திங்கள், 3 டிசம்பர், 2012

டிசம்பர் 6, 1992 என்றும் நம் நினைவில்

 
டிசம்பர் 6, 1992 ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் 463 ஆண்டுகால பழமை வாய்ந்த இறையில்லம் பாபரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்டது. பாபரி மஸ்ஜிதுடன் இந்திய தேசம் அதுவரை போற்றிவந்த உயர்ந்த சிந்தனைகளும் விழுமியங்களும் சேர்த்தே தரைமட்டமாக்கப்பட்டன இந்திய அரசு ஒரு கையாலாகாத பார்வையாளராக மாறியது அரசியல் சாசனத்தின் சட்டத்திட்டங்கள் காகிதங்களில் எழுதப்பட்ட புனைவாகவும் நீதிபீடம் முற்றிலும் செயலற்றதுமாக மாறியது சுதந்திர இந்தியாவில் காந்தியின் படுகொலைக்கு பின்னர் நிகழ்ந்த மிகப்பெரிய தீவரவாத தாக்குதல் இதுவாகும் உலக சமூகங்களின் முன்னால் இந்தியா அவமானத்தால் தலை குனிந்த நாள் இது

420 ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் ஏக இறைவனை வணங்கி வந்த வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு நூற்றாண்டுகளாக இந்தியா மீது படிந்திருந்த கறை துடைக்கப்பட்டது என்று கொக்கரித்தார்கள் சங்கபரிவாரத்தினர் அதன் பொருற் முஸ்லிம்கள் இந்த தேசத்தின் மீது படிந்துள்ள கறை என்பதாகும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்பது ஒரு வழிப்பாட்டுத்தலத்தை தகர்த்தார்கள் என்பதோடு நிற்கவில்லை மாறாக இந்திய முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க சங்கபரிவார்கள் தீட்டிய செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் உணர்த்தின பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து தேசம் முழுவதும் முஸ்லீம்கள் மீது தாக்குதல் கட்டவிழ்க்கப்பட்டது மரணங்களும் அழிவுகளும் முஸ்லிம்களுக்கு சுமத்தப்பட்டன இது ஹிந்தீத்துவ பாசிஸ சக்திகளுக்கு அரசியல் ஆதாயமாக மாறியது

(ஆர்.எஸ்.எஸ்) (வி.ஹெச்.பி) (பா.ஜ.கா) தலைவர்கள் தாம் இந்த வரலாற்று சின்னத்தை அழித்ததற்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் என்றாலும் இதர நபர்களுக்கும் இதில் சமமான பங்குண்டு மத்தியில் ஆண்ட நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்திர பிரதேச மாநில அரசு நீதிபீடம் ராணுவம் ஊடகம் அரசியல் கட்சிகள் அனைவரும் இந்த குற்றத்தில் பங்காளிகளே துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இந்த துயர நிகழ்விலிருந்து பாடம் படிக்க தவறிவிட்டார்கள் 20 ஆண்டுகள் கழிந்துவிட்டன இடிக்கப்பட்ட மஸ்ஜித் மீண்டும் கட்டித்தரப்படும் என்று தேசத்திற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது இதுவரை இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜித் கட்டப்படவில்லை

இதுவே அரசின் வாக்குறுதி அப்பட்டமான பொய் என்பதை நிரூபிக்கிறது பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டியெழுப்பி குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும் மேலும் இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க முடியும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வேளையில் பல்வேறு அறிவுஜீவிகளும் மதசார்பற்ற தலைவர்களும் ஊடகங்களும் தேசம் முழுவதுமுள்ள மக்களும் இதைத்தான் கூறினார்கள் ஆனால் எதுவுமே நடக்கவில்லை

பாபரி மஸ்ஜித் தொடர்புடைய மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட 3 சட்ட முறைமைகள் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றன

1, பாபரி மஸ்ஜித் நில உரிமையில் வழக்கு. அதாவது பாபரி மஸ்ஜிதும் அதன் சுற்றுப் பகுதிகளும் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு 1961 ம் ஆண்டு தொடுக்கப்பட்டது இவ்வழக்கில் பாபரி மஸ்ஜிதை 3 ஆக பாகப்பிரிவினை செய்யும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

2, பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீதீ 1992 ம் ஆண்டு தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்காகும் பாபரி மஸ்ஜிதை இடித்துதள்ளிய குற்றவாளிகள் எவ்வித குற்ற உணர்வோ தண்டனை குறித்த அச்சமோ இன்றி சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்கள்

3, பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரனை நடத்த நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் அளித்த அறிக்கையின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை குறித்தது பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லை

முஸ்லிம்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பாபரி மஸ்ஜிதை மறப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாகும் பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்த மாபெரும் தேசத்தின் எந்தவொரு குடிமகனும் மறந்துவிடக்கூடாது இந்த மோசமான துயர சம்பவத்தை மறப்பது என்பது வகுப்புவாதம் மற்றும் பாசிசத்தின் வளர்ச்சிக்கே உதவும் நமது தேசம் கடந்த 20 ஆண்டுகளாக நம்பிக்கை துரோகத்திற்கு சாட்சியம் வகிக்கிறது இதுவரை நீதி மறுக்கப்பட்டே வருகிறது இனிமேலும் அது தாமதிக்கப்படகூடாது

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் நீதிக்காக உறுதியாக போராட இந்தியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்

பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டு!

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கருத்துகள் இல்லை: