பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 மார்ச், 2011

தமிழகத்தில் தொடரும் காவல் துறை ஆரஜகம்!!


மார்ச் 21, திண்டுக்கல்: ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தனது சிறுபான்மை வெறுப்புணர்வை உமிழ்ந்துள்ளது.

கடந்த 2010 டிசம்பர் 6 முதல் 2011 ஜனவரி 30-ஆம் தேதி வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பாப்ரி மஸ்ஜித் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தியது. தமிழகத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள், ஒன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவது மாபெரும் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பட்ட நிகழ்வுமாகும்.

இந்த இருபெரும் பயங்கரவாதச் செயல்களைக் குறித்த தகவல்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிறைவுதினமான ஜனவரி-30-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், இந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததோடு மீறி பேரணி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மது பஹ்ருத்தீன் உட்பட பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோரை கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும், திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான எதிர்ப்பை பதிவுச் செய்யும் விதமாகவும் இன்று(20.03.2011) திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுச் செய்திருந்தது.

ஆனால், பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடைச் செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஏ.முஹம்மது யூசுஃப், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கைஸர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கானோரை கைதுச் செய்துள்ளது.

காவல்துறையின் இச்செயலை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. நீதிக்கான போராட்டத்திலும், காவி பயங்கரவாதத்தை மக்களிடையே தோலுரித்து காட்டும் முயற்சியிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இக்கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்ததையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அப்பாவிகளை விடுதலை செய் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிடு

SDPI-ன் தேசிய அளவிலான பிரச்சாரம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 2011 பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் 20 பிப்ரவரி 2011.
கடந்த பல வருடங்களாக நம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக இருந்து வந்த தீவிரவாத தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் போன்றவற்றிற்கு ஆர். எஸ். எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் தான் காரணம் என்பதனை சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு விசாரணைகளின் மூலம் புலனாய்வு அமைப்புகள் அம்பலப்படுத்தியது. இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சூழலில் நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த ஆபத்தான தீவிரவாத சக்திகளை தடுப்பது இன்றியமையாததாகும். குண்டுவெடிப்புகளின் பின்ணனியில் உள்ள உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட, தவறுதலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்யாமலும், இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களின் ஜாமின் மனுக்களை காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகள் நிராகரித்து வருகிறது.


இதனை முன்னிறுத்தி எவ்வித ஆதாரமுமின்றி, அடிப்படையுமின்றி குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரியும், அதே சமயம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்ட ஃபாஸிஸ பயங்கரவாதிகளை சிறையிலடைக்கக்கோரியும் 2011 ஆண்டின் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 வரை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசிய அளவிலான பிரச்சாரம் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.

தேசிய அளவிலான இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 20, பிப்ரவரி, 2011 அன்று சென்னையில் அமைந்துள்ள தமிழக புதிய சட்டமன்றம் அருகில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் எஸ் டி பி ஐ சார்பாக நடத்தப்பட்டது.

சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கருத்தரங்கத்திற்கு SDPIன் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக SDPIன் அகில இந்தியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷாஹித் ஹீஸைன் சித்தீகி , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா, NCHRO-ன் மாநில தலைவர் வழக்கறிஞர் ப. பா. மோகன், PUHR தலைவர் பேரா. அ. மார்க்ஸ், SDPIன் தமிழ்நாடு மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி, SDPIன் மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

SDPIன் அகில இந்திய பொதுச்செயலாளர் முஹம்மது உமர் கான் அவர்கள் அங்கு குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தினை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் தலைமையுரையாற்றிய SDPIன் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் தனது உரையில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சென்னை மாநகரத்திலிருந்து அடுத்த ஒரு மாதத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவங்குகிறது. அழிந்து போகும் நிலையிலிருக்கும் நம் நாட்டினை அழிவிலிருந்து காப்பாற்றி மீண்டும் அதன் உண்மையான பொதுவுடைமை மற்றும் ஜனநாயகத்தின் பக்கம் கொண்டுவருவதற்கான ஒரு சீரிய முயற்சியே இப்பிரச்சாரமாகும் நம் நாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கும் ஊழல் மற்றும் வகுப்புவாதம் குறித்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரம் நம் நாட்டு மக்களிடையே இன்றிலிருந்து இந்தியா முழுவதும் SDPI ன் சார்பாக நடத்தப்படும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் 1,76,379 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழலை தொலைதொடர்பு துறையும், S-Band என்ற பெயரில் 2 லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள ஊழலை Space Research Department என்ற அரசுத்துறையும் நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்தது. அரசும் பல தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதே தொலைத்தொடர்பு துறையõகும். ஆனால் Space Research Department என்பது பெரும்பான்மையாக உயர்ஜாதி இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பகிரங்கபடுத்தப்பட்ட அளவிற்கு S-Band ஊழல் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஊழல் என்றால் ஊழல் தான். அது திராவிட அரசியல்வாதிகள், அமைச்சர்கள் செய்தாலும் சரி அல்லது பார்ப்பன விஞ்ஞானிகள், அதிகாரிகள் செய்தாலும் சரி. ஆக பிரதான ஊடகங்களில் நிலவும் இரட்டை நிலையையே இது நமக்கு உணர்த்துகிறது.

அதுமட்டுமின்றி உயர்ஜாதி வகுப்பினர் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை முஸ்லிம்களின் பெயரில் நிகழ்த்தி விட்டு அதன் மூலம் வெகுஜன இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பு உணர்வை தூண்டிவிடுக்கின்றனர். எனவே வெகுஜன இந்துக்கள் உயர் ஜாதியினரின் இந்த சுழ்ச்சிகளை உணர்ந்து ஊழல் மற்றும் பாசிச இந்துத்துவத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. உடன் ஒன்றினைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.


பின்னர் சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில் பாசிஸ சங்பாரிவாரங்களும் அதனோடு ஒட்டி உறவாடும் சில ஊடகங்களும் அரங்கேற்றிய பயங்கரவாதத்தால் நாட்டில் ஒரு நிலை ஏற்பட்டது. அதாவது "கொல்லப்படுவது முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்படுவதும் முஸ்லிம்கள் சித்ரவதை கைது செய்யப்படுவதும் முஸ்லிம்கள்" என்ற நிலையே அது. ஆனால் இன்று அந்த பொய்கள் தவிடு பொடி ஆக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவர்களிலிருந்து குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் வரை அனைவருமே சங்பரிவார பாசிஸவாதிகளே என்பது தெளிவானது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு முஸ்லிம் இளைஞன் அனுபவித்த சித்ரவதையினை காதால் கேட்டதனால் மட்டும் இந்துத்துவவாதியான அசீமானந்தா புனிதராக மாறியிருக்கிறார். ஆனால் அசீமானந்தா மட்டும் மாறி பயனில்லை. இந்த நாட்டினுடைய ஆன்மா மாற வேண்டும். மேலும் நான் ஒன்றை மட்டும் உறுதியான கூறுகிறேன். அதாவது இந்து மதம் வேறு, இந்துத்துவா என்பது வேறு. இந்து மதம் என்பது ஒரு ஆன்மீக வழிபாட்டு முறை. இந்துமதத்திற்கு நாம் ஒரு போதும் எதிரியல்ல. இந்து மத நண்பர்கள் என்றென்றும் நம் சகோதரர்களே. ஆனால் இந்துத்துவ என்பது அழிக்கப்பட வேண்டிய வெறிபிடித்த பாசிச மிருகம். எனவே, ஆர்.எஸ்.எஸ். ஸின் இந்துத்துவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி முஸ்லிம்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும். சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தக்க நஷ்டஈடு வழங்க வேண்டும்.

எனவே நாம் ஒன்று படுவோம்! பாசித்தை தோற்கடிப்போம்! தேசத்தை பாதுகாப்போம் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக SDPI-ன் அகில இந்திய செயலாளர் சி. ஆர். இம்தியாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இவண்
ஊடக தொடர்பாளர்
SDPI தமிழ்நாடு

செவ்வாய், 2 நவம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

பெங்களூர்,நவ.2:பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கட்சிதாரராக இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.

பெங்களூரில் கடந்த அக்டோபர் 30,31 தேதிகளில் கூடிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் மானிட்டரிங் செல் (சட்டநடவடிக்கை கண்காணிப்பு பிரிவு) ஒன்றை உருவாக்கியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு அநீதியும், முன்னரே திட்டமிட்டதும், சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழுக் கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது.

ஹிந்தத்துவா அமைப்புகளின் வகுப்புவாதவெறி பிரச்சாரங்களை ஒப்புக்கொள்கிறது இத்தீர்ப்பு. இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கையின் மீதான மிகவும் அநீதியான தாக்குதல்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வு.

தேசம் முழுவதும் இதற்கு நீதியை எதிர்பார்த்திருந்த பொழுதிலும் நீதி என்பது தற்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது. பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எப்பொழுதுமே முன்னணியில் இருந்துள்ளது.

புதிய சூழலில் வருகிற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தேசிய அளவில் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்ய பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக-பொருளாதார சக்திப்படுத்துதலை செறிவூட்டுவதன் ஒரு பகுதியாக சமுதாய முன்னேற்றத்திற்கான பரிபூரணமான திட்டத்திற்கு இக்கூட்டத்தில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் இதன் ஒரு பகுதியாக சிறப்புத் திட்டங்களும், நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்திய பிறகு சிறப்பு ப்ராஜக்டுகள் (வேலைத் திட்டம்) உருவாக்கப்படும்.

இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேசிய பொதுமக்கள் ஆரோக்கிய வாரம் கடைப்பிடிக்கப்படும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஆரோக்கியம், சுத்தம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகள், யோகா வகுப்புகள், ஃபிட்னஸ் முகாம்கள், சுத்தம் தொடர்பான நிகழ்ச்சிகள், ஆரோக்கிய விழிப்புணர்வு மடக்கோலைகள் விநியோகித்தல் ஆகியன உட்படுத்தியதுதான் இந்த பிரச்சாரம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், டாக்டர் மஹ்பூப் ஷெரீஃப், முஹம்மது இல்லியாஸ், வி.பி.நஸ்ருத்தீன், முஹம்மது அலி ஜின்னா, அஃப்ஸல் பாஷா, உஸ்மான் பேக், ரியாஸ் பாஷா உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 21 ஆகஸ்ட், 2010

மக்களவையில் பாப்புலர் பிரான்ட்க்கு எதிராக அவதூறு விமர்சனம்: ஹிந்து தீவிரவாத குழுவை ஆதரிக்கும் பாலக்காடு "எம்.பி." ராஜேஷ்


புதுடெல்லி,ஆக20: பாப்புலர் ஃப்ரண்ட்டிற் கெதிராக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. கேள்விநேர வேளையில் கேரள மாநிலம் பாலக்காடு கம்னிஸ்ட் எம்.பி.ராஜேஷ் என்பவன் பாப்புலர் ஃப்ரண்டிற்ட் கெதிரான விமர்சனங்களை முன்வைத்தான். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புபடுத்தி கேரள மாநிலத்தில் பரப்புரைச் செய்யப்பட்டு வரும் பேராசிரியரின் கைவெட்டு சம்பவத்தை மேற்கோள்காட்டி ராஜேஷ் தனது உரையை ஆரம்பித்தான்.

மேலும் அவன், பாப்புலர்ஃப்ரண்டின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றிய சி.டிக்கள் மற்றும் புத்தகங்களில் தேசவிரோத கருத்துகள் அடங்கியிருந்ததாகவும், சி.டியில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் தலைவெட்டும் காட்சிகள் அடங்கியிருந்ததாகவும், இவ்விசயங்கள் எல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்துள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தாலிபான் மாடல் நீதிமன்றங்களை நடத்தி நீதித்துறைக்கு சவால் விடுவதாகவும், சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்டிற்கு பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும், என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்ற தேசிய புலனாய்வு அமைப்புகளால்தான் இதனை விசாரிக்க இயலும் எனவும், துரதிர்ஷ்டவசத்தால் மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் இவ்வியக்கத்திற்கு பாதுகாவலர்களாக உள்ளதால் அரசிற்கு அதில் விருப்பமில்லை எனவும் குற்றஞ் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, பி.டி.தாமஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் எழுந்து நின்று கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்த கட்சி பாதுகாவலராக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி கோரினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அவை நடுவேச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பித்துரை மதியம் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

சிந்திக்கவும்: இந்திய முஸ்லிம்கள் இனி ஜனநாயக வழியில் ஒரு போராட்டத்தை நடத்தி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்பதையும், அரசியல் கட்சிகள் நடத்தி அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். இந்தியாவில் இயங்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்னிஸ்ட் எல்லாருக்கும் ஒரே சிந்தனைதான் அது முஸ்லிம்களை அழித்து ஹிந்து நாடு உருவாக்குவது. போலி ஜனநாயகத்தை விட்டு ஒழித்துவிட்டு உருப்புடுற வேலையபாருங்க. இன்னும் நீங்கள் முழிக்கவில்லை என்றால் ஸ்பெயின் வரலாறுதான் உங்களுக்கு இந்தியாவில் ஏற்படும்.ஒரு நூறு வருடங்களுக்குள் ஸ்பெயின் போல உங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும் நீங்கள் எப்படி அழிக்கப்பட்டு ஹிந்து ராஜ்ஜியம் உருவாகியது என்று.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கேரளா முதல்வர் தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்': பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

புதுடெல்லி,ஆக1:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான்,பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரிப் மற்றும் செயற்குழு உறுப்பினர் கோயா ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற பத்திக்கையாளர் சந்திப்பின் போது, கேரள முதல் மந்திரி அச்சுதானந்தன் முஸ்லிம்களை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் பணத்தின் மூலமும் காதல் திருமணங்களின் மூலமும் 20 வருடங்களில் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று கூறிய கேரள முதல்வர் அச்சுதானந்தன் தனது தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். முதலமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு மாநிலத்தில் மத துவேசத்தை உண்டாக்கும்" என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான் கூறினார்.

பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீப் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா ஆகியோர் "PFI க்கு எதிரான இந்த குற்றச்சாட்டை முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா" என்று சவாலாக கூறினர்.

"முதலமைச்சர் PFI க்கு எதிரான தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் மேலும் கேரள மக்களுக்கு முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.

"முதலமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு பாசிச சங்க் பரிவார கும்பல்கள் பரப்பி வரும் தவறான ஒரு கூற்றை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் அப்படியே எடுத்துக் கூறுவது எதிர் பாராத ஒன்று.

நாட்டில் லவ் ஜிஹாத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் மூலம் பெண்கள், இளைஞர்கள் முஸ்லிம்களாக மாற்றப்படுகிறார்கள் எனக் கூறி வருகிறார்.

மேலும் கேரள உயர்நீதிமன்றம் லவ் ஜிஹாத் என்பது ஒரு பொய்யான வதந்தி லவ் ஜிஹாத் என்று எதும் இல்லை என முன்னரே கூறிவிட்டது. இருப்பினும் முதலமைச்சரின் இத்தகைய பேச்சு நீதித்துறையையே நிராகரிப்பதாக உள்ளது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவர் ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றக் கூடாது.

மேலும் பணம்,கட்டாய மத மாற்றம், மற்றும் லவ் ஜிஹாத் மூலம் மதம் மாற்றுகிறார்கள் எனக் குற்றம் சாட்டுவது ஒரு சமுதாயத்தவரின் இளைஞர்களை அவமானப்படுத்தி அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்." என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் "அச்சுதானந்தன் ஒரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர். அவர் மக்கள் இஸ்லாமிய மதத்தின் பக்கம் ஆர்வமாக வருவதைப் பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார் என விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மாநிலத்தின் பெரும்பான்மையனவராகவோ அல்லது சிறும்பான்மையினராகவோ இருப்பதை பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார் என்பதையும் விளக்க வேண்டும்.

மேலும் நாட்டின் சட்ட வரம்புகள் எதுவும் PFI ன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு வரையறை கூறவில்லை. இத்தகைய பாய்ச்சல்களால் அச்சுதானந்தன் நாட்டின் ஜனநாயக வரையறைக்கு உட்பட்டு செயல்லாற்ற தகுதியற்றவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

PFI ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா. இது போன்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானதாக உள்ளது.

கேரள மாநிலத்தின் தலைமை இதைப் போல் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான விசம பிரச்சாரத்தைச் செய்து தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற இவ்வாறு கூறியுள்ளது." என்றனர்

"பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல. அது பின்தங்கிய முஸ்லிம் சமுதாயத்தையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் தேசிய மைய நீரோட்டத்தின் வளர்ச்சியில் எடுத்துச் செல்ல சேவை செய்யும் ஒரு அமைப்பாகும். இது 18 வருடங்களாக இந்தியாவில் பணிகள் செய்து வருகிறது மேலும் நாடு முழுவதும் இதன் தொண்டர்கள் செயல்படுகிறார்கள்." என்றும் கூறினர்.

வியாழன், 15 ஜூலை, 2010

ஒடுக்கப்பட்டோர்களை சக்திப்படுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் – இ.எம்.அப்துற் ரஹ்மான்

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான் கேரள போலீசார் மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோதபோக்கையும்,பாரபட்சத்தையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,ஒரு அமைப்பின் தலைமை அலுவலகத்தை ஒரு சிறிய உள்ளூர் சம்பவத்திற்காக சோதனையிடுவது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பது மட்டுமல்லாது,அவ்வமைப்பின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்றார்.இத்தகைய கொள்கையைத்தான் கொண்டுள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கூறினார்.

ஒரு உள்ளூர் சம்பவத்தினை நேர்த்தியாக விசாரிப்பதை விட்டுவிட்டு பெரும் பீதியை ஏற்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும், மேலும் முஸ்லீம் இளைஞர்கள் மீது மீடியாக்களின் மூலம் அவதூறுகளை பரப்பி வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காகவும் முயற்சி செயல் என்றும் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் கேரள போலிசார் பல இடங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்யப்படுவதற்கான உச்சநீதிமன்ற விதிகளை வெளிப்படையாகவே மீறி உள்ளனர். போலீஸ் நிர்வாகத்திலுள்ள சில மதவாத மற்றும் முஸ்லீம் விரோத சக்திகள் இவ்விசாரனையில் ஆதிக்கம் செலுத்தி வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று இ.எம்.அப்ற் ரஹ்மான் தெரிவித்தார்.

பல இடங்களில் மனித உரிமை மீறல்கள் வெளிப்படையாகவே மீறப்பட்டுள்ளன. மேலும், வருகின்ற தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, மத நல்லிணக்கத்தை தன் சுய இலாபத்திற்காக சீர்குலைக்கும் கீழ்தரமான அரசியலை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் இப்பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

நபிகளாரை இழிவாக சித்தரிக்கும் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில்,பாப்புலர் ஃப்ரண்ட்க்கு எந்த தொடர்பும் இல்லை என்பதனை ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு வேலை தங்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கையை அமைப்பு மேற்கொள்ளும் என்றார்.

இவ்வழக்கு விசாரணையில்,எங்கள் மாநிலத் தலைவர்கள் ஆரம்பத்திலே அதிகாரிகளிடம் நல்ல ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருந்தார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

குற்றவாளிகளை தேடுவதில் கவனம் செலுத்தாமல்,தற்போது கேரள போலிசார் வேண்டுமென்றே பிரிவினைவாத செயல்களிலும் இயக்கத்தை குறி வைக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஆளும் கட்சி நலனிற்காக காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறினார்.

நபிகளாரை இழிவாக சித்தரித்தப்பட்ட வழக்கின் விசாரனை தற்போது ஒரு இயக்கத்தை குறிவைக்கும் விசாரனையாக எவ்வாறு மாறியது என்று விளக்கம் தேவைப்படுகிறது.

கேரள போலிசார் தற்போது காட்டிவரும் அக்கறையையும், கடும்முயற்சியின் ஒரு சிறு பகுதியை கண்ணூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி. பயிற்சி பாசறைகளில் செலுத்தியிருந்தால்,கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பெருமளவில் முடிவிற்கு வந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கேரள மாநிலத்தில் நடந்த அனைத்து குற்றங்களிலும் எந்த கட்சியினர் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கணக்கெடுக்க அரசு தயாரா என்று சவால் விடுத்தார். அப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் சி.பி.எம். மற்றும் பி.ஜே.பியைத் தோற்கடிக்க எவரும் இருக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இது போன்ற அடக்குமுறைகளின் மூலம் பாப்புலர் ஃப்ரண்டிற்கு உள்ள பெரும் மக்கள் செல்வாக்கையும், ஆதரவையும் ஒன்றும் செய்திட இயலாது. ஒடுக்கப்பட்டோரை சக்தி படுத்துவதற்கான பாப்புலர் ஃப்ரண்டின் அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துவரும் என்று தேசிய தலைவர் இ.எம.அப்துற் ரஹ்மான் தெரிவித்தார்.
source:popularfrontindia.org

செவ்வாய், 13 ஜூலை, 2010

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை பத்திரிக்கைகளின் இட்டுக்கட்டு

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை நடத்தப்படும் என்ற செய்தி பொய்யானது,பத்திரிக்கைகளால் இட்டுக் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்த செய்தியை போலீஸூம், அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி ஒரு விசாரணை குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் முள்ளப்பள்ளி இராமச்சந்திரன் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

இருந்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து பத்திரிக்கைகள் கதை புனைவதை விடவில்லை.

நேற்று மலையாள நாளிதழ் ஒன்று இந்தக் கதையைப் புனைந்து வெளியிட்டது. உடனே அதை எந்த ஆய்வும் செய்யாமல் தொலைக்காட்சி சானல்களும் வானொலிகளும் வாந்தி எடுத்ததை தொடர்ந்து 'இராணுவ உளவுத்துறை விசாரணை' களை கட்டியது. இதில் தமிழக ஃபாசிச பத்ரிக்கையான தினமலரும் மற்ற நாளிதழ்களும் தனக்கே உரித்தான முறையில் மேற்கண்ட செய்தியை வாந்தி எடுத்து வருகின்றன.

அண்ணல் நபிகளாரை அவமதித்து களங்கத்தை உண்டுபண்ணும் வகையில் கேள்வித்தாள் தயாராக்கிய பேராசிரியரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்த அன்றிலிருந்து பத்திரிக்கைகள் வெளியிடும் யூகங்களின் தொடர்ச்சியே இது.

இந்த சம்பவத்தைச் சாக்காக வைத்து பத்திரிக்கைகள் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று தந்திரமாக போலீஸ் அனுமதி கொடுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கை துண்டிப்பு வழக்குடன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் சாக்கில் பத்திரிக்கைகள் நடத்தும் மோசமான பிரச்சாரங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நேற்று கேரள மத்திய பகுதி ஐ.ஜி.பி. சந்தியூ தெரிவித்தார்.

இதற்கிடையில் பத்திரிக்கைகளின் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மேட்டுப்பாளையத்தில் சுதந்திரதின அணிவகுப்பு அலுவலகம் திறப்பு விழா.



எதிர் வரும் ஆகஸ்ட்-15, 2010 மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தவுள்ளது. இதற்க்கான அலுவலக திறப்புவிழா ஜூன்-09, 2010 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் சகோ.முஹம்மது மீரான் தலைமையில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A.S. இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைக்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் எ.அஹமது பக்ருதீன் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி TH.முஹம்மது குட்டி அவர்கள் மேட்டுப்பாளையம் பைத்துல்மால்சபை தலைவர் ஹாஜி MH ஹனீபா அவர்கள் ஜாமியா மஹ்தியா மகளிர் அரபிகல்லூரி செயலாளர் VME முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மேட்டுப்பாளையம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சகோ. S.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் JUML நகரத்தலைவர் Q.அகபர் அலி அவர்கள் JAQH மேட்டுப்பாளையம் கிளை சகோ.A காஜா மைதீன் அவர்கள் MMK நகரச் செயலாளர் R முஹம்மது அப்பாஸ் அவர்கள் SDPI வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் MS முஹம்மது ரஃபி [எ] W பாபு அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் ஜமத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

திங்கள், 28 ஜூன், 2010

PFI நடத்தும் மாபெரும் சுதந்திரதின அணிவகுப்பு: இடம் கோவை மேட்டுப்பாளையம்.

வரும் ஆகஸ்டு மாதம் 15 தேதி அன்று 63 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நடந்தவுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 17 மே, 2010

சென்னை:பிரச்சனை முடிந்த பின்பு போலிஸ் பலப்பிரயோகம்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்பாட்டம்

அண்ணா நகர் கிழக்கு நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசலில் கடந்த 30 வருடங்களாக தொழுகை நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்த பள்ளிவாசல் இருக்கும் இடத்திற்கு பட்டா கிடைக்கும் பட்சத்தில் சுற்றுசுவர் கட்டிக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அரசால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷன் மேற்படி நிலத்திற்கு பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் பள்ளிவாசலின் இடத்தில் சில சமூக விரோதிகள் குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் போட்டு வருகிறார்கள். மசூதியின் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய பலமுறை முயற்சி செய்துள்ளனர். பலமுறை இதைப்பற்றி காவல் துறையில் புகார் கொடுத்தும் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதனால் பள்ளிவாசலை சுற்றி வேலி போடுவதற்கு 15-5-2010 அன்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பள்ளிவாசலின் நிர்வாகம் சென்னை மாநகர ஆய்வாளர், தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு முறையாக ஒரு மாதத்திற்கு முன்பே மனு கொடுத்துள்ளனர்.

மேலும் மசூதி நிர்வாகம் வேலி அமைக்க ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களை உதவி செய்யுமாறும் அழைத்தது. இதனடிப்படையில் ஜமாத்தார்களும் மற்றும் முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்களும் சுமார் 500 பேர் 15-02-2010 அன்று காலை 9 மணியளவில் மதினா பள்ளிவாசலில் கூடினர்.

இதன் பிறகு தாசில்தார் மற்றும் காவல் துறையினர் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தாசில்தார் எத்திராஜலு அவர்கள் கலெக்டரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். மசூதி நிர்வாகம் நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினாலும் 2 மாதகாலத்தில் மசூதி இடத்திற்கு பட்டா தருவதாக உறுதியளிக்கும் பட்சத்தில் தற்போது வேலி போடுவதை நிறுத்தி கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தாசில்தார் ஏற்கவில்லை. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறி தாசில்தார் அவ்விடத்தை விட்டு சென்றார்.

தாசில்தார் சென்ற பிறகு மசூதி நிர்வாகத்தினரும், சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா[SDPI] மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தவிர மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.

தாசில்தார் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் உதவி கமிஷனர் கண்ணப்பன் பள்ளிவாசலுக்குள் இருந்த பள்ளி ஜமாத் தலைவர், மற்றும் நிர்வாகத்தினர், SDPI தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் ஆகியோரை பலவந்தமாக கைது செய்தனர். இவர்களை விடுவிக்க கோரி உதவி கமிஷனரை சந்திக்க சென்ற பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் இ.ஷாஹித் மற்றும் SDPI-யின் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்களையும் போலிஸார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI சார்பாக 15-5-2010 அன்று இரவு 7 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 160 நபர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

பிரச்சனை சுமூகமாக முடியவிருக்கும் போது தேவையில்லாமல் பலபிரயோகம் செய்து தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த AC கண்ணப்பன் மற்றும் AC சங்கரலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 16-05-2010 அன்று சென்னை பீச் ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
source:popularfronttn. org

செவ்வாய், 15 டிசம்பர், 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாட்டு பிரச்சார துவக்க பொதுகூட்டம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாட்டுக்கான பிரச்சார துவக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று மாலை 6.45 மணியளவில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமை உரையில் இந்தியா பொருளாதார பலத்திலும் ராணுவ பலத்திலும் மெச்சத்தக்க வளர்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் வணிக வளாகங்கள் மட்டுமே ஒரு தேசமாகாது. இந்தியா ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது மறுபுறம் இந்தியக் குடிமக்களின் முக்கிய சமூகங்களான முஸ்லிம்கள் தலித்துகள் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் ஒடுக்கப்படுகின்றனர். இந்த உண்மைகள் பெரிதாகக் காட்டப்படாமல்; வளர்ச்சிக் குறியீடுகளால் மறைக்கப்படுகின்றன. இதற்கு தேசிய வளங்களில் ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு உரிய பங்கைப் போராடி பெற வேண்டும். அத்தோடு தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் விரும்புகின்றது. இந்த சமூக எழுச்சி மாநாட்டிற்கு மக்கள் அலைகடலென திரண்டு வரவேண்டும் என்று கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத் தலைவர் ஏ. சயீது தனது துவக்க விழா உரையில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பாதுகாப்பற்ற மற்றும் ஒருங்கிணைக்கப்படாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள். மதவாத சக்திகள் முஸ்லிம்களின் கலாச்சாரம் பொருளாதாரம் மற்றும் உயிருக்கு எதிராக ஒரு போரை தொடுத்துள்ளார்கள். அரசு இயந்திரங்களிலும் ஊடகம் மற்றும் பிற துறைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்கள் கல்வி சுகாதாரம் மின்சார வசதி குடிதண்ணீர் போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட பெறப்படாத நிலையில் உள்ளார்கள். இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்க நாம் முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.

தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலவி உஸ்மான் பெய்க் ரஷாதி மௌலவி எம்.எம். முஹம்மது இப்றாஹீம் பாகவி தமிழக மக்கள் உரிமைக் கழகத்தில் இருந்து வழக்கறிஞர் பா. புகழேந்தி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் எஸ்.எம். ரஃபீக் அஹமது மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ஏ. அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்திற்கு 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சென்னை மாவட்ட தலைவர் J.முஹம்மது நாஜிம் நன்றியுரையாற்றினார். கூட்டம் இரவு 9.30 மணியளிவில் முடிவுற்றது

வியாழன், 10 டிசம்பர், 2009

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியின் விஷம கருத்துகளுக்கெதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


கோழிக்கோடு:நீதிமன்றங்கள் மதவெறியர்களின் கையாளாக மாறிவிடக்கூடாது என்று கேரள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் நாஸிருத்தீன் எழமரம் தெரிவித்தார்.

கேரள காவல்துறையும், மாநில உளவுத்துறையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க புலன் விசாரணை நடத்தியது. பின்னர் “லவ் ஜிஹாத்” சுத்தப்பொய் என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபிறகும் ஒரு மத சமூகத்தின் நற்பெயரைக்கெடுக்கும் வண்ணம் உயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.சங்கரன் விமர்சித்திருப்பது விபரீதமானது.

காவல்துறை வழங்கிய ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் இணையதளங்களிலும், சில பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட அவதூறுப்பிரச்சாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி கெ.டி.சங்கரன் நீதித்துறையையே அவமதித்துள்ளார்.

14 மாவட்டங்களிலிலுள்ள காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளை மனதில்கொண்டு மத காழ்ப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். நீதிபதியின் இத்தகைய விமர்சனங்களை உச்சநீதிமன்றத்தில் கேள்வியெழுப்புவோமென நஸிருத்தீன் கூறினார்.

கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு புறம்பானது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதமாற்றம் செய்யும் அமைப்பு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சட்டத்திற்கு உட்பட்டு சாதாரண சில மதமாற்றங்களை பற்றித்தான் நீதிபதி கெ.டி சங்கரன் கேள்வியெழுப்புகிறார். இது எல்லா மதபிரிவுகளிலும் நடந்துவரும் ஒன்றுதான்.

நீதிபதியின் இந்த விமர்சனம் நீதிமன்றங்களையும், சட்டத்தையும் மதிப்பவர்களுக்கு விடுத்துள்ள சவால் என்று நாஸிருத்தீன் சுட்டிக்காட்டினார். நீதிபதியின் இத்தகைய விமர்சனத்தில் உயர்நீதிமன்றமே தலையிட்டு தானாக முன்வந்து திருத்தும் என எதிர்பார்ப்பதாக நஸிருத்தீன் மேலும் தெரிவித்தார்.

திங்கள், 7 டிசம்பர், 2009

டிசம்பர் 6:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தர்ணாவில் ஆவேச மக்கள் திரள்


புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார பாசிஸ்டுகளால் தகர்க்கப்பட்டு 17வது ஆண்டு நினைவு தினமான நேற்று லிபர்ஹான் கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ள குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடெங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணாவில் மக்கள் ஆவேசத்துடன் திரளாக கலந்துக்கொண்டனர்.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மஹராஷ்ட்ரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டன நிகழ்ச்சிகள் நடந்தேறியது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய தர்ணாவில் டெல்லி பல்கலைகழக் பேராசிரியர் ஜி.என்.ஸாயிபாபா சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தது எந்தவொரு கமிஷன் அறிக்கை இல்லாமலே உலகம் அறிந்தபொழுதும் தற்பொழுதும் நீதிமன்றத்திற்கு குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்க இயலவில்லை. பாப்ரி மஸ்ஜித் புணர் நிர்மாணிப்பதுவரை அதற்கான போராட்டம் தொடரும்" என்றார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலாளர் ஷெரீஃப் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். சோசியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எ.சயீத், துணைத்தலைவர் ஸாஜித் சித்தீகி, டெல்லி மஜ்லிஸே முஸாவரா தலைவர் டாக்டர்.அன்வாருல் இஸ்லாம், பீஸ் பார்டி பொதுச்செயலாளர் யாமின் சவுத்ரி, டெல்லி பல்கலைகழக பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

போராட்டமுடிவில் லிபர்ஹான் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டிய குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்று பிரதமருக்கு மனுவை அளித்தனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 22 ஏப்ரல், 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா யாருக்கு ஆதரவு

popular-front-of-india-flag1



15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.

அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.