புதன், 29 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் கேசரிப்பு...

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் கேசரிப்பு...

ஜமாத்தார்களுடன் சந்திப்பு


பொதுமக்களிடம் பிரச்சாரம்.


/

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு.

மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு.
வீதி வீதியாக வீடுகள் தோரும்...


பொதுமக்களிடம்.

சகோதர சமுதாய தலைவர்களிடம்

உழைப்பாளிகளிடம்.

ம.ம.க. கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு?

nallakannuramdasvisit2

சமூக ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் ம.ம.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக முஸ்லிம் சமுதாயமும், தமுமுக - மமக தொண்டர்களும் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.

மனிதநேய மக்கள் கட்சி சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை, மத்திய சென்னை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியும், தென்காசியில் புதிய தமிழகமும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சி போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கோரினர்.

முஸ்லிம் சமூகத்தின் வாக்கு பலத்தையும், மனிதநேய மக்கள் கட்சி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களிடம் பெற்றிருக்கும் ஆதரவையும் அரசியல் கட்சிகள் உணர வேண்டும், சமுதாயத்தின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் களம் கண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நமது சமுதாயத்தை உதாசீனப்படுத்திய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதேபோல மதவாத பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் மற்ற தொகுதிகளில் நமது ஆதரவை வழங்க வேண்டியுள்ளது.

நமது பலத்தை உணர்ந்து சமுதாயத்தில் நமது கட்சிக்கு இருக்கும் வாக்கு வலிமையை அறிந்து நம்மிடம் நேரில் வந்து ஆதரவு கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை அவர்கள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கும். ஆனால் இது ஆதரவு மட்டும்தான், களத்தில் இறங்கி வேலை செய்வது, வெற்றிபெற உழைப்பது என்பது அர்த்தமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தென்காசியில் நமது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் போட்டியிடுவதால் அங்கு போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு இல்லை

திமுக, அதிமுக, பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளிலும் இதேபோல் காங்கிரஸ், அதிமுக, பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அந்த கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது நற்பண்பு கொண்ட வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கு மாறு ம.ம.க. கேட்டுக் கொள்கிறது.

இதுதான் பாராளுமன்றத் தேர்தலில் நமது நிலைப் பாடாகும். பரவலான வாக்கு வங்கி இருந்தும் பொருளாதார பலமின்மையால் ஒருசில தொகுதிகளில் மட்டுமே நாம் போட்டியிடும் சூழல் உள்ளதால் நாம் போட்டியிடும் தொகுதிகளில் கடுமையாக உழைக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டியிருப்பதால் மற்ற தொகுதிகளில் நாம் இதுபோன்ற நிலைப்பாடுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியத் துணைக்கண்டம் மதக் கலவரங்களுக்கிடையே சுதந்திரம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் ஒரு பகுதியாகவும் இந்துக்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதி இந்தியாகவும் பிரிந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதா? பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதா? என்ற முடிவெடுக்கும் பொறுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினைச் சார்ந்திருந்தது.

அதுவும் தமிழ் மொழி பேசும் தமிழ்நாடு முஸ்லிம்கள், உருது மொழி பேசும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர முடியுமா? என்ற பதைபதைப்பு ஏற்பட்டபோது அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு தீர்மானத்தைக் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றியது. அது என்ன தீர்மானம்?

"இந்தியா தான் எங்கள் தாய் நாடு! இஸ்லாம் எங்கள் மார்க்கம்!", என்று உரத்த குரலில் முழக்கமிட்டதன் மூலம் இந்திய நாட்டின்மேல் முஸ்லிம்களுக்கு உள்ள பற்றினை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் காயிதே மில்லத் அவர்கள். ஆகவேதான் அவர் உயிரோடு வாழும் வரை அனைத்துத் தலைவர்களாலும் கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்டார். இந்திய முஸ்லிம்களின் நட்சத்திரமாக விளங்கினார்.

ஆனால் அவர் மறைவிற்குப் பின்னர் அந்த ஒற்றுமை முஸ்லிம் தலைவர்களிடையே தேய் பிறையாகி விட்டது. எப்படி கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் என்ற இடதுசாரிகள் நம்பூதிபாட் தலைமையிலும் வலதுசாரிகள் மும்பையைச் சார்ந்த டாண்டன் தலைமையிலும் பிரிந்து செயலாற்றினார்களோ அதேபோன்று பனத்வாலா தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் சுலைமான் சேட் தலைமையில் தேசிய லீக் கட்சியும் இயங்கி வந்தன. இரண்டு தலைவர்களுமே பாராளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர்கள். மற்ற கட்சித் தலைவர்களாலும் மதிக்கப் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் பிரியாமல் இருந்திருந்தால் அவர்களே பாராளுமன்றத்தில் நுழைவதற்காக மற்றக் கட்சிகளின் கதவுகளைத் தட்ட வேண்டிய நிலையும் சில தகுதி இல்லாத தலைவர்களின் வீடுகளில் சீட்டுக்காக காத்து இருந்த வேதனையான நிகழ்ச்சிகளெல்லாம் நடந்திருக்காது.

அதேபோன்ற அவல நிலைதான் இடது-வலதுசாரி கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்பட்டது! அவர்களால் தனித்தன்மையுடன் முழு பலத்துடன் பாராளுமன்றத்திலோ சட்டசபையிலோ நுழைய முடியவில்லை. வலதுசாரிகளிடமிருந்து பிரிந்து அரசியல் நடத்திய யு.சி.பி.ஐக்கும் அதேநிலைதான். அதன் பின்பு தங்கள் தவறை உணர்ந்து கம்யூனிஸ்டுகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டதால் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் திரிப்புரா மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தும் பாராளுமன்றத்திலும் அதிக எண்ணிக்கையுடன் நுழைய முடிந்தது.

அதேபோன்ற கூட்டணி ஒன்றை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் ஏன் உருவாக்கக்கூடாது? 100 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் ஓட்டுப்போட உரிமை உள்ளவர்கள் 71 கோடி மக்கள். இதனில் 15 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆவர். 543 மக்கவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் வெறும் 34 பேர்கள்தான். முஸ்லிம்கள் ஏன் பிற கட்சிகளின் ஓட்டு வங்கியாக மாற வேண்டும்? இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபோது இருந்த அரசியல் கட்டுக்கோப்பு இன்று இல்லாததால்தானே? 1991ஆம் வருடம் நடந்த தமிழக சட்டசபைத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் பிரிந்து இருந்ததால் சட்டசபையில் சோபிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், 1992ஆம் வருடம் டிசம்பர் 6இல் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு சென்னையில் நடத்திய மீலாது ஊர்வலத்தில், மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தில் நாம் வாய்பொத்திய ஊமையாக மாறினோம். அதன் பிறகு சிராஜுல் மில்லத் அப்துல்சமது அவர்களும் அப்துல்லத்தீப் அவர்களும் ஒற்றுமையின் அவசரத்தை உணர்ந்து இணைந்தார்கள்.

அவர்களின் கூட்டு முயற்சிற்குப்பின், நான் சென்னை பைக்கிராப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் ஜம்ஜம் ரியல் எஸ்டேட்ஸ் ஸ்தாபனம் நடத்திய ஈத் மிலான் நிகழ்ச்சியில் இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். அதனைத் தொடர்ந்து அவர்கள் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலிருந்து மெரினா கடற்கரைவரை மிக பிரமாண்டமான ஊர்வலம் ஒன்றையும் மெரினாவில் வைத்து பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினர். அதன் பாதுகாப்புப் பணியினை நான் டி.சியாக இருந்த போதுக் கவனித்தேன். அதன் பின்பு ஜனாப். அப்துல்லத்தீப் அவர்கள் 1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ்கூட தேசிய காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்று போட்டி போட்டது; சோபிக்க முடியவில்லை. அதன்பின்பு இரண்டு காங்கிரஸும் இணைந்து போட்டி போட்டு கூடுதல் எம்.பீ, எம்.எல்.ஏக்களைப் பெற்றது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் பல இருப்பதால் மே மாதம் 13ந்தேதி நடக்கவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில்கூட போட்டிப் போட முடியாத பரிதாப நிலை உள்ளது. பேராசிரியர் காதர் முகைதீனைத் தலைவராகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தேசிய லீக்க்கும் இரு பிரிவுகளாகி கோனிகா பசீர் தலைமையிலும் இனாயத்துல்லா தலைமையிலும் தமிழ் மாநில லீக் என்ற கட்சி சேக் தாவூத் தலைமையிலும் இயங்கி வருகின்றன.

5.5.1970 அன்று நள்ளிரவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம்களிடையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பேருரை நிகழ்த்தியபோது கீழ்கண்டவாறு கூறினார்கள்:

"நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம்; ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்களின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன? எப்போது நாம், "இறைவனின் கயிறை ஒற்றுமையுடன் பற்றிப் பிடித்துக் கொள்" என்ற வசனத்தை மறந்தோமோ, அப்போதே தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில், அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினருக்கு வேண்டுமானால் அரசியல் வேறு, மதம் வேறு என்றிருக்கலாம்! ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப்படி ஒன்று சேர வேண்டும்…"

1998ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாயத் தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஷ்டமாக அந்த இயக்கம் மூன்றாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதினும் மற்றொரு இயக்கத்திற்கு பேரா. ஜவாஹிருல்லாஹ்வும் மூன்றாவது இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும் தலைவர்களாக இருக்கின்றனர். பேரா. ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான இயக்கம் அரசியல் சார்ந்த 'மனிதநேயக் கட்சி'யினை பிப்ரவரி மாதம் தொடங்கியது. காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் ஓர் அரசியல் கட்சியினை நடத்தி வருகிறார்.

மே மாதம் 13ஆம் தேதி நடக்கவிருக்கும் மக்களவைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் தன் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. மற்ற முஸ்லிம் இயக்கங்கள் அ.இ.அ.தி.மு.க. தங்களை வெற்றிலை பாக்கு வைத்து மரியாதையோடு அழைத்து ஆதரவு தரவேண்டும் என எதிர் பார்த்தன. ஆனால் எப்போதுமே முஸ்லிம் சமுதாய மக்களை அலட்சியப் படுத்தும் அஇஅதிமுக அந்தக்கட்சிகளை கண்டு கொள்ளவில்லை எனப் பத்திரிகை செய்திகள் சொன்னதில் தவறில்லை என்றபடி ஜெயினுலாபுதினும் கோனிகா பசீரும் தாவூத் மியாக்கானும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 10 சதவீத மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் அமைப்புகள் நமக்கென பிறைச்சின்னத்தில் அல்லது வேறு தனிச்சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இல்லாமலில்லை.

நேற்று முளைத்த கட்சிகள் எல்லாம் தனிச்சின்னத்தில் போட்டி போடும்போது நமக்கு மட்டும் முடியவில்லையே அது ஏன்? உதாரணத்திற்கு நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வும் நடிகர் சிரஞ்சீவி பிரஜா சமாஜம் கட்சியும் உச்சநீதி மன்றம்வரை சென்று தனிச்சின்னத்தில் போட்டியிட உத்தரவு பெற்றுப் போட்டியிடுகின்றன. வட தமிழகத்தில் மட்டும் பிடிப்புள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களைப் பெற்றாலும் மக்களவைத்தேர்தலில் 2 இடங்களை திமுக கூட்டணியிலிருந்து பெற்றதோடல்லாமல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக உச்சநீதிமன்றத்தில் தனிச் சின்னம் ஒதுக்கீடு செய்ய மனு செய்திருக்கிறதே! ஏன் முஸ்லிம் அமைப்புகளின் செல்வாக்கு தமிழகமெங்கும் பரவியிருக்கும்போது நாம் தனிச்சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சி போல 2 சீட்டுகள் பெற்று, தனிச் சின்னத்தில் போட்டி போட முடியவில்லை? நமது அமைப்புகளிடையே ஒற்றுமை இன்மை முதல் காரணமாகும் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?

காயிதே மில்லத் அவர்களது சொற்பொழிவு தொலை நோக்குப் பார்வையில்லையா? தமிழகத்தில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடு பற்றி சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.

எந்தக் கட்சியில் தலைவரின் வழிக்காட்டலும் அரவணைப்பும் ஒற்றுமையும் இல்லையோ அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்ட சில செய்திகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 சட்டசபை உறுப்பினரைக் கொண்டிருந்தது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஒதுக்கியதால் ஒரு எம்.எல்.ஏ விலகினார்.

மதிமுகவில் 4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தலைவருடன் கொள்கை வேறுபாட்டால் இருவர் விலகினர்.

அஇஅதிமுகவில் தலைவர் உதாசீனம் செய்வதாக முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ உள்பட இருவர் குற்றம்சாட்டி ஒதுங்கி இருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

ஆனால் பா.ம.கவிலோ 20 எம்.எல்.ஏக்களில் ஒருவர்கூட ஊசலாடவில்லையே அது ஏன்? அதன் தலைவர் வன்னியர் சமுதாய உரிமைக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு, கடும் போராட்டத்திற்குப் பின் 20 சதவீத ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததன் மூலம் 10 ஆண்டுகளாகத் தன் வன்னிய சமுதாய மக்களை பலவேறு துறையிலும் அமர்த்தி அழகு பார்க்கிறார். ஆகவேதான் 1991ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் என்ற ஒரே ஒரு எம்.எல்.ஏவைப் பெற்றிருந்த பாமக, ராமதாஸின் ராஜதந்திரத்தின் மூலம் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 20 எம்.எல்.ஏக்களைப் பெற்று பல்வேறு சலுகைளையும் தன் சமூகத்தினருக்குப் பெற்றுத் தந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.

ஆனால் முஸ்லிம் சமூதாயம் 2 அல்லது 3 எம்.எல்.ஏக்களுக்கு தவமிருப்பதேனோ? ஏனென்றால் நம் சமுதாய தலைவர்களிடையே ஒற்றுமைக் குறைவும் "நானா? நீயா? பெரியவன்" என்ற ஈகோதானேக் காரணம்.

சகோதர யுத்தத்தில் பதவியிழந்த மகாபாரதக் கதையை நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியாக

மேய்ந்த 4 காளை மாடுகள் புலிக்குப் பசி தீர்த்த, மற்றும் வயதான தந்தை சொத்துக்காகச் சண்டையிட்ட மகன்களிடம் ஒரு விறகுக் கட்டைக் கொடுத்து ஒற்றுமையின் படிப்பினை பற்றி போதித்த சமூகக் கதைகளை நாம் மறந்து விட்டோமா?

ஆகவே இஸ்லாமிய சமுதாயமும் அதன் தலைவர்களும் விழித்துக் கொண்டு வருகிற 2011 சட்டசபைத் தேர்தலில் சமுதாயக் கூட்டணி ஏற்படுத்தி அதிக இடங்களைப் பெற்று, தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட என்ன வழி என இப்போதிருந்தே ஆராய வேண்டாமா? மத்தியில் 15 கொள்கை திட்டம் போட்டும் 27 சதவீடு ஒதுக்கீடு கொண்டு வந்தும் தமிழகத்தில் 3.5 சதவீத ஒதுக்கீடு தந்தும் எத்தனை முஸ்லிம்கள் பயனடைந்தார்கள்? என்ற வெள்ளை அறிக்கையினை நாம் பெற வழி செய்ய வேண்டாமா? அவ்வாறு கேட்டால்தானே அரசு தாராள மனதுடன் இருந்தும் அதனை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளைத் தோலுரித்துக் காட்ட முடியும்? சமுதாய மக்களிடையே ஆகிரத்துக் கல்வியுடன், அரசியல் கல்வியும் போதிக்க வேண்டும்.

நான் சென்னை செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளிவாசலில் ஒரு வெள்ளி அன்று ஜும்மாத் தொழுகைக்குச் சென்றிருந்தேன். அங்கு, செயலாளர் சேக்தாவூது அவர்கள் ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதில் வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்களில் ஒட்டப் பெற்றுள்ளது. விடுபட்ட வாக்காளர்கள் விண்ணப்பிக்கவும் என்று அறிவுரை வழங்கினார். உண்மையிலே இதுபோன்ற அறிவிப்புகள்தான் நான் சொன்ன அரசியல் கல்வியாகும். 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்துக்கள் 60 சதவீதம் ஓட்டளித்தபோது முஸ்லிம்கள் 46 சதவீதமும்தானே ஓட்டளித்துள்ளார்கள்? நமது உரிமையை விட்டுக்கொடுக்கலாமா? ஆகவே ஒவ்வொரு முஹல்லாவிலும் பூத் கமிட்டிகள் அமைத்து, விடுபட்ட வாக்களர்களைச் சேர்க்கவும் தேர்தல் அன்று அனைத்து முஸ்லிம்களும் ஓட்டுப் போடவும் வழிவகை செய்ய வேண்டும். அனைத்து மக்களும் வாக்குச்சீட்டுகள் பெற்றிருக்கிறார்களா? என்று ஆய்ந்து அதனைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் வாக்குச்சீட்டு அடையாள அட்டை பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ரயில் டிக்கட், விமான டிக்கட் ஆகியவைகளைத் துரிதமாகப் பெற உதவும்.

பெரும்பாலும் நமது சமுதாயப் பெண்கள் ஓட்டுப் போடுவது குறைந்தே இருக்கிறது. வருகிற மக்களவையில் நிச்சயமாகப் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். அப்போது படித்த சமுதாயப் பெண்களும் அரசியலில் அங்கம் வகிக்க வாய்ப்புண்டு. அதனைப் பெண்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் ஓட்டுப் போட அழைத்துச் செல்ல வேண்டும். சமீபத்தில் சென்னை பிராட்வேயில் வாக்கிங் சென்றபோது சுவரில் ஒரு போஸ்டர் விளம்பரத்தைக் கண்டேன். அதில் டாக்டர் ரசீத் கலிபா கடைசி நபி என்றும் அவர் வெளியிட்ட திருத்திய குர்ஆன் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் மாளிகையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. நல்ல வேளையாக சுன்னத் ஜமாத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீஸார் ஆயிரத்திற்கு மேலான பிரதிகளைப் பறிமுதல் செய்ய வழிவகை செய்தனர். இது போன்ற இஸ்லாத்திற்குப் புறம்பான காரியங்களில் யார் நடந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்க ஆதம், ஹவ்வா (அலை) சந்ததியினர் ஒற்றுமையாக இருந்தால் தானே கிடைக்கும்?

சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு, “சமத்துவ-சகோதரத்துவத்தினை உலகத்திற்கு முதன் முதலில் போதித்தது இஸ்லாம்" என்றார். மஹாத்மா காந்தி, “ஜனநாயகத்தினை போதித்த முதல் மதம் இஸ்லாம்” என்றார். பேராசிரியர் ஹர்குரோன்சி, “ரசூலுல்லா மக்காவினை வென்று அங்குள்ள குரைசியருடன் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கை தான் 1400 ஆண்டுகளுக்குப் பின்பு அமைந்த ஐக்கிய நாடு சபைகளின் அடித்தளம்" என்றார்.

தொழுகைக்குச் செல்லும் போது தலையில் தொப்பி அவசியம் இல்லை என்று போதனை செய்தவர்கூட சென்னையில் வேட்பு மனு செய்யும் போது சமுதாய மக்களின் ஓட்டுக்களைப் பெறத் தலையில் தொப்பி அணிந்து சென்றதினைப் பத்திரிகை செய்தியாக வெளியிட்டிருந்தது. அவ்வாறு ஓட்டு வாங்க தொப்பி அணிந்து சென்றவர்களும் எல்லாம் வல்ல அல்லாவின் உம்மத்துக்கள் உயர்ந்த வாழ்க்கைப் பெறவும் வருகின்ற 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 10 எம்.எல்.ஏக்களாவது பெற அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒன்றாகக்கூடி ஆலோசித்து கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவ்வாறு இல்லையென்றால் ஜனநாயகத்தில் சமுதாயத்திற்குத் தாழ்வு ஏற்படும். ஆகவே ஒற்றுமை என்ற பாசக்கயிறை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள சமுதாயத் தலைவர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்;.டி, ஐ.பி.எஸ்(ஓய்வு)

ஒற்றுமையே தீர்வு

குறிப்பு : "ஒற்றுமையே தீர்வு " என்ற தலைப்பில் கடந்த டிஸம்பர் 2008இல் நமது தளத்தில் வெளியான ஆக்கத்தையும் படிக்கவும்.

சியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி


சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-2009 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை - சத்தியமார்க்கம் நடுவர் குழு.

1860ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த யூதனான தியோடோர் ஹெஸிலின்(Theodor Herzl) சிந்தனையில் உதித்து, 1896ஆம் ஆண்டு உருப்பெற்றதே சியோனிசம்(Zionism). அடிப்படையில் வன் ஒரு பத்திரிக்கையாளன். 'Altneuland' [புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலம்] என்ற நாவலை வன் எழுதியுள்ளான். அந்நாவலின் கற்பனையே தற்போது நிஜமாகி 'இஸ்ரேல்'ஆக நிற்கிறது.

யூதர்கள் அனைவருமே சியோனிஸ்ட்கள். அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை அழித்து, பாலஸ்தீன பூமியைக் கபளீகரம் செய்வதேயாகும். அதனடிப்படையில் சூழ்ச்சிகளிலிருந்து படுபயங்கரக் கொலைவெறித் தாக்குதல்கள்வரை செய்யத் துணிந்தவர்கள் யூதர்கள். அவர்களின் இலக்கு முஸ்லிம்களை வேரறுப்பதேயாகும். சியோனிச பயங்கரவாதம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை அழித்தொழிப்பதற்கான செயல்திட்டத்தை இங்குக் காண்போம். சியோனிஸ்டுகளின் முதுகெலும்பாக உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அசைவுகளைச்செயலிழக்கச் செய்வது மிக முக்கியப் பணி என்பதால் அதனையும் உள்ளடக்கியதாக நமது திட்டம் இருக்க வேண்டும்.

1. முஸ்லிம்களின் ஒற்றுமை

"நிச்சயமாக முஃமின்கள் யாவரும் சகோதரர்களே" [அல்குர்ஆன் 49:10]

இறைவனின் வார்த்தைகள் கூறியவற்றைச் செயல்படுத்திக் காட்டிட வேண்டிய நிலைமையும் கடமையும் நமக்கிருக்கின்றன. "முஸ்லிம்கள் அனைவரும் ஓருடல் போன்றவர்கள். உடலின் ஒருபகுதி காயம்பட்டால் மற்ற பகுதிகளும் வேதனைக்குள்ளாகின்றன" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பாலஸ்தீன் - பைத்துல் முகத்தஸ் - முஸ்லிம்களின் இதயம். இதயத்தில் ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்த உடலின் மற்ற பாகங்கள் ஒத்துழைத்தேயாகவேண்டும் என்பது விதி.

ஒற்றுமையிழந்ததால் நாம் இழந்தவை எராளம். வரலாற்றைப் படிப்பவர்களுக்கு இது நன்றாகவே விளங்கும். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமிய ஆட்சி வெளியேற்றப்பட்டதற்கான காரணம் ஆட்சியாளர்களிடையே ஒற்றுமை இல்லாது போனதுதான். கிலாஃபத்தினுடைய வீழ்ச்சி ஒற்றுமையின்மையால் ஏற்பட்டதாகும். வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளாத எந்தச் சமுதாயமும் வெற்றிப்பெறாது என்பது உறுதி.

யூதர்கள் அனைவரும் யூதன் என்ற அடிப்படையில் ஒன்றுசேர்ந்தனர்- சியோனிசம் சாதித்தது. முஸ்லிம்கள் அனைவரும் 'உம்மத்தே முஸ்லிமா'வாக ஒன்றிணையும்போது சியோனிசம் மட்டுமல்ல முழு உலகமும் இஸ்லாத்தின் முன் தோல்வியடையும் என்பது மறுக்கவியலாத உண்மை. முஸ்லிம்களே! உங்களுடைய மனங்களில் உள்ள குரோதத்தையும் காழ்ப்புணர்வையும் கருத்து வேறுபாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றிணைவீர்!

2. ஈமானிய ஆயுதம்

ஈமான், தக்வா ஆகியவையே பலமான அயுதங்கள் என்பதை பத்ர் களம் சாட்சி கூறுகின்றது. "அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள், நீங்கள் வெற்றிபெறலாம்." என, போர் சூழலைப் பற்றி விவரிக்கும் இறைவசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.

சிலுவைப்படை வீரர்கள் மிக அதிக எண்ணிக்கையிலும் ஒற்றுமையாகவும் இருந்தார்கள். ஆனாலும் முஸ்லிம் வீரர்களிடம் தோற்றுப்போனார்கள். காரணம், அவர்கள் ஒழுக்க சீலர்களாக இல்லை, இறைவனின் வழிகாட்டுதலிலும் இல்லை.

உமர்(ரலி) மற்றும் அவர்களுக்குப் பின்வந்த கலீஃபாக்களுடைய ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியப் பிரதேசம் பரந்து விரிந்தது. வெற்றிகள் குவிந்தன. காரணம், அவர்களிடம் இறையச்சமே மேலோங்கி இருந்தது. அவர்களுடைய உலக வாழ்க்கை மறுமையை நோக்கமாகக் கொண்டிருந்தது. இறைவனின் நேர்வழிகாட்டுதலைப் பற்றிப் பிடித்துக் கொண்ட சமூகமாக அவர்கள் திகழ்ந்தார்கள்.

இன்றைய தேவையும் இதுதான். வெறுமனே ஒன்றிணைந்துவிட்டால் மட்டும் போதாது. குர்ஆனின் கட்டளைகளின்படியும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நமது வாழ்வை அமைத்துக்கொள்வதே வெற்றிக்கான பாதை.

நம்முடைய ஈமான் எதிரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

3. அரபுநாடுகளின் விடுதலை(சிந்தனையில்)

அமெரிக்கா மற்றும் சியோனிசத்தால் கைவிலங்கிடப்பட்ட அராபிய எண்ணெய் வள நாடுகள், தமது அடிமை நிலையை உணருதல் வேண்டும். அமெரிக்காவின் மீது ஆதரவு வைக்கும் இந்நாடுகள், தங்களுடைய ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏன் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கவில்லை? "அவனே தான் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குகிறான்; தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றான்" எனக் குர்ஆன் கூறுகிறது.

"நிராகரிப்பாளர்களை உங்களுடைய உற்ற துணைவர்களாக்கிக் கொள்ளாதீர்கள்" என இறைவன் தெளிவாகவே கூறுகின்றான். சத்தியம் இருக்கும்போது தெளிவான அசத்தியத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும் ஆட்சியாளர்களே, உங்களுடைய நிலையை நீங்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால் மறுமையில் எந்த முகத்துடன் அல்லாஹ்வை சந்திப்பீர்கள்? அந்தந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், ல்லாஹ்வின் கட்டளைகளை உதாசீனப் படுத்தும் முஸ்லிம் அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். அமெரிக்க மற்றும் மேற்கத்திய தயவு இல்லாமல் நாம் செயல்பட முடியும் என்பதை உணரவேண்டும். அதற்காகப் பொருளாதார, வணிக, விஞ்ஞான, நிர்வாக மற்றும் இன்னபிற செயல்பாடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படுதல் வேண்டும். மிகச்சிறிய நாடான கியூபா இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அல்லாஹ் ஒருவனே மாலிக்குல் முல்க்.

4. அரபுநாடுகளின் விடுதலை(செயல்பாட்டில்)

அமெரிக்க, ஐரோப்பிய, சியோனிச நிறுவனங்களை மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேற்றுதல் வேண்டும். இந்தியா, பிரிட்டனிடம் அடிமைப்பட்டது 'கிழக்கிந்தியக் கம்பெனி' என்ற வணிக நிறுவனத்தின் பரிணாமத்தால்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பாலஸ்தீன பூமியைக் கவர்ந்துகொள்வதற்கான முதல் சியோனிசத் திட்டம் 'நிலவங்கி' (Land Bank)யின் மூலமாகத்தான் நடந்தேறியது. பெப்ஸி, கொகோ கோலா, மெக்டொனால்ட், பிபிசி, சிஎன்என் மற்றும் பல மேற்கு நிறுவனங்களை நம்முடைய பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுதல் வேண்டும். அவற்றின் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணித்தல் வேண்டும்.

இந்த நிறுவனங்களால் நாட்டுக்கு நன்மைகள் கிடைப்பது போன்ற மாயை ஏற்படுகின்றது. அது வெறும் கானல் நீர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருளியல், வணிகவியல் படித்தவர்கள் இதனைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.

அரபுநாடுகளின் பெரும்பாலான செல்வங்கள் அமெரிக்க வங்கிகளிலேயே முடக்கப்பட்டுள்ளன. அவை அங்கிருந்து எடுக்கப்படுமானால் அமெரிக்க அரசாங்கம் பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனப் பொருளியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

2000ஆம் ஆண்டுவாக்கில் Dr.சுலைமான் அல்முன்திரி என்ற பொருளியல் அறிஞர் கூறினார்:

"அமெரிக்காவில் வைப்புச்செய்யப்பட்டுள்ள செல்வங்களினாலேயே 4மில்லியன் அமெரிக்கர்களின் வயிறு நிறைகிறது. அதாவது தற்போதைய [2000ஆம் ஆண்டின்] கணக்கின்படி 800பில்லியன் டாலர் அரேபியப் பணம் வெளிநாடுகளில் உலாவிக்கொண்டிருக்கிறது. இதில் 66% பணம் அமெரிக்க வங்கிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது."

அமெரிக்க, சியோனிச நிறுவனப் பொருட்களை வாங்குவது ஹராம் என்றும் அவற்றைப் புறக்கணிப்பது மிக உயர்ந்த வாஜிப் என்றும் Dr.யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.

உலகின் நம்பர் 1 கடன்கார நாடு அமெரிக்காதான். அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் 2007ஆம் ஆண்டில் 2.8டிரில்லியன் டாலர் ஆகும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும். 2007ஆம் ஆண்டின் இராணுவ நிதி ஒதுக்கீடு 2.7டிரில்லியன் டாலர். அமெரிக்கா பொருளாதார ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும்கூட வீழ்ச்சியை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய சுற்றுலாத்துறை 80% வீழ்ச்சியடைந்துவிட்டது. வியாபாரம், விவசாயம், கட்டுமானம் ஆகிய துறைகளிலும் பாரிய வீழ்ச்சியும் நட்டமும் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது.

எண்ணெய்க் கிணறுகளைப் பரிபாலனம் செய்யும் உரிமை அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே என மாற்றுதல் வேண்டும். அமெரிக்காவின் UNOCAL நிறுவனம் முஸ்லிம் நாடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட வேண்டும்.

5. அநீதிக்கு எதிரான போர்

இஸ்ரேல், பூகோள அடிப்படையில் அரபு தேசங்களால் சூழ்ந்து முற்றுகையிடப்பட்ட இடம். மத்தியக் கிழக்கு தேசங்கள் ஒன்றிணைந்து இஸ்ரேலை சூழ்ந்து தாக்க வேண்டும். அநீதியாளர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களே, அவர்கள் பூமியில் எங்கிருந்தபோதிலும் சரியே.

"உங்களை எதிர்த்துப் போர் புரிபவருடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும் வெட்டுங்கள். இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றியவாரே அவர்களை வெளியேற்றுங்கள். ஏனெனில் ஃபித்னா கொலையைவிடக் கொடியதாகும்" [அல்குர்ஆன் 2:190-191]

முயற்சி செய்யாதவரை அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தமாட்டான். மேலும் அல்குர் ஆனின் 4:88-91 வசனங்கள் பல்வேறு விடயங்களை கூறுகிறது. NGO என்ற பெயரில் தீங்கு செய்ய வருபவர்களும் அழிக்கப்படவேண்டியவர்களே.

உலகின் கடைசி ஒரு யூதன் உள்ளமட்டில் சியோனிசம் ஒழியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும்.

"ஒவ்வொரு மரமும் தனக்குப் பின்னால் ஓர் யூதன் ஒழிந்திருகின்றான் இவனைக் கொல் என கூறும்" என்ற ஹதீஸ் நினைவாகும் நாள் வெகுதொலைவிலில்லை.

உசாத்துணைவன்

1. நிலமெல்லாம் ரத்தம்- பா.ராகவன்

2. தாலிபன் - பா.ராகவன்

3. அல்ஹஸனாத் மாத இதழ்- இலங்கை

4. மீள்பார்வை இதழ்- இலங்கை

5. அல் முஜ்தமஃ

6. ததப்புரே குர் ஆன் - மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்)

7. ஜிஹாத் ஃபில் இஸ்லாம் - மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

ஆக்கம்: அழகன்

பொள்ளாச்சி: உமருக்கு வாய்ப்பு


பொள்ளாச்சி தொகுதியை ம.ம.க அறிவித்த போது பல பேருடைய புருவங்கள் உயர்ந்தன. கவுண்டர்கள் அதிகமாக உள்ள தொகுதி என்று பரவலாக அறியப்பட்ட பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னால் சுமார் 28 சதவீதம் முஸ்லிம் வாக்கு களை கொண்ட தொகுதியாக உள்ளது. கோவையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கும் உக்கடம், குனியமுத்தூர், செல்வபுரம் போன்ற பகுதிகள் பொள்ளாச்சியில் சேர்க்கப் பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெருகியுள்ளது.


மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி ம.ம.க வேட்பாளர் உமர் அவர்கள் வணிகர், வியாபார ரீதியில் பல்வேறு மக்களுடன் தொடர்பு உள்ளவர். தமுமுக மாநில செயலாளராக தற்போது இருப்பதால் சமுதாய மக்களுக்கும், ஜமாஅத்துகளுக்கும் நன்கு அறிமுகமானவர். இதனால் தொகுதியின் பல்வேறு ஜமாஅத்துக் களின் ஆதரவு பெருவாரியாக ம.ம.க வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.


மேலும், கோவையில் வசிக்கும் மலையாளிகள் மற்றும் கிறித்தவர்கள் உமருக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தமுமுக வினர் சிறப்பான மனிதநேய சேவை களை தொடர்ந்து செய்து வருகின்ற னர். இதனால் தமுமுகவின் சேவைகளினால் நன்மதிப்பு கொண்ட மக்களின் வாக்குகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் பலம்.


எதிர் அணிகளை பொறுத்தவரை திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் சுகுமாரன், தேமுதிகவின் பாண்டியன் என அனை வருமே கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள். தொகுதியில் உள்ள 40 சதவி கித கவுண்டர் இனமக்களின் வாக்குகளை நம்பியே முக்கிய கட்சிகள் இவர்களை களத்தில் இறக்கி உள்ளன. இதில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் ஆரம்பித்துள்ளனர். அந்த கட்சியின் தலைவர் பெஸ்ட் ராம சாமி பொள்ளாச்சியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதனால் கவுண் டர் இன மக்களின் வாக்குகள் சிதறிப் போகும் சூழ்நிலை உள்ளது. மேலும் திமுகவின் வேட்பாளர் சண்முக சுந்தரம் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வர். இதனால் அதிமுகவுக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் கவுண்டர் இன ஓட்டுக் களை பெறுவதில் போட்டி நிலவுகிறது.


ம.ம.கவை பொறுத்தவரை தொகுதியின் தலித் இன மக்களின் ஆதரவும் கிடைத்திருப்பது மற்றறொரு பலம். வால்பாறை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. 10 சதவீதம் உள்ள த­த் மக்களின் ஆதரவும் PUCL, DYF மற்றும் மனித உரிமை மற்றும் NGO அமைப்பு களின் ஆதரவும் மமகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதால் உமர் அவர்கள் வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது. இப்போதைக்கு அதிமுக., ம.ம.க., கொங்குநாடு பேரவை என பொள்ளாச்சி தொகுதியில் கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் ம.ம.க வேட்பாளர் உமர் தொடர்ந்து எதிர் நீச்சல் போட்டு பொள்ளாச்சியை கைப்பற்றுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

சாதிப்பார் சலிமுல்லாஹ் கான்



இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி முஸ்லிகள் அதிகமாக வாழக் கூடிய தொகுதிகளில் ஒன்று. மொத்த வாக்காளர் களில் 20 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய இத்தொகுதிகயில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் ஹஸன் அலி எனும் முஸ்லிம் ஒருவரே சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சலிமுல்லாஹ் கான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சலிமுல்லாஹ் கான் தொகுதியில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கல்வி உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததானம் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சேவைகளுக்கு பின்புலமாக இருந்து முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களிடமும் நன்கு அறிமுகமானவர். சலிமுல்லாஹ்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தொண்டர்கள் உற்சாகத்துடன் பிரச்சார களத்தில் இறங்கி விட்டனர். ராமநாதபுரம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் அணிகளைப் பொறுத்தவரை தொகுதியில் 30 சதவிகிதம் இருக்கும் முக்குலத்தோர் களின் வாக்குகளை நம்பி திமுக சார்பில் நடிகர் ரித்திஷ், அதிமுக சார்பில் சத்திய மூர்த்தியும், பாஜக சார்பில் திருநாவுக்கர சரும் களமிறங்கி உள்ளனர். இதனால் முக்குலதோர்களின் வாக்கு சிதற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.தி.மு.க சார்பில் சிங்கை ஜின்னா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறை கடலாடியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். மற்றபடி சமுதாய மக்களிடமோ தொகுதியிலோ பெரிய அளவு அறிமுகம் இல்லாதவர்.


திமுக வேட்பாளர் ரித்திஷ் பணபலம் உடையவராக இருந்தாலும் சீட்டு கிடைக்காத விரக்தியிலும், ரித்திஷின் வளர்ச்சியிலும் பொறாமை கொண்ட திமுகவினரே ''உள்குத்து'' வேலைகளில் இறங்கிவிட்டதால் ரித்திஷ் கடும் மன வெறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னில் நடைபெற்ற கோஷ்டி மோதல் வழக்கில் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருவதாலும் அவரது இமேஜும் சரிந்துள்ளது. பிரச்சாரமும் தொய்ந்துள்ளது.


அதிமுக சார்பில் சத்திய மூர்த்தி ஒரு பக்கம் பிரச்சார வேகத்தை கூட்டினாலும் ஊழல் கறை படிந்தவர் என்பதால் முக்குலத்து மக்களிடம் கூட அதிருப்தி நிலவுகிறது. மேலும், பா.ஜ.க சார்பில் களமிறங்கியுள்ள திருநாவுக்கரசரும் முக்குலத்தோரையே நம்பி இறங்கியுள்ள தால் முக்குலத்தோர் வாக்கு வங்கி பங்கு போடப்படுவது தவிர்க்க முடியாது என்றே கருதப் படுகிறது.


மேலும் பாஜகவின் திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தொகுதியில் மட்டுமே சிறிதளவு செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2006 சட்டமன்ற தேர்த­ல் அறந்தாங்கியில் பாஜக பெற்ற வாக்கு 14,713. மொத்தமாக அதே சமயம் ஒட்டு மொத்தமாக இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி களில் பாஜக பெற்ற மொத்த ஓட்டுகளே 27,659 தான். இந்த திருநாவுக்கரசர்தான் வெற்றி பெற்று விடுவார் என்று சில முஸ்லிம் லட்டர் பேடுகள் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை திமுகவுக்கு ஆதரவாகவும், மமகவுக்கு எதிராகவும் தூண்டி வருகின்றன. பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமாருக்கு இராமநாதபுரம் நாடார் மக்களிடையே பெரிய செல்வாக்கு ஏதும் இல்லை. அதனால் துரோகிகளின் பிரச்சாரத்தை நம்பாமல் முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்த வாக்கையும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே நிச்சயம் அளிக்கும்.


மேலும் முக்குலத்தோர், த­த், முஸ்லிம் என்ற வரிசையில் தொகுதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் த­த் மக்கள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல தலித் அமைப்புகள், புதிய தமிழகம் ஆகியவை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாஹ் கானுக்கு ஆதரவு கேட்டு களத்தில் இறங்கியுள்ளனர். கூடவே மீனவ அமைப்புகளும், கிறித்தவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது.


தற்போது அதிமுகவின் சத்திய மூர்த்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சலிமுல்லாஹ்கானுக்கும் இடையே தான் பலத்த போட்டி நடந்து வருகிறது. எனினும் தன்மானத்தை மீட்டெடுக்க வேண்டும். துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியினர் சலிப்பில்லா மல் ஆற்றும் களப்பணியால் வெகுமக்கள் ஆதரவோடு சலிமுல்லாஹ் கான் வெற்றிக் கொடி ஏற்றுவது நிச்சயம்.
தொகுப்பு: இப்பி பக்கீர்

தமிழக மக்களுக்கு துரோகம்

தமிழக மக்களுக்கு துரோகம்: மகள் திருமணத்துக்கு, ராஜபக்சேவை அழைத்து விருந்து கொடுத்தவர், மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு




மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா, சீர்காழி வடகாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி ரசாயன குண்டுகளை பயன்படுத்தி ஈழத்தமிழர் இனத்தை கொன்று குவித்து வருகிறது. தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ராஜபக்சே செய்து வருவது போர் குற்றமாகும்.

ஈராக்கில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி குர்து இன மக்களை கொன்று குவித்தவர் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதனால் குற்றம் சாட்டப்பட்டு சதாம்உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போல் சற்றும் குறையாத வகையில் ராஜபச்சே தமிழர் இன மக்களை கொன்றுள்ளார்.

எனவே ராஜ்பக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இலங்கை ராணுவ போர் நிறுத்தம் என்பது காலம் கடந்த ஞான உதயமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும். தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வந்து விருந்து கொடுத்தவர்தான் மணி சங்கர் அய்யர். எனவே தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.

இலங்கை பிரச்சினையில் இதுவரை மவுனம் காட்டிய அ.தி.மு.க.வையும் இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பேசினார்.


பேட்டியின் போது மனித நேய கட்சி நிர்வாகிகள் முகமது இர்பான், முசாவூதீன், முகமது ஜுனபர், அசரப் அலி உள்பட பலர் இருந்தனர்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

தமிழகத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் (சுயேட்சைகள் தவிர்த்து)

மத்திய சென்னை

ஹைதர் அலி (மனிதநேய மக்கள் கட்சி)
எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா (அ.தி.மு.க.)
யூனிஸ்கான் (பகுஜன்சமாஜ்)


வேலூர்

அப்துல் ரகுமான் (தி.மு.க.)
சவுகத்ஷெரீப் (தே.மு.தி.க.)
மன்சூர் அகமத் (பகுஜன் சமாஜ் கட்சி)
தாகிர் அகமத் (லோக் ஜன சக்தி)

திருவண்ணாமலை

அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)

பொள்ளாச்சி

இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சி)
எஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சி)

திருச்சி

மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.)

மயிலாடுதுறை

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)

தேனி

ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)

ராமநாதபுரம்

சலிமுல்லாகான் (மனிதநேய மக்கள் கட்சி)
சிங்கை ஜின்னா (தே.மு.தி.க.)

திருநெல்வேலி

எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)

புதுச்சேரி

அசனா (தே.மு.தி.க.)

சட்டத்தின் பிடியில் இரு சண்டாளர்கள்!

கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து, மோடியின் கண்ணசைவில் கரிக்கட்டையாக்கப்பட்ட முஸ்லிம்கள் மூவாயிரம்பேர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஏசான்ஜாப்ரியும் ஒருவர். இக்கலவரம் தொடர்பாக ஜாப்ரியின் மனைவி, மோடி மற்றும் அவரது மந்திரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர்மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ஜாப்ரியின் மனைவி. இவ்வழக்கு தொடர்பாக தீர்பளித்துள்ள நீதிபதிகள்,

மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து மோடி மற்றும் அவரது சகாக்கள் சட்டத்தின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். இறைவன் நாடினால் சிறையின் வளையத்திற்குள்ளும் செல்லும் நாள்வரும்!

அடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்னாள் பத்திரிக்கையை விரித்தால் ஏதாவது ஒரு படப்பூஜையில் நடிகைக்கு பக்கத்தில் நின்றுகொண்டு குத்துவிளக்கு ஏற்றி போஸ் கொடுத்த முன்னாள் இந்தியன் வங்கி தலைவர் திருவாளர்.கோபாலகிருஷ்ணன் நினைவிருக்கிறதா? அவர்,முஸ்லிம்களுக்கு தமிழக அரசு இடஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததோடு மட்டுமன்றி, சங்பரிவார கும்பலுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியவர். இந்த சங்பரிவாரின் ஊதுகுழல், இந்தியன்வங்கி தலைவராக பதவியில் இருந்தபோது, மும்பை நிறுவனம் ஒன்றிற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 28 .ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ 70 .லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த இரு தீர்ப்புகளும் எதை உணர்த்துகிறது எனில், அல்லாஹ்வை மட்டும் நம்பிய காரணத்தால் ஒரு முஸ்லீம் அநீதிக்கு உள்ளானால் காலம் கடந்தாலும் அந்த முஸ்லிமுக்கு அநீதி இழைத்தவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒருவேளை இத்தகையவைகள் தங்களுடைய செல்வாக்கால் தண்டனையிலிருந்து தப்பித்தாலும், நாளை மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து ஒருக்காலும் தப்பமுடியாது என்பது திண்ணம்.

மயிலாடுதுறை நாடாளுமன்றம் தேர்தல் முன்னேறுகிறார் பேராசிரியர்

தஞ்சை டெல்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மயிலாடுதுறை வன்னியர், தலி­த், முஸ்லிம் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஆகும். மற்ற இன மக்களும் ஓரளவு செறிவாக இருக்கின்றனர். தொடர்ந்து 2 முறை காங்கிரஸின் மணி சங்கர் அய்யர் வென்ற தொகுதி இது. கடந்த பாராளுமன்ற தேர்த­ல் தான் வெற்றி பெற தமுமுகவே காரணம் என மணி சங்கரே பேட்டியின் போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.




தற்போது மயிலாடுதுறையில் ம.ம.க வேட்பாளராக களமிறங்கி இருக்கும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்க்கு தொகுதியின் அனைத்து மக்களின் ஆதரவும், உற்சாக வரவேற்பும் கிடைத்துள்ளது. படித்தவர், பொது வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவர். எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்ற இமேஜோடு சிறுபான்மை மக்களின் முழு ஆதரவை பெற்றுள்ளார். பேராசிரியர். தொகுதி முழுக்க உள்ள ஜமாஅத்துக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பேராசிரியருக்கு அனைத்து ஜமாஅத்துகளும் ஆதரவு அளித்துள்ளன.

மேலும், தொகுதியில் வலுவான வாக்கு வங்கியாக இருக்கும் த­லித்களின் ஆதரவும் பேராசிரியருக்கு உள்ளது. த­லித் அமைப்புகள், மீனவர் அமைப்புகள் பேராசிரியருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே போல் கிறிஸ்தவர்களின் ஆதரவும் தமுமுகவின் பணிகளால் கவரப் பட்ட நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உள்ளதால் பேராசிரியர் களத்தில் முன்னணியில் இருக்கிறார்.

எதிர் அணிகளைப் பொறுத்தவரை, தொகுதியில் இரண்டு முறை எம்.பியாக இருந்தும் மணி சங்கர் அய்யர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் பரவலாக உள்ளது. மேலும் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் கட்சியினர் மணி சங்கர் அய்யரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மே­ட உதவியால் திரும்பவும் சீட்டைப் பெற்ற அய்யருக்கு காங்கிரஸிலேயே பலத்த எதிர்ப்பு. திமுகவினரை வைத்துதான் காங்கிரஸுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறதாம். காங்கிரஸ்க்கு எதிராக தமிழ் ஆதரவு அமைப்புகளும் களமிறங்கி உள்ளன. இவர்கள் அதிமுகவையும் ஆதரிக்காததால் ம.ம.கவுக்கு அந்த ஓட்டுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அ.தி.மு.க வேட்பாளர் ஓ.எஸ். மணியனை பொறுத்தவரை தொகுதிக்கு நன்கு அறிமுகம் என்றாலும் ராஜ்ய சபா எம்.பியாக இருந்தபோதும் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதோடு, தொகுதியில் பெருமளவில் வசிக்கும் வன்னியர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்காததால் கோபத்தில் உள்ளனர். அதனால் தேவரினத்தை சேர்ந்தவரான மணியன் பா.ம.க உதவியைத்தான் நாட வேண்டியுள்ளது.

தற்போது மயிலாடுதுறை தேர்தல் களத்தில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுகவுக்கும் தான் பலத்த போட்டி நிலவுகிறது. சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ அமைப்புகள் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பட்டீஸ்வரம் தியாகிகள் சங்கம், மீனவர்கள் சங்கம், ம.ம.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பேராசிரியருக்கு தொகுதியில் வலுவான வாக்கு வங்கிகளான முஸ்லிம், தலி­த் மக்களும் இணைந்தாலே வெற்றி என்ற சூழ்நிலையில் நடுநிலை வாக்குகளை பெற்று விட்டால் பேராசிரியர் வெற்றி பெறுவது உறுதி. அதற்கான முயற்சியில் 90 சதவீதத்தை பேராசிரியர் அடைந்து விட்டார் என்றே கள நிலவரம் சொல்கிறது.

தோல்வி பயத்தில் தயாநிதிமாறன்?



மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு கடும் போட்டியாக மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர்அலி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறு கின்றனர். தயாநிதிமாறனின் பிரச்சாரத் திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹைதர் அலியின் பிரச்சாரமும் படு வேகமாக இருக்கிறது. மத்திய சென்னையின் சந்து பொந்துகளிலெல்லாம் ம.ம.க வேட்பாளரின் பிரச்சார வாகனம் நுழைந்து வருகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் செல்ல தயங்கும் குடிசைப் பகுதிகளில் கூட ம.ம.கவினர் பிரச்சாரத்திற்கு சென்று ஒட்டு வேட்டையாடி வருகின்றனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு தயாநிதி மாறன் தி.மு.கவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னால் அவருக்கு எதிராக நின்றால் தோல்வியைத்தான் தழுவ வேண்டும். அந்தளவுக்கு பண பலம் உடைய தயாநிதி மாறனை எதிர்ப் பது கடினம் என்று அதிமுக உட்பட அனைத்து கட்சிகளுமே தயங்கி நின்றன. அ.தி.மு.க சார்பில் எஸ்.எஸ். சந்திரன் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரும் ''தேவையில்லாமல் இறக்கி விட்டார்களே'' என்று புலம்பி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக ஹைதர் லி களமிறங்கியவுடன் தயாநிதி மாறன் அதிர்ந்தார் என்றால் முத­ல் சுதாரித்தது அ.தி.மு.க தான்.

தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய முஸ்லிம் சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற்று ஹைதர் அலி வென்று விடுவாரே என்ற எண்ணத்தில் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ். சந்திரன் மாற்றப்பட்டு மேன்சன் உரிமை யாளர் முஹம்மது அலி ஜின்னா நிறுத்தப்பட்டார். இது முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரிக்க தயாநிதி சசிகலா மூலம் செய்த வேலை என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இது ..கவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகத்தான் அரசியல் நோக்கர்களால் கருதப்படு கிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வுடன் ஜமாத் சந்திப்பு, முக்கிய பிரமுகர் கள் சந்திப்பு, வீதி வீதியாக தேர்தல் பிரச் சாரம் என தமுமுக, மமக தொண்டர் களோடு, ஹைதர் லி பம்பரமாக சுழன்று வருகிறார். கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

5 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு ஏதும் உருப்படியாக செய்யாதது தயாநிதிக்கு மைனஸ். மேலும் இலங்கை தமிழர் பிரச்சனையில் நாடகமாடி வரும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழ் அமைப்புகளின் பிரச்சாரம், வெகுஜன மக்களை, சிந்தனையாளர் களை தி.மு.கவுக்கு எதிராக சிந்திக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.கவை பொறுத்த வரை திமுகவுக்கு எதிரான வோட்டுக் களை பெறக் கூடிய அளவில் தகுதியான வேட்பாளர் இல்லாதது அ.தி.மு.க தொண்டர்களே யார் இவர் என்று கேட்க கூடிய நிலையும் முஸ்லிம் சமூக மத்தியில் துளியும் அறிமுகம் இல்லாததும் அ.தி.மு.க வேட்பாளரின் மைனஸ், தே.மு.தி.கவும் வேட்பாளரை அறிவித் துள்ளது மிகச் சிறுபான்மை சமுதாயமான மார்வாடி இனத்தை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் தொகுதியில் சற்றும் அறி முகம் இல்லாதவர்.

இவையெல்லாம் ம.ம.க வேட்பாளர் ஹைதர் லிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. மேலும் தொகுதியில் இருக்கும் கிறிஸ்தவ, லித் மக்களின் ஆதரவு மனித உரிமை அமைப்புகளின் ஆதரவு என பரவலாக தொகுதியில் ஆதரவை பெற்று தற்போது த்திய சென்னையில் தயாநிதியா, ஹைதர் லியா என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவுக்கு ஆதர வாக சுற்றுப் பயணம் செய்ய இருந்த தயாநிதியை கலைஞரே ''நீ உன் தொகுதிய மட்டும் கவனமாக பார்'' என்று சொன்னதாக தகவல். இதனால் குடும்பத் தோடு தெருத் தெருவாக சுற்றி வருகிறார் தயாநிதி.
ரயில் என்ஜின் சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து விட்டால் ம.ம.க வேட்பாளர் ஹைதர் அலியின் வெற்றி உறுதிப்பட்டு விடும். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் மத்திய சென்னையில் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஹைதர் அலி வெற்றிக் கனியை பறித்தெடுப்பார் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.