புதன், 16 ஜூன், 2010

அப்துஸ்ஸமத் பட்கல் ஜாமீனில் விடுதலை

புனேயில் கடந்தாண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துஸ்ஸமத் பட்கலை மகாராஷ்டிரா நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

கர்நாடக மாநிலம் பட்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துஸ்ஸமத்(23). கடந்தாண்டு மே 25ம் தேதி துபாயிலிருந்து வந்த இவரை, மங்களூரு விமான நிலையத்தில், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு மும்பையைச் சேர்ந்த மூன்று பேருக்கு பயங்கர ஆயுதங்களை அப்துஸ்ஸமத் சப்ளை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கும்படி, கர்நாடகா கூடுதல் நீதிமன்றத்தில் ஸமத் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பதான், 'ஸமதுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் இந்த வழக்கில் ஆரிஃப் மிர்சா பெய்க் என்பவரது பெயர் மட்டுமே தேடப்படும் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸமதின் பெயர் அவ்வாறு இடம் பெற்றிருக்கவில்லை. எனவே, 25 ஆயிரம் ரூபாய் பிணையத் தொகையின் அடிப்படையில்,ஸமதுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது' எனக் கூறினார்.

இதற்கிடையே, புனேயில் கடந்தாண்டு, ஓஷோ ஆசிரமத்தின் அருகே உள்ள, 'பெஸ்ட் பேக்கரி'யில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும், ஸமதின் பெயரை, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: