
சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த சீன பொம்மைகளை சுங்க இலாகாவினர் சென்னையில் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்தியாவின் பிரபல கம்பெனிகளின் ஷாம்புகளை போலவே போலியாக தயாரிக்கப்பட்ட சீனா பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து துறைமுகங்களின் மூலம் இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை சுங்க இலாகாவினர் தீவிரமாக கண்காணி்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து இரு கன்டெய்னர்கடள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் விபரங்கள் முழுமையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கன்டெய்னர்களில் இருந்து சீனா பொம்மைகள்,விளையாட்டு பொருட்கள் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் போன்றவைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் அந்த பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்கலின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடபடவில்லை. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதால் அவை குழந்தைகளுக்கு நுரையில் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதனை இறக்குமதி செய்த நிறுவனம் சமர்பித்த தர சான்றிதழ்களும் பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது.
சீனா பொம்மைகளை இறக்குமதி செய்ய சுங்க துறை நிர்ணயித்திருக்கும் தரத்திற்கும் குறைவாக இருந்ததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக