புதன், 29 ஏப்ரல், 2009

பொள்ளாச்சி: உமருக்கு வாய்ப்பு


பொள்ளாச்சி தொகுதியை ம.ம.க அறிவித்த போது பல பேருடைய புருவங்கள் உயர்ந்தன. கவுண்டர்கள் அதிகமாக உள்ள தொகுதி என்று பரவலாக அறியப்பட்ட பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னால் சுமார் 28 சதவீதம் முஸ்லிம் வாக்கு களை கொண்ட தொகுதியாக உள்ளது. கோவையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கும் உக்கடம், குனியமுத்தூர், செல்வபுரம் போன்ற பகுதிகள் பொள்ளாச்சியில் சேர்க்கப் பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெருகியுள்ளது.


மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி ம.ம.க வேட்பாளர் உமர் அவர்கள் வணிகர், வியாபார ரீதியில் பல்வேறு மக்களுடன் தொடர்பு உள்ளவர். தமுமுக மாநில செயலாளராக தற்போது இருப்பதால் சமுதாய மக்களுக்கும், ஜமாஅத்துகளுக்கும் நன்கு அறிமுகமானவர். இதனால் தொகுதியின் பல்வேறு ஜமாஅத்துக் களின் ஆதரவு பெருவாரியாக ம.ம.க வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.


மேலும், கோவையில் வசிக்கும் மலையாளிகள் மற்றும் கிறித்தவர்கள் உமருக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தமுமுக வினர் சிறப்பான மனிதநேய சேவை களை தொடர்ந்து செய்து வருகின்ற னர். இதனால் தமுமுகவின் சேவைகளினால் நன்மதிப்பு கொண்ட மக்களின் வாக்குகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் பலம்.


எதிர் அணிகளை பொறுத்தவரை திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், அதிமுக வேட்பாளர் சுகுமாரன், தேமுதிகவின் பாண்டியன் என அனை வருமே கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள். தொகுதியில் உள்ள 40 சதவி கித கவுண்டர் இனமக்களின் வாக்குகளை நம்பியே முக்கிய கட்சிகள் இவர்களை களத்தில் இறக்கி உள்ளன. இதில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் ஆரம்பித்துள்ளனர். அந்த கட்சியின் தலைவர் பெஸ்ட் ராம சாமி பொள்ளாச்சியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதனால் கவுண் டர் இன மக்களின் வாக்குகள் சிதறிப் போகும் சூழ்நிலை உள்ளது. மேலும் திமுகவின் வேட்பாளர் சண்முக சுந்தரம் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வர். இதனால் அதிமுகவுக்கும், கொங்கு நாடு கட்சிக்கும் கவுண்டர் இன ஓட்டுக் களை பெறுவதில் போட்டி நிலவுகிறது.


ம.ம.கவை பொறுத்தவரை தொகுதியின் தலித் இன மக்களின் ஆதரவும் கிடைத்திருப்பது மற்றறொரு பலம். வால்பாறை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. 10 சதவீதம் உள்ள த­த் மக்களின் ஆதரவும் PUCL, DYF மற்றும் மனித உரிமை மற்றும் NGO அமைப்பு களின் ஆதரவும் மமகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருப்பதால் உமர் அவர்கள் வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது. இப்போதைக்கு அதிமுக., ம.ம.க., கொங்குநாடு பேரவை என பொள்ளாச்சி தொகுதியில் கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் ம.ம.க வேட்பாளர் உமர் தொடர்ந்து எதிர் நீச்சல் போட்டு பொள்ளாச்சியை கைப்பற்றுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை: