துபாய்:உலகத்தில் மிகவும் உயரமான வானைத்தொடும் கட்டிடமான பர்ஜ் துபாய்க்கு வருகிற ஜனவரி 4ஆம் நாள் திறப்புவிழா நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரதிநிதிகள் உள்பட 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பங்கேற்பார்கள் என துபாய் காவல்துறை அவசர பாதுகாப்பு பிரிவு தலைவர் முஹம்மது ஈத் அல் மன்சூரி தெரிவித்தார்.
கட்டிடம் கட்டி முடிப்பதற்கு மொத்த செலவு 2000 கோடி டாலர் ஆகியுள்ளது. 12 ஆயிரம் பணியாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அமீரகத்தின் தேசிய தினத்தில் பர்ஜ் துபாய் திறப்பு விழா நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
800 மீட்டர் உயரமுடைய இக்கட்டிடத்தின் உண்மையான உயரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.124 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள லிஃப்டின் வேகம் ஒரு செகண்டிற்கு 10 மீட்டர்களாகும். கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு செல்ல 60 செகண்டுகள் போதும். 1044 ரெசிடன்சியல் அபார்ட்மெண்டுகளும், 160 ஆடம்பர அறைகளும் உள்ளன.
இமார் ப்ராபர்டீஸிற்கு சொந்தமானதுதான் இந்த ஸ்கை ஸ்கிராப்பர். தென் கொரிய நிறுவனமான சேம்சங் தான் இதன் முக்கிய கட்டிட ஒப்பந்தக்காரர்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக