புதன், 23 டிசம்பர், 2009

கைது சூழ்ச்சி: சூஃபியா மதானிக்கு ஆபத்து!

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மார்க்க அறிஞர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூஃபியா மதானியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்ற காவ­லில் வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதானி 9 ஆண்டுகளாக தமிழகச்சிறையில் விசாரணை கைதியாக தவித்து வந்தார். அவர் மீதான குற்றச் சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் மதானி விடுவிக்கப்பட்டார். மதானி உள்ளிட்ட நிரபராதிகளின் விடுதலைக்காக தமிழகத்தின் பல்வேறு சமூகநல அமைப்புகள் அறப் போராட்டக்களம் கண்டன.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் மதானி உள்ளிட்ட சிறைவாசி களுக்காக நாடுதழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது.

எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வேதனைகள், விவாதங்களுக்குப் பிறகு மதானி விடுவிக்கப்பட்டார்.

சிறை மீண்ட மதானி கேரள மாநிலத்தின் முழுநேர அரசியல் வாதியாக மாறிப்போனார். மதானியின் ஆதரவாளர்கள் வட்டம் கேரளா முழுவதும் பரவி இருந்தாலும் அமைப்பு ரீதியான வலிமை போதுமானதாக இல்லை. இருப்பினும் கேரள இடதுசாரிக் கூட்டணிக்கு மதானியின் ஆதரவு பெரும் வலிமை சேர்த்தது.

கேரளாவில் காலகாலமாக கால்பதித்து கிளைப்பரப்பிய மதவாதிகளுக்கு மதானியின் எதிர்கால வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணித்த மதவாத சக்திகள் மறைமுகமாக அழுத்தங்களைக் கொடுத்து, மதானி தீவிர வாத பின்னணிக் கொண்டவர் என தமிழ்நாட்டிலேயே தோற்றுப் போன ஒரு பல்லவியை கேரளாவில் பாட ஆரம்பித்தன.

சங்பரிவார் சக்திகள் தங்களது சொந்தபேனரில் முகத்தைக் காட்டாமல் பல்வேறு சமூக அமைப்புகளின் முகமூடியில் மதானியை எதிர்த்து புளுகுப்பிரச்சாரம் மேற்கொண்டன.

முஸ்லி­ம்களின் தனித்தன்மை கொண்ட அரசியல் அடையாளத்தை உள் மனதில் விரும்பாத காங்கிரஸும் மதானியை எதிர்த்து பரப்புரை செய்தது. எத்தகைய பொய்ப் பிரச்சாரங்களையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ள வேண்டிய இடதுசாரி அரசோ துணிச்ச­லின்றி மதவாத சக்திகளின் பிரச்சாரத்துக்கு தலையாட்டும் அளவுக்கு கீழிறிங்கியது.

மதானியை இனியும் பொய் குற்றம் சாட்டி அரசியல் நடத்தினால் அது எடு படாது என்பதை உணர்ந்த அனைத்து ஆதிக்க சக்திகளும் பழைய வழக்கினை தூசிதட்டி எடுத்தன.

மதானியின் மனைவியார் சூஃபியா மதானியை பஸ்எரிப்பு வழக்கில் தொடர்புடையவராகக் கூறி அவரைச் சுற்றி விசாரணை வளையங்கள் வட்டமிட்டு வருகின்றன.

முன்பு மதானியை விடுதலை செய் யக் கோரி போராட்டம் நடைபெற்ற போது தமிழகத்திலி­ருந்து சென்ற அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கேரளாவில் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அதற்கும் சூஃபியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

சூஃபியா மதானி தனது கணவரின் விடுதலைக்காக தொடர் சட்டயுத்தம் நடத்திய வீரப்பெண்மணி. செய்யாத குற்றத்திற்காக தனது கணவர் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த போது தளராத மன உறுதியுடன் குடும்பத்தைக் கட்டிக் காத்த பெண்மணி இன்னும் 33 வயது நிறைவடையாதலிஇரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான அந் தப்பெண்மணி இதுவரை அனுபவித்த துன்பங்களும் தொல்லைகளும் போதாதா? என கேரள பெண்கள் சமூகம் கோபக்குரல் எழுப்பிவருகிறது.

தெலுங்கானா பிரச்சினையால் ஆந்திராவே சட்ட ஒழுங்குப் பிரச்சினையால் தள்ளாடுகிறது. சேதம் அடையாத அரசு சொத்துக்களே இல்லை. சிறிய கதவடைப்பு மறியல் போன்றவற்றில் கூட அரசு சொத்துக்கள் சேதமடைவது சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒன்று. என்னவோ இந்தியா விடுதலையடைந் ததி­லிருந்து ஒரு பஸ் எரிப்புமே நடக்க வில்லையா? மதானி மனைவிதான் முதன் முறையாக பஸ்ஸை எரிக்க கிளம்பினாரா?

அல்லது இதுவரை பஸ் எரிப்பு குற்றம் சாட்டப்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்களா?

அல்லது பஸ் எரிப்பு குற்றம் சாட்டப்பட்ட கட்சிகளின் தலைவர்களின் மனைவிகள் யார் மீதாவது விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? இவையெல்லாம் விடைதெரியாத கேள்விகள்.

ஓர் அப்பாவி முஸ்­லிம்பெண்மணி திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகவே இந்தியா முழுவதும் உள்ள நடுநிலை யாளர்கள் நினைக்கிறார்கள்.

கற்பனை கூட செய்ய முடியாத பயங் கரவாத குற்றச்சாட்டுகளில் அந்த இளம் முஸ்லி­ம் பெண்ணை சிக்க வைப்பதற்கு முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

ஒருவர் முஸ்லி­ம் என்பதாலேயே எத்தனை பயங்கரமான குற்றச் சாட்டுக்களையும் கூறலாம் என பல ஊடகங்களும் சில அரசியல் சக்திகளும் நினைக்கின்றன. அந்த அவதூறு சேற் றி­ருந்து வெகுகாலத்திற்குப்பிறகு அந்த அப்பாவி முஸ்லி­ம் மீண்டு வரும் போது தங்களது எதிர்காலமே சிதைந்து சின்னா பின்னமாகிவிட்டதை உணர்கிறார்கள்.

ஆனால் அந்த இழப்புகளுக் குக்காரணமான ஊடகங்கள்அந்த குறிப்பிட்ட அரசியல் சக்திகள் அடுத்து யாரை அவதூறுக்கு உள்ளாக்கி அழிக்கலாம் என இறங்கி விடுகின்றன.

இந்த கருங்கா­லிகளுக்கு என்ன தண்டனை? அந்த அப்பாவிகளுக்கு என்ன நிவாரணம்? பொய் குற்றம் சாட்டி வந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன சட்ட பாதுகாப்பு? என பல்வேறு கேள்விகள் கொதித்துக் குமுறும் அனைத்து நெஞ்சங்களிலும் எழுகிறது.

சூஃபியா ஒரு தனி மனுஷியல்ல என்பதை புரியவைக்கப் போவது யார்?

கேரளாவின் முன்னணி முஸ்லி­ம் அமைப்பாக இன்று மத்திய அரசில் அங்கம்வகிக்கும் முஸ்லி­ம் லீக்கும், கேரளாவை ஆளும் இடது சாரிகளும் மத்தியில் ஆளும் காங்கிரஸும் நாளை மக்கள் மன்றத்தில் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை: