செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அப்பாவிகளை விடுதலை செய் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிடு

SDPI-ன் தேசிய அளவிலான பிரச்சாரம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 2011 பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் 20 பிப்ரவரி 2011.
கடந்த பல வருடங்களாக நம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக இருந்து வந்த தீவிரவாத தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் போன்றவற்றிற்கு ஆர். எஸ். எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் தான் காரணம் என்பதனை சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு விசாரணைகளின் மூலம் புலனாய்வு அமைப்புகள் அம்பலப்படுத்தியது. இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சூழலில் நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த ஆபத்தான தீவிரவாத சக்திகளை தடுப்பது இன்றியமையாததாகும். குண்டுவெடிப்புகளின் பின்ணனியில் உள்ள உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட, தவறுதலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்யாமலும், இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களின் ஜாமின் மனுக்களை காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகள் நிராகரித்து வருகிறது.


இதனை முன்னிறுத்தி எவ்வித ஆதாரமுமின்றி, அடிப்படையுமின்றி குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரியும், அதே சமயம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்ட ஃபாஸிஸ பயங்கரவாதிகளை சிறையிலடைக்கக்கோரியும் 2011 ஆண்டின் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 வரை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசிய அளவிலான பிரச்சாரம் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.

தேசிய அளவிலான இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 20, பிப்ரவரி, 2011 அன்று சென்னையில் அமைந்துள்ள தமிழக புதிய சட்டமன்றம் அருகில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் எஸ் டி பி ஐ சார்பாக நடத்தப்பட்டது.

சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கருத்தரங்கத்திற்கு SDPIன் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக SDPIன் அகில இந்தியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷாஹித் ஹீஸைன் சித்தீகி , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா, NCHRO-ன் மாநில தலைவர் வழக்கறிஞர் ப. பா. மோகன், PUHR தலைவர் பேரா. அ. மார்க்ஸ், SDPIன் தமிழ்நாடு மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி, SDPIன் மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

SDPIன் அகில இந்திய பொதுச்செயலாளர் முஹம்மது உமர் கான் அவர்கள் அங்கு குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தினை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் தலைமையுரையாற்றிய SDPIன் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் தனது உரையில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சென்னை மாநகரத்திலிருந்து அடுத்த ஒரு மாதத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவங்குகிறது. அழிந்து போகும் நிலையிலிருக்கும் நம் நாட்டினை அழிவிலிருந்து காப்பாற்றி மீண்டும் அதன் உண்மையான பொதுவுடைமை மற்றும் ஜனநாயகத்தின் பக்கம் கொண்டுவருவதற்கான ஒரு சீரிய முயற்சியே இப்பிரச்சாரமாகும் நம் நாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கும் ஊழல் மற்றும் வகுப்புவாதம் குறித்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரம் நம் நாட்டு மக்களிடையே இன்றிலிருந்து இந்தியா முழுவதும் SDPI ன் சார்பாக நடத்தப்படும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் 1,76,379 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழலை தொலைதொடர்பு துறையும், S-Band என்ற பெயரில் 2 லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள ஊழலை Space Research Department என்ற அரசுத்துறையும் நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்தது. அரசும் பல தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதே தொலைத்தொடர்பு துறையõகும். ஆனால் Space Research Department என்பது பெரும்பான்மையாக உயர்ஜாதி இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பகிரங்கபடுத்தப்பட்ட அளவிற்கு S-Band ஊழல் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஊழல் என்றால் ஊழல் தான். அது திராவிட அரசியல்வாதிகள், அமைச்சர்கள் செய்தாலும் சரி அல்லது பார்ப்பன விஞ்ஞானிகள், அதிகாரிகள் செய்தாலும் சரி. ஆக பிரதான ஊடகங்களில் நிலவும் இரட்டை நிலையையே இது நமக்கு உணர்த்துகிறது.

அதுமட்டுமின்றி உயர்ஜாதி வகுப்பினர் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை முஸ்லிம்களின் பெயரில் நிகழ்த்தி விட்டு அதன் மூலம் வெகுஜன இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பு உணர்வை தூண்டிவிடுக்கின்றனர். எனவே வெகுஜன இந்துக்கள் உயர் ஜாதியினரின் இந்த சுழ்ச்சிகளை உணர்ந்து ஊழல் மற்றும் பாசிச இந்துத்துவத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. உடன் ஒன்றினைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.


பின்னர் சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில் பாசிஸ சங்பாரிவாரங்களும் அதனோடு ஒட்டி உறவாடும் சில ஊடகங்களும் அரங்கேற்றிய பயங்கரவாதத்தால் நாட்டில் ஒரு நிலை ஏற்பட்டது. அதாவது "கொல்லப்படுவது முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்படுவதும் முஸ்லிம்கள் சித்ரவதை கைது செய்யப்படுவதும் முஸ்லிம்கள்" என்ற நிலையே அது. ஆனால் இன்று அந்த பொய்கள் தவிடு பொடி ஆக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவர்களிலிருந்து குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் வரை அனைவருமே சங்பரிவார பாசிஸவாதிகளே என்பது தெளிவானது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு முஸ்லிம் இளைஞன் அனுபவித்த சித்ரவதையினை காதால் கேட்டதனால் மட்டும் இந்துத்துவவாதியான அசீமானந்தா புனிதராக மாறியிருக்கிறார். ஆனால் அசீமானந்தா மட்டும் மாறி பயனில்லை. இந்த நாட்டினுடைய ஆன்மா மாற வேண்டும். மேலும் நான் ஒன்றை மட்டும் உறுதியான கூறுகிறேன். அதாவது இந்து மதம் வேறு, இந்துத்துவா என்பது வேறு. இந்து மதம் என்பது ஒரு ஆன்மீக வழிபாட்டு முறை. இந்துமதத்திற்கு நாம் ஒரு போதும் எதிரியல்ல. இந்து மத நண்பர்கள் என்றென்றும் நம் சகோதரர்களே. ஆனால் இந்துத்துவ என்பது அழிக்கப்பட வேண்டிய வெறிபிடித்த பாசிச மிருகம். எனவே, ஆர்.எஸ்.எஸ். ஸின் இந்துத்துவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி முஸ்லிம்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும். சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தக்க நஷ்டஈடு வழங்க வேண்டும்.

எனவே நாம் ஒன்று படுவோம்! பாசித்தை தோற்கடிப்போம்! தேசத்தை பாதுகாப்போம் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக SDPI-ன் அகில இந்திய செயலாளர் சி. ஆர். இம்தியாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இவண்
ஊடக தொடர்பாளர்
SDPI தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: