செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஹிஜாப் அணிவதில் உறுதியாகவுள்ள முஸ்லிம்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை இல்லை: பிரெஞ்சு நீதியமைச்சர்


தமது மனைவியர் பர்தா அணிய வேண்டும் என வற்புறுத்தும் முஸ்லிம் ஆண்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்படக் கூடாது என, பிரெஞ்சு நீதியமைச்சர் மைக்கேல் அல்லொய்ட் மாரி கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் முழுமையாக மறைக்கும் ஆடையை அணிவதைத் தடுக்கும் சாத்தியமுள்ள சட்டத்துக்கான பாராளுமன்றத்தின் சிபாரிசுக்காக அரசாங்கம் காத்திருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

"ஹிஜாபை விடவும் நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.

"பிரெஞ்ச் குடியுரிமையை யார் எதிர்பார்க்கிறார்கள், யாருடைய மனைவி முழு ஹிஜாப் அணிகின்றார், யார் எமது நாட்டின் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ள வெளிப்படுகின்றார் என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சர் தொடர்ந்து கூறுகையில், "நிகாப், புர்கா அணிவது ஒரு பிரச்சினையாகும். அது இணைந்து வாழ்வதற்கான எமது முயற்ச்சியையும், நாட்டின் ஜனநாயகப் பெறுமானத்தையும் குறிப்பாக மனிதத் தூய்மையையும் பாதிக்கின்றது" என்றார்.

கருத்துகள் இல்லை: