வியாழன், 31 டிசம்பர், 2009

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!

இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.


இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.

ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.

60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.

ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற வெறியால் 50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.

பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.

தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.

இந்நிலையில் தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.

1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.

1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.

தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை. தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.

ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.

தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மொழிவாரி மாநிலமாக ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர். ஆனால் மிக அதிக அளவில் பிற சமூக குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.

இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.

சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

--அபூசா­லிஹ்

கருத்துகள் இல்லை: