புதன், 30 ஜூன், 2010

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

மனிதநேய மக்கள் கட்சி சென்னை மாவட்டம் சார்பில் பெட்ரோல், டீசல் விலைஏற்றத்தைக் கண்டித்து இன்று சென்னiயில் நடைடிபற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள்.

சுதாசமாவின் கைது சி.பி.ஐக்கு புதையல்!

அஹ்மதாபாத்:கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ மேற்கொண்ட சுதாசமாவின் கைதுக்குப் பிறகு, இதுவரை சுமார் 197 புகார் மனுக்கள் அவருக்கெதிராக கிடைத்துள்ளன.

இவை அனைத்தும் ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சி.பி.ஐக்கு கிட்டியவை.

எனினும், இப்புகார்கள் ஷொராஹ்ப்தீன் வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லாததனால். சி.பி.ஐ இதை விசாரிக்காது என்று தெரிகிறது.

மிரட்டிப் பணம் பறித்தல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துதல், சட்ட விரோத பொருளாதார குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இப்புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு சி.பி.ஐ அளித்துவரும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையில் பதிவுச் செய்யப்படும்.

சுதாச்சமா முதலீடுகள், பொருளாதார கோல்மால்கள் என இரண்டாம் தர வழக்கையும் சுதாச்சமாவிற்க்கெதிராக சி.பி.ஐ தொடர இம்மனுக்களும், ஆதாரங்களும் வாய்ப்பளிக்கும்.

உதாரணமாக, சுதாச்சமாவை கைது செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் வங்கி கணக்கிலிருந்து சுமார் 1 கோடி ரூபாய் அவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சுதாசாமவிற்கெதிராக பல ஆதாரங்கள் உள்ளதாக சி.பி.ஐ. வாதிடுகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கட்டுமானத் தொழிலில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது என பல ஆதாரங்கள் சி.பி.ஐயிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் சுதாசமாவிற்கெதிராக ஊழல் வழக்குகளை கட்டியமைக்க வழி வகுக்கும் என்றும் சி.பி.ஐ. நம்புகிறது.

அதே சமயம், ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் இதே சுதாச்சமாதான் முக்கிய சூத்திரதாரி என்றும் சி.பி.ஐ கூறுகிறது.

இப்பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக வழக்குகள் தொடர சி.பி.ஐ விரைவில் வருமான வரித்துறையினரையும் அணுகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TOI

லண்டன் அருகே பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்ட மயானம்

லண்டன் அருகே உள்ள பக்கிங்காம்ஷயர் பகுதியில் ஹேம்லிடன் என்ற இடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டது. அங்கிருந்த ரோமானியர்களின் பங்களா அருகே மயானம் ஒன்றும் இருந்தது. அங்கு பச்சிளம் குழந்தைகள் அதிகளவில் புதைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 97 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருந்தன. அனைத்து எலும்பு கூடுகளும் ஒரே அளவாக இருந்தன. கருவில் உருவாகி 40 வாரங்கள் ஆன குழந்தைகளின் எலும்புகள் போலவே அவை இருந்தது.இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இயற்கை காரணங்களால் குழந்தைகள் இறந்திருந்தால், அவர்களின் வயது வித்தியாசம் வேறுபட்டிருக்கும். ஆனால் பிறந்த சில நாட்களில் இந்தக் குழந்தைகள் இறந்தது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.

இது குறித்து விளக்கம் அளித்த ஆராய்ச்சியாளர் ஜில் அயர்ஸ், "அந்த மாளிகை விபசாரம் நடைபெறும் இடமாக இருந்திருக்க வேண்டும். கருத்தடை சாதனங்கள் அந்தக் காலத்தில் இல்லாததால், பாலியில் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லாமல் குழந்தைகள் பிறந்திருக்கும். அந்தக் குழுந்தைகளை ரோமானியர்கள் கொன்று புதைத்திருக்கலாம்" என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஆஸ்கிலன் நகரில் கடந்த 1988ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் இதே போல் பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திலும் ரோமானியர்களின் விபசார விடுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"இந்த அளவுக்கு குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட மயானம் உலகில் வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்கிறார் எலும்புக் கூடு ஆராய்ச்சியாளர் சிமன் மேஸ்.

செவ்வாய், 29 ஜூன், 2010

தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... எச்சரிக்கை மணி!

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது.

இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

''இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டாம்.

7. தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.


அமெரிக்காவும் பாலியல் பலாத்காரமும்பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்வதில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், இராணுவத்தில் பணிபுரியும் பெண் சிப்பாய்கள் மீதும் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது.

தற்போது வெளி வரும் அறிக்கைகள் இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது. அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவிலிருந்தே வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த வருடங்களில் 2009 மட்டும் 37000 பெண் சிப்பாய்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. எனினும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிகமான பெண் சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை என்றும் மீறி முறைப்பாடு செய்தால் அவர்கள் பழிவாங்கப் படுவதாகவும் அதே ஆய்வறிக்கைக் கூறுகிறது.

அமெரிக்க இராணுவத்திலுள்ள பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்தில் 25 சதவீதம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள அமெரிக்க இராணுவத்தில் நடை பெறுவதாகவும் பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய மற்றொரு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. "இதன்மூலம், ஒருவர் தாம் வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களைப் புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்" என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகின்றது என்பது குறிபிடதக்கது.

முன்னேற்றமடைந்த நாடு எனவும் பெண்களின் சுதந்திரத்திற்கு முன்னுதாரணமான நாடு எனவும் நாகரீகத்தின் உச்சியில் உள்ள நாடு எனவும் மக்களால் தவறாக கருதப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கும் போலிருக்கிறது!

ஒரு புள்ளிவிபரம்

லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு அண்மையில் 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது.

அதில், பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,

62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்

இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும் 59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்,

41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்

பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :

43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்

அருந்தினால் 8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

கல்விக் கூடங்களில் :

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :

85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்

18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்

13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்

அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,

25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்,

10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றதஅமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்

12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்

21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்

11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்

3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள Minnesota high school students (reported by Susan Strauss, Sexual Harassment and Teens) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :

பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்

இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்

50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.

பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில், ஆண்களின் போகப்பொருளாக பெண்களை மாற்றும் கலாச்சாரம் இன்று அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் நடு ரோட்டில் தண்ணியடித்தாலும், ஒழுக்க் சீர்கேடான விஷயங்களை செய்தாலும் தவரில்லை என்று கருதப்படுகிறது. ஆனால், தவறுகளைப் பற்றி அரிவுறுத்த யாரேனும் முற்ப்பட்டால் அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவது சகஜமாகிவிட்டது.

இது போன்ற பாலியல் பலாத்காரம் புரியும் கேவலாமான ராணுவத்தை உலகின் ஒளி விளக்கை போலவும், அதை எதிர்க்கும் யுவான் ரிட்லீ போன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப் படுவதும் சாதாரணமாகிவிட்டது.

ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலமை என்றால், ராணுவத்தால் கைது செய்யப்படும் பெண்கள்? சொல்ல முடியாத அவலங்கள். அந்த பட்டியல் இன்னும் நீளும். அவர்களை இறைவன் பாதுகாக்கவேண்டும்.

மேலப்பாளையம் மாநாகராட்சி அலுவலகத்தி முற்றுகையிட்டது ம.மக.

மேலப்பாளையம் மைல காதர் புரத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மாவட்ட ம.ம.க பொருளாளர் ரசூல் மைதீன் தலைமையில் பெண்களுடன் காலி குடங்களுடன் மாநாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டது.இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் போராட்டத்திற்கு சுமார் 100 பெண்கள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


15 வயதிற்க்கு மேற்ப்பட்ட இந்திய குடிமகன்களுக்கு புகைப்பட அடையாள அட்டை

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட அனைவருக்கும், புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

"கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்" என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ராஜாஜி பவனில் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்; "தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு,தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு,இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, 'டிவி,' கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும். அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும். அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.

கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால்,மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர்.

கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம்". இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

கஷ்மீர்:மத்திய போலீஸ் சுட்டதில் குண்டு பாய்ந்து 2 இளைஞர்கள் பலி

கஷ்மீர் மாநிலம் சோபோர் நகரில் போலீஸாரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சோபோர் நகரில் ஊரடங்கு உத்தரவு நீடித்தப்படி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் உள்ள சோபோர் நகர இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு கூறி முக்கிய இடங்களில் திரள்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் மத்திய போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.

நேற்று மாலையும் சோபோர் நகர இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரு இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் கலைந்து போகுமாறு எச்சரித்தனர். இதை ஏற்க மறுத்த இளைஞர்களுக்கும் மத்திய போலீஸ் படையினருக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மத்திய போலீஸ் படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து வன்முறை வெடித்தது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மத்திய போலீஸ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் பிலால் அகமது என்ற 21 வயது இளைஞர் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6 இளைஞர்கள் குண்டு காயம் அடைந்தனர். அதில் ஒரு இளைஞர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 வாலிபர்கள் இறந்த தகவல் சோபோர் நகரம் முழுக்க காட்டுத்தீ போல பரவியது. மக்கள் கோபத்தில் தெருக்களில் திரண்டு போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். சில இடங்களில் மத்திய அரசையும், கஷ்மீர் அரசையும் எதிர்த்து போஷமிட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வாலிபர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த மாதத்தில் மட்டும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது சோபோர் நகர மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோபோர் நகர கலவரம்- துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்கதையாகி வருவது கஷ்மீர் மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா, துப்பாக்கி சூடு குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் இனப் படுகொலை வழக்கு: பாபு பஜ்ரங்கிக்கு நீதிமன்றம் கெடு

அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப் படுகொலை வழக்கில், ஜூன் 29-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பாபு பஜ்ரங்கிக்கு சிறப்பு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும் ஆர்.ஏ.ஷேய்க் என்ற வக்கீலை "எனக்கு எதிராக வாதித்தால் தகுந்த பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று பஜ்ரங்கி மிரட்டியுள்ளார். நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் வைத்து பஜ்ரங்கி ஷேய்க்கை மிரட்டியதாக மற்றொரு வக்கீலான எஸ்.எம்.வோராவும் நீதிமன்றத்தில் உறுதிசெய்தார்.
இக்கருத்துகளை வழக்கின் ஆவணங்களுடன் பதித்த நீதிபதி ஜ்யோட்சனா யாக்னிக், வரும் 29ம் தேதிக்குள் இதுபற்றி பதிலளிக்குமாறு பஜ்ரங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, "பாதிக்கப்பட்டவர்களையோ, புகார் அளித்தவர்களையோ அல்லது அவர்களுக்காக வாதாடும் வக்கீல்களையோ எக்காரணத்தை கொண்டும் நான் மிரட்ட மாட்டேன்" என்று பஜ்ரங்கி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 28, 2002 அன்று நரோடா பாடியா மற்றும் நரோடா காம் ஆகிய இடங்களில் நடந்த கலவரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். சொத்துக்களும் அழிக்கப்பட்டது.

இக்கலவரத்தின் சதி தீட்டியது உட்பட அனைத்து வகையிலும் பஜ்ரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி ஒரு முக்கிய குற்றவாளி ஆவான்.
source:TwoCircles.net

திங்கள், 28 ஜூன், 2010

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பின்னணியில் ஹிந்து தீவிரவாதிகள்

புதுடெல்லி:2007-ல் நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பை விசாரிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்கள் மூலம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்ட ஹிந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பிப்ரவரி 18, 2007 அன்று ஹரியானா மாநிலம் பானிபட் அருகே நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68 பயணிகள், பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பி கொண்டிருக்கையில், கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு செயல்படுத்தப்பட்ட முறை, வெடிபொருட்களின் இயல்பு ஆகியவை, 2007 ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகோன் குண்டுவெடிப்புகளுடன் ஒத்திருப்பதாகவும், அதுவும் அபினவ் பாரத், சன்ஸ்தான் அமைப்பாலேயே அரங்கேற்றப்பட்டது என்று சந்தேகிக்கப்படுவதாக உயர்மட்ட உள்துறை வட்டார செய்திகள் கூறுகிறது.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் குருட்டுத்தனமாக விசாரணை சென்றபோதிலும், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சூட்கேசின் மூடியை கண்டுபிடித்த பிறகு, விசாரணையாளர்கள் மூன்று குண்டுவெடிப்புகளிலும் பயன்படுத்தப்பட்ட வயர், மருந்து பொருட்கள், வெடிக்கவைக்கும் கருவி மற்றும் பேட்டரி ஆகியவைகள் ஒத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சிபிஐ மக்கா மஸ்ஜித் வழக்கில் துப்பு தருவோருக்கு 10 லட்சம் சன்மானம் என்று துரிதப்படுத்தியுள்ளது. மாலேகோன், மக்கா மஸ்ஜித், கோவா, மோடஸா மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளில் ஹிந்து தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதை வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.

எல்லா வழக்குகளையும் ஒரே ஏஜென்சியிடமே ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றது.

காஸ்ஸா மீதான முற்றுகையை தொடர அனுமதிக்க முடியாது: ஜி-8 நாடுகள்

காஸ்ஸா மீதான முற்றுகையை இஸ்ரேல் விளக்கிக் கொள்ளவேண்டும். அங்கு வாடும் ஃபலஸ்தீன மக்களுக்கான உதவிப் பொருட்களை அனுமதிக்கவேண்டும் என்று ஜி-8 நாடுகள் கூறியுள்ளன.

"எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1860-ஐ செயல்படுத்தவும், மனிதாபிமான மற்றும் வர்த்தக பொருட்கள் காஸ்ஸாவுக்கு சென்று வர உத்திரவாதமளிக்கவும் செயல்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது.

"காஸ்ஸா மக்களின் மனிதாபிமான மற்றும் வர்த்தக பொருட்கள், சமுதாய மறுசீரமைப்பு, அடிப்படை வசதிகள், சட்டப் பூர்வமான பொருளாதார மேம்பாடுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய இந்த தீர்மான கொள்கைகளை முழுமையாக அமல்செய்ய வற்புறுத்துகிறோம்" என்றும் ஒரு செய்தி குறிப்பிடுகிறது.

முற்றுகையை மீற முயன்ற உதவிக்கப்பல் மீது கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான உயிர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

ஆறு கப்பல்களில் 42 நாடுகளை சேர்ந்த சுமார் 700 சேவகர்கள் 10,000 டன் நிவாரண பொருட்களை காஸ்ஸாவிற்கு ஏந்திவந்து கொண்டிருந்தனர். ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா என்ற கப்பலை சர்வதேச எல்லையில் இஸ்ரேல் தாக்கியதில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டனர், 50 பேர் படுகாயமடைந்தனர்.

1.5 மில்லியனுக்கும் மேலான ஃபலஸ்தீனர்கள் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலின் தளராத முற்றுகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இஸ்ரேலிய முற்றுகைக்கு ஃபலஸ்தீன குழந்தைகள் காஸ்ஸா நகரில் சனிக்கிழமையன்று மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்

மதுரை முனிச்சாலை ஒபுளா படித்துறையில் 25-06-10 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் மாவட்ட பொருளார் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முகம்மது மைதீன் உலவி, அப்துல்ரஃபி, பாண்டியராசன் உட்பட ஒன்றிய பகுதி நிர்வாகிகள் உரைகளைத் தொடர்ந்து குனங்குடி R.M. ஹனிபா அவர்களும் Prof. M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களும் சிறப்புரை நிகழ்தினார். கூட்டத்தில் 14 முக்கிய த{ர்மானங்கள் வாசிக்கப்பட்டது.


PFI நடத்தும் மாபெரும் சுதந்திரதின அணிவகுப்பு: இடம் கோவை மேட்டுப்பாளையம்.

வரும் ஆகஸ்டு மாதம் 15 தேதி அன்று 63 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நடந்தவுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை தொடர்ந்து கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடை.

மும்பை:பிரிட்டனை தொடர்ந்து தற்போது கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.டாக்டர் ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள டாக்டர் ஜாகிர், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை தொடர்ந்து, தான் வெளி உறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இத்தடைகளை அகற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

கனடா தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அந்த செய்தியில், பிரபல இந்திய முஸ்லீம் பேச்சாளர் ஒருவர் கடந்த வாரம் பிரிட்டனில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இனி கனடாவிலும் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, டாக்டர் ஜாகிர் நாயக் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். தன் வீடியோ கேசட் ஒன்றை செய்தியாளர்களிடம் ஒப்படைத்த நாயக், தன் கருத்துக்கள் திரித்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைத் தொடர்ந்து கனடாவிலும் தான் தடை செய்யப்படுள்ளதற்கு அரசியல் பின்னணிகள் தான் காரணம் என்று நாயக் மேலும் விளக்கினார். வரும் வாரங்களில் ஐ.ஆர்.எப். நிகழ்ச்சி ஒன்று கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், டாக்டர் ஜாகிர் நாயக் தடை செய்யப்பட்டுள்ளது கனடா முஸ்லீம்களிற்கு மட்டுமல்லாமல் மற்ற மதத்தார்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பி.ஜே.பி-யின் ஒருதலைபட்சக் கொள்கை: கர்நாடக லோகயுக்தா நீதிபதி ராஜினாமா

பெங்களூர்:கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார்.

பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே, பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்ச கொள்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
Twocircles

ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு: வன்முறை தீ வைப்பு, ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் பரபரப்பு

உலகின் முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 மாநாடு கனடாவில் துவங்கியது. இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.பன்னாட்டு நிறுவனங்கள்,பாங்குகள் சூறையாடப்பட்டன. இதனால் உலக தலைவர்கள் திணறி போயினர். அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த மாநாடு கூட்டமைப்புக்குட்பட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நிலை மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கனடாவின் புகழ்பெற்ற டொரன்‌டோவில் கூடியது.பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு கனடாவில் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

மாநாடு நடக்கும் வளாகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மாநாட்டு அரங்கம் உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனை தடுக்க முற்பட்ட போது போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் மாறி , மாறி தாக்க துவங்கினர். முக்கிய கட்டிடங்கள் சூறையாடப்பட்டது, கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை வீசி கலைத்தனர். ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்த போது அடையாளம் தெரியாத வன்முறைக்கும்பல் இந்த கலவரத்திற்கு காரணமாக அமைந்து விட்டது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநாட்டு அரங்கில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்ற நேரத்தில் நடந்த இந்த வன்முறை அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள்தொகை அதிகரிப்பு மகிழ்ச்சிக்குரிய விஷயமா?

இன்று உலகில் 1 பில்லியன் 570 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக அமெரிக்காவில் நிலைகொண்டுள்ள fcqp ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழும் ஒவ்வொரு நான்காம் நபர் முஸ்லிமாகவே இருப்பார். இது மகிழ்ச்சிக்குரிய விடயமா? என்பதே கேள்வி. இல்லை என்பதே எனது விடை.

இந்த அறிக்கையை வைத்து முஸ்லிம்களாகிய நாம் ஒரு சுயமதிப்பீட்டை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். ஏன் உலகின் இந்த 25வீதமான (1.5 பில்லியன்) மக்கள் தொழில்நுட்ப, அறிவியல் ரீதியாக பின்தங்கியும் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டும் பொருளாதார ரீதியாக ஏழ்மையிலும் வாழ்கின்றனர்?

ஏன் உலக மொத்த தேசிய உற்பத்தியில் அவர்களது பங்கு 3 ட்ரில்லியன் டொலராக, அதாவது, 70 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட பிரான்ஸின் மொத்த தேசிய உற்பத்தியை விடக் குறைவாக உள்ளது?

இது 120 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஜப்பானின் மொ.தே.உற்பத்தியின் பாதியாகவும் 300 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் மொ.தே.உற்பத்தியின் 1/5 பங்காகவும் இருக்கிறது? உலக சனத்தொகையில் 35 வீதமான கிறிஸ்தவர்கள் 70 வீதமான உலக செல்வங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்.

முஸ்லிம் நாடுகளைப் பொறுத்தவரையில், சில எண்ணெய் உற்பத்தி நாடுகளைத் தவிர, மனித அபிவிருத்திச் சுட்டெண் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது. முஸ்லிம் நாடுகளின் அறிவியல் சாதனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு வருடமும் 500க்கும் குறைவான விஞ்ஞானக் கலாநிதிகளே இங்கு உருவாகின்றனர். ஆனால் பிரிட்டனில் மட்டும் இத்தொகை 3000 க்கும் அதிகமாகும். 1901 முதல் 2008 வரையுள்ள காலப்பகுதியில் விஞ்ஞானத்துறைக்காக வழங்கப்பட்ட சுமார் 500 நோபல் பரிசுகளில் 140 ஐ உலக சனத்தொகையில் 0.2 வீதமான யூதர்கள் தட்டிச்சென்றுள்ளனர்.

இதனோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் ஒரேயொரு பரிசை மட்டுமே பெற்றுள்ளனர். விஞ்ஞான சாதனைகனைப் பொறுத்தவரையில் எமது கேவலமான நிலையைப் பார்த்தீர்களா? அண்மையில் செங்ஹாய் பல்கலைக்கழகம் ஆய்வு மற்றும் போதனா முறைகள் தொடர்பாக உயர்நிலை வகிக்கும் 400 பல்கலைக் கழகங்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் உலகில் உள்ள ஒரு பல்கலைக் கழகம்கூட அப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது மிகவும் வேதனை தரும் தகவலாகும். இஸ்லாமிய நாகரிகம் மேலோங்கியிருந்த மத்திய காலத்தில் (7-16 நூற்றாண்டு வரை) உலகின் தரம் வாய்ந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களும் கொரடோவா, பக்தாத், கெய்ரோ போன்ற இஸ்லாமிய நகரங்களிலேயே காணப்பட்டன.

பிரபலமிக்க அறிவியல் வரலாற்றாய்வாளர் கில்லஸ்பீ மத்திய காலத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 130 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேதைகளின் பெயர்ப் பட்டியலொன்றைப் பதிவு செய்துள்ளார். அவர்களுள் 120 பேர் இஸ்லாமிய உலகைச் சார்ந்தவர்களாகவும் நால்வர் மட்டுமே ஐரோப்பியர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவே, முஸ்லிம்கள் தமது கடந்த கால சாதனைகளுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டு மதிப்பீடு செய்து வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்குப் போதுமான காரணியாகும்.

பல முக்கிய முகவரகங்களின் அறிக்கைகளின்படி இன்னொரு முக்கிய விடயம் இங்கு ஆராயத்தக்கதாகும். அதாவது, தற்போதைய முஸ்லிம் உலகின் பிறப்பு விகிதத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, உலக முஸ்லிம் சனத்தொகை இன்னும் 50 வருடத்தில் இரட்டிப்பாகும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல. இந் நிலைமையில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களை எண்ணிக்கையில் மட்டுமே மிஞ்ச முடியும். அதேநேரம், தற்போதைய கிறிஸ்தவ சனத்தொகையான 2.3 பில்லியன் இரட்டிப்பாக இன்னும் 500 வருடங்கள் செல்லுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, முஸ்லிம் உலகில் தற்போது நிலவிவரும் பொருளாதார நிலைமை மற்றும் இன்று அவர்கள் அடைந்துள்ள பிற்போக்கு நிலை என்பவற்றுடன் இந்த சனத்தொகை அதிகரிப்பு வேகமும் ஒன்றுசேர, பொருளாதாரப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமே தவிர ஒருபோதும் அதற்குத் தீர்வாக அமையாது.

அடுத்துவரும் 50 வருடத்தில் முஸ்லிம் சனத்தொகை இரட்டிப்பாகுவதால் முஸ்லிம் உலகுக்கும் கிறிஸ்தவ உலகுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி மேலும் விரிசலடையும். இந்த நூற்றாண்டில் அல்லது அடுத்த நூற்றாண்டில் உலகை ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? உலக செல்வ வளங்களில் 5 வீதத்தினைக் கொண்டுள்ள முஸ்லிம்களா அல்லது 70 வீதமான பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களா?

அறிவியல் ரீதியாக அபிவிருத்தியடைந்துள்ள இன்றைய உலகில் எண்ணிக்கைப் பலத்தை மட்டுமே கொண்டுள்ள ஒரு நாடு அல்லது தேசம் ஆதிக்கத்தையோ கௌரவத்தையோ உறுதி செய்யாது என்பதை முஸ்லிம் உலகம் உணர வேண்டும்.

விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதன் மூலமே அதிகாரம், கௌரவம், செல்வம் என்பவற்றை ஈட்ட முடியும். அதிகரித்த சனத்தொகையையும் குறைந்த இராணுவ, பொருளாதார பலத்தையும் கொண்ட நாடுகளின் இயலாமையை விளக்கப் பல உதாரணங்களைக் கூற முடியும். பொருளாதார, இராணுவ, அறிவியல் ரீதியில் உயர்நிலையிலுள்ள யூத சமூகம் அரபு உலகத்தை எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறது என்பது நாம் அன்றாடம் காணும் காட்சியாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உயர்ந்த சனத்தொகையுள்ள நாடுகளில் வாழும் மக்கள் அனுபவித்துவரும் பல்வேறு விதமான கஷடங்களுக்கு மத்தியில் மேற்கில் வாழும் சிறுதொகை முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் பொருளாதார வளத்துடனும் வாழ்வதை இன்னொரு முக்கிய உதாரணமாகக் கூறலாம். ஐரோப்பாவில் வாழும் 20 மில்லியன் முஸ்லிம்களின் மொத்த தேசிய உற்பத்தியானது இந்திய உபகண்டத்தில் வாழும் 500 மில்லியன் முஸ்லிம்களின் மொத்த தேசிய உற்பத்தியை விடவும் உயர்ந்ததாகவும் உறுதியானதாகவும் காணப்படுகின்றது.

இஸ்லாமிய நாகரிகத்தின் அரசியல், பொருளாதார பலம் வீழ்ச்சியடைந்தமைக்கான ஒரே காரணம் அறிவியல் துறையில் முஸ்லிம்களின் கவனம் குறைந்து சென்றமையே என பிரபல இஸ்லாமிய அறிஞர் நிஸ்ஸிம் ஹஸன் கூறுகிறார். மனித இனத்தின் தலைமைத்துவ நிலையை நாம் பல நூற்றாண்டுகளாக இழந்தே வந்துள்ளோம். நாம் நமது தூரநோக்கு, நம்பிக்கை மற்றும் நமது பகுத்தறிவு என்பனவற்றை பிரயோசனமற்றவைகளுக்காகத் தாரைவார்த்துவிட்டோம். `சித்தாந்த வேறுபாடுகளையும் காலத்துக்கொவ்வாத கோட்பாடுகளையும் கைவிட்டு துரிதமாக மாற்றமடைந்துவரும் சமூக ஒழுங்குமுறைகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்' என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் முஹம்மத் கோலாலம்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் நிறுவன மாநாட்டின்போது கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் ஸ்பெய்னை ஆதிக்கம் செலுத்திய காலத்தில் (8-14ம் நூற்றாண்டு வரை) முழு ஐரோப்பாவையும் ஆதிக்கம் செலுத்தினர். ஏனெனில் அன்று இஸ்லாமிய ஸ்பெய்னே அறிவியல் விவகாரங்களின் உறைவிடமாக விளங்கியது. அதன் பயன்பாடு முழு ஐரோப்பாவின் பயன்பாட்டைவிட அதிகமாக இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய கிறிஸ்தவ ஸ்பெய்னின் மொ.தே.உற்பத்தி 12 முஸ்லிம் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒன்றிணைந்த மொ.தே.உற்பத்தியை விடக் கூடியது.

மத்திய காலத்தில் இஸ்லாமிய உலகில் ஸ்பெய்ன் மட்டும் உயர் அபிவிருத்தி அடைந்த நாடாக இருக்கவில்லை. இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த பக்தாத், டமஸ்கஸ், கெய்ரோ மற்றும் திரிபோலி போன்ற நகரங்களும் அறிவியல் துறையில் மேலோங்கியிருந்தன. அக்காலத்தில் முழு உலகிலும் வாழ்ந்த இஸ்லாமிய சமூகம் பொருளாதார, கலாசார, ஆய்வறிவு மற்றும் அறிவியல் ரீதியாக ஒரு உன்னத நிலையை எட்டியிருந்தது.

டொனல்ட் கெம்பல் தனது `முஸ்லிம் மருத்துவம' என்ற நூலில், `இஸ்லாமிய உலகில் விஞ்ஞானம் மேலோங்கியிருந்த காலத்தில் ஐரோப்பியர், இருள் சூழ்ந்த உலகில் மூடநம்பிக்கைகள், கர்வம், குரூரம், மந்திரம், வசியம், தாயத்து மற்றும் மதவெறி என்பவற்றில் மூழ்கியிருந்தனர்' என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இஸ்லாமிய நாகரிகம் எழுச்சியடைந்திருந்த காலத்தில் முஸ்லிம்கள் உலக சனத்தொகையில் 10 வீதத்தையே பிரதிநிதித்துவம் செய்தனர் என்பதே.

ஒருபுறம், 16ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள், ஐரோப்பியர்களின் இருள் சூழ்ந்த கால வாழ்க்கை முறைகளைப் பின்பற்றத் தொடங்கியதும் அவர்களது அறிவியல் அபிவிருத்தியில் ஒரு தேக்க நிலை தோன்ற, மறுபுறம், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்தத் தொடங்கி முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் மாறிக்கொண்டு வந்தனர்' என மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சுமார் 800 வருடகாலம் தமது அறிவியல் சாதனைகளால் மனித நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்கு செலுத்திய முஸ்லிம் சமூகம் தமது ஆய்வறிவுத் துறையில் வீழ்ச்சியடைந்து, எழுந்துவரும் புதிய ஐரோப்பிய சக்திகளின் ஆதிக்கத்துக்குட்பட்டது.

16ம் நூற்றாண்டுக்குப் பின் முஸ்லிம்கள் தேடல் மற்றும் பௌதீக அறிவியல் என்பனவற்றில் ஆர்வமிழந்து அறிஞர்களை உருவாக்க முடியாத தேவையற்ற அறிவியல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் தமது சொந்த அறிவியல் சிந்தனைகளை மறந்து பாரம்பரிய அறிவியலுக்கே திரும்பிச் சென்றனர். இதன்மூலம் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் என்பவற்றில் பின்தங்கி மேற்கின் அடிமைகளாக மாறினர்' என அழகாக விளக்குகின்றார் பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர் மௌலானா அபுல் ஹஸன் நத்வி.

அரசியல் அறிவியலாளர் சாமுவெல் பீ. ஹன்டிங்டன் சிலகாலத்துக்குமுன், மேற்குலகுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தற்போதைய முரண்பாடுகளை `நாகரிகங்களுக்கிடையிலான மோதல்' என வர்ணித்திருந்தார். அது அப்பட்டமான தவறாகும். உண்மையிலேயே, அது செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்குமிடையிலான மோதல் என்பதே சரியானதாகும்.

செல்வந்த நாடுகள் பல்வேறு நிபந்தனைகளை வறிய நாடுகள் மீது திணித்து அந்நாடுகளைச் சுரண்டியும் இழிநிலைக்குத் தள்ளியும் வருகின்றன. வறிய நாடுகள், அது முஸ்லிம் நாடாயினும் முஸ்லிமல்லாத நாடாயினும், அவர்களது மீட்சி, உலகளாவிய சமாதானத்திலேயே தங்கியுள்ளது என்பதை உணர வேண்டும். செல்வந்த நாடுகளுடனான அவர்களது தேவையற்ற முரண்பாடுகள், குறிப்பாக மதத்தின் பெயரால் ஏற்படுபவை, அவர்களைப் பெரும் துன்பத்திலும் இடர்களிலுமே சிக்க வைத்துவிடும்.

முஸ்லிம்கள் ஐரோப்பியர் செய்ததைப்போல, மிகவும் துரிதமாகவும் உத்வேகத்துடனும் ஒரு அறிவியல் மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதன் மூலமே அவர்களது பழைய செழுமை நிலையை அடைந்துகொள்ள முடியும். ஆனால் அதற்கு முன் முஸ்லிம்கள் தீவிரவாதத்ததைக் கண்டித்து, நிராகரித்து சகிப்புத்தன்மை, நிதானம், நியாயம் போன்ற உண்மையான இஸ்லாமிய விழுமியங்களை மேம்படுத்த வேண்டும். மேற்குடனான வெறுப்புணர்வு முஸ்லிம்களுக்கு நல்லதல்ல. இது அவர்களை பெரும் துன்பங்களுக்கே இட்டுச் செல்லும். மேற்கை வெறுப்பதும், அதேநேரம் அங்கு வாழ்வதற்காக வீஸாக்கள் மற்றும் கிரீன் கார்ட் என்பவற்றைப் பெற முயற்சிப்பதும் ஒரு வகையான நயவஞ்சகமேயன்றி வேறில்லை.

சில அரபு ஆட்சியாளர்கள் குறிப்பாக சவூதி அரேபிய உலக மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் மதங்களுக்கிடையிலான உரையாடல்கள் என்பவற்றுக்கு ஆதரவு தந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அண்மையில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான மாநாடொன்றில் மன்னர் அப்துல்லாஹ் கலந்துகொண்டு, மதங்களின் நல்ல செய்திகளை முன்வைப்பதற்காக அனைவரும் தீவிரவாதத்தைக் கைவிடவேண்டும் எனவும் நாம் சகவாழ்வுக்கான குரல், நாம் மனிதநேயம், விழுமியங்கள் மற்றும் நியாயம் என்பவற்றின் குரல் என்பதை உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும். இஸ்லாமிய உலகம் சில முஸ்லிம்களின் தீவிரவாதப் போக்கினால் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இது இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் கண்ணியம் என்பவற்றையே குறி வைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

கட்டாரில் நிறுவப்பட்டுள்ள மதங்களுக்கிடையிலான உரையாடல்களுக்கான சர்வதேச நிலையம் உலக சமாதானத்துக்கும் சமாதான சகவாழ்வுக்கும் அவசியமானது மதங்களுக்கிடையிலான புரந்துணர்வே என்ற உயரிய நோக்கில் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளே சிலுவை யுத்தகாலத்திலிருந்து பல்வேறு வடிவங்களில் பரவியுள்ள இஸ்லாத்துக்கு எதிரான மேற்கத்திய சக்திகளைப் பலவீனமடையச் செய்யும்.

கலாநிதி. இக்திதார் ஹுஸைன் ஃபாரூகி

source: (தமிழில்:நஸ்ருள் இஸ்லாம்)