சனி, 11 ஏப்ரல், 2009

ஆசியாவின் நான்காவது பெரிய ஊழல் தேசம் இந்தியா!!


பொருளாதராத வளர்ச்சியில் இந்தியா முன்னிலைக்கு வருகிறதோ இல்லையோ... ஊழல், மோசடிகள், சோம்பேறித்தனம், பொறாமை போன்ற எதிர்மறை குணங்களை வெளிப்படுத்திவதில் எப்போதும் முதலிடத்தைப் பிடித்துவிடுகிறது.

இந்த முறை ஆசிய அளவில் ஊழலில் 4 வது இடத்தில் உள்ள நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது பாரம்பரியப் பெருமை பேசும் இந்த பாரத தேசம்.

ஆசிய அளவில் ஊழல் நாடுகள் குறித்து 'அரசியல் மற்றும் பொருளாதார இடர்பாடுகளுக்கான ஆலோசனை மையம்' சார்பில் நடத்தப்பட்ட சர்வேயில் முதல் பத்து இடங்களில் 7.21 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் வகிக்கிறது இந்தியா.

இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்களில் சரியான ஒழுங்குமுறைகள் கிடையாது என்றும், ஊழல் செய்வதில் இவை புது சரித்திரமே படைப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, தொலைத் தொடர்பு, எரி சக்தி மற்றும் மின் சக்தி துறைகள், அரசு கொள்முதல் செய்யும் அனைத்து வர்த்தகங்கள் மற்றும் ஆயுத பேரங்களில் இந்த ஊழல் பெருமளவு நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சரி இந்த சமாச்சாரத்தில் நமக்கு அடுத்த நிலைகளில் உள்ள சகோதரர்களைப் பார்ப்போமா?

இந்தோனேஷியாவுக்கு முதலிடம்!:

ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ள நாடு இந்தோனேஷியாதான். 10க்கு 8.32 புள்ளிகள் பெற்று அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. இங்கு எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் என்ற நிலைதான் பல ஆண்டுகளாக நீடிக்கிறதாம்.

இந்தோனேஷியாவில் மிகவும் ஊழல் மலிந்து துறை போலீஸ்தானாம். ஆசியாவிலேயே தொழில் தொடங்குவதில் அதிக ஆபத்துள்ள நாடுகளில் முதலிடமும் இந்தோனேஷியாவுக்கே. எந்த வேலை நடக்க வேண்டுமென்றாலும் 40 சதவிகிதம் லஞ்சம் தந்தே தீர வேண்டுமாம்.

தாய்லாந்து:

இந்த ஊழல் நாடுகள் பட்டியலில் தாய்லாந்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அரசியல் தொடங்கி அதிகார வர்க்கம் வரை சகல மட்டத்திலும் இங்கும் ஊழல்மயம்தான். தாய்லாந்து நாட்டின் ஊழல் குறித்து 95 சதவிகித நிறுவனங்கள் வெளிப்படையாகவே புகார் செய்துள்ளனவாம்.

கம்போடியா:

ஆசிய ஊழல் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடம் கம்போடியாவுக்கு. 7.25 புள்ளிகளுடன் தாய்லாந்தின் இடத்தைப் பிடிக்க முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு இது. நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஊவலுக்கே போகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கல்.

வியட்நாம்:

7.11 புள்ளிகளுடன் 5 ம் இடத்தில் உள்ள பெரும் ஊழல் நாடு வியட்நாம். இங்கு படிக்க பல்கலைக் கழகத்துக்குப்போய் சிரமப்பட வேண்டியதில்லை. பணம் கொடுத்தால் போதும், பட்டம் வீடு தேடி வரும். இதுதான் அந்நாட்டின் பரபரப்பான பிஸினெஸ் இன்றைக்கு. 1980ம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்நாட்டின் 20000 அரசு பணியாளர்கள் ஊழல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ், மலேஷியா, தைவான், சீனா மற்றும் மக்காவ் ஆகிய நாடுகள் ஊழலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கருத்துகள் இல்லை: