வியாழன், 31 டிசம்பர், 2009

பர்ஜ் துபாய்க்கு திங்கள் கிழமை திறப்புவிழா

துபாய்:உலகத்தில் மிகவும் உயரமான வானைத்தொடும் கட்டிடமான பர்ஜ் துபாய்க்கு வருகிற ஜனவரி 4ஆம் நாள் திறப்புவிழா நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரதிநிதிகள் உள்பட 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பங்கேற்பார்கள் என துபாய் காவல்துறை அவசர பாதுகாப்பு பிரிவு தலைவர் முஹம்மது ஈத் அல் மன்சூரி தெரிவித்தார்.

கட்டிடம் கட்டி முடிப்பதற்கு மொத்த செலவு 2000 கோடி டாலர் ஆகியுள்ளது. 12 ஆயிரம் பணியாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அமீரகத்தின் தேசிய தினத்தில் பர்ஜ் துபாய் திறப்பு விழா நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

800 மீட்டர் உயரமுடைய இக்கட்டிடத்தின் உண்மையான உயரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.124 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள லிஃப்டின் வேகம் ஒரு செகண்டிற்கு 10 மீட்டர்களாகும். கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு செல்ல 60 செகண்டுகள் போதும். 1044 ரெசிடன்சியல் அபார்ட்மெண்டுகளும், 160 ஆடம்பர அறைகளும் உள்ளன.
இமார் ப்ராபர்டீஸிற்கு சொந்தமானதுதான் இந்த ஸ்கை ஸ்கிராப்பர். தென் கொரிய நிறுவனமான சேம்சங் தான் இதன் முக்கிய கட்டிட ஒப்பந்தக்காரர்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆப்கானில் பள்ளிக்குழந்தைகளை கொன்றது நேட்டோ படையினர்:புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது

காபூல்:ஆப்கானிஸ்தான் கிராமமொன்றில் பள்ளிக்குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரைக் கொன்றது நேட்டோ படையினர் என்று அரசு புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குனார் மகாணத்தில் நராங்க் மாவட்டத்தில் தாக்குதல் நடந்தது.12 வயதிற்கும் 14 வயதிற்குமிடைப்பட்ட பள்ளிக் குழந்தைகள்தான் மரணித்தவர்களில் அதிகம்பேர்.
இச்சம்பவத்தில் ஆக்கிரமிப்புப்படையினரின் பங்கைக்குறித்து விசாரிக்க அதிபர் ஹமீத் கர்ஸாயி ஆலோசகர் அஸருல்லாஹ் வஃபாவின் தலைமையில் புலனாய்வுக்கமிட்டியை நியமித்தார்.நேட்டோ படையினருக்கு எதிராக இம்மாகாணத்தில் பரவலான கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

காஸா நெடுகிலும் அமைக்கப்பட்டு வருகின்ற இரும்புச் சுவர்க் கட்டுமானத்தை எகிப்து உடனடியாக நிறுத்த வேண்டும்: ஹஸன் நஸ்ருல்லாஹ்

காஸா நெடுகிலும் அமைக்கப்பட்டு வருகின்ற இரும்புச் சுவர்க் கட்டுமானத்தை எகிப்து உடனடியாக நிறுத்த வேண்டுமென ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.அவ்வாறு நிறுத்துவது முற்றுகையிடப்பட்டுள்ள காஸா மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

காஸா மக்களுக்கு இருக்கின்ற மிகச் சிறிய நம்பிக்கையும் நிம்மதியும் இச்சுவரின் மூலமாக தகர்த்தெறியப்படும் என மேலும் அவர் தெரிவித்தார் என ரொய்டர் தெரிவிக்கின்றது.

எகிப்து இச்சுவர்க் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தி முற்றுகையை வாபஸ் பெற வேண்டுமென நாம் அழைப்பு விடுக்கின்றோம். மறுக்கும் பட்சத்தில், அனைத்து அரபு முஸ்லிம் நாடுகளினாலும் இது கண்டித்து எதிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆஷூரா நிகழ்வையொட்டி லெபனானில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியொன்றில், ஒன்றுகூடியிருந்த பல்லாயிரக் கணக்கான லெபனானிய ஷியா முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

அந்நிகழ்ச்சியின் போது, அங்கு குழுமியிருந்தவர்கள், அமெரிக்கா அழியட்டும், இஸ்ரேல் அழியட்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

பிரபல முஸ்லிம் அறிஞரான யூசுப் கர்ளாவியும் கூட, எகிப்தின் இச்சுவர்க் கட்டுமானத்தை கண்டித்து, இது, இஸ்லாத்தினால் தடை செய்யப்பட வேண்டிய மிக அநீதியான செயல் என வர்ணித்துள்ளார்.

ரபா பகுதி காஸா மக்கள் வெளிச் செல்வதற்காக உள்ள ஒரேயொரு எல்லையாகும். இஸ்ரேலின் அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு அதனை எகிப்து மூடிவிட்டுள்ளது. இதனைத் திறந்து காஸா மக்களின் வாழ்வுரிமையைக் காக்க வேண்டுமெனவும் யூசுப் கர்ளாவி வேண்டியுள்ளார்.

அரபு லீக் மற்றும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு ஆகிய அமைப்புகள், இச்சுவர்க் கட்டுமானத்தைத் தடுக்கும்படி எகிப்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source:iqna

ஈரான் அணுகுண்டு, இஸ்ரேல் பரப்பிய கட்டுக்கதை: முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி

வாஷிங்டன்:அணு ஆயுத தயாரிப்பதற்கு அவசியமான நியூட்ரான் இன்ஷியேட்டர் ஈரான் ரகசியமாக உருவாக்குவதாக லண்டன் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்தி கட்டுக்கதையென முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி கூறுகிறார்.

டிசம்பர் 14ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிகையில் இதுத்தொடர்பாக வெளிவந்த பொய்யான செய்திக்குப்பின்னால் இஸ்ரேலோ அல்லது பிரிட்டனோ இருக்கலாம் என முன்பு சி.ஐ.ஏவின் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரியாக பணியாற்றிய ஃபிலிப் கிரால்டி கூறுகிறார்.

இவரை மேற்க்கோள் காட்டி இண்டர் பிரஸ் சர்வீஸ் என்ற செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் லண்டனில் வெளிவந்த செய்தி அடிப்படையற்றது என்று அன்றே ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரமீன் மெஹ்மான் பரஸ் தெளிவுப்படுத்தியிருந்தார்.
2007 முதல் ஈரான் நியூட்ரான் இன்ஷியேட்டர் உருவாக்குவதாக ஏசியன் இண்டலிஜன்ஸ் செண்டர் வெளிப்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் லண்டன் பத்திரிகை கூறுகிறது. இந்த செய்தி வெளியானவுடன் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஈரானுக்கு எதிராக மீண்டும் களமிறங்கின. ராபர்ட் மர்டோக்கின் மீடியாக்கள் இஸ்ரேல் மற்றும் பிரிட்டீஷ் அரசிடமிருந்து வரும் பொய்யான தகவல்களை பரவலாக வெளியிட்டுவருகிறது என்கிறார் கிரால்டி கட்டுக்கதையான செய்திகளின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவருவதில் முன்பும் முக்கிய பங்குவகித்தவர்தான் சி.ஐ.ஏ வின் முன்னாள் அதிகாரியான ஃபிலிப் கிரால்டி.

சதாம் ஹுசைன் ஈராக் அதிபராகவிருந்தபோது நைஜரிலிருந்து யுரேனியம் வாங்குவதாக குற்றஞ்சாட்டி வந்த கடிதத்தின் பின்னணியில் பெண்டகனின் முன்னாள் ஆலோசகரும், வலதுசாரி சிந்தனையாளருமான மைக்கேல் லீடன் உள்ளார் என்ற உண்மையை கிரால்டி வெளிக்கொணர்ந்தார். ஆனால் ஈராக் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டது அன்றைய புஷ்ஷின் அலுவலகம்.

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகே கிரால்டி கூறியது உண்மை என ஒத்துக்கொண்டது அமெரிக்கா.சதாம் ஹுசைனின் உளவுத்துறை நைஜரிலில் தாக்குதலுக்கு திட்டமிடுவதாக வந்த கடிதத்தின் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அண்டர் செகரட்டரியின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்ததும் கிரால்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கோத்ரா:முஸ்லிம் பெண்களை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கிய போலீஸ்

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்திலிலுள்ள கோத்ராவில் முஸ்லிம் பெண்களை காவல்துறை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கியதாக சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோத்ரா முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் மூத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை இவ்வமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் நேற்று பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஆஜர்படுத்தினார். சச்சரவில் ஈடுபட்டார்கள், காவல்துறையினர் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி கைதுச்செய்த பெண்களை வீட்டில் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அவர்களை கற்பழித்துவிடுவதாக பயமுறுத்தியுள்ளனர். பின்னர் இவர்களை ஜாமீனில் வெளியே விட்டுள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதி இரவில் பசு திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட செய்யத் ஹுசைன் பதாமினை தேடி கோத்ரா பி டிவிசன் காவல்நிலைய போலீசார் கெனி ப்ளாட்டில் வந்துள்ளனர் . 14மாதங்களாக தலைமறைவாகவிருந்த பதாமையும் மற்றும் சிலரையும் கெனி ப்ளாட்டிலிருந்து கைதுச்செய்தாலும் பின்னர் அவர்கள் போலீசின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். அதே நாளில் இரவு 1.05 மணியளவில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள ஹாதிலா ப்ளாட்டில் பதாமும் அவருடைய கூட்டாளிகளும் ஒளிந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு தேடிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் மூன்று வீடுகளிலிருந்து பணத்தையும், தங்க நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் அவ்வீடுகளிலிருந்து பெண்களை மட்டும் பிடித்த போலீஸ் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கிறார் தீஸ்டா செடல்வாட்.
தாயின் மடியிலிருந்த 19 நாளே ஆன குழந்தையைக்கூட கீழே தூக்கியெறிய அவர்கள் தயங்கவில்லை என அவர் கூறுகிறார். பின்னர் சச்சரவு, போலீஸ் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி 8 பெண்களை கைதுச்செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் கோத்ரா சப்-ஜெயிலுக்கு கொண்டுச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போலீஸ் வேனில் வைத்தும் அவர்களை உடல் ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் இந்தப்பெண்களை ஆஜராக்கியபொழுது கோத்ரா ஜுடிசியல் நீதிமன்ற நீதிபதி எம்.மலேவாலா அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும், இச்சம்பவத்தைக்குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாலைவேளை வரை அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்காததுடன் அவர்களுக்கு சிகிட்சை அளிக்க ஆண் டாக்டர்கள்தான் வரவேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர் என தீஸ்டா செடல்வாட் குற்றஞ்சாட்டுகிறார். இதனால் சிகிட்சை பெற தயங்கிய பெண்களுக்கு எவ்வித தொந்தரவும் சித்திரவதையும் செய்யப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை தயார் செய்ய எளிதானது. இச்சம்பவத்தை குறித்து நேரில் சென்று விசாரிக்க தேசிய பெண்கள் கமிசன் கோத்ரா செல்ல அவர்கள் கோரினர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர் 3 கான்ஸ்டபிள்களின் பெயர்களை அப்பெண்கள் தங்களது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில், இச்சம்பவத்தை காவல்துறை மறுத்துள்ளது. குற்றவாளிகளை கைதுச்செய்வதை தடுக்க பெண்கள் முயன்றதாக குற்றஞ்சாட்டுகிறார் பஞ்சிமஹல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜி.எம்.முதாலியா. கோத்ரா முஸ்லிம் சமூக தலைவர் முஹம்மது ஹனீஃப் கூறுகையில் கோத்ரா நகரில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் காவல்துறையின் கொடுங்கோன்மைக்கு இலக்காகிறார்கள். ஆண்கள் அவரகளது அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிக்க இயலாத நிலை உள்ளது. நகரின் வெளிப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் போலீஸின் தொந்தரவிற்கு பயந்துபோய் உள்ளனர். இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!

இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.


இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.

ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.

60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.

ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற வெறியால் 50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.

பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.

தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.

இந்நிலையில் தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.

1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.

1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.

தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை. தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.

ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.

தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மொழிவாரி மாநிலமாக ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர். ஆனால் மிக அதிக அளவில் பிற சமூக குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.

இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.

சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

--அபூசா­லிஹ்

செவ்வாய், 29 டிசம்பர், 2009

ஜிஹாதும் தீவிரவாதமும் ஒன்றே- முட்டாள்தனமான உரையை கிண்டல் செய்யும் கார்ட்டூன்

ஜிஹாதும் தீவிரவாதமும் ஒன்றே என்று ஐ.பியின் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் முட்டாள்தனமான உரையை கிண்டல் செய்யும் கார்ட்டூன்

தமுமுக அலுவலகம் திறப்பு விழா

மேலப்பாளையம் 29வது வார்டு த.மு.மு.க.கிளையின் சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா, இரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் 27.12.2009 காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். 29வது வார்டு தலைவர் பி.செய்யது அப்துல் காதர், செயலாளர் ஏ.கே.அப்துல் கனி, பொருளாளர் எஸ்.ஏ.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய அலுவலகத்தை மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் அவர்கள் திறந்து வைத்து கழகக் கொடியை ஏற்றினார். மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாரூக் அவர்கள் இரத்தப் பிரிவு கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் தங்களுடைய இரத்தப்பிரிவை தெரிந்து கொண்டனர். நகர நிர்வாகிகள் ஊர் ஜமாத்தார்கள் உள்பட திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

அன்று இரவு நகர த.மு.மு.க.சார்பில் த.மு.மு.க.வின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 16 பொதுக்கூட்டத்தின் முதல் கூட்டமாக ஹாமீம்புரத்தில் சமூக எழுச்சி தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாருக், தலைமைக் கழக பேச்சாளர் காசீம் பிர்தௌசி, மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் ஆகியோர் உரையாற்றினார். இதிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: அப்துல் வாஹித்

திங்கள், 28 டிசம்பர், 2009

சவூதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு “ஃபேமிலி விசா”

saudiசவூதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்களுள், வெகு சிலரே தங்கள் மனைவி-மக்களோடு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மற்ற பெரும்பாலோர் தங்கள் குடும்பத்தை தாயகத்திலிருந்து பிரிந்தே, சவூதியில் பணிபுரிந்து வருகின்றனர். மிகக்குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலைகளைச் செய்யும் அதே நேரத்தில், தங்கள் இளமையையும் தொலைக்க நேரிடுகின்றது. அவர்களும், தங்கள் குடும்பத்தை சவூதிக்கு கொண்டு வர முடியாததற்கு குறைந்த சம்பளம், அரசாங்கம் விசா தராமை போன்ற பல காரணங்கள் உள்ளன.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் (இக்காமா) அவர்களின் செய்யும் தொழிலும் (புரஃபஷன்) குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் நிறைய பேர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கும், இக்காமா குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், தங்கள் மனைவி-மக்களை ஃபேமிலி விசாவில் அழைத்து வருவதற்கு, சவூதி வெளியுறவு அமைச்சகம், “மருத்துவர், பொறியியலாளர், டெக்னீஷியன், மேலாளர்கள்” போன்ற புரஃபஷன் உள்ளவர்களுக்கு இத்தனை நாட்கள் விசா வழங்கி வந்துள்ளது. பலரும், நல்ல வேலையில், நல்ல சம்பாத்தியத்தில், நல்ல படிப்பு படித்திருந்தாலும், அவர்களது இக்காமாவில் புரஃபஷன் தவறாக இருந்ததால், தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தங்கி வேலை புரிய முடியாமல் இருந்து வந்தது.

தற்போது, நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் உள்ளவர்களின் புரஃபஷன் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு ஃபேமிலி விசா வழங்க சவூதி சவூதி அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், சுமார் 70 லட்சம் வெளிநாட்டவர்கள் பயன் பெறுவார்கள் என்று, “அல்-யவ்ம்” அரபு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இனி ஃபேமிலி விசாவானது அவரவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னறிவிப்பாக, ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, மூன்று நாட்களுக்கு மட்டும் ரியாதில் விண்ணப்பித்த அனைவருக்கு ஃபேமிலி விசா வழங்கப்பட்டது. தற்போது, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, சம்பள அடிப்படையில் மட்டும் ஃபேமிலி விசா வழங்கப்படும் என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. இம்மாதிரியாக விசா வழங்குவது எந்த தேதியில் அமுலுக்கு வரும் என்பதை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாகவே, தங்களது பாஸ்போர்டில் தங்களது மனைவியின் பெயரைச் சேர்க்கவும் (Spouse Name), இந்தியன் எம்பஸியை அணுகி வருகின்றனர்.

அதே வேளையில், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கும் வகையில் வழங்கப்படும் “விசிட் விசா”, விண்ணப்பிக்கும் அனைவருக்கும், புரஃபஷனை கணக்கில் கொள்ளமால், கடந்த மூன்று வாரங்களாக ரியாத் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் வழங்கபட்டு வருவது குறிப்பிடத் தக்கது. தற்போது ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசிட் விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு பலரும் நன்றி தெரிவித்துள்ள இவ்வேளையில், தற்போது குடும்பத்தோடு சவூதியில் பணிபுரிபவர்களில் சிலர், வீட்டு வாடகையும் இதன் மூலம் துபாய் போல அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

செய்தி: ரியாதிலிருந்து ஃபெய்ஸல்

சமச்சீர் பாடத்திட்டம்: மாணவரணி கோரிக்கை


சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தொடர்பாக பாடத் திட்டக்குழு மற்றும கல்வி அமைச்சருக்கு மாநில மாணவரணிச் செயலாளர் எம். ஜைனுல் ஆபிதின் அனுப்பிய கோரிக்கை கடிதம்


தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி என்ற திட்ட அடிப்படையில் ஒரே கல்வித் திட்டமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது! இதனடிப்படையில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் ஆகிய பாடத்திட்டங்களை தவிர்த்து ஒரே பாடத்திட்டமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசின் ஊக்ஷளுநு பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. மற்ற முறைகளில் பயிலும் மாணவர்கள் இனி மெட்ரிக், தமிழ் வழி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே பாடங்களை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலலாம்.

இதற்கான 1 ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை தயார் செய்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாடத்திட்டங்களில் இந்து மதத்தை குறை கூறி எழுதப்பட்டுள்ளதாக சிலர் பிரச்சினையை கிளப்பினர். அவ்வாறு எதுவும் இல்லை என அதிகாரிகளும், கல்வித்துறை அமைச்சரும் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் சமச்சீர் பாடத்திட்ட பகுதிகளை பார்த்து விட்டு தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் சமச்சீர் கல்வி பாடத்திட்ட இயக்குனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வழக்கம் போல 10 ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களில் செய்யுள் பகுதியில் இந்து மற்றும் கிறித்தவ கடவுள் பாடல்களை இடம் பெறச் செய்யும் ஆசிரியர்கள் இஸ்லாமிய வழிபாட்டு பாடல்கள் பகுதியில் வழக்கம் போல சீறாப்புராணம் நூலில் ஏதாவது ஒரு பாடலை எடுத்து போடும் வேலையை செய்து வருகின்றனர். ஆனால் வழிபாட்டு பாடல்கள் பகுதியில் அல்லா என்ற தலைப்பில் திருக்குர்ஆனின் சூரத்துல் இக்லாஸ் எனப்படும் 112 அத்தியாயத்தில் அல்லாஹ்வின் தன்மைகளைப் பற்றி கூறும் அத்தியாயத்தை இடம் பெற செய்ய வேண்டும். இதே போல ஒவ்வோரு வகுப்புகளின் தமிழ் பாட நூல்களின் செய்யுள் பகுதியில் கண்டிப்பாக குறிப்பிட்ட திருக்குர் ஆன் வசனங்களின் தமிழாக்கத்தையும் அல்லது நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளையும் மட்டுமே இடம் பெற செய்ய வேண்டும்.

மேலும் துணைப்பாடங்களில் வரலாறு பகுதியில் பல்வேறு தலைவர்களின் வரலாறுகள் கூறப்படுகின்றன. இஸ்லாமியப் பெரியவர்களை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை.(அப்துல் கலாம் விதிவிலக்கு) எனவே உலக சீர்த்திருத்தவாதிகளிலேயே முதலிடத்தை பெற்ற நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையும், தமிழகத்தில் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முஸ்லிம் சமூக தலைவர்களின் ஒருவருமான காயிதேமில்லத் அவர்களின் வரலாறையும் இடம் பெற செய்ய வேண்டும்.

மேலும் இஸ்லாமிய வருகை என்ற பகுதியில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறை தொடர்பாக கருத்து வேறுபாடு இல்லாத நியாயமான வரலாற்றை குறிப்பிட வேண்டும்.

முஸ்லிம் என்பதற்கு பதிலாக முஹம்மதியர் என்ற பதந்தை தயவு செய்து சேர்க்க வேண்டாம் எனவும் இஸ்லாமிய வரலாறு மற்றும் கொள்கைகள் தொடர்பாக தகவல்கள் தேவைப்பட்டால் தமுமுக மாணவரணி தந்த தயாராக இருக்கிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுவரை புரட்டு வரலாறையே படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டம் மூலமாக உண்மை வரலாற்றை அறியவும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அனைத்து மாணவர்களும் படித்து சமூக நல்லிணக்கம் வளரவும் பாடத்திட்ட குழுவினர் முயற்சிக்க வேண்டும்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு

நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ளோர் விடு விக்கப்பட வேண்டும் உள் ளிட்ட 14 கோரிக்கைகளு டன் அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.

அக்கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு உரிய நட வடிக்கைகள் எடுக்க மன் மோகன்சிங் உறுதியளித்த தாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், ரயில்வே இணையமைச்சருமான இ. அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அனைத் துக் கட்சி முஸ்லிம் உறுப் பினர்களான மத்திய இணையமைச்சர் இ. அஹமது, நாடாளு மன்ற மேலவைத் தலைவர் ரஹ் மான்கான், திருமதி மொஹ்சினா கித்வாய், மஹ்மூத் மதனீ, தாரிக் அன்வர், அஸாஸ{தீன் உவைஸி, முஹம்மது அதீப், அஹமது சயீது மலேகாபாடி, ஷபீர் அலி, டாக்டர் இஜாஸ் அலி, ஷபீகுர் ரஹ்மான் பர்க், முஹம்மது ஷபி ஆகிய எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 14 முக்கிய பிரச் சினைகளை நிறை வேற்றும்படி கோரிக்கை விடுத்தார்கள்.

அவை வருமாறு-

1. வக்ஃபுசொத்துக்கள் தொடர்பாக ஜே.பி.சி. அறிக்கையை நிறைவேற்ற வும், வக்ஃபு சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஹஜ் பயணம் தொடர்பாக போதிய சீர் தி ருத்தங்களை கொண்டு வர ஏற்கனவே ஒரு அமைச் சரவை குழுபரிந்துரை செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.

3. முஸ்லிம் சிறு பான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள் ளது. அவை தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப் பட் டுள்ளது. கேரளா, தமிழ் நாடு, கர்நாடக மாநிலங் களில் முஸ்லிம் களுக்கு அனுமதிக்கப்பட் டிருக் கும் ஒதுக்கீட்டின் அடிப் படையில் இட ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.

4. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

5. சச்சார் கமிட்டி அறிக் கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. பரிந் துரைகள் அமுல்படுத்து வதை கண்காணிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்.

6. முஸ்லிம் சிறு பான்மையினருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய வங்கி முறையை அமுல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள் ளது. அந்த முறை வங்கித் துறைக்கு பெரிய முத லீட்டையும் முஸ்லிம்கள் மத்தியில் சேமிப்பு பழக் கத்தையும் ஏற்படுத்தும்.

8. பிரதமரால் அறிவிக் கப்பட்ட 15 அம்ச திட்டம் நிறைவேறுவதை கண் காணிப்பது வலுப்படுத்தப் பட வேண்டும்.

9. பயங்கரவாத தொடர்பு ஐயப்பாடு கார ணமாக ஏராளமானவர்கள் எந்தவித விசாரணையு மின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய் யப்படவோ வேண்டும்.

10. உத்தேசிக்கப்பட் டுள்ள மதரஸா வாரியத்தை அமைப்பதற்கு முன் முஸ்லிம் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், தலை வர்கள் ஆகியோரை அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.

11. முஸ்லிம்கள் தொடர்பான அமைப்பு களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் கட்டுப்பாடுகளும், தாமதமும் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

12. மத வன்முறை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

13. மற்ற தேசிய கமிஷன்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை சிறு பான்மை கமிஷனுக்கும் கொடுக்க வேண்டும்.

14. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ் லாமிய பல்கலைக்கழகங் களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண் டும்.

மேற்கண்ட கோரிக் கைகளை விரைவில் நிறை வேற்றித் தரும்படி வேண்டு கோள் விடுத்த எம்.பி.க்கள் சிறுபான்மை விவகாரத் துக்காக தனி அமைச்சரகம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தார்கள்.

பிரதமர் உறுதி

மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன் மோகன்சிங் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண் டியுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்று தெரி வித்தார்.

வக்ஃபு சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் அது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்தும் பிரதமர் குறிப்பாக தனது விருப்பத்தை வெளியிட் டார். அந்த சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் என் றார்.

ஹஜ் பயணம் தொடர் பான சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் பிரதமர் கூறினார்.

வட்டியில்லாத வங்கித் தொழில் துறை குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசிப்பதாக பிரதமர் அறிவித்தார். நீண்டகாலமாக சட்ட விரோதமாக சிறையில் வாடுபவர்கள் குறித்து மிக விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.

சிறுபான்மை விவகாரம் கண்காணிக்க நியமிக்கப் பட்டிருக்கும் நிலைக்குழு தலைவர்களுடன் பேசி கண்காணிப்பு வேலை களை வலுப்படுத்தும் படியும் தீவிரப்படுத்தப் படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்த தூதுக்குழு உறுப் பினர்களுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் மத்திய ரயில் இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு மூக்கணாங்கயிரா?

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் சிறிய பெரிய அளவிலான ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008 மார்ச் முதல் 2009 மார்ச் மாதத்திற்குள் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்பழுக்கற்ற நேர்மையான காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ராமானுஜம் அவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் உள்பட தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் லஞ்ச ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற நிலை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சிறிய அளவிலான ஊழல் குற்றங்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்படுவதும், மிகப்பெரிய அளவிலான ஊழல் குற்றங்கள் மறைக்கப்படுவதும் தமிழகத்தில் சர்வசாதாரணமான நிகழ்வுகளாக ஆகிவிட்டது.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு திரு. ராமானுஜம் (ஏ.டி.ஜி.பி) பொறுப்பில் இருந்த போது, பாரபட்சமின்றி நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. லஞ்ச ஊழல் முறைகேடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஆனால் திரு. ராமானுஜம் அவர்கள் அத்துறையில் இருந்து மாற்றப்பட்ட பிறகு தற்போது லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடுகள் வீரியம் இழந்துள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகளுக்கு மூக்கனாங்கயிறு போடுவதற்காகவே திரு. ராமானுஜம் அத்துறையில் இருந்து மாற்றம் செய்துள்ளது போல் தெரிகின்றது. அவர் இடமாற்றம் செய்த பிறகு லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகள் திடீரென குறைக்கப் பட்டன. இந்த நடவடிக்கை குறைப்பு ஊழல் பேர்வழிகளுக்கு உதவி புரியும் படி அமைந்துள்ளது. லஞ்சம் பல்கி பெருக வழிவகுக்கும் வகையில் திமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தில் பெருகி வரும் லஞ்ச ஊழல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் மீண்டும் திரு. ராமானுஜம் அவர்களை லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த நிலை தொடருமாயின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.

இல. கணேசனின் அறியாமையும் வஞ்சகமும்

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல. கணேசன் பாபரி மஸ்ஜித் குறித்து இன்று வெளியிட்டுள்ள அவதூறு அறிக்கையை தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. பாபரி மஸ்ஜித் என்பது பாபர் இந்தியாவை வெற்றிக் கொண்டதின் நினைவாக ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று தனது அறிக்கையில் பச்சை பொய்யை அவிழ்த்துள்ளார் இல. கணேசன். பாபர் 1526ல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது டெல்­யில் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது இப்றாகிம் லோடியாகும்.

பாபர் மற்றும் இப்றாகிம் லோடி தலைமையிலான படைகளும் பானிபட் யுத்தத்தில் மோதிக் கொண்ட போது இரு படைகளிலும் ஹிந்துக்களும் போர்வீரர்களாக போரிட்டார்கள். இந்த போரில் வெற்றி பெற்று டெல்­யில் தனது ஆட்சியை நிறுவினார் பாபர். பாபரி மஸ்ஜிதிற்கான அடிக்கல்லை நாட்டி அதனை 1523ல் கட்ட ஆரம்பித்தவர் இப்றாகீம் லோடி தான். அந்த பள்ளிவாசல் லோடி மஸ்ஜித் என்றும் கோட்டை மஸ்ஜித் என்றும் தான் முதல் அழைக்கப்பட்டது. முகலாய அரசு அயோத்தி பகுதியில் பரவிய போது, அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட மீர் பாகி இந்த பள்ளிவாசலை முழுமைப் படுத்தி அதற்கு தனது அரசரின் பெயரைச் சூட்டினார். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இடித்து விட்டு தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆர்.எஸ். சர்மா, சுசில் ஸ்ரீவத்ஸவா, ஷேர் சிங் போன்ற அப்பழுக்கற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்கள். இது மட்டுமல்ல ராமயணத்தை ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்த துளசிதாசர் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற தனது காப்பியத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து விட்டு பாபர் ஆட்சியின் போது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று எந்த ஒரு குறிப்பையும் அவர் தரவில்லை. பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் ஒரு பக்கம் இருக்க அதன் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அங்கு ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு 1870களில் ஆங்கிலேயேர்களின் சதியினால் ஏற்பட்டது. அயோத்தி பகுதியில் 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் ஹிந்துக்களும் முஸ்­ம்களும் ஒன்றிணைந்து போரிட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர்கள் தங்கள் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தவே இந்த சதிச் செயலைச் செய்தார்கள். இந்த உண்மை வரலாற்றை மறைத்து இல. கணேசன் பாபரி மஸ்ஜிதை கொச்சையாக விமர்சித்திருப்பது அவரது அறியாமையையும், வஞ்சகத்தையும் தான் வெளிப்படுத்துகின்றது. இந்தியா என்ற மாபெரும் மதசார்பற்ற நாட்டின் மதசார்பின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாக பாபரி மஸ்ஜித் விளங்கியது. பன்முக பண்புள்ள இந்தியாவை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனப்படுத்தி டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதச் செய­ல் ஈடுபட்டு தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தான் இல. கணேசனின் கூட்டத்தினர். முஸ்­ம்கள் தேசபற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது நாட்டின் உயிர் மூச்சாக விளங்கும் மதசார்பின்மை மற்றும் பன்முகத் தன்மைகளை கா­ல் போட்டு மிதித்த இல. கணேசன் போன்றோர் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை படித்து திருந்தட்டும்.

காஷ்மீருக்கு சுயாட்சி வழங்க பணிக்குழு பரிந்துரை

புதுடெல்லி- ஜம்முகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்கலாம் என்று பிரதமர் நியமித்த குழு அளித்துள்ள பரிந்துரைக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2006ம் ஆண்டு மார்ச்சில் வட்டமேஜை மாநாடு மூலம் பேச்சு நடத்தினார். அப்போது செயல் திட்டங்களை தயாரித்து தருவதற்காக 5 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டன. 4 குழுக்களின் அறிக்கைகள் 2007 ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சகீர் அகமது தலைமையிலான ஐந்தாவது குழுவின் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜம்முகாஷ்மீருக்கு தேசிய மாநாடு கட்சி கோருவது போன்ற சுயாட்சி வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கலவர பகுதி சட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு அளிக்கப்படும் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வது உள்பட பல்வேறு பரிந்துரைகளை இக்குழு செய்துள்ளது. மேலும் 1953ம் ஆண்டு முதல் காஷ்மீருக்காக மத்திய அரசு இயற்றிய அனைத்து சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தேசிய மாநாடு கட்சியின் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆப்கான் போர் வியட்நாமை நோக்கி திரும்புகிறது: அமெரிக்க ராணுவ வீரர் எச்சரிக்கை

காந்தகார்:ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைதுச்செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் பேட்டியளிக்கும் காட்சிகளடங்கிய வீடியோ டேப் ஒன்று AFP(AGENCY FRANCE-PRESSE) வெளியிட்டது.
அதில் கடந்த ஜூன்மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்க ராணுவவீரர் போவ் ராபர்ட் பெர்தாஹ்ல் பேட்டியளிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவ்வீடியோவில் அவர் கூறுவதாவத "இந்தப்போர் நமது கைகளை விட்டும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று நான் உங்களிடம் பயத்தோடு கூறுகிறேன்.30 ஆயிரம் ராணுவ வீரர்களை கூடுதலாக ஆப்கானிற்கு அனுப்பப்போகும் ஒபாமா அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.நீங்கள் எதிர்ப்பது சிறிய குழுவினரை அல்ல. வரலாற்றில் எந்த நாட்டிலும் இதுவரைகாணப்படாத நன்கு கட்டமைக்கப்பட்ட ஆப்கான் கொரில்லா குழுவினரை எதிர்த்துதான் போர் புரியப்போகின்றீர்கள். நான் தாலிபான்களால் நன்றாக மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு வருகின்றேன். இதற்கு நான் சான்று பகர்கின்றேன். எவரும் எனது ஆடைகளை பறிக்கவில்லை. என்னை நிர்வாணமாக்கி படமும் எடுக்கவில்லை. எனது நாடு(அமெரிக்கா) முஸ்லிம் கைதிகளை நாய்களை விட்டு கடிக்கவைத்தது போல் என்னை அவர்கள்(தாலிபான்கள்)செய்யவில்லை." இவ்வாறு அவர் கூறுகிறார்.
36 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் சேவ் செய்த முகத்துடனும், போர் வீரருக்கான ஆடையுடனும் காணப்படுகிறார் பெர்தாஹ்ல். இவ்வீடியோவில் சிவிலியன்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தாலிபான்களின் போர் முறைகள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவால் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டு அபுகரீப் மற்றும் குவாண்டனாமோ சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை அமெரிக்க அரசு மிகமோசமான முறையில் நடத்துகிறது. இதற்கான புகைப்படங்கள் வெளிவந்ததும் அவை உலகையே உலுக்கியது. ஆனால் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் தலிபான்களிடம் சிக்கிய பின்னர் அவர் நடத்தப்படும் முறையை அவரே பாராட்டுகிறார்.

இது பற்றி பேட்டியளித்த தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் யூசுஃப் அஹ்மதி கூறுகையில், "அமெரிக்க ராணுவ வீரரை நாங்கள் சித்திரவதைக்கோ அல்லது கடும் வேதனைக்கோ ஆளாக்கவில்லை. இஸ்லாமிய ஷரீஅத்தின் நடைமுறைப்படியே அவர் நடத்தப்பட்டு வருகிறார். அமெரிக்க வசமிருக்கும் எங்களது வீரர்களை விடுவித்தால் நாங்கள் அமெரிக்க ராணுவ வீரரை விடுவிக்க தயாராகயிருக்கிறோம். இந்தப்போரில் எங்களது கரமே ஓங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு தேசம், அவர்கள்(அமெரிக்காவும் அதன் கூட்டணிப்படையினரும்) ஆக்கிரமிப்பாளர்கள் என்பதையும் நாங்கள் இந்தப்போரில் வெற்றிபெறுவோம், ஆக்கிரமிப்பாளர்களான எதிரிகளை இந்தப்போரில் கொல்வோம் அல்லது கைதுச்செய்வோம் என்பதை உலகிற்கு காண்பிக்க விரும்புகிறோம்." இவ்வாறு அஹ்மதி தெரிவித்தார்.
source:islamonline.net

இஸ்லாத்தை தழுவிய இளைஞரை கடத்திச் சென்று சித்திரவதைச் செய்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்

வண்டிப்பெரியார்: பெங்களூரிலிருந்து விடுமுறையின்போது சொந்த ஊருக்கு வந்த இளைஞரை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கடத்திச்சென்று தங்களது அலுவலகத்தில் அடைத்துவைத்து சித்திரவதைச் செய்துள்ளனர்.

மாவேலிக்கரை என்ற ஊரைச்சார்ந்த கிருஷ்ணன் உண்ணித்தான்-விஜயகுமாரி தம்பதிகளின் மகனும் பெங்களூரிலிலுள்ள கல்லூரியொன்றில் 3-வது ஆண்டு நர்ஸிங் படிப்பை பயிலும் 24 வயதான அனீஷி (தற்போதைய பெயர் முன்னா முஹம்மது) கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு அதனை தனது வாழ்க்கை நெறியாகக்கொண்டவர்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த முன்னா முஹம்மதை அவருடைய பெற்றோரின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ இயக்கத்தைச்சார்ந்த 6 குண்டர்கள் நள்ளிரவில் முன்னாவை மயக்க மருந்து கொடுத்து மயங்கச்செய்து கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் அவரை வண்டிப்பெரியார் என்ற இடத்திலிலுள்ள தங்களது அலுவலகத்தில் கட்டிவைத்து சித்திரவதைச் செய்துள்ளனர். 17 தினங்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அங்கிருந்து தப்பித்த முன்னா முஹம்மது அரசு பேருந்து ஒன்றில் ஏறி மிளாமலா என்ற இடத்திலிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதில் சென்று அபயம் தேடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜமாஅத் நிர்வாகிகள் காவல்துறையினரை அழைத்து சம்பவத்தை தெரிவித்துள்ளனர். முன்னாவின் பெற்றோர்கள் கூறுகையில் முன்னாவிற்கு மனநிலை சரியில்லாததால் சிகிட்சைக்காக அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் முன்னா முஹம்மது காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்களோடு கூறுகையில், "எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் எனது பெற்றோர்களுடன் என்னை அனுப்பி விடாதீர்கள். எவருடைய நிர்பந்தமுமில்லாமல் தான் சுயமாக இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டேன்." என்றார் அவர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கை பதிவுச்செய்து விசாரனையை மேற்க்கொண்டு வருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 24 டிசம்பர், 2009

கண்டமால் கலவரம்: 10 பேருக்கு தண்டனை

ல்பானி:ஒரிஸாவில் கண்டமால் மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களுக்கெதிராக சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்திய கலவரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேருக்கு அதிவேக நீதிமன்றம் 3 முதல் 5 வருடம் வரையிலான கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பேடிநாஜு கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீக்கிரையாக்கிய 5 பேருக்கு 5 வருட கடும் சிறைத் தண்டனையை அதிவேக நீதிமன்றம் அளித்தது. கீர்த்திகுடா கிராமத்தில் சிறுபான்மையினரின் வீடுகளை தீக்கிரையாக்கிய மேலும் 5 பேருக்கு 3 வருட கடும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த வருடம் சுவாமி லக்‌ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சங்க்பரிவார பாசிஸ்டுகளால் கலவரம் ஏற்பட்டது. இந்நிகழ்வில் 38 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தாக்குதலுக்கு ஆளாகின. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கடும் சமூகதுவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா: ரிப்போர்ட்

புதுடெல்லி:சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளன.

வாஷிங்டனில் செயல்படும் Pew research centre நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மத நம்பிக்கைக்கான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் அந்நிய மதத்தவர்களுடனான துவேசம் வலுவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் ஈராக் முதலிடத்தை பெறுகிறது. உலகிலேயே புத்திஜீவிகளால் நடத்தப்படும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரைப்பெற்றது பியூ ரிசர்ச் செண்டர். மதங்களுக்கெதிரான அரசுக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இவ்விஷயத்தில் கியூபா, துனீசியா, இஸ்ரேல், சோமாலியா ஆகியநாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகையில் 99.5 மக்களும் இவ்வாய்வில் உட்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் கூறுகிறது.

அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தயாரித்து அதற்கு விடையை கண்டறிந்துதான் இந்நிறுவனம் ஆய்வைமேற்க்கொண்டது.

U.S. State department, U.S. Commission on international freedom, The council of europian union, The internaional crisis group, humanrights watch, Amnesty international, Hudson institute, U.N rapporteur on freedom of religion or belief ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாய்வில் முக்கிய காரணிகளாக மதநம்பிக்கைக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தனிமனிதர், சமூகம், அரசு, சட்டம், அமைப்புகள் ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசு மதக்கட்டுப்பாட்டில் சீனாவும், வியட்நாமும் முன்னணியில் உள்ளது. ஆனால் மததுவேசத்தில் இந்தியா சீனாவை விட முன்னணியில் உள்ளது.

பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில் மதத்துவேசம் காணப்பட்டாலும் அரசுக்கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்துவிதமான மதத்துவேசங்களும் காணப்படவில்லையென இவ்வாய்வு கூறுகிறது.

அரசின் மதக்கட்டுப்பாடு குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 40 இடங்களில் கூட இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றும் தங்களுடைய மதஸ்தலங்களை பாதுகாப்பதற்கும் கோரிக்கை விடுகின்றனர். இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்கவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.

இஸ்ரேலில் பாதுகாப்பின் பெயரால் பிற மதத்தவர்களுக்கு அவர்களுடைய வணக்கஸ்தலங்களுக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

சமூகத்துவேசம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அரசு கட்டுப்பாடு அறவே இல்லாத நாடுகளாக நியூசிலாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, தென் கொரியா, யு.எஸ், ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

ஜார்கண்ட்:5 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப்பெற்றுள்ளனர்.

காண்டி, தன்பாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களான ஸர்பராஸ் அஹ்மத், மன்னான் மாலிக் ஆகியோரும், பக்தூர், மதுபூர் ஆகிய தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்களான அகீல் அக்தர்,ஹுஸைன் அன்சாரி ஆகியோரும், தன்வார் தொகுதியில் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா வேட்பாளரான நிஸாமுத்தீன் அன்ஸாரி ஆகியோரும் வெற்றிப்பெற்றுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் களத்தில் 81 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த சட்டசபையில் 2 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 23 டிசம்பர், 2009

இலங்கை தமிழ் முஸ்லிம்களை கவனிக்குமா மத்திய அரசு?

Thanks To :
இலங்கையிலே தற்போது முடிவுக்கு வந்துள்ள உள்நாட்டு யுத்தம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மட்டுமல்ல அவர்களின் ஆளுகையின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையையும் சிதறடித்துள்ளது. இரண்டு லட்சம் தமிழ் மக்கள் முகாம்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தேவைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் சிறிது, சிறிதாக அவர்களை சொந்த ஊரில் குடியமர்த்துவதாகவும் இலங்கை அரசு கூறி வருகிறது.

இலங்கை முகாம்களில் தமிழ் மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் அழுத்தம் காரணமாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சமீபத்தில் இலங்கைக்கு சென்று அங்குள்ள முகாம்களை பார்வையிட்டு வந்துள்ளனர். அங்கு சென்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு கருத்துகளை கூறினர். ஒரு தரப்பு முகாம்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், இன்னொரு தரப்பு ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் ஐ.நா.வின் மேற்பார்வையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் தொடர்ந்து வருவதை யாரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வின் ஏற்பாடுகள் எப்போதும் சர்வதேச தரத்தில் தான் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு இலங்கை தமிழர் நிவாரண நிதியாக ரூ.500 கோடியை அளித்துள்ளது. தமிழக முதல்வரும் தன் பங்குக்கு 100 கோடியை அளித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இலங்கைத் தமிழர் நிலை குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் தமிழக அரசியல் கட்சிகளால் நடத்தப்படுகின்றன.

எல்லாம் சரி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக ஓங்கி குரல் எழுப்பும் அரசியல் கட்சிகளும், நிதி ஒதுக்கும் மத்திய அரசும், இலங்கையின் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் 48 மணி நேர கெடு விதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட 1 லட்சம் தமிழ் முஸ்லிம்கள் குறித்து எவ்வித கவலையும் படுவதில்லை. வெறும் தட்டுமுட்டு சாமான்களோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்கள் பூர்வீக பூமியில் இருந்து, சொந்த வீடுகளை விட்டும், நிலங்களை விட்டும் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 19 வருடங்களாக அகதி முகாம்களில் எவ்வித அடிப்படை வசதியுமின்றி வாடி வருகின்றனர். இவர்களை பற்றி யாரும் எவ்வித கவலையும் கொள்ளவில்லை.

இவர்களும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். இந்திய வம்சா வழியினர் தான். ஆனால் இவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி இந்திய அரசோ, தமிழக அரசோ கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் அது இலங்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று இங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அமைதியாய் இருந்து விட்டன. ஆனால் இன்று இலங்கை தமிழர்களுக்கு நிதி ஓதுக்கும் மத்திய, மாநில அரசுகள் தமிழ் முஸ்லிம்களுக்கு ஏன் ஒதுக்கவில்லை. ஏன் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அவர்களின் நிலையை ஆராயவில்லை என்று கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

எதிலும் பாரபட்சம் காட்டும் அரசு நிர்வாகங்களுக்கு எதிராக முஸ்லிம் சமுதாயம் குரல் கொடுத்தே தீர வேண்டும். இது இலங்கையில் கவனிப்பாரற்று கிடக்கும் 1லட்சம் முஸ்லிம்களுக்கு சிறு ஆறுதலையாவது அளிக்கும்.

தமிழ் மக்களுக்கு நேசம் காட்டட்டும். அது மனிதாபிமானம். அதே மனிதாபிமானத்தை தமிழ் முஸ்லிம்களுக்கும் காட்ட வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

பக்தர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே குண்டர்கள்!மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை தாக்கி காட்டுமிராண்டிகள் போல நடந்துள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.

நேற்று இரவு இந்த அக்கிரமம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்றும் பெருமையாக அவர்கள் ஒப்புக் கொள்ள வேறு செய்துள்ளனர்.

ராஜ் தாக்கரேவை யார் பளார் என கன்னத்தில் அறைகிறாரோ அவருக்கு ரூ. 1 கோடி கொடுக்கப்படும் என சமீபத்தில் அகில பாரத பிராமணர் மகா சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ராஜ் தாக்கரே கட்சியினர் கடும் கோபமடைந்தனர்.

அதன் விளைவே நேற்று இரவு நடந்த சித்திவிநாயகர் கோவில் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

கோவிலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த பக்தர்களை மரக் கட்டைகளால் ராஜ் தாக்கரே கட்சியினர் காட்டுத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

டி.எடப்பாளையம் புது வாழ்வு பெறுமா?


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது டி.எடப்பாளையம் கிராமம். 3500 பேர் வசிக்க கூடிய இக்கிராமத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்களும், சிறிய எண்ணிக் கையில் தலி­த்களும் வாழ்ந்து வருகின்றன. பஞ்சாயத்து தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்களும் டி.எடப்பாளையத்துக்கு பிரதிநிதிகளாக இருக்கின்றனர். இந்த ஊருக்கு சாலைவசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக கிடைப் பதில்லை. பஞ் சாயத்து தலைவரால் ஒரு தெருவிளக்கை கூட மாற்ற முடியாது. ஏன் இந்த நிலை. எல்லாம் அதிகாரிகளின் அலட்சியம் தான்.

டி.எடப்பாளையம் என்ற இந்த கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரிக்காமல் இந்த ஊருக்கு 5 கி.மீ தொலைவில் உள்ள சித்தி­ங்கமடம் என்ற ஊரின் ஒரு தெருவாக சேர்த்துள்ளனர் அலட்சிய அதிகாரிகள். இதனால் இந்த ஊர் மாவட்ட வரைப்படத்தில் கூட கிடையாது. மேலும் இவ்வூர் மக்களுக்கு சேர வேண்டிய நிதிகள் அனைத்தும் சித்தி­ங்கமடத்து மக்களுக்கு போய் சேர்ந் துள்ளது.

இதனால் இவ்வூரில் எந்த நலத்திட்டங்களும் செய்ய முடியாத சூழ்நிலையில் வெறுத்துப் போயுள்ளனர் பஞ்சாயத்து தலைவரும், உறுப்பினர்களும். இச்சூழ்நிலையில் த.மு.மு.கலிவின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு வரப்பட்டது. டி.எடப்பாளையம் கிரா மத்தை தனி வருவாய் கிராமமாக அறி விக்க கோரி 1997 முதல் த.மு.மு.க. கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வரு கிறது. எனினும் அதிகாரிகள் மசிவதாக இல்லை. இதனால் கடந்த பாராளுமன்ற தேர்த­ன் போது தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பதறிப்போன அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தனர்.

ஆனால் வாக்களித்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 28.08.2009 அன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த ஆம்புலேன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் பேசிய த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி­, தனி வருவாய் கிராமமாக அறிவிக்காவிட்டால் ரேஷன் கார்டுகளை திரும்பி அளிக்கும் போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்தார்.

இதற்கு பின்பும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் கடந்த 17.12.2009 அன்று ரேஷன் கார்டுகளை திருப்பி அளிக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. போராட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றன. ஆனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 16.12.2009 இரவு 12 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

த.மு.மு.க. மாவட்ட தலைவர் முஸ்தாக், ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல் காதர், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் பஜ்ல் முஹம்மது, ஜமாத் தலைவரும் ம.ம.க. கிளை செயலாளருமான ரசூல்கான், த.மு.மு.க. கிளை தலைவர் அப்துல் கரீம், கிளை பொருளாளர் பஷீர், பஞ்சாயத்து தலைவர் அப்துல் கபூர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட ஆட்சி யரிடம் சென்றனர். முத­லில் ஏளனமாக பேசிய கலெக்டர், நிர்வாகிகள் உறுதியைப் பார்த்து விட்டு இன்னும் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதிமொழி அளித்தார்.

இந்நிலையில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அ­லி கடந்த 17.12.2009 அன்று டி.எடப்பாளையத்துக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். இன்னும் 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி உடனடி தீர்வு கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார். தற்போது கோப்புகளை அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. டி.எடப்பாளையத்தின் உரிமைக்கான போராட்டம் வெற்றியடையும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் இன்று 21.12.09 கலெக்டர் தலைமையில் நடந்த கூட் டத்தில் டி.எடப்பாளையம் பஞ்சாயத்தின் எல்லைகளை நிர்ணயித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரும் திட்டத்தை தலைமை செயலகத்துக்கு வரும் 29.12.09 அன்று இறுதி செய்து அனுப்புவதாக தமுமுக, மமக மற்றும் கிராம நிர்வாகிகளிடம் கலெக்டர் கூறினார்.

கடந்த 4 நாட்களாக இதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொன்னபடி தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது சூழ்ச்சி: சூஃபியா மதானிக்கு ஆபத்து!

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மார்க்க அறிஞர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூஃபியா மதானியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்ற காவ­லில் வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதானி 9 ஆண்டுகளாக தமிழகச்சிறையில் விசாரணை கைதியாக தவித்து வந்தார். அவர் மீதான குற்றச் சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் மதானி விடுவிக்கப்பட்டார். மதானி உள்ளிட்ட நிரபராதிகளின் விடுதலைக்காக தமிழகத்தின் பல்வேறு சமூகநல அமைப்புகள் அறப் போராட்டக்களம் கண்டன.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் மதானி உள்ளிட்ட சிறைவாசி களுக்காக நாடுதழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது.

எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வேதனைகள், விவாதங்களுக்குப் பிறகு மதானி விடுவிக்கப்பட்டார்.

சிறை மீண்ட மதானி கேரள மாநிலத்தின் முழுநேர அரசியல் வாதியாக மாறிப்போனார். மதானியின் ஆதரவாளர்கள் வட்டம் கேரளா முழுவதும் பரவி இருந்தாலும் அமைப்பு ரீதியான வலிமை போதுமானதாக இல்லை. இருப்பினும் கேரள இடதுசாரிக் கூட்டணிக்கு மதானியின் ஆதரவு பெரும் வலிமை சேர்த்தது.

கேரளாவில் காலகாலமாக கால்பதித்து கிளைப்பரப்பிய மதவாதிகளுக்கு மதானியின் எதிர்கால வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணித்த மதவாத சக்திகள் மறைமுகமாக அழுத்தங்களைக் கொடுத்து, மதானி தீவிர வாத பின்னணிக் கொண்டவர் என தமிழ்நாட்டிலேயே தோற்றுப் போன ஒரு பல்லவியை கேரளாவில் பாட ஆரம்பித்தன.

சங்பரிவார் சக்திகள் தங்களது சொந்தபேனரில் முகத்தைக் காட்டாமல் பல்வேறு சமூக அமைப்புகளின் முகமூடியில் மதானியை எதிர்த்து புளுகுப்பிரச்சாரம் மேற்கொண்டன.

முஸ்லி­ம்களின் தனித்தன்மை கொண்ட அரசியல் அடையாளத்தை உள் மனதில் விரும்பாத காங்கிரஸும் மதானியை எதிர்த்து பரப்புரை செய்தது. எத்தகைய பொய்ப் பிரச்சாரங்களையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரி அரசோ துணிச்ச­லின்றி மதவாத சக்திகளின் பிரச்சாரத்துக்கு தலையாட்டும் அளவுக்கு கீழிறிங்கியது.

மதானியை இனியும் பொய் குற்றம் சாட்டி அரசியல் நடத்தினால் அது எடு படாது என்பதை உணர்ந்த அனைத்து ஆதிக்க சக்திகளும் பழைய வழக்கினை தூசிதட்டி எடுத்தன.

மதானியின் மனைவியார் சூஃபியா மதானியை பஸ்எரிப்பு வழக்கில் தொடர்புடையவராகக் கூறி அவரைச் சுற்றி விசாரணை வளையங்கள் வட்டமிட்டு வருகின்றன.

முன்பு மதானியை விடுதலை செய் யக் கோரி போராட்டம் நடைபெற்ற போது தமிழகத்திலி­ருந்து சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கேரளாவில் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அதற்கும் சூஃபியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

சூஃபியா மதானி தனது கணவரின் விடுதலைக்காக தொடர் சட்டயுத்தம் நடத்திய வீரப்பெண்மணி. செய்யாத குற்றத்திற்காக தனது கணவர் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போது தளராத மன உறுதியுடன் குடும்பத்தைக் கட்டிக் காத்த பெண்மணி இன்னும் 33 வயது நிறைவடையாதலிஇரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான அந் தப்பெண்மணி இதுவரை அனுபவித்த துன்பங்களும் தொல்லைகளும் போதாதா? என கேரள பெண்கள் சமூகம் கோபக்குரல் எழுப்பிவருகிறது.

தெலுங்கானா பிரச்சினையால் ஆந்திராவே சட்ட ஒழுங்குப் பிரச்சினையால் தள்ளாடுகிறது. சேதம் அடையாத அரசு சொத்துக்களே இல்லை. சிறிய கதவடைப்பு மறியல் போன்றவற்றில் கூட அரசு சொத்துக்கள் சேதமடைவது சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒன்று. என்னவோ இந்தியா விடுதலையடைந் ததி­லிருந்து ஒரு பஸ் எரிப்புமே நடக்க வில்லையா? மதானி மனைவிதான் முதன் முறையாக பஸ்ஸை எரிக்க கிளம்பினாரா?

அல்லது இதுவரை பஸ் எரிப்பு குற்றம் சாட்டப்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்களா?

அல்லது பஸ் எரிப்பு குற்றம் சாட்டப்பட்ட கட்சிகளின் தலைவர்களின் மனைவிகள் யார் மீதாவது விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? இவையெல்லாம் விடைதெரியாத கேள்விகள்.

ஓர் அப்பாவி முஸ்­லிம்பெண்மணி திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகவே இந்தியா முழுவதும் உள்ள நடுநிலை யாளர்கள் நினைக்கிறார்கள்.

கற்பனை கூட செய்ய முடியாத பயங் கரவாத குற்றச்சாட்டுகளில் அந்த இளம் முஸ்லி­ம் பெண்ணை சிக்க வைப்பதற்கு முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

ஒருவர் முஸ்லி­ம் என்பதாலேயே எத்தனை பயங்கரமான குற்றச் சாட்டுக்களையும் கூறலாம் என பல ஊடகங்களும் சில அரசியல் சக்திகளும் நினைக்கின்றன. அந்த அவதூறு சேற் றி­ருந்து வெகுகாலத்திற்குப்பிறகு அந்த அப்பாவி முஸ்லி­ம் மீண்டு வரும் போது தங்களது எதிர்காலமே சிதைந்து சின்னா பின்னமாகிவிட்டதை உணர்கிறார்கள்.

ஆனால் அந்த இழப்புகளுக் குக்காரணமான ஊடகங்கள்அந்த குறிப்பிட்ட அரசியல் சக்திகள் அடுத்து யாரை அவதூறுக்கு உள்ளாக்கி அழிக்கலாம் என இறங்கி விடுகின்றன.

இந்த கருங்கா­லிகளுக்கு என்ன தண்டனை? அந்த அப்பாவிகளுக்கு என்ன நிவாரணம்? பொய் குற்றம் சாட்டி வந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன சட்ட பாதுகாப்பு? என பல்வேறு கேள்விகள் கொதித்துக் குமுறும் அனைத்து நெஞ்சங்களிலும் எழுகிறது.

சூஃபியா ஒரு தனி மனுஷியல்ல என்பதை புரியவைக்கப் போவது யார்?

கேரளாவின் முன்னணி முஸ்லி­ம் அமைப்பாக இன்று மத்திய அரசில் அங்கம்வகிக்கும் முஸ்லி­ம் லீக்கும், கேரளாவை ஆளும் இடது சாரிகளும் மத்தியில் ஆளும் காங்கிரஸும் நாளை மக்கள் மன்றத்தில் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

கடையநல்லூர் வாலிபர் மாயமான வழக்கில் 12 போலீஸ் அதிகாரிகள் இன்று தென்காசி கோர்ட்டில் ஆஜராகின்றனர்

நெல்லை, டிச.23: கடையநல்லூர் வாலிபர் கீரிப்பாறையில் மாயமான வழக்கில் 12 போலீஸ் அதிகாரிகள் இன்று தென்காசி கோர்ட் டில் ஆஜராகின்றனர்.
கடையநல்லூரை சேர்ந்த முகம்மது மசூது (38) உட்பட 4 பேர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பரில் கடையநல்லூரிலிருந்து காரில் ஆரல்வாய்மொழிக்கு சென்றனர். அப்போது அங்கு காரில் வந்த விருதுநகரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி 10 லட்ச ரூபாயை பறித்து சென்றதாக வழக்குப் பதிவு செய்து அப்போதைய ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் லெட்சுமணராஜ் விசாரணை நடத்தி வந்தார்.
இது தொடர்பாக கடையநல்லூர் போலீசார் முகம்மதுமசூது உட்பட 4 பேரை பிடித்து கன்னியாகுமரி தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.
கீரிப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இவர்களிடம் அப்போதைய தனிப்படை டி.எஸ்.பி.பிரதாப்சிங், இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணராஜ், ஈஸ்வரன், சந்திரபால், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்யராஜ், ஏட்டுக்கள் முருகன், சிவன், ஸ்டீபன், மைக்கேல், முத்து உட்பட 15 பேர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து முகம்மதுமசூது தரப்பிலிருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு தந்தி அனுப்பினர். இதனால் தனிப்படையினர் உயர் அதிகாரிகளிடம், முகம்மதுமசூது தப்பி சென்றதாகவும் மீதமிருந்த 3 பேர் விடுவித்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் முகம்மதுமசூது வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் போலீஸ் விசாரணையில் முகம்மதுமசூது இறந்திருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் மதுரை ஐகோர்ட் டில் ஹேப்பியஸ் கார்பஸ் மனு அளித்தனர். இவ்வழக்கினை விசாரிக்குமாறு நெல்லை சி.பி.சி. ஐ.டி., போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெல்லை சி.பி.சி. ஐ.டி.போலீசார் விசா ரணை நடத்தினர்.
இதற்கிடையில் கடந்த மாதம் 10ம் தேதி நெல்லை சி.பி.சி.ஐ.டி.போலீசார் இவ்வழக்கு சம்பந்தமாக தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

அதில் ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.எஸ்.பி.,பிரதாப்சிங், தர்மபுரியிலுள்ள டி.எஸ்.பி.,ஈஸ்வரன், க்யூ பிரிவு டி.எஸ்.பி.,சந்திரப் பால், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லெட்சுமணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்ய ராஜ், ஏட்டுக்கள் முருகன், சிவன், ஸ்டீபன், மைக்கேல், முத்து ஆகிய 12 பேர் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 12 போலீஸ் அதிகாரிகளும் இன்று தென்காசி கோர்ட்டில் ஜாமீன்தாரோடு ஆஜராகின்றனர்.

ஒரே தவணையில் அனைத்துக் கடன்களையும் செலுத்துகிறது துபாய் வேர்ல்ட்!

துபாய் அரசு பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள துபாய் வேல்ர்டு நிறுவனம், திடீரென தனது கடனாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தது. இதனால் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது. ஏராளமானோர் வேலையிழந்தனர்.

இந்த நிலையில் துபாய் வேர்ல்ட் நிறுவனத்தின் அனைத்துக் கடன்களையும் முழுவதுமாக ஒரு செட்டில்மெண்ட்டில் முடிக்க துபாய் அரசின் உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

துபாய் வேர்ல்டின் துணை நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ள அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து இதுகுறித்து அதிகாரிகள் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

துபாய் ஆட்சியாளரின் உறவினரும் துபாய் நிதிக் குழுவின் தலைவருமான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்டோம் மற்றும் துணைத் தலைவர் மொஹம்மத் அல் ஷைபனிடோ ஆகியோர் லண்டனில் நடந்த முதலீட்டாளர் கூட்டத்தில் பங்கேற்று, துபாய் வேர்ல்டின் பிரச்சினை குறித்து விவாதித்துள்ளனர். விரைவில் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே குற்றவிகிதம் மிகவும் குறைந்த நாடு கத்தார்

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் குற்றவிகிதம் மிக மிக குறைவாக உள்ளதாம்.
1 லட்சம் பேருக்கு 0.5 என்ற அளவில்தான் அங்கு கொலைச் சம்பவங்களின் விகிதாச்சாரம் உள்ளது. உலக சராசரி அளவு 1 லட்சம் பேருக்கு 4 என்று உள்ளது. வழிப்பறிச் சம்பவங்களின் விகிதாச்சாரத்தைப் பொறுத்தவரை, 1 லட்சம் பேருக்கு 25 என்ற அளவில் உள்ளது. உலக சராசரி அளவு 100 ஆகும்.கடத்தல், தாக்குதல், கலவரம் ஆகியவையும் மிக மிக குறைந்த அளவிலேயே கத்தாரில் நடைபெறுகிறதாம். இவை ஒட்டுமொத்தமாக சேர்த்து 1 லட்சம் பேருக்கு 5 என்ற அளவில்தான் உள்ளது. உலக சராசரி அளவு 8 ஆக உள்ளது.

கத்தாரில் சமீபத்தில் அல் ஃபாஸா என்ற புதிய படை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படையின் முக்கியப் பணியே, 24 மணி நேரமும் சாலைகளையும், குடியிருப்புப் பகுதிகளையும் கண்காணிப்பது மட்டுமே. எங்காவது குற்றச் செயல்கள் நடப்பதாக தகவல் வந்தால் இந்தப் படையினர் அங்கு மின்னல் வேகத்தில் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். யாரேனும் உதவி கோரி அழைத்தாலும் கூட இவர்கள் அடுத்த நிமிடமே அங்கு ஆஜராகி தேவையானவற்றை செய்து தருகின்றனராம்.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ஈரான் அரசின் ஆலோசகரும் மூத்த மதபோதகருமான அயதுல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி மரணம்

ஈரான் அரசின் ஆலோசகரும் மூத்த மதபோதகருமான ஆயதுல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி அவர்கள் மரணமடைந்தார்கள்.

இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஈரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர். ஆயதுல்லா அவர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து இன்று அன்னாரின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.

எதிர் கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் வீதிகள் முலுவதும் கலவர தடுப்பு போலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மதபோதகர்களின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் தெஹ்ரான் மற்றும் நஜாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன.

நஜாஃபாத்தில் தான் அயதொல்லா பிறந்தார். 87 வயதான ஆயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியின் தலைவர்களில் ஒருவர், என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்

டெல்அவீவ்: ஃபலஸ்தீன் கைதிகளிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகளை இஸ்ரேலிய ராணுவவீரர்கள் உபயோகப்படுத்தியதற்காண தகவலை இஸ்ரேலிய அரசியல் கட்சியின் மூத்த தலைவரான அஹ்மத் தீலி வெளியிட்டுள்ளார்.

1990களில் டெல்அவீவில் சிறையிலிருந்த ஃபலஸ்தீனர்களிடமிருந்து பரவலாக இஸ்ரேலிய ராணுவம் உடல் உறுப்புகளை திருடியதாக மருத்துவ ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி தீலி கூறுகிறார்.

இந்த உடல் உறுப்புகள் பெரும்பாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதயம், எலும்பு, கண், சிறு நீரகம் ஆகியவைத்தான் பெரும்பாலும் திருடப்பட்டுள்ளது.நோயாளிகள் மற்றும் இறந்துபோன ஃபலஸ்தீனர்களின் உடல்களிலிருந்து உறுப்புகள் திருடப்பட்டுள்ளன.
ஃபலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகள் சர்வதேச சந்தையில் விற்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. உடல் உறுப்பு மாஃபியா கும்பலின் முக்கிய சூத்திரதாரி இஸ்ரேலிய அரசியல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்தாதன் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 16 வயது ஃபலஸ்தீனத்தைச் சார்ந்த பிலால் அஹ்மத் கனீமின் இறந்த உடலில் காணப்பட்ட முறிவு அடையாளங்கள் இஸ்ரேலிய உடல் உறுப்பு திருட்டை வெளிச்சம் போட்டு காட்டியது. கனீமின் உடல் வயிறு கீறப்பட்ட நிலையிலிருந்தது. தொடர்ந்து நடத்திய பிரேத பரிசோதனையில் உடல் உறுப்புகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. விசாரணையில் 20 ஃபலஸ்தீனர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இவ்விவாதத்தைத் தொடர்ந்து டெல் அவீவில் ஃபாரன்ஸிக் மெடிசின் தலைவர் டாக்டர் யஹூதாஸ் 2004 ஆம் ஆண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கர்காரேயை நான் கொல்லவில்லை: அஜ்மல் கஸாப்

மும்பை:மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது ஏ.டி.எஸ் தலைவர் கர்காரே உட்பட மூத்த போலீஸ் அதிகாரிகளை தான் கொல்லவில்லை என்று அஜ்மல் கஸாப் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எல்.தஹலியானி முன்பாக நேற்று வாக்குமூலம் அளித்தபோது மும்பை தாக்குதலின் போது கைதுச்செய்யப்பட்ட ஒரேயொரு குற்றவாளி என்று காவல்துறையால் கூறப்படும் அஜ்மல் கஸாப் இதனை வெளியிட்டார்.

தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 26 அன்று இரவு நான் சி.எஸ்.டி ரயில்வே நிலையத்திலோ, காமா மருத்துவமனை அருகிலோ, காவல்துறை என்னை கைது செய்ததாக கூறும் கிர்கோம் சவ்பாட்டியிலோ நான் இல்லை. ஹேமந்த் கர்காரே, விஜய் சாலஸ்கர், அசோக் காம்தே ஆகிய போலீஸ் அதிகாரிகளுக்கு நேராக நான் துப்பாக்கியால் சுடவுமில்லை. தாக்குதல் நடைபெற்ற வேளையில் நான் போலீஸ் கஸ்டடியிலிருக்கும் போது நான் எவ்வாறு இதனைச் செய்வேன்? என்றும் கஸாப் வினவினார்.

மும்பை தாக்குதல் நடப்பதற்கு 20 தினங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்த என்னை தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் ஜுஹு பீச்சில் வைத்து போலீஸ் என்னை கைது செய்தது என்று நேற்று முன்தினம் கஸாப் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

தாக்குதல் நடைபெற்ற மும்பையிலுள்ள இடங்களெல்லாம் நன்றாக தெரியுமல்லவா? என்று நீதிபதி கேட்டதற்கு க்ரைம்பிராஞ்ச் வசமிருந்த என்னை மும்பை தாக்குதலுக்கு பின்னர் போலீஸ் அதிகாரிகள் இவ்விடங்களுக்கெல்லாம் என்னை வாகனத்தில் அழைத்துச்சென்றனர் என்று கஸாப் பதில் கூறினார். "அவர்கள் போலீஸ்காரர்கள் அவர்களுக்கு ஒரு நபர் தேவை. அதற்கு தன்மீது குற்றஞ் சுமத்துகின்றார்கள், என்று கூறிய கஸாபிடம் கையில் துப்பாக்கி குண்டடிப்பட்ட காயம் எவ்வாறு ஏற்பட்டது? என நீதிபதிக்கேட்டபொழுது, "கஸ்டடியிலிருந்த என்னை அனஸ்தீசியா(மயக்கமருந்து) தந்து மயக்கிய பிறகு போலீஸ் துப்பாக்கியால் எனது கையில் சுட்டது என்று கஸாப் பதில் கூறினார்.

நவம்பர் 26 அன்று இரவு 11.15 மணியளவில் தன்னை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்ததாகவும் கஸாப் கூறினார். அரசு தரப்பு கோர்ட்டில் ஆஜராக்கிய ஆடைகளும், ஏ.கே.47 துப்பாக்கியும் புகைப்படங்களும் தன்னுடையதல்ல என்று கஸாப் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரத்தகறை படிந்த கால் சட்டையும் நீல நிறச்சட்டையும் காண்பித்தபொழுது இவை தன்னுடையதல்ல என்றும் தனது இரத்தத்தை எடுத்து போலீஸ் அதில் தேய்த்துள்ளது என்று கூறிய கஸாப் இந்த ஆடை எனக்கு பொருந்தாது ஏனெனில் அவை சிறியவை என்று கூறினார்.

ஏ.கே.47 துப்பாக்கியுடன் சி.எஸ்.டி யில் தாக்குதல் நடத்துபவர்களின் புகைப்படத்தில் உள்ளது தான் அல்ல என்றும் கஸாப் கூறினார். புகைப்படத்தில் யாராக இருந்தாலும் அவர் துப்பாக்கியை பிடித்திருப்பது நிலத்தை நோக்கிய நிலையில் என்றும் அவர் எவருக்கும் நேராகவும் துப்பாக்கியால் சுடவில்லை என்றும் கஸாப் மேலும் தெரிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழின் அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து புகைப்படமெடுத்த போட்டோகிராஃபரை நோக்கி கஸாப் துப்பாக்கியால் சுட்டதாக அரசுதரப்பு கூறுகிறது. ஏ.கே.47 துப்பாக்கி தன்னுடையதல்ல இதனை நான் முதன் முதலாகத்தான் பார்க்கிறேன் என்றும் கஸாப் கூறினார்.

உடல்நிலை சரியில்லாததால் வாக்குமூலம் அளிப்பதை வேறொரு தினம் மாற்றவேண்டும் என்ற கஸாபின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. ஒன்றும் கூறாவிட்டால் அது கஸாபின் விருப்பத்தைப் பொறுத்தது என்று நீதிபதி பதிலளித்தார். இரண்டாவது நாளாக நீதிமன்றம் கஸாபின் வாக்குமூலத்தை பதிவுச்செய்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 19 டிசம்பர், 2009

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

*முஸ்லிம்களுக்கு தொழில், கல்வி துறைகளில் 10 சதவீதமும், இதர சிறுபான்மையோருக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.


*அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிகளை மதத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் தங்களை இணைத்துக்கொள்வோரையும் இதில் உட்படுத்தவேண்டும்.

*சிறுபான்மையினரல்லாத எல்லா கல்விநிலையங்களிலும் 15 சதவீத இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும். இதில் 10 சதவீதத்தை மொத்த சிறுபான்மையினரில் 73 சதவீதமாகயிருக்கும் முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவீதத்தையும் அளிக்கவேண்டும்.

*தேசிய ஒருமைப்பாட்டுணர்வின் அடிப்படையில் பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தற்ப்பொழுது அவர்களின் உரிமை 50 சதவீதம் மட்டுமே. இதர பெரும்பான்மையினருக்கு 50 சதவீதம் அளிக்கப்படுகிறது. இதே நீதிதான் சிறுபான்மையினரல்லாத கல்விநிறுனங்களில் நிச்சயிக்கப்பட்ட சதவீதத்தை சிறுபான்மையினருக்கும் வழங்கவேண்டும். ஒதுக்கிவைக்கப்பட்ட 10 சதவீதத்தில் முஸ்லிம்களை கிடைக்காத பட்சத்தில் இதர சிறுபான்மையினருக்கு அதனை ஒதுக்கவேண்டும்.

*அரசியல் சட்டம் பிரிவு 16(4)ன் படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

*மத்திய மாநில அரசு நிறுவனங்களின் எல்லா பிரிவுகளிலும் 10 சதவீதத்தை முஸ்லிம்களுக்காக ஒதுக்கவேண்டும். இதிலும் முஸ்லிம்கள் வராத பட்சத்தில் அதனை இதர சிறுபான்மையினருக்கு வழங்கவேண்டும்.

*வக்ஃப் சொத்துக்களை பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள், ஹாஸ்டல்கள், கல்வி நிலையங்கள், நூலகம் ஆகியன துவங்குவதற்கான சட்ட அனுமதியை வக்ஃப் போர்டுகளுக்கு வழங்கவேண்டும்.

போன்றவை இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க ரங்கநாத் ஆணையம் பரிந்துரை!


முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கவும், அனைத்து மதத்தைச் சார்ந்த தலித்துகளையும் எஸ்.சி. பிரிவில் இணைக்கவும் ரங்கநாத் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


இந்தியாவில் உள்ள மத அடிப்படையிலான மற்றும் மொழி அடிப்படையிலான சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா தலைமையில் தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் என்ற பெயரில் அமைத்தது.

ரங்கநாத் ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வெள்ளிக் கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் 50 சதவீத இடம் பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு இருப்பதால், சிறுபான்மை கல்விக் கூடங்களிலும் அவர்கள் 50 சதவீதம் இடங்களையே பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. இதனைக் களைய கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அனைத்து மதத்திலும் உள்ள தலித்துகளையும் எஸ்.சி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுவரை இந்து மதத்தில் உள்ள தலித்துகள் மட்டுமே எஸ்.சி. பிரிவில் இருந்து வந்தனர். பின்னர் பெளத்தம் மற்றும் சீக்கிய மதத்தில் உள்ள தலித்துகளும் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
source:inneram

கோவை தொடர் குண்டுவெடிப்பு: 21 பேர் ஆயுள் தண்டனை ரத்து

கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 21 பேரின் அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம், 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அதேபோல மதானி இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி அத்வானி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தார். அவர் வருவதற்கு முன்பு மாலை 4 மணியளவில், ஒரே நேரத்தில் 17 இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை தனி நீதிமன்றம் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

அல் உம்மா தலைவர் பாட்சா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

64 பேருக்கு 3 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2007 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 43 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

அதேபோல, மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குண்டு வெடிப்பில் மரணம் அடைந்த ஒருவரின் தந்தை மனுதாக்கல் செய்தார். மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.

சம்பவம் நடந்தபோது மைனர்களாக இருந்ததால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முஜ்புர் ரகுமான், முகமது அம்ஜத் அலி ஆகியோரை நீதிபதிகள் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

மற்றவர்களின் அப்பீல் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ந் தேதி தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 39 பேரில் 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 21 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் ரத்து செய்யப்பட்டது.

மேலும் மதானி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வியாழன், 17 டிசம்பர், 2009

முத்துப்பேட்டை : பி.ஜே.பி யினர் மீது தமுமுக வழக்கு
முத்துப்பேட்டையில் 11/12/2009 அன்று முத்துப்பேட்டை நகர பா.ஜ.க வினர் பொதுக்கூட்டம் என்ற போர்வையில் கலவரத்தை தூண்டும் வண்ணம் முஸ்லிம்களையும்,தமுமுக வினரையும் தகாத வார்த்தை களாலும் கொலை வெறி மிரட்டலோடும் பேசி சென்றுள்ளனர். அந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் ஹெச்.ராஜா முஸ்லிம்களை தரைகுறைவாக வாயல்சொல்ல முடியாத வார்த்தை களாலும், இழிவான முறையிலும் பேசியதுடன் முஸ்லிம்களை மிரட்டியும் சென்றுள்ளார். அதனை தொடந்து பேசிய பேட்டை சிவா,கருப்பு.மற்றும் சிலரும் முஸ்லிம்களையும்.தமுமுக வையும் கடுமையான முறையில் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் மானங்கெட்ட வார்த்தை களால் திட்டியுள்ளனர்.

முத்துப்பேட்டை பாசிஸ கும்பலின் தலைவன்
கருப்பு
( ) முருகானந்தம்

ஒன்று திரண்ட நம் சகோதர்களை அமைதி படுத்திய தமுமுக வினர், நகர செயலாளர் வழக்கறிஞர் தீன்முஹம்மது தலைமயில் இன்று காலை காவல்நிலையம் சென்று ஹெச்.ராஜா,கருப்பு(எ)முருகானந்தம், பேட்டை சிவா ஆகியோர் மீது கொலைவெறியை தூண்டுதல் 307 or 506 (2), மதவெறியை தூண்டுதல் 153, பொய்யான செய்தியை பறப்பி மதகலவரத்தை தூண்டுதல் 505 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சொல்லி புகார் கொடுத்து மனு ரஷீது பெற்றுள்ளனர்.

தமுமுகவினரிடம் காவல்துறை ஆய்வாளர் கூறும் போது குற்றவாளிகள் மீது மேலே கண்ட வழக்கு பிறிவின்படி முதல் தகவல்(FIR) அறிக்கை பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

— முத்துப்பேட்டை முகைதீன்

Source : www.muthupet.org

காதியானிகளுக்கு எதிராக சமுதாய அமைப்புகள் ஓரணியில்....

இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றியுள்ளார் என மார்க்கத்தை தன் மனோ இச்சைக்கு பயன்படுத்திய மிர்ஸா குலாமின் புதிய மதமான காதியானி அஹ்மதியாக்கள் மற்றும் நவீன குழப்பவாதிகள் 19 கூட்டத்தார் குறித்து ஆலோசனை நடத்த வேண்டி 16.12.2009 அன்று சென்னையில் ஷரீஅத் பாதுகாப்பு பேரவை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் தமிழகத்தின் அனைத்து சமுதாய அமைப்புகளும் கலந்து கொண்டன. தமுமுக, இதஜ, முஸ்லிம்லீக், தேசியலீக், மறுமலர்ச்சி முஸ்லிம்லீக், ஜமாஅத்தே உலமா ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பி.எஃப்.ஐ, தமிழ்நாடு தொண்டு நிறுவனம், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, ஈ.வி.க, அஹ்லே ஹதீஸ், தஃப்லிக் ஜமாஅத், காஸிஃபுல் ஹுதா உட்பட அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டன.

இதன் பிரதிநிதிகளாக ஹைதர்அலி, முனீர், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, குலாம் முஹம்மது, சிக்கந்தர், தெஹ்லான் பாகவி, ஜின்னா, நிஜாமுதீன் மன்பஈ, ஷம்ஸுதீன் காஸிமி, முஹம்மது கான் பாகவி உட்பட சமுதாய தலைவர்கள், ஆலிம் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடினர்.

அல்லாஹுடைய மார்க்கத்திற்கு எதிராக கலகம் செய்யும் காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினரை முஸ்லிம்கள் அல்ல என தீர்ப்பளிக்க முடிவு செய்தனர். இவர்கள் நிராகரிப்பாளர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ். பொதுவான பிரச்னையில் தீர்ப்பு எடுக்க சமுதாய அமைப்புகள் ஓரணியில் இணைந்தது மகிழ்ச்சியினை அளிக்கிறது.

புதன், 16 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு படையின் அத்துமீறல்


மத்திய காஸாவில் பலஸ்தீனியர் படுகொலை

கடந்த சனிக்கிழமை (12.12.2009) மத்திய காஸா பிரதேசத்தின் கிழக்கு பிரீஜில் அமைந்துள்ள அகதி முகாமருகில் வைத்து பலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பலஸ்தீன் தகவல் மையத்திடம் (PIC) தகவலளிக்கையில், 48 வயதான ஸமீ அபூ கோஸா என்பவரின் வயிறு உட்பட உடலின் பல பாகங்களிலும் இயந்திரத் துப்பாக்கிச் சன்னங்கள் காணப்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி நபர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மிக மோசமாகக் காயமடைந்திருந்ததால் சற்றுநேரத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாகவும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கிழக்கு பிரீஜ் பகுதியில் மனம்போன போக்கில் மேற்கொண்ட கண்மூடித்தனமான இயந்திரத் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாகவே ஸமீ அபூ கோஸா உயிரிழந்துள்ளார்.

Beware of the following websites

Beware of the following websites:
www.answering- islam.org

www.aboutislam. com

www.thequran. com

www.allahassurance. comThe list of traced
Anti- Islamic websites, about Islam are:
1.

http://www.islamrev iew.com

This site has posted fake stories of how Muslims converted to Christianity. How do I know? Read the
following excerpt from one of the stories:
First the 'convert' says: (emphasis added)
In the end, I managed to convince my mother, as it was for Allah and I joined the Islamic College. Having graduated as an ustaz, I was soon posted to my neighbourhood?
And then:
My trip to Mecca for the Haj (pilgrimage) was tiring but eventful. I did not have the rare opportunity to see inside the holy Kabah and the holy idols inside, which Prophet Muhammud had helped to place, as explained in Bukhari's Hadith
An Ustaz (scholar) in Islaamic Studies is saying that there are idols inside the Kabah and that too placed by Muhammad (saw) himself!?!?!
This clearly shows that the author is deliberately trying to spread misinformation about Islaam and wants to convey to possible reverts to Islaam that it is religion of idol worship.
In fact most of the Christian sites use this tactic of false convert stories but it's not always possible to prove it
2.
http://www.faithfre edom.org/
AlhamduliLlaah I was able to catch another site posting fake stories of Muslims leaving Islaam. See the false information imparted here. That the attempt is deliberate is known through the claim that the 'convert' has done detailed study about the topic.
For Islamic Education, I had to study about marriage in detail to do well. So, I learnt all the stuff and got the highest grade anyone can get for Islamic Education. And guess what? Because I know it so well, I know that there is a lot of discrimination against women in Islam. Things like a father and grandfather can marry a girl/woman to whomever they want even if the girl/woman doesn't want to marry that person? In addition, I learned things like women couldn't be witnesses in Syariah Courts and things like that
. The first point here is a total lie whereas the second is a distorted version of the truth....
3.
http://www.answerin g-islam.org/ Testimonies/ younathan. html
Here's yet another extract from a false convert story aimed at spreading misinformation about Islaam.
As I started thinking about my life and the Quran, I realized all Muslims, even the prophet Muhammad, would go to Hell for certain sins they committed in their lifetime.
This is a common ploy of the Christian Missionaries. They first inform gullible victims that Jesus (God) is Love and just by believing in the Crucifixion, you will be assured of Paradise . Whereas the concept of God in Islaam is so harsh that no one will be spared from Hell and that even Prophet Muhammad (saw) was not sure of where he would end up. For this purpose they quote an ayat of the Qur'aan out of context. Here there have gone a step further by saying that even our beloved Prophet (saw) would have to go through hell. Nothing could be further from the truth.
Anti Islaamic Sites under misleading names
4.
http://www.muslimho pe.com/
5.
http://www.islameya t.com/
6.
http://www.islamrev iew.com
7.
http://www.muhammad anism..com/
8.
http://thespiritofi slam...com/ index.html
9.
http://www.abrahami c-faith.com/
10.
http://www.gnfcw. com/
11.
http://www.knowisla m.info/drupal/ mno
12.
http://www.homa. org/
13.
http://www.thequran .com
14.
http://www.Allahass urance.com
15.
http://www.mosque. com
16.
http://thespiritofi slam..com/ index.html
17.
http://www.newislam .org/


Anti Islamic Sites apparent even by name
18.
http://www.islam- exposed.org/
19.
http://answering- islam.org. uk/
20.
http://www.answerin ginfidels. com
21.
http://www.islamund ressed.com/
22.
http://www.studytoa nswer.net/ myths_ch1. html
23.
http://www.challeng ing-islam. org/submissions/ shariah.htm
24.
www.answering- islam.org
25.
http://www.islamund ressed.com
26..
http://www.exmuslim .com/
27..
http://www.answerin ginfidels. com
28.
http://www.gnfcw. com/
29.
http://www.dhimmi. ....com/
30.
http://www.chick. com/information/ religions/ islam/
31.
http://www.acage. org/
32.
http://www.. apostatesofislam .com/
33.
http://www.seculari slam.org/
34.
http://www.. muslim-refusenik .com/
35.
http://www.icapi. org/
36..
http://www.hesetsfr ee..org/
37.
http://www.. .letusreason. org/Islamdir. htm
38.
http://www.kafirnat ion.com/
39.
http://www.jihadwat ch.org
40.
http://www.anti- cair-net. org/
41.
http://apostatesofi slam.com/
42.
http://challenging- islam.org/


These sites developers
Who Intentionally are spreading
WRONG information about the QURAN , the HADITH and ISLAM itself.
A Muslim somewhere in the world could be receiving false information about Islam. So prevent that from happening.
PLEASE!


Dear Brother & sister if anything wrong sit enter please inform to me . i can delete that one .
Thanking you ..

Thanks To :Muhammad Najaath