புதன், 23 ஜூன், 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.10 லட்சம் சன்மானம்: சிபிஐ

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான சந்தீப் டாங்கே என்கிற பர்மானந்த் மற்றும் ராம்சந்தர கல்சங்க்ரா என்கிற ராம்ஜி. இருவரும் மத்திய பிரதேசம்- இந்தூர் வாசிகள். தலைமறைவாக இருக்கும் இவர்களை கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ அறிவித்திருக்கிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேவேந்தர் குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரை ராஜஸ்தானிலிருந்து PT வாரண்டில் சிபிஐ அழைத்து வந்திருக்கிறது. ஆனால் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் இரண்டு குற்றவாளிகளான சந்தீப் டாங்கே என்கிற பர்மானந்த் மற்றும் ராம்சந்தர கல்சங்க்ரா என்கிற ராம்ஜி ஆகியோரின் பெயர்கள் சிக்கியுள்ளன.

இவர்கள் தலைமறைவாக இருப்பதால், இவர்களை கைது செய்யும் பொருட்டு தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானத்தை சிபிஐ அறிவித்திருக்கிறது.
Siasat News

கருத்துகள் இல்லை: