ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

ஆந்திர அரசியல் : வேட்பாளர்களை அறிவித்தது மஜ்லீஸே இத்திஹாதுல் முஸ்லிமின்


ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய‌ நகரமான ஹைதராபாத்தின் பலம் மிகுந்த அரசியல் கட்சி அனைத்திந்திய மஜ்லீஸே இத்திஹாதுல் முஸ்லிமின். 1970ல் இருந்து அரசியலில் களம் புகுந்த மஜ்லிஸ் ஹைதராபாத் மக்களவை தொகுதியில் 1984 முதல் இன்று வரை தனித்து போட்டியிட்டாலும் ஒரு தேர்தலிலும் தோற்றதில்லை. 1984‍‍ முதல் 2004 வரை மஜ்லிஸின் முன்னாள் தலைவர் மர்ஹூம் சலாஹூதின் உவைஸி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2004 மக்களவை தேர்தலில் அவருடைய மகனும் மஜ்லிஸின் தற்போதைய தலைவருமான அஸாவுதீன் உவைஸி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.

ஆந்திராவில் இந்த முறை மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்க்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2004 தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றது, ஹைதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மஜ்லின் தலைவர் அஸாவுதின் உவைஸி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ், தெலுங்கு தேசத்துடன் கூட்டனியமத்து போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர்களை ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நடைபெற இருக்கும் தேர்தலில் இதுவைர 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஹைதராபாத் மக்களவை தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஹைதராபாத் மக்களை தொகுதியில் மஜ்லின் தலைவர் அஸாவுதீன் உவைஸி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சியாஸட் உருது நாளிதழின் ஆசிரியர் ஜஹீத் கான் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

ஜஹித் கானுக்கு ஆதரவு தெரிவித்து தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி, இடதுசாரிகள், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகள் ஹைதராபாத்தில் மஜ்லிஸின் ஆதிக்கத்தை முறியடிக்க ஓரனியில் திரன்டுள்ளன. ஆனால் தொகுதி மறுசீரமைப்பால் கடந்த தேர்தலை விட கூடுதலாக‌ 20 சதவீத வாக்குகள் மஜ்லீஸுக்கு கிடைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள்:

சார்மினார் ‍ = சையது அஹ்மத் பாசா

பாஹத்புரா = முஹம்மத் மொஜம் கான்

மாலக்பேட் = அஹ்மத் பலாலா

ஜூப்ளி ஹில்ஸ் = சின்ன ஸ்றீசைலம் யாதவ்

சந்த்ரயான்குட்டா = அக்பர்தீன் உசைஸி (அஸாவுதீன் உவைசியின் சகோதரார்)

யாகுட்புரா = மும்தாஜ் அஹ்மத் கான்

கர்வன் = அப்ஸர் கான்

நம்பள்ளி = ரசூல் கான்

ராஜேந்திர நகர் = முரளிதர் ரெட்டி.

இந்த முறை மஜ்லிஸ் ரெட்டி மற்றும் யாதவ் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு கட்சியுடனும் கூட்டனியில்லாததற்க்கு மிக முக்கிய காரணம் இங்குள்ள முஸ்லிம்களையும் தான்டி அனைத்து வகுப்பினரின் நன்மதிப்பை பெற்றதேயாகும்.

Thanks : புதிய பாதை வலைப்பூ

கருத்துகள் இல்லை: