திங்கள், 31 டிசம்பர், 2012

மதுபானக் கடைகள், ஆலைகள் முற்றுகைப் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது!

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 20 முதல் 30 வரை மது ஒழிப்பு பரப்புரை பெரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள், குறுந்தகடு வினியோகம் என பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற பரப்புரைகளில் சுமார் 1 கோடி மக்களிடம் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
7 ஆயிரம் கிராமங்கள் உட்பட 8 ஆயிரம் இடங்களில் இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இறுதியாக இன்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் 48 இடங்களில் நடைபெற்ற மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகள் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் அணிதிரண்டனர்.
காவல்துறை தடையை மீறி மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகளை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
இம்மாபெரும் அறப்போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நெல்லை கிழக்கு

கோவை

திருச்சி



திருவள்ளூர் மேற்கு
திண்டுக்கல்

சேலம்

ஊட்டி

சனி, 29 டிசம்பர், 2012

தஞ்சை நகர ஐக்கிய ஜமாத் சார்பில் `இஸ்லாமிய திருமணங்களும், இன்றய நடைமுறை சிக்கல்களும்’ நிகழ்ச்சி - பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு

தஞ்சை நகர ஐக்கிய ஜமாத் சார்பில் `இஸ்லாமிய திருமணங்களும், இன்றய நடைமுறை சிக்கல்களும்’ என்ற தலைப்பில் தஞ்சாவூர் கீழவாசல் பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல் 23.12.12 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு, அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களுக்கான சிற்ப்புக் கூட்டம் நடைப்பெற்றது.
ஐக்கிய ஜமாத் தலைவர் சகோ.என்.ஷேக் சிராஜுதீன் தலைமையேற்க, பள்ளி இமாம், மெளலவி மன்சூர் ஆலிம் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட அரசு டவுன் ஹாஜி சகோ.சையத் காதர் உசேன் முன்னிலைவகிக்க, பள்ளிவாசல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பசீர் அஹமது வரவேற்ப்புரையாற்றினார்கள், திருமறையும், நபிவழி கூறும் திருமணங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் சகோ.மெளலவி அஹமது மிஸ்பாஹி விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
இஸ்லாமிய திருமணங்களில், இன்றைய நடைமுறைச் சிக்கல்கள் என்ன? அவற்றை கலைய எடுத்திருக்கும் முயற்சிகள், ஜமாத்துகள் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி மமக சட்டமனற குழு தலைவர் முனைவர்.டாக்டர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் விபரமாக உரையாற்றி அதன் பின் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஜமாத்தார்களின் சந்தேகங்களுக்கு பதில்கூறினார்கள்.
அல் எஹ்சான் ஜமாத் தலைவர் சகோ.எஸ்.முஹம்மது பாருக் நன்றி கூறினார்கள். ஐக்கிய ஜமாத் செயலாளரும், மனிதநேய வனிகர் சங்க மாநிக செயலாளருமான சகோ.ஜெ.கலந்தர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். ​

வியாழன், 20 டிசம்பர், 2012

மதுவுக்கு எதிரான பரப்புரை சி.டி. வெளியீடு

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 2012 டிசம்பர் 20 முதல் 30 வரை நடைபெறும் மது - மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக குறுந்தகடு டிசம்பர் 19 அன்று தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் வெளியிட, பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி பெற்றுக் கொண்டார்.
அப்போது மமக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது, மமக அமைப்புச் செயலாளர் செய்யது அஹமது பாரூக், தமுமுக மாநிலச் செயலாளர் கோவை செய்யது மற்றும் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட கவிஞர் அரவிந்த பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சனி, 8 டிசம்பர், 2012

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுகவின் தொடர் முழக்க போராட்டங்கள்

சென்னை
மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, சீமான், தமிழரு மணியன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர்
தமுமுக மூத்த தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தினர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன். மக்கள் விடுதலை மாநில செயலாளர் மீ.த. பாண்டியன் ஆகியோர் சிறப்புரை நிகழ்தினார்கள்.
மாவட்ட தலைவர் இ. அகமத் கபீர் அவர்கள் தலைமை தாங்கினார். ம ம க செயலாளர் எ. அப்துல் பஷீர் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார்கள். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு . ராமகிருஷ்ணன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதில் முஸ்லிம்களை அடைக்கி ஒடுக்க நினைக்கும் பாசிச பயங்கர வாதிகளை எதிர்ப்பதில் உங்களின் தோளோடு தோளாக இருப்போம் என்று கூறினார் .. அடுத்து மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியென் செயாலாளர் மீ தா பாண்டியன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதில் த மு மு க மற்றும் ம ம க எடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் காலத்தின் தேவையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி படுத்துகிறது. முற்போக்கான போராட்டத்தை பெண்களையும் முன் வைத்து நடத்தும் போராட்டங்கள் என்றும் தோல்வி அடித்தது இல்லை. அது போல் உங்களின் இந்த போராட்டமும் தோல்வி அடையாது. அது முடியவும் முடியாது என்று கூறினார். பிறகு உரையாற்றிய மூத்த தலைவர் ராமநாத புரம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் . பேராசியர் ஜவாகிருல்லாஹ் அவர்கள் பாபர் மஸ்ஜித் வரலாற்றயும் வழக்கு கடந்து வந்த விதத்தையும், புதிய தலைமுறைக்கு விளக்கினார். இறுதியாக பொருளாளர் அஜ்மீர் கான் அவர்கள் நன்றிஉரை ஆற்றினார்கள்.

மதுரை

திருச்சி

சேலம்

விழுப்புரம் (வடக்கு)

புதுக்கோட்டை

விழுப்புரம் (தெற்கு)


கும்பகோணம்

ஊட்டி

சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி

வேலூர் மேற்கு

ஈரோடு

தூத்துக்குடி
நெல்லை - கிழக்கு

நாமக்கல்

தொண்டி

பெரம்பலூர்

காஞ்சி - தெற்கு

புவனகிரி

திருவள்ளூர் கிழக்கு

திருவள்ளூர் மேற்கு

காரைக்குடி

தஞ்சை - தெற்கு

ஹோசூர்