
மத்திய காஸாவில் பலஸ்தீனியர் படுகொலை
கடந்த சனிக்கிழமை (12.12.2009) மத்திய காஸா பிரதேசத்தின் கிழக்கு பிரீஜில் அமைந்துள்ள அகதி முகாமருகில் வைத்து பலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பலஸ்தீன் தகவல் மையத்திடம் (PIC) தகவலளிக்கையில், 48 வயதான ஸமீ அபூ கோஸா என்பவரின் வயிறு உட்பட உடலின் பல பாகங்களிலும் இயந்திரத் துப்பாக்கிச் சன்னங்கள் காணப்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி நபர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மிக மோசமாகக் காயமடைந்திருந்ததால் சற்றுநேரத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாகவும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கிழக்கு பிரீஜ் பகுதியில் மனம்போன போக்கில் மேற்கொண்ட கண்மூடித்தனமான இயந்திரத் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாகவே ஸமீ அபூ கோஸா உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக