திங்கள், 20 ஏப்ரல், 2009

பாபர் மஸ்ஜித்; காங்கிரசை காப்பாற்ற வரலாற்றை மறைக்கும் பிரதமர்!


காவி வெறியர்களால் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் டிசம்பர் ஆறு அன்று முஸ்லீம் அமைப்புகள் நினைவுகூர்வார்கள்.அன்றையதினம் பாராளுமன்றத்தில் பாபர் மசூதி பிரச்சினை எழுப்பப்பட்டு கூச்சல் குழப்பமாகி அவைநடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும். டிசம்பர் ஏழு அன்று எல்லாரும் பாபர் மசூதியை மறந்துவிடுவார்கள். பிறகு அடுத்த ஆண்டு டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதி நினைவுக்கு வரும். ஆனால் வழக்கத்துக்கு மாற்றமாக இந்த தேர்தலில் பாபர் மசூதி பிரச்சினை சூடு பறக்க விவாதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணி மத்திரிசபையில் அங்கம்வகித்துக்கொண்டு, தனது மாநிலத்தில் காங்கிரசை எதிர்த்து தேர்தல் களம் காணும் லல்லுபிரசாத்யாதவ், ஒரு பிரச்சார மேடையில், பாபர் மஸ்ஜித் இடிப்பில் பாரதீயஜனதாவுக்கு பங்குள்ளதுபோல் காங்கிரசுக்கும் பங்குண்டு. ஏனெனில், பாபர் மஸ்ஜித் இடிக்கப்படும்போது அதை தடுப்பதற்கு காங்கிரஸ் எந்தமுயற்சியும் செய்யவில்லை மாறாக, கைகைட்டி வேடிக்கை பார்த்தது என்று கூறியதை தொடர்ந்து, அதிர்ந்துபோன காங்கிரஸ் கூடாரம் அதிலும் குறிப்பாக பிரதமர் மன்மோகன்சிங் லல்லுவின் கூற்றை இப்படி மறுக்கிறார்;

பாபர் மஸ்ஜிதுக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தமாட்டோம் என்றார் அன்றைய உ.பி.முதல்வர் கல்யாண்சிங் சுப்ரீம்கோர்ட்டில் உறுதியளித்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.சுப்ரீம்கோர்ட்டில் அளித்த வாக்குறுதிக்கு அவர் மதிப்பளிப்பார் என்று நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் நம்பியது. கல்யாண்சிங்கின் உறுதிமொழியை நம்பியது மட்டுமே பாபர் மஸ்ஜித் இடிப்பில் காங்கிரஸ் செய்த ஒரே தவறு என்கிறார் மன்மோகன்சிங்.

சரி! ஒரு வாதத்திற்கு கல்யாண்சிங் சுப்ரீம்கோர்ட்டுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாற்றமாக,பாபர் மஸ்ஜிதை பாதுகாக்க தவறிவிட்டார் எனில், பாபர் மஸ்ஜிதின் சற்று தொலைவில் நிலைகொண்டிருந்த த்திய ரிசர்வ் படை மூலம் ராவ் மசூதி இடிக்கப்படுவதை தடுத்திருக்கலாமே? ராணுவத்தை அனுப்புவதிலிருந்து அன்றைய பிரதமர் ராவை தடுத்தது எது?

சரி! மசூதி இடிக்கப்பட்டஉடன் நரசிம்மராவ் என்னசொன்னார்? பாபர் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் கட்டித்தரப்படும் என்றாரே! பதினேழு ஆண்டுகள் கடந்தபின்னும் மசூதியை கட்டித்தர காங்கிரஸ் தயங்குவது ஏன்? மசூதியை கட்டித்தருவதிலிருந்து காங்கிரசை தடுப்பது எது?

மசூதி பிரச்சினையை விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரகான் கமிஷன் ஆணையத்தை நீ.....................ட்டிக்கொண்டே போவது யார்?

இதுபோக மசூதியின் ஆரம்ப வரலாற்றை எடுத்துப்பார்த்தால், பள்ளியில்சிலைகள் வைக்கப்பட்டவுடன் அதை அகற்றி பள்ளிவாசலை முஸ்லீம்சமுதாயத்திடம் ஒப்படைக்காமல் பள்ளிவாசலை பூட்டியது யாருடையஆட்சியில் என்பது பிரதமருக்கு தெரியாதா?

பூட்டப்பட்ட பள்ளிவாசலை 'பூஜைக்காக' திறந்துவிட்டது யாருடைய ஆட்சியில் பிரதமருக்கு தெரியாதா?

ரத்தயாத்திரை நடத்தப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்தது யார் பிரதமருக்கு தெரியாதா?
இப்படியாக பாபர் மஸ்ஜித் வரலாற்றில் காவிக்கும்பலுக்கு, இணையாககாங்கிரஸின் உதவி எனும் கரம் உண்டு என்பதை பிரதமர் மறந்து விடவேண்டாம்.

கருத்துகள் இல்லை: