ஒருவருக்கு மதநம்பிக்கை இருப்பதிலும், அந்தமதத்தின்மீது பற்று இருப்பதிலும் தவறில்லை. தன்மதத்தின் கொள்கைகளை சொல்லி அதை வளர்ப்பதிலும் தவறில்லை. ஆனால் தன்மதத்தின்மீது கொண்ட வெறியை அடுத்தமதத்தினர் மீது வெளிப்படுத்தும்போதுதான் அது மதவெறியாக மாறுகிறது. இப்படி முஸ்லிம்கள் மீது தனது மதத்துவேஷ கருத்துக்களை கூறி தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருப்பவர் வருண்காந்தி. வருண் இவ்வாறு பேசியவுடன் அவரை கண்டிக்கவேண்டிய அவரது தாயார் மேனகா காந்தி, தனது மகனின் பேச்சுக்கு வக்காலத்து வாங்கியதோடு, அரசியல் சூழ்ச்சிகளால் என்மகனை முற்போக்கு[?] சிந்தனையிலிருந்து பின்வாங்கச்செய்யமுடியாது என்று பாராட்டு பத்திரம் வாசித்தார்.
இந்நில்லையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தன்மகனை பார்க்க மேனகா வந்தபோது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவரை வாரத்தில் இரு தடவைக்கு மேல் சந்திக்க சட்டத்தில் இடமில்லை என்று அதிகாரிகள் கூறியவுடன், தன்மகனை சந்திக்கமுடியாத ஆத்திரத்தை உ.பி.முதல்வர் மாயாவதி மீது கொட்டியிருக்கிறார். மாயாவதி ஒரு தாயாக இருந்திருந்தால் , ஒரு மகனை சந்திக்கமுடியாத வேதனையை புரிந்திருப்பார் என்று மாயாவதியை சாட, அதற்கு மாயாவதி சூடான பதிலை மேனகா காந்திக்கு தந்துள்ளார்.
'மேனகாகாந்தி தனது மகன் வருண்காந்தியை சரியாக வளர்த்து இருந்தால் இன்றைக்கு சிறையில் இருக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது. கலவரத்தை&வன்முறையை தூண்டும் வகையில் வருண்காந்தி பேசி இருக்க மாட்டார்.வெட்கப்படக் கூடிய வகையில், தவறான முறையில், துரதிருஷ்டவசமாக மேனகாகாந்தி என்னைப் பற்றி விமர்சனம் செய்து உள்ளார். அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னிடம் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆயிரக்கணக்கான தாய்மார்கள்வருண்காந்தியை பிலிபிட் மாவட்ட நிர்வாகம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது சரிதான். மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவரது பேச்சால் வன்முறை வெடித்து இருந்தால், ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்களது மகனை இழந்து இருப்பார்கள். மேனகாகாந்தி அந்த ஆயிரக்கணக்கான தாய்மார்களின் வலியை, வேதனையை உணர வேண்டும்.அவர் ஒரு மகனின் வேதனையைத்தான் உணர்ந்து இருக்கிறார். நான் கோடிக்கணக்கான மகன்களுக்கு தாயாக இருந்து அந்த வலியை, வேதனையை உணர்கிறேன். அன்பு செலுத்தவும், அரவணைக்கவும் தாயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தாயாக இருந்து அன்பு செலுத்தி வருகிறேன். அன்னை தெரசா ஒரு தாய் அல்ல. ஆனால் உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்களுக்கு தாயாக விளங்கியவர்.சட்டத்தை மீறகட்சி பாகுபாடு இல்லாமல், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு மாயாவதி மேனகாவுக்கு பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் குடும்பத்தின் மருமகளான மேனகாகாந்தி, மதவெறி கூடாரமான பா.ஜ.க.வில் சங்கமமானபின் அவருக்கும் இந்துத்துவா சிந்தனை இருப்பதில் வியப்பில்லை. அதே மதவெறிக்கூடாரத்தின் மக்களவை வேட்பாளரான வருண், 'தாயைப்போல பிள்ளை' என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக