சிதம்பரம் வீட்டை முற்றுகையிடுவோம்- தவ்ஹீத் ஜமாத்
சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லீம் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை டிசம்பர் 6ம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
450 ஆண்டுகால பாரம்பரிய சின்னமாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கிய பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 66 நபர்களை குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும், பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டிசம்பர் 6ம் தேதி சென்னை மற்றும் காரைக்குடியில் உள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களும் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம், திருநெல்வேலியில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும். மற்ற மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக