புதன், 22 ஏப்ரல், 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா யாருக்கு ஆதரவு

popular-front-of-india-flag1



15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.

அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

திண்ணை தோழன் சொன்னது…

சிறந்த களப் போராளிகளைக் கொண்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மமகவிற்கு ஆதரவளித்திருப்பது சிறப்பான ஒன்று இதன் மூலம் மமகவின் வெற்றி மேலும் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை. சமுதாய நலனில் அக்கரைக் கொண்ட இவ்வமைப்பை பார்த்தாவது திருவாளர். பி.ஜே. திருந்தட்டும்.