று மத்திய அரசு கருதுகிறதோ என்னவோ?வயிறு எரிகிறது...!


நன்றி :
தலையங்கம் : தினமணி .

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்அடிக்கும் கூட்டுக் கொள்ளைஇரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.
பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.
உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?
தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன?இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.
திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள்,குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2.
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்.


நன்றி :yousufansar

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்

நன்றி : Abu Salih

நாட்டுகாக பாடுபட்டமாவீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம்

வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.

'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் - வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.

2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

மன்னர் பகதூர்ஷா

அதே வேளையில் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.

முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. . முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி என்னும் பெயருடைய மாவீரர் போற்றப்பட்டிருக்க வேண்டியவாராவார்

உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.

வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.

உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் தனது நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

ஷா வலியுல்லாஹ் (1703-1762)

ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

திப்பு சுல்தானின் தியாக பூமி

வீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்

1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.

ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786-1831)

ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.

இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.

முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.

பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.

1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்

சனி, 13 ஆகஸ்ட், 2011

முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும் சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை

2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது போல் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள 2010-11க்கான நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. கண்ணும் கருத்துமாக செயல்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அளிப்பதற்கு அட்சரமாக இருக்கும் எங்கள் அன்புச் சகோதரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கை

மாண்புமிகு நிதி அமைச்சர் ஒ.பி.எஸ். அவர்கள் நேர்த்தியுடன் சமர்பித்த இந்த நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று நான் வெறும் வார்த்தை ஜாலத்திற்காக சொல்லவில்லை. முதன் முறையாக நமது மாநிலத்தின் வரவு செலவு திட்டத்தின் அளவு ஒரு லட்சம் கோடியை மிஞ்சும் அளவு வரலாற்று சாதனை புரிந்துள்ளது என்பதற்காக மட்டும் நான் இந்த நிதி நிலை அறிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிடவில்லை. இந்தியாவில் உள்ள பிற மாநில முதலமைச்சர்களும் கடந்த திமுக ஆட்சியாளர்களும் நினைத்தும் பார்க்காத அற்புதமான திட்டங்கள் விவாசாயிகள் முதல் பள்ளிக்கூட மாணவர் வரை அனைவரும் பலன் பெரும் வகையில் நலத்திட்டங்கள் இந்த அரசு சமர்பித்துள்ள வரவு செலவு அறிக்கையில் இடம் பெற்றிருப்பதே இது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று சொல்வதற்கு போதுமானதாகும். இருப்பினும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவு செலவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில வியக்கத்தக்க அறிவிப்புகளை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

பாரபட்சம் காட்டாத அரசு

முதலாவதாக இது ஒரு மதசார்பற்ற அரசு மதரீதியாக பாரபட்சம் காட்டாத அரசு என்பதை பறைச்சாற்றும் வகையில் கோயில் அர்ச்சகர்கள், ஒதுவார்கள், இசைவாணர்கள், கிராம புசாரிகளுக்கான ஒய்வுதியத்தை ரூ750லிருந்து ரூ1000 மாக உயர்த்தியுள்ள அதே நேரத்தில் முஸ்லிம் மத ஊழியர்களான உலமாக்களுக்கும் இதே அளவு ஒய்வுதியத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளதை நான் மனமாறப் பாராட்டுகிறேன்.

வக்ப் வாரியத்திற்கு மானியம்

உலமாக்களுக்கு முதன் முதலாக ஓய்வுதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் என்பதை நான் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். இது போல் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைமையகம் தற்போது அமைந்துள்ள சென்னை ஜாபர் சாரங் தெருவில் உள்ள இடத்தை வாங்கியதும் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். அதே போல் அந்த இடத்தில் வக்ப் வாரியத்திற்கு சிறந்த வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் தற்போதைய முதல்வர் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் தான். இதைப் பற்றி மறைந்த இந்திய தேசிய லீக் கட்சித் தலைவரும் முன்னாள் வக்பு வாரியத் தலைவருமான அப்துல் லத்தீப் ஒரு முறை குறிப்பிடும் போது திமுக ஆட்சியாளர்களிடம் நான் பல முறை முறையிட்டும் வக்ப் வாரியத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் ஒரு முறை முறையிட்டதும் அதிமுக முதலமைச்சர் பணத்தை ஒதுக்கி கட்டடமும் கட்டி கொடுத்து விட்டார் என்று பெரிதும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். கடந்த திமுக ஆட்சியாளர்களின் பாரமுகத்தின் காரணமாக கடும் நிதி பற்றாக்குறையால் தட்டு தடுமாறி செயல்படும் நிலை வக்பு வாரியத்திற்கு ஏற்பட்டது. இதன் விளைவாக மாண்புமிகு நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டது போல் வாரியம் தனது ஒய்வுதியதாரர்களுக்கு ஓய்வுதிய நிலுவைத் தொகை மற்றும் இதர பயன்களை அளிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளது. இந்த அவல நிலையை போக்க தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வரலாற்றில் முதன் முறையாக இந்த அரசு ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்னது நிச்சயமாக வரலாற்றுச் சிறப்புமிக்கது தான். இது மட்டுமின்றி சென்ற திமுக ஆட்சியை போல் கருமியாக இல்லாமல் ஆண்டு தோறும் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வரும் 45 இலட்ச ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மாண்புமிகு முதல்வரின் உத்தரவையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். வக்ப் வாரியத்தை சீரமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை மனமாற வரவேற்கிறேன். கருணையுள்ளம் நிறைந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மராமத்து பணிகளுக்கு (major repairs and renovation) அரசு தற்போது வழங்கி வரும் மாணியமான 60 லட்சத்தை உயர்த்த வேண்டும் என்றும் சிறிய மராமத்து பணிகள் மற்றும் பள்ளிவாசல், அடக்கத்தலங்களுக்கான சுற்று சுவர் எழுப்புவதற்கு அரசு தற்போது அளித்து வரும் மாணியமான ரூ10 லட்சத்தையும் உயர்த்தித் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

அரசு பணிகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளி்க்க வேண்டும் இதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் கடந்த மே 21. 2007ல் பரிந்துரையை அளித்தப் போதினும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை மக்களை வஞ்சித்து வருகின்றது. ஆனால் நமது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளவை கடைபிடிக்க வழிவகைச் செய்து சமூக நீதியை காத்த மாபெரும் வீராங்கனையாக நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விளங்குகிறார். சமூக நீதியை காத்து வாழ்வின் விளிம்பில் உள்ள மக்களை உயர்த்துவதற்கு ஆட்சியில் உள்ளவர்களுக்கு நமது முதலைமைச்சருக்கு இருப்பது போல் மனவலிமையும் துணிச்சலும் தேவை. இந்த மனவலிமையும் துணிச்சலும் டெல்லியை ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு அந்த மனவலிமை நிரம்பவே உண்டு. சமூக நீதயை நிலைநாட்டுவதிலும் சிறுபான்மை நலனில் அளப்பரிய அக்கறையுள்ள தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்களித்தது போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கண்காணிக்க அரசு அலுவலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இடம் பெறும் அமைக்கப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடைநிற்றலை குறைக்கும் திட்டம்

மேநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக ரூ 394.04 கோடி ஒதுக்கீட்டில் 24,94,649 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் பத்தாம் வகுப்பு, மேனிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவுச் செய்திருப்பது இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அம்சமாகும். ஒரு கல்வியாளர் என்ற முறையிலும் இதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் தொடங்கி வளர்ந்து வரும் நாடுகள் ஏழை நாடுகள் என அனைத்து நாடுகளில் மேனிலை பள்ளி அளவில் மாணவர்கள் இடையில் படிப்பை நிறுத்துவது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. இது குறித்து விரிவாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள வாசிங்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் National Educational Association என்ற ஒரு தன்னார்வ அமைப்பு

Dropping out of high school has significant negative consequences for the individual and for society. If the nation decides to do little or nothing about high school dropouts, it will pay dearly for years to come. But if it invests in dropout prevention and intervention, it will accrue enormous benefits. It is that simple. But the critical question remains: “Does the U.S. have the political will to invest the resources to substantially reduce dropout rates and eliminate disparities among racial and ethnic groups?”Evidence to date suggests the answer is no.

என்று குறிப்பிடுகின்றது. அதாவது உயர்நிலை அளவில் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது தனி நபருக்கும் சமுகத்திற்கு தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஒரு நாடு இந்த இடைநிற்றல் குறித்து அக்கறைக் கொண்டு செயல்படாவிட்டால் அது எதிர் காலத்தில் மிகப் பெரும் விலையை கொடுக்க நேரிடும். ஆனால் இந்த இடைநிற்றலை தடுப்பதற்காக அது முதலீடுகளைச் செய்தால் அது மிகப் பெரும் நன்மைகளை பெற்றுத் தரும். இது இவ்வளவு சுலபமானது தான். ஆனால் மிக முக்கிய கேள்வி என்னவெனில் இடைநிற்றலை குறைத்து இன குழுக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை களைவதற்கான முதலீட்டைச் செய்வதற்கு அமெரிக்க அரசிடம் அரசியல் ரீதியான துனிச்சல் உள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது என்று National Educational Association தெரிவிக்கின்றது.

ஆனால் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் அமெரிக்க அரசியல்வாதிகளிடம் இல்லாத துணிச்சல் உள்ளதால் தான் இடைநிற்றலை குறைத்து, 394.04 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கி எதிர்காலத்தில் தமிழகம் மிகப் பெரும் பலனை பெறுவதற்கு வழிவகுத்துள்ளார். இப்போது புரிகிறது ஏன் ஹிலாரி கிளின்டன் இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் ஏழு யுனியன் பிரேதசங்கள் இருந்த போதினும் நமது மாநிலத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நமது தமிழக முதலமைச்சரை ஏன் சந்திக்க வந்தார் என்பது.?

பள்ளிகளுக்கு அரசு மானிய நிதி உதவி

இத்தகைய தனி துணிச்சல் மிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு நீண்ட நாள் கோரிக்கையை சமர்பிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 1991-92க்கு பிறகு அரசு மானிய நிதி உதவியின்றி அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மானிய உதவியின்றியும், முழுமையாக மானிய உதவியின்றியும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பள்ளிகளுக்கு அரசின் மானிய உதவியுடன் பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பபட்டு வந்துள்ளது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் கடந்த ஆட்சியின் போது நடைபெற்றன. நானும் அதில் பங்கேற்றுள்ளேன். அரசு மானியம் இல்லாத வகுப்புகளில் முதுகலைப் பட்டம் மட்டும் அல்ல முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட ரூ1500 முதல் ரூ 3000 வரை என மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும அவல நிலை நிலவுகின்றது. இந்த ஊதியத்தைக் கொண்டு வாழ்வை நடத்த இயலாமல் கடுமையான மன உளைச்சலுக்கு சுயநிதி பள்ளி ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர். இச்சூழலில் கடந்த திமுக அரசு தனது இறுதி நாட்களில் ஒரு அரசாணையை (Tamil Nadu Ordinance No.1 of 2011) கடந்த பிப்ரவரி 1, 2011 ல் பிறப்பித்தது. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடு்த்தும்) சட்டம் 1973க்கு திருத்தம் செய்து இந்த அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை 1999ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் மொத்தம் 331 கோடி ரூபாய் செலவில் அனுமதிக்க வழிவகுக்கப்பட்டது. 1.6.2011 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசணையை 1999க்கு பிறகும் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று விரிவுப்படுத்தி அதனை சட்டமாக இந்த மாமன்றத்தில் இயற்றி தமிழகத்தின் பள்ளி கல்வி வரலாற்றில் மற்றுமொரு மாபெரும் புரட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏற்படுத்த வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

தூர பார்வையுடைய நிதி நிலை அறிக்கை

தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக்க வேண்டுமென்ற முதல்வரின் குறிக்கோளையும் தொலைத்தூரப் பார்வையையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள ஒரு அரசியல் தலைவர் என்ற நிலையிலிருந்து எதிர்கால சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படும் statesman ஆக உயர்த்தியுள்ளது. ஏனெனில் இன்றைய மக்கள் தேவைகள் மட்டுமின்றி எதிர்கால தமிழகமும் வாழ்வாங்கு சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமையபெற்றுள்ளது. இத்தகைய சீர்மிக்க முதல்வரிடம் தமிழக மக்கள் சார்பாக இறுதியாக ஒரு கோரிக்கையை வைத்து அமர்கிறேன்.

லட்சாதிபதிகளாவோம் என்ற கனவுடன் பிச்சாதிபதிகளாக தமிழர்கள் மாறும் அவல நிலையை நீக்க அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதினும் சென்ற அதிமுக ஆட்சியின் போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் துணிச்சலுடன் லட்டரி என்ற சூதாட்டத்தை தடைச் செய்து பல கோடி குடும்பங்களின் நலனை காத்தார். இதே துணிச்சலுடன் புரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். மதுவைப் பற்றி ஆய்வுச் செய்த டாக்டர் எம். ராபர்ட்ஸன் என்ற அமெரிக்க அறிஞர் If half the pubs and bottle stores were closed, I guarantee that half the hospitals and jails will remain closed.”

Large amount of revenue is generated from sale of alcohol. Yet, the hidden, cumulative costs of health care, absenteeism and reduced income levels related to heavy alcohol use are higher. These costs were estimated to be 60% more than the revenue generated in a study from Karnataka.

லாட்டரியை தடைச் செய்த அதே துணிச்சலுடன் பல்லாயிரம் கோடி வருவாயை ஈட்டினாலும் மிகப் பெரும் சமூக கேடுகளை விளைவிக்கும் மதுவை முழுமையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தடைச் செய்து கோடான கோடி தமிழக குடும்பங்களில் நிம்மதி ஏற்பட வழி வகைச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஈழ தமிழர்களின் நலன் காக்கும் அரசு

தமிழகத்தில் ஈழ தமிழர்கள் வாழும் முகாம்களில் உள்ள வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு 25 கோடி ஒதுக்கப்படும் குடும்ப தலைவருக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்படும் இதே போல் இதர குடும்ப உறுப்பினர்களுக்கான உதவி தொகையும் உயர்த்தப்படும் என இந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மனமாற வரவேற்கிறேன். எனது தொகுதியில் தான் ஈழ தமிழர்களுக்கான மிகப் பெரும் முகாம் மண்டபத்தில் உள்ளது. மண்டபம் முகாமில் அடிப்படை வசதிகளை அதிகரித்து தருவதுடன் அங்குள்ள ஆண்கள், பெண்கள் பயன் பெறும் வகையில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவணச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாதாள சாக்கடை திட்டம்

பிற்படுத்தப்பட்ட வறட்சிமிக்க எனது இராமநாதபுரம் தொகுதி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கனிவுடன் அவற்றை பரிசீலித்து ஆவணச் செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இராமநாதபுரம் நகரில் கடந்த அதிமுக ஆட்சியில் 2005ல் ரூ 30 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியினரின் அலட்சியப் போக்கினால் 6 ஆண்டுகள் சென்ற பிறகும் இத்திட்டம் இன்னும் செயலுக்கு வரவில்லை. விரைந்து இராமநாதபுரம் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்முறைக்கு வருவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமநாதபுரம் நகரில் வாழும் மக்களில் பெரும்பாலனவர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களே. இதை கருத்தில் கொண்டு தர்ம உள்ளம் படைத்த தமிழக முதல்வர் அவர்கள் பொது மக்களிடமிருந்து இத்திட்டத்திற்காக வசூல் செய்ய உத்தேசித்துள்ள ரூ 9 கோடியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமான மக்கள் வந்துச் செல்லும் யாத்திரிக மற்றும் சுற்றுலா தலமாக விளங்கும் இராமேஸ்வரம் நகரத்திலும், கீழக்கரை நகரத்திலும் பாதாள சாக்கடை திட்டம் அமையப் பெற இந்த அரசு ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதியால் உள்ள மூன்று நகராட்சிகளான இராமநாதபுரம், இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் எங்கு நோக்கினும் குப்பைகளைப் பார்க்கலாம். மிக மோசமான குப்பை மேலான்மை திமுகவினர் வசம் உள்ள இந்த நகராட்சிகளில் நிலவுகின்றது. இதே போல் கழிவு நீர் ஆறாக ஒடுவதையும் பார்க்கலாம். வெளி மாநிலத்தவர் அதிகம் வந்து போகும் இந்த பகுதிகளில் இது போன்ற மோசமான சுகாதார நிலை நிலவுவது தமிழகத்தைப் பற்றி ஒரு தவறான கருத்தையை ஏற்படுத்தும். இந்த மூன்று நகராட்சிகளிலும் போர்கால அடிப்படையில் குப்பைகளை அகற்றுவதற்கும் கழிவு நீர் வடிகால் அமைவதற்கும் இந்த அரசு உரிய ஆவணச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

டிராமா கேர் வசதி

இராமேஸ்வரம் முதல் மதுரை வரையிலான தூரம் சுமார் 170 கி.மீ. ஆகும் இந்த நெடுஞ்சாலையில் நேற்று நான் கேள்வி நேரத்தில் குறிப்பிட்டது போல் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாததினால் காயமடைந்தவர்களை 120 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்கே கொண்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றது. இந்த அவல நிலையை நீக்க இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் ஆர்டோ டிராமா கேர் மற்றும் கேசுவாலிடி சர்வீஸ் உள்ளடக்கிய ஒரு முழுமையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (Accident and Trauma care) ஏற்படுத்தித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரி

இராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று வெறும் வாய் சவடால் அறிவிப்பு மட்டுமே திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் மாவட்டத் தலைநகர் அந்தஸ்துப் பெற்ற இராமநாதபுரத்தில் அவரது உண்மையான அரசியல் வாரிசான தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசினர் மருத்துவக் கல்லூரியை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்க ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாம் பசுமை புரட்சிக்கும், இரண்டாம் வெண்மை புரட்சிக்கும் வித்திட்டுள்ள

அடுத்த ஐந்தாண்டுகளில் உழவர்களின் தனி நபர் வருமானத்தை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரிக்க வழி வகுக்கும்

அனைத்து துறையினரையும் அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்தும் அருமையான சீரிய நிதி நிலை அறிக்கையை வரவேற்று அதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அமர்கிறேன்.

கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கியதில் உள்நோக்கம் : அமைச்சர் குற்றச்சாட்டு

அதிகம்
படித்தவை
அதிகம் விமர்சிக்க
பட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை

* இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
* இழந்த பணத்தை மீட்க கொடுத்த பணமும் அபேஸ் : ரூ.15 லட்சம் பறிபோனதாக 10 பெண்கள் புகார்
* காதலியை பிரித்ததால் பெண் கொலை நண்பர்கள் ஆறு பேர் வாக்குமூலம்
* தொழிலாளி கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
* இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -

* இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
* உயிர் காக்க உதவுங்கள்
* ஓட்டளிக்காத வாக்காளர் அடையாள அட்டை ரத்து தேர்தல் கமிஷன் உத்தரவு
* வாடகை கட்டிடத்தில் இயங்கும் துவக்கப்பள்ளி :பெற்றோரிடம் வாடகை வசூலிக்கும் அவலம்
* இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -

* ஐ.டி.ஐ.,யில் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகள்
* தொழிற் கல்வி புத்தகம் வழங்கல்
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு
* சென்னிமலையில் இன்று கழிவு ஆடித்திருவிழா
* பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் 3 ஆண்டுகளில் 34 விபத்துக்கள் :மத்திய அமைச்சர் தகவல்


சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் உரை குறித்து தினமலரில் (!2-08-2011)

சென்னை: ""அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்பாமல், முந்தைய அரசு தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்ததில் உள்நோக்கம் உள்ளது,'' என்று கல்வி அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி : பெரிய பள்ளிவாசல்களில் பெரிய அளவில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வழங்கப்படும் மானியம் 60 லட்சம் ரூபாயை அதிகரிக்க வேண்டும். சிறிய பள்ளிவாசல்களில், மராமத்து பணிக்கு ஒதுக்கப்படும் 10 லட்சம் ரூபாயை, உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் குறிப்பிட்டதை போல, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஒதுக்க வேண்டும்.தமிழகத்தில் 1991 முதல், அரசு மானிய உதவியின்றி துவக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் பகுதி மானியத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், அரசு மானியமில்லாத வகுப்புகள் ஆகியவற்றில் முதுகலை பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மாதம் 1,500 முதல் 3,000 ரூபாய் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.கடந்த ஆட்சியின் இறுதி நாட்களில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில், 13 ஆயிரத்து 300 ஆசிரியர்கள் மற்றும் 640 ஆசிரியரல்லா பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கி, 340 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருமென அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. 1991க்கு பிறகு துவக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், லாட்டரி என்ற சூதாட்டம் ஒழிக்கப்பட்டது. இதே துணிச்சலுடன், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.அமைச்சர் சண்முகம் : கடந்த 1991க்கு பிறகு துவக்கப்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் பகுதி சுயநிதியில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில் அரசு மானியம் கிடையாது என்று, 1998ல் தி.மு.க., அரசு சட்டம் இயற்றியது. கடந்த ஆட்சியின் இறுதியில், உள்நோக்கத்துடன், தேர்தலை மனதில் வைத்து, ஆசிரியர் பணியிடங்களை அங்கீகரித்து உத்தரவிடப்பட்டது.அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படும் நிலையில், இருக்கும் காலியிடங்களை நிரப்பாமல், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அரசாணை வெளியிடப்பட்டது. அதுவும், தனியார் பள்ளிகளில் கூடுதலாக 6,400 ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து, கடந்த பிப்ரவரி 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு வேறு உள்நோக்கம் உள்ளது. அரசுக்கு 340 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, தனியாருக்கு சாதகமாக அரசாணை வெளியிடப்பட்டது. அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்திருக்க வேண்டும். கடந்த ஆட்சியின் இறுதியில், அனைத்து துறைகளிலுமே கிடைத்தவரை லாபம் என்று, கிடைத்த வரை சுருட்டினர்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

சிறை வார்டனைக் கண்டித்து தமுமுக ஆர்பாட்டம்!

பாளையங்கோட்டை சிறைவார்டனைக் கண்டித்து தமுமுகவினர் திடீர் ஆர்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த புகாரி மகன் சாகுல்ஹமீது. இவர் பாளை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இவரைப் பார்க்க நேற்று தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மாவட்ட செயலாளர் காசிம் பிர்தௌசி, மமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோர் சென்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த வார்டனுக்கும், அவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தமுமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் சிறை வளாகத்தில் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

பின்னர் தமுமுகவினர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில், "பாளை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் சாகுல்ஹமீது என்பவரைப் பார்க்க மதியம் 12.30 மனு எழுதி கேட் அருகில் சென்றோம். ஆனால் கேட்டில் பாதுகாப்புக்கு நின்ற வார்டன் நேரம் முடிந்து விட்டதாக கூறி எங்களை ஒருமையில் திட்டினார். எங்களில் ஒருவரது சட்டையைப் பிடித்து வெளியில் தள்ளினார்.

பொதுஇடத்தில் ஒரு அரசு ஊழியர் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டதற்குத் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்

த‌முமுக‌வின‌ரின் திடீர் போராட்ட‌த்தால் பாளை சிறைப்ப‌குதியில் சிறிது நேர‌ம் ப‌ர‌ப்ப‌ர‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

முஸ்லிம் சமுதாயத்துக்கு இந்த எம்.எல்.ஏ.வால் பெருமையே !


ராமநாதபுரம் மாவட்டத்துல பொது பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள அஞ்சு கோடி ஒதுக்கியிருக்கா... டெண்டர் எடுத்தவா... வழக்கம் போல் அதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு தகுதி வாரியா, "கட்டிங்' தொகையை தந்திருக்கா... தொகுதி எம்.எல்.ஏ.,ங்கற முறையில, ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., எம்.எல்.ஏ.,விற்கும், "கட்டிங்' கொடுக்க போயிருக்கா... "இந்த பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது'ன்னு எம்.எல்.ஏ., திருப்பி அனுப்பிட்டார் ஓய்... அந்த தொகையையும் ஆளும்கட்சிக்காரர் ஒருத்தர், "லவட்டி' கொண்டு போயிட்டார்...'' என, கடைசி மேட்டரை நேரடியாக சொல்லிவிட்டு எழுந்தார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.

நன்றி : http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91
நன்றி :
Emaneswaram Sharfudeen

சனி, 6 ஆகஸ்ட், 2011

மாணவி போட்டோவை ஆபாசமாக மார்ஃபிங் செய்த 3 பேர் கைது!

சென்னை: பள்ளி மாணவி ஒருவரை ரகசியமாக செல்போனில் படம் எடுத்து, அதை ஆபாசமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய பெயின்டர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் குமார் சேலையூர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த அவளை சேலையூரை சேர்ந்த பெயின்டர் சந்திரகுமார் (19), அம்சலிங்கம் (39), ஆலப்பாக்கம் ராஜேஷ்குமார் (24) ஆகியோர் செல்போனில் படம் பிடித்து அதை ஆபாசமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி யுள்ளனர்.

இதுபற்றி சந்திரகுமாரிடம் கேட்டபோது உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் பல பெண்கள் படத்தை இதுபோன்று மார்பிங் செய்து வைத்துள்ளோம். காவல்துறையில் புகார் செய்தால் மேலும் பலருக்கு அனுப்பி உன்னையும், உனது மகளையும் அவமானப்படுத்துவோம்‘ என்று மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குமார் கூறியிருந்தார். இதுகுறித்து ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து, சந்திரகுமார், அம்சலிங்கம், ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்தார். அம்சலிங்கம் பழ வியாபாரமும், ராஜேஷ்குமார் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

சந்திரகுமார் கூறுகையில், ‘‘பள்ளிக்கு நடந்து சென்ற குமாரின் மகளை செல்போனில் படம் பிடித்து ராஜேஷ்குமாரிடம் கொடுத்தேன். அவர் கம்ப்யூட்டரில் ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் பதிவு செய்து தந்தார். அதை நண்பர்களுக்கு அனுப்பினேன்‘ என தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஹிந்துத்துவா ஒரு தேசிய அபாயம்! ப. சிதம்பரம்!

புதுடெல்லி: ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதக் குழுக்கள் ஆபத்து நிறைந்த வையாகும். எனவே வலதுசாரித் தீவிரவாத்துக்கு எதிராகவும் உறுதியுடனும் அச்சப்படாமலும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதமும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உள்நாட்டு எதிரியுமாகும். அதை எதிர்நோக்கும் வகையில் உளவுப் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறான தீவிரவாதம் உருவாகக் காரணமானவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைய பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்க்க ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. பல கட்டங்களில் எதிரிகளை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிவதில்லை. எனவே சாதாரண மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் அதன் துணை அமைப்புகள் உலெகெங்கும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து மத துவேசத்தை ஏற்ப்படுத்தி இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் சக்திகளாக செயல்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

முஸ்லீம் பெண்களின் வெளீயூர் பயணம் (எச்சரிக்கை).ஒரு விழிப்புணர்வு பார்வை!

அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்

...அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை

என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர்

உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண்

அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்

பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.

அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு

மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது.

உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்

கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை

பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற

பரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது

போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் ஏற்கனவே

ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும்.

கணவன் மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக

இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்

கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள்

எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம்

செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல,

ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த

முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்"

என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,

அடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி

உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும்

உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென

அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.

மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல

5 நிமிடம் கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும்

நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு

எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்

சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு

தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது. என்ன

செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!"

என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில்

மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில்

வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்று

மிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக்

கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க

முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்து

போனாள். உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும்

செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும்

ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். அந்த

அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன்

சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள்.

அல்ஹம்துலில்லாஹ். பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை

அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு

ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர்

அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து

அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார்.

மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்

கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன.

நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

1. ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

2. வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்

பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.

4. செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின்

மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும். ( உ-ம் ப்ளவ்ஸ் உள்ளே)

5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்

எண்ணை குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள்.

6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களைக்

கொஞ்சம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

7. தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்

கை வசம் வைத்துக் கொள்ளவும். ( இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்.)

அன்புடன்,

அ.பஷீர் அஹமது,

ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,

மஞ்சக்கொல்லை.

செல்: 9442014288.

( தயவு செய்து இந்தச் செய்தியை தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி வைகக மறவாதீர்கள்)