வியாழன், 26 பிப்ரவரி, 2009

மகனை பதவி விலக சொல்வாரா ராமதாஸ்?

டாக்டர் ராமதாஸ் அவர்கள் மீது நமக்கு பல விஷயங்களில் மரியாதை உண்டு. அதே நேரம் அவரது அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு எப்போதுமே மாறுபட்ட கருத்து உண்டு. அவரோடு அரசியல் களத்தில் இணைந்து செயல்பட முடியாததற்கு இது ஒரு முக்கிய காரண மாகும்.
சமூக நீதி, மது, ஆபாச எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை அவர் எந்த அணியில் இருந்தாலும் நாம் ஆதரிப் போம். அதேநேரம், அவரது தான்தோன்றித் தனமான சில கருத்துக்களை நாம் எதிர்த்து வருகிறோம்.
சமீபத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஒன்றை வழக்கம்போல பொறுப்பற்றத்த னமாக கூறியிருக்கிறார். இலங்கையிலிருந்து 2 ஆயிரம் முஸ்லிம்கள் பாகிஸ் தான் சென்று தமிழர்களை ஒழிப்பதற்காக ஆயுதப்பயிற்சி எடுக்கிறார்கள் என ராமதாஸ் பேசியுள்ளார்.

புலிகளின் இன பயங்கரவாதத்திற்கு தமிழர்கள், தலித்துகள், முஸ்லிம்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப் படுபவர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர் கள் மீது கோபம் கொள்வது இயல்பானது, நியாயமானது.
வன்னியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிராமணர்களுக்கு எதிராக அவர்கள் கோபம் எப்படி இயல்பானதோ நியாய மானதோ அதுபோலத்தான். இன்னும் சொல்வதெனில் அதைவிட ஒருபடி மேலானதுதான்.
இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டாயிரம் முஸ்லிம்கள் புறப்பட்டிருக் கிறார்கள் என பேசியிருக்கிறார். ஒருவேளை அந்த செய்தியை உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக புறப்படவில்லை, புலிகளுக்கு எதிராகத்தான் புறப்பட்டிருக் கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்.
காரணம், அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என இலங்கை முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம்களும் ஒருசேர எதிர்த்து வருகின்றனர்.
இந்த உண்மை டாக்டர் ராமதாஸ் போன்ற அரைகுறை அரசியல்வாதி களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அதற்காக ஆதாரமற்று பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.


தனது மக்கள் தொலைக்காட்சி உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் ரேட்டிங்கில் முதலிடம் பெறவேண்டு மென்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவது நல்லதல்ல.


புலிகளுக்கு வந்திருக்கும் ஆபத்தை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்கும் வந்த ஆபத்தாக சித்தரிக்கும் போக்கும் நல்லதல்ல. உண்மையில் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தாமல் அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.


அல்லது ஈழத்தமிழர்களை பாதுகாக்க தவறும் மத்திய அரசை கண்டித்து, மத்திய மந்திரி பதவியிலிருந்து தனது மகன் அன்புமணி ராஜினாமா செய்ய முடிவெடுக்க வேண்டும்.


அப்போதுதான் டாக்டர் ராமதாஸ் உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார் என்பதாக புரிந்து கொள்கின்றோம்.

பழ.நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் அரசியல் லாபங்களை கருத்தில் கொள்ளாமல் ஈழ விவகாரத்தில் செயல்படுகிறார்கள் என்பது பலரின் கருத்து. ஆனால் டாக்டர் ராமதாஸ் மீது இதே கருத்து யாருக்கும் ஏற்படவில்லை. அவர் நடிக்கிறார் என்பது எல்லோருக் கும் நன்றாகவே புரிகிறது. இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் நிதானமாக பேசுவது நல்லது, தான்தோன்றித்தனமாக பேசுவது அவருக்கு நல்லதல்ல என்பதை மட்டும் தோழமையோடு சுட்டிக் காட்டுகிறோம்.

புதன், 25 பிப்ரவரி, 2009

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்
துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.
12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ),
நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ),
ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 )
ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ),
ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ),
எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ),
ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ),
பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.
மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

நரோடா பாட்டியாலா கூட்டுக்கொலையில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வுக்கு நேரடித் தொடர்பு

குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அமைச்சரவையைச் சார்ந்த மாயா கொத்நானிக்கு உள்ள நேரடித் தொடர்பை சிறப்பு புலனாய்வு குழு (SIT) குஜராத் உயர் நீதி மன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. மாயா தான் குண்டர்களை வழி நடத்திச் சென்றதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம்களை வெட்டிக் கொல்வதற்காக வாட்களையும் வழங்கினார் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயா வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கும்பலை ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தனது துப்பாக்கியை உபயோகித்து சுடவும் செய்தார், என்றும், கலவரப் பகுதிக்கு தனது அடியாட்களுடன் காரில் வந்து சேர்ந்த அவர் அனைவருக்கும் கொடுவாட்களை கொடுத்தார் எனவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட அஃபிடவிட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (SPECIAL INVESTIGATION TEAM) குஜராத் 2002 கலவரத்தில் பதியப்பட்ட 9 வழக்குகளை மீளாய்வு செய்து வருகிறது. அதில் தொடர்புடைய மாயா கொத்நானியின் பங்கை உறுதிபடுத்திக் கொண்ட SIT மறு விசாரணைக்கு சமூகமளிக்கும்படி மாயாவுக்கு சம்மன் அனுப்பியது. மாயா அதனை உதாசீனப்படுத்தியதால், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தனது அதிகார பலத்தால் பதுங்கி இருந்த மாயா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கீழ் கோhர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

முன் ஜாமீன் வழங்கிய கீழ் கோர்ட், SITயின் அஃபிடவிட்டையோ, வழக்கு சம்பந்தமான விசாரணை அறிக்கையையோ பொருட்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதே வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஏனையோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், (முதன்மை குற்றவாளி என அறியப்பட்ட) மாயாவிற்கும் ஜாமீன் வழங்குவதாக அந்நீதிபதி குறிப்பிட்டுள்ளார். (இதுவன்றோ சம நீதி ??? ...)

28, பிப்ரவரி 2002இல் நரோடா பாட்டியாலாவில் மட்டும் குறைந்தபட்சம் 95 முஸ்லீம்கள் ஆயிரத்துக்கும் அதிகமான வன்முறையாளர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.மாயாவிற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை எதிர்த்தும், தனது விசாரணை விபரங்களின் அடிப்படையிலும் கடந்த வியாழனன்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் SIT – அஃபிடவிட் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மாயா கொத்நானி எனும் அந்த பெண், உயர் கல்விக்கான அமைச்சராக இப்பொழுதும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த வழக்கு ஃபிப்ரவரி 24ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட உள்ளது.

நன்றி : 2CIRCLES.NET

தமிழில் : அபூஹாஜர்
நன்றி : http://www.tmmk-ksa.com

ம.ம.க தலைமை நிர்வாகிகள் நியமனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக பின்வரும் சகோதரர்கள் தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு நியமனம் செய்துள்ளது.

ஏனைய ம.ம.க தலைமை நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு பிறகு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.

துணைப் பொதுச் செயலாளர்
எம் . தமீமுன் அன்சாரிமனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எம். தமிமுன் அன்சாரி 32 வயது நிரம்பியவர். 1990 முதலே சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாபரி மஸ்ஜித் தொடர் பான விஷயங்களும், பழனிபாபாவின் உரைவீச்சுக்களும் இவரது கவனத்தை ஈர்த்த நேரத்தில் 1990ல் நிகழ்ந்த வளைகுடா யுத்தம் இவரை நேரடியாக அமெரிக்க எதிர்ப்புப் பிரச்சாரம் மூலமாக சமுதாயப் பணிக்கு வந்தார். 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது சக நண்பர்களோடு முஸ்லிம் மாணவர் முன்னணி என்ற அமைப்பை தொடங்கி நடத்தினார்.


நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்த எம். தமிமுன் அன்சாரி சென்னை புதுக்கல்லூரியில் 1995ல் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கையில் தமுமுகவில் இணைந்தார். பின்னர் தமுமுகவின் மாணவரணிச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றினார். 1997ல் புதுக்கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் பெருவாரியான வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல் மாணவரணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவரணி நிர்வாகி களாக இருந்த ஹாரூண், இஸ்மத், ஹாஜாகனி, தைமிய்யா உள்ளிட்ட நிர்வாகிகளோடு தமிழகமெங்கும் 10 கல்லூரிகளில் மாணவரணியை உருவாக்கினார்.


2001ல் தமுமுகவின் மாநிலச் செயலாளராக கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப் பட்டு, தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்து வருகிறார். தமுமுக சார்பாக அமீரகம், குவைத், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சிறந்த மேடைப் பேச்சாள ரான இவர் கவிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கு கிறார். தற்சமயம் மக்கள் உரிமை ஆசிரியராக இருக்கின்றார்.


அமைப்புச் செயலாளர்கள் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன்


தமுமுகவின் தொடக்கத்தில் வடசென்னை மாவட் டத் தலைவராக இருந்து, பிறகு 7 மாவட்டங்கள் உள்ளடங்கிய வட தமிழக மண்டலத் தின் பொறுப்பாளராக செயல்பட்டார். பிறகு 2001 முதல் 2007 வரை தமுமுகவின் மாநிலச் செயலாளராக செயல்பட்டார். களப் பணிகளில் சீரிய அனுபவம் கொண்ட இவர் வணிகராக இருக்கிறார்.


கே. முஹம்மது கவுஸ்


மதுரையை சேர்ந்த கே. முஹம்மது கவுஸ், தமுமுக வில் கிளை நிர்வாகி முதல் மாநிலச் செயலாளர் வரை பொறுப்புகளை வகித்தவர். சிறந்த பேச் சாளரான இவர் சீரிய களப் பணியாளராக வும் இருக்கிறார். தற்சமயம் தமுமுகவின் மாநிலச் செய லாளராக இருக்கும் இவர், மதுரையில் வணிகம் செய்து வருகிறார்.


மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி


வேலூர் நகரத்தைச் சேர்ந்த மவ்லவி சம்சுதீன் நாஸர் உமரி, ஜாமிஆ தாருஸ்ஸலாம் உமராபாதில் பயின்று ஆலிம் பட்டம் பெற்றவர். வர்த்தகரான இவர் வேலூரில் பல சமூக சேவை நிறு வனங்களுடன் இணைந்து சமூக சேவை யாற்றி வருகிறார். வேலூ ரில் இயங்கும் நஸாயீ ஆங்கிலலிஅரபி பள்ளிக் கூடத்தின் தாளாளராக தற்சமயம் இருந்து வரு கிறார். தமுமுகவின் வேலூர் மாவட்ட உலமா அணிச் செயலாளராக வும் இருந்த இவர் தற்போது மாநில உலமா அணி பொருளாளராகவும் சேவை செய்து வருகிறார். உருது மொழியில் சிறந்த பேச்சாளராகவும் இவர் இருக்கிறார்.தலைமை நிலையச் செயலாளர் டி.. முஹம்மது இஸ்மாயீல்

தமுமுகவின் தொடக்க காலம் முதல் அதில் இணைந்து சேவையாற்றி வரும் இவர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2007 முதல் தமுமுக வின் துணைச் செயலா ளராக சேவையாற்றி வரு கிறார். தமுமுக தலைமைக் கழகத்தில் செயல்படும் ஷரீஅத் சமாதானக் குழு வில் நீண்டக்காலம் நிர்வாகியாக இருந்த இவர் 2004 முதல் அதன் தலைவ ராகவும் இருந்து வருகிறார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

தேசபக்தி திருத்தொண்டர்!


இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம்" என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.
வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்தபதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.

அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற பூனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது.

ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது.

பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார்.

அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது.

1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்.

"அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார்

நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த மோடியின் இன்னொரு முகமூடி


அகமதாபாத்: முஸ்லீம்களின் வெறுப்பு வளையத்திலிருந்து பாஜகவையும், தன்னையும் மீட்டு வெளியே கொண்டு வரும் புதிய தந்திரமாக, குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியை முதல்வர் நரேந்திர மோடி நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சபீர் கந்தவாவாலா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உருவான 50 ஆண்டுகளில் முஸ்லீம் அதிகாரி ஒருவர் டிஜிபி பதவிக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இருந்து வந்த டிஜிபி பி.சி.பாண்டேவுக்குப் பதில் சபீர் புதிய டிஜிபியாகியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இந்த பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபி பதவிக்கு மோடி கொண்டு வந்திருப்பது, பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு முஸ்லீம் மக்களிடையே நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் தந்திரமாகவே கருதப்படுகிறது.

அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மோடியின் இந்த நியமனம் ஒரு அரசியல் மற்றும் மத ஸ்டண்ட் ஆகவே கருதப்படுகிறது.

சபீர், ஷியா முஸ்லீம் சமுதாயத்தின் தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பல ஆண்டுகளாகவே மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்.

1973ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சபீர், கோத்ரா வன்முறை தொடர்பான வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2007ம் ஆண்டே இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை மாநில அரசு நிராகரித்து விட்டது.

கடந்த வாரம்தான் டிஜிபி அந்தஸ்துக்கு சபீர் உயர்த்ப்பட்டார். ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் சபீரை டிஜிபியாக்கியிருக்கும் சமயம்தான் மோடி மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.

மாயா சர்ச்சையிலிருந்து மீளும் முயற்சி ...

காரணம், மோடி அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக உள்ள மாயா கோட்னானியால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே சபீரின் நியமனத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.

2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது மாயா கோத்னானி நடந்து கொண்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை உள்ளது. அப்போது நடந்த கலவரத்தில் மாயா மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையிலும் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார் மாயா. இதையடுத்து பி்ப்ரவரி 2ம் தேதி இவரை தலைமறைவு குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்க்பட்ட சிறப்பு புலனாய்வுப் படை அறிவித்தது.

மாயா மீதான வழக்கு என்ன?

2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின்போது நரோடா பாடியா பகுதியில் ஒரு கும்பல் அங்கிருந்த முஸ்லீம்களைத் தாக்கியது.

அப்போது அங்கு நடந்த வன்முறையைத் தூண்டி அரங்கேற்றியவர் மாயா கோத்னானி என்பது சிறப்புப் புலனாய்வுப் படையின் குற்றச்சாட்டு.

அது மட்டுமல்லாது கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்லுமாறும், பொருட்களை சூறையாடுமாறும், பெண்களைக் கற்பழிக்குமாறும் வன்முறைக் கும்பலுக்கு மாயா உத்தரவிட்டார் என்பதுதான் மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு.

மாயாவுடன், வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் படேலும் என்பவரும் இணைந்து இந்த வன் கொடுமையை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நரோடா பாடியா பகுதியில் நடந்த வன்முறையில் மட்டும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.

இந்த கொடுமையான வன்முறையை நேரில் பார்த்த சாட்சிகளி்ல் ஒருவரான ஷெரீப் மாலிக் என்பவர் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோர்தான் அந்த வன்முறைக் கும்பலுக்கு நேரடியாக தலைமை தாங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அவர்கள்தான் அந்தக் கும்பலை கொலை செய்யவும், பொருட்களை சூறையாடவும், கற்பழிக்கவும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்.

வன்முறைக் கும்பலிடம் தனது வண்டியில் வைத்திருந்த மண்ணெண்ணை கேன்களை எடுத்துக் கொடுத்து தீவைத்துக் கொளுத்துமாறு உத்தரவிட்டார் மாயா என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட மாயா நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல்இருந்து வந்தார். ஜனவரி 19 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையின்போதும் அவர் சம்மன் அனுப்பியும் வரவில்லை.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.

இதையடுத்து மாயா தலைமறைவாகி விட்டார். பின்னர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.

தேடப்படும் குற்றவாளியாக மாயா அறிவிக்கப்பட்டதும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவரோ அதை நிராகரித்து விட்டார். மாயாவும், நான் அப்பாவி, ராஜினாமா செய்ய மாட்டேன் என்று விட்டார்.

கொடும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு, முன்ஜாமீனும் மாயாவுக்குக் கிடைத்ததால் கோத்ரா வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் பெரும் கொதிப்பும்,அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபியாக்கியுள்ளார் மோடி. எனவே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சாயம் கொண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை ஐஸ் வைக்கும் செயல் என குஜராத் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த முயலும் மோடியின் இன்னொரு முகமூடிதான் இந்த டிஜிபி நியமனம் என்றும் கருதப்படுகிறது.

சனி, 21 பிப்ரவரி, 2009

முஸ்லீம்களுக்கு அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை என்று இடது சாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன

'டெல்லியில் வலது கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போத அவர் கூறுகையில் முஸ்லீம் மக்களின் பரிதாப நிலையை சச்சார் கமிட்டி விளக்கமாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முஸ்லீம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. முஸ்லீம் மக்களுக்காக 15 அம்ச திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ்அரசு கூறியது.ஆனால் அதையும் நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
மொத்தத்தில் பார்க்கப்போனால் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லீம் மக்களுக்காக மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். முஸ்லீம் மக்களுக்கா திடமான நடவடிக்கை எதையும் எடுக்காத வரை வலது கம்யூனிஸ்டு எதையும் நம்பத்தயாரில்லை என்றும் அவர் கூறினார். முஸ்லீம் சமுதாயம் சுரண்டப்படுவதை எதிர்த்து தேசிய இளைஞர் லீக்குடன் இணைந்து இடது சாரி கட்சிகள் போராடவும் தயார் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் தேசிய இளைஞர் லீக் ஏற்பாடு செய்திருந்த ஒரு தர்ணா போராட்டத்தில் ராஜா கலந்து கொண்டார். இதில் இடது கம்யூனிஸ்டு பொலீட் பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான சீத்தாராம் எச்சூரியும் கலந்து கொண்டு பேசினார்.

சிறுபான்மை மக்களின் நல்வாழ்விற்காக ரூ. 513 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு அந்த தொகையில் சிறிதளவு தொகையை மட்டுமே அனுமதித்துள்ளது என்று சீத்தாரம் எச்சூரி குற்றம்சாட்டினார்.

முஸ்லீம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை இந்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. சிறுபான்மை மக்களுக்காக தனியாக ஒரு துணை திட்டத்தை அறிவித்தால் மட்டுமே சிறுபான்மை மக்களின் துயரை போக்க முடியும் என்றும் அவர் சொன்னார். இப்பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றும் சீத்தாராம் எச்சூரி கூறினார்.

நன்றி: தினபூமி

கரு வளர்ச்சிப்பற்றி அல் குர்ஆன்

கி.பி.15 ம் நூற்றாண்டு வரை "மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது" என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை, திருக்குர்ஆனைத் தவிர!

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார்.
'திருமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன" என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கங்கள் வியக்க வைக்கிறன.

'உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுவீர்கள்?' (அல்குர்ஆன் 39: 6)

கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய முதல் படம் கி.பி.15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த Leonardo da vinchi என்ற இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen என்பவர் தன்னுடைய "கரு உருவாக்குதல்" என்ற நூலிலும் (Placenta), கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். "மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்" என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது )
அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும் சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை "மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது" என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை!

கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி.20ம் நூற்றாண்டில் Streeter(1941) என்பவரும் முதன் முதல் கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை தந்தனர். அதற்குமுன் எவரும் மனித கரு வளர்ச்சிப்பற்றிய முறையான விளக்கத்தை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன் எழாம் நூற்றாண்டிலேயே மிகத் துல்லியமாக இந்த உண்மைகளை விளக்கி, இறை மறை என்பதற்கு சான்றாகத் நிகழ்கின்றது.
இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்." என்ற சொற்றொடரைக் கவனியுங்கள்! வயிற்றுச்சுவர் கருப்பையின் சுவர் கருவின் மீது போர்த்தி இருக்கும் மெல்லிய சவ்வு ஆகிய மூன்று இருள்களுக்குள் மனிதனை வைத்துப் படைத்ததை அல்லாஹ் அழகாக விளக்குகிறான்.

'பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தோம்! பின்னர் அந்த இந்திரியத் துளியை "அலக்" என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:13,14)

'கலப்பான் இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைதோம். (அல்குர்ஆன் 76:2)

முதல் வசனத்தில் இந்திரியத்துளியிலிருந்து படைத்ததாகவும், இரண்டாம் வசனத்தில் கலப்பான இந்திரியத் துளியிலிருந்து படைத்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான். கலப்பான இந்திரியதுளி என்பதன் பொருளை பல நூற்றாண்டுகளுக்கு முன்வரை மனிதன் அறிந்த்திருக்கவில்லை .

ஆணுடைய இந்திரியத்துளி பெண்ணிடம் தயாராக உள்ள முட்டையுடன் கலந்து (zygote) என்ற கரு உருவாகுகின்றது. பின் அது பிரிந்து (Blastocyst) என்ற நுண்ணுயிராக மாறி கருப்பையில் விதைக்கப்படுகிறது என்பதை சமீப காலத்தில் தான் மனிதனால் கண்டுபிடிக்க முடிந்தது .இந்த பேருன்மையை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக்கிவிட்டது. மேற்கூறிய 23:14 வசனத்தில் "அலக்" என்ற இரண்டாம் நிலையை மனிதக்கரு அடைவதாகக் கூறப் படுகிறன்றது. அலக் என்ற சொல்லுக்கு இரத்தக்கட்டி என்றே கடந்த காலங்களில் பொருள் செய்யப் பட்டுள்ளது. அந்த வார்த்தைக்கு அப்படி ஒரு பொருள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் மனிதக்கரு இரத்தக்கட்டி என்ற நிலையை அடைவதில்லை என்பது விஞ்ஞானிகளின் முடிவு. எனினும் அலக் என்ற சொல்லுக்கு வேறு பொருளும் உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் அலக் என்ற சொல் அட்டைப்பூச்சியையோ குறிக்கும். இந்த பொருள் இன்றைய விஞ்ஞான முடிவுக்கு ஒத்துவருமா என்று பார்போம் .

கலப்பான விந்துத் துளியாகிய கருப்பையில் நுழைந்த மனிதக்கரு அட்டைப்பூச்சி தோலின் மீது கடித்துக் கொண்டு தொங்குவதைப் போல் கருப்பையின் உட்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். 7ல் இருந்து 24 நாட்கள் வரை வளர்ச்சி நிலையில் இருக்கும் மனிதக் கருவைக் குறிக்க இதைவிடச் சிறந்த வார்த்தை இருக்க முடியாது. அட்டைப்பூச்சி தனக்கு வேண்டிய ச்த்தை ஒட்டிக் கொண்டிருக்கும் பிராணியிலிருந்து எவ்வாறு உறிஞ்சிக் கொள்கிறதோ அவ்வாறே மனிதக் கருவும் தனக்கு, வேண்டிய சத்தை கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டு அங்கிருந்து உரிஞ்சிக் கொள்கிறது. மனிதக் கருவின் இரண்டாம் நிலயை அட்டைப் பூசிக்கு ஒப்பிட்டது மிகப் பொருத்தமே!

7ல் இருந்து 24 நாட்கள் வரை உள்ள மனிதக் கருவை கருவிகளின் உதவியால் பெரிதாக்கிப் பார்த்தால் அது ஒரு அட்டைப் பூச்சி வடிவத்திலிருப்பது ஆச்சிரியமானது. மைக்ரோஸ்கோப் போன்ற எந்தக் கருவிகளும் இல்லாத 7 ம் நூற்றாண்டில் மனிதக்கரு அட்டைப் பூச்சியைப் போலிருகிறது .

அதே 23:14 வசனம் "அலக்" என்ற நிலையிலிருந்து தசைக்கட்டியாக மாறுவதாகக் குறிப்பிடுகின்றது. அதில் தசைக்கட்டி என்பதைக் குறிக்க முழ்கத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லுக்கு "மெல்லப்பட்ட சதைத்துண்டு" என்பது பொருள். இப்போது இதுபற்றி விஞ்ஞானிகளின் முடிவைக் காண்போம்!
கரு உண்டாண நான்காவது மாத இறுதியில் கரு ஏறத்தாழ மெல்லப்பட்ட சதைத்துண்டைப் போல் தோற்றமளிக்கின்றது .தலைப் பகுதி, மார்பு,வயிறு, கால்கள் இவை எல்லாம் பிரிக்கப்பட்டு வளர்வதற்கு முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். அந்த சுவடுகள் தான் பல்லால் சதைத் துண்டைத்மென்றால் ஏற்படும் பற்குறிகளைப் போன்ற தோற்றத்தை அந்தக் கருவிற்கு ஏற்படுத்தி விடுகின்றது .

கருவளர்ச்சியில் மூன்று அடுக்குகளாக உருப்புக்கள் உருவாகின்றன. (Ectoderm) என்ற மேல் அடுக்கிலிருந்து தோல் பகுதிகளும், நரம்பு மண்டலமும் மற்றும் தனிப்பட்ட உனர்வுகளை அறியக்கூடிய இன்ன பிற உறுப்புகளும், சுரப்பிகளும் உருவாகின்றன. (Endo derm) என்ற கீழ் அடுக்கில் இருந்து உட்புற செல், திசு அடுக்கு உண்டாகிறது. (Mesoderm) என்னும் மத்திய அடுக்கிலிருந்து தான் மென்மையான எலும்பு முதலில் உருவாக்கப்பட்டு அதன் மீது சதை போர்த்தப்படுகின்றது. எட்டாவது வாரத்தை பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும், நிலைகளையும் கடந்து கரு, மற்ற பிராணிகளைப் போன்றிருக்கிறது. எட்டாவது வாரத்தை ஒட்டித்தான் அந்தக்கரு மனிதப் பண்புகளை அடைகின்றது. இந்தப் பேருண்மையை மேற்கூறிய திருவசனம் 23:14 எவ்வளவு தெளிவாக விளக்கி விடுகின்றது!
'மனிதர்களே! இறுதித் தீர்ப்புக்காக் நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தால் அறிந்துக் கொள்ளுங்கள்! நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு இரத்தக் கட்டியிலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும் உருவாக்கப்படாததுமான சதைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்.' (அல்குர்ஆன் 22:5)

இந்த வசனத்தில் (பகுதி)உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான சதைக்கட்டி என்று கூறப்படுகின்றது. இதன் பொருள் என்ன? இப்படி ஒரு நிலை கருவளர்ச்சியில் உண்டா என்று ஆராய்ந்தால் நாம் வியப்படையும் பேருண்மைதான் நமக்கு வெளிப்படுகின்றது.

பகுதி உருவான, பகுதி உருவாகாத என்பது, வித்தியாசப்படுத்த முடிகின்ற வித்தியாசப்படுத்த முடியாத திசுவைக்குறிக்கும். இந்த இரண்டு நிலைகளும் கருவளர்ச்சியில் இருப்பதை விஞ்ஞானம் தெளிவாக ஒப்புக் கொள்கிறது. மென்மையான எலும்புகளும், கெட்டியான எலும்புகளும் உர்வாக்கப்படும்போது பகுதி உருவான இணைப்புத் திசுக்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பிறித்தரிய முடியாது.இன்னும் சிறிது காலம் சென்றபின் அவை தசைப்பகுதியாகவும், எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நார் போன்ற இனைப்புத் தசையாகவும் பிரித்துவிடுகின்றது . இதைப் தான் 22:5 வசனம் தெளிவாகக் குறிப்பிடுன்றது.

கேட்கும், பார்க்கும், மற்றும் தொடு உணர்ச்சிகள், திருக்குர்ஆனின் 32:9 வசனத்தில் சொல்லப் பட்டிருக்கும் அதே வரிசைக்கிரமத்தில்தான் உருவாகின்றன என்பது அதைவிட ஆச்சரியமானதே! பகுத்து புரியச் செய்யும் மூளை உருவாவதற்கு முன்பு உள் செவி, மற்றும் கண்களின் ஆரம்பச் சுவடுகள் தோன்றுகின்றன.திருக்குர்ஆன் இந்த பேருண்மையைகளை ஜயத்த்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றன.

22:5 வசனத்தில் எந்தக்கருக்கள் கர்ப்பப் பையில் முழுமையான காலம் தங்கி இருக்கும் என்பதை இறைவன் ஒருவனே நிர்ணயிக்கிறான் என்ற கருத்தை இந்தத்திருவசனம் உணர்த்துகின்றது. அநேக கருக்கள் முதல் மாத வளர்ச்சியின் போதே சிதைந்து விடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! சுமார் 80% கருக்கள் தான் சிசுவாகி பிறக்கும் வரை உயிருடன் இருக்கின்றன.
ஏழாம் நூற்றாண்டில் மக்கள் பெற்றிருந்த மருத்துவ அறிவைக்கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள மனித வளர்ச்சி பற்றிய திருவசனங்களின் பொருளை முழுமையாக உணரமுடியாது. கருவளர்ச்சியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கம் நமக்கே கடந்த 50 ஆண்டுகளில் தான் அதுவும் மைக்ரோஸ்கோப் போன்ற பல விஞ்ஞான கண்டு பிடிப்புக்களுக்குப் பிறகுதான் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் முன்பே எழாம் நூற்றாண்டிலேயே இந்த உண்மையைத் தெளிவாக விளக்கி குர்ஆன், இறைமறை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது."Jazaakallaahu khairan"- The Muslim World League Journal May-June 1987

H.F.Nagamia M.D

Pof: Thajudeen M.A in Tamil
THAKS TO: nidur.info

கோழிக்கோட்டில் முஸ்லிம்களின் எழுச்சி!தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது.

மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம்” என்ற தலைப்பில் நடந்தது.

தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார்.

"உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும்.

அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.


இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம்.

15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.

இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

"இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

துபாயில் ரத்ததான முகாம்

துபாய்: துபாயில் வரும் 27ம் தேதி ரத்ததான முகாம் நடக்கிறது.

துபாய் நகரில் உள்ள அல் வசல் மருத்துவமனையில் தமிழ்நாடு ஜமாஅத்துத் தவ்ஹீத் சார்பில் ரத்ததான முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துவங்குகிறது. ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்கவதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 050-5756518, 04-2715830.

அடுத்த பிரதமர் யார்?

நாடாளுமன்றத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கான ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பயணிகள் கட்டணம் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டது. சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் சமர்ப்பித்த 6வது பட்ஜெட் இது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் கட்டணம் உயர்த்தப் படவில்லை. அத்துடன் சென்ற ஆண்டு இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது இடைக்கால பட்ஜெட்டிலும் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களைத்தவிர பிற நகர் ரயில்களில் 10 கிலோ மீட்டர் தூரத் துக்கு நான்கு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஏற்கனவே ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டது. இப்போது 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ரூ 50 வரையுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் ஐம்பது ரூபாய்க் கும் மேல் உள்ள கட்டணங்கள் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளிர்சாதன இருக்கை, முதல் வகுப்பு, இரண்டுஅடுக்கு குளிர்சாதன வகுப்பு, மூன்றடுக்கு குளிர்சாதன வகுப்பு ஆகியவற்றுக்கான கட்டணங் களும் இரண்டு சதவீதம் குறைக்கப்படு வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் குளிர்சாதன முதல் வகுப்பு கட்டணம் 28 சதவீதமும் இரண்டு அடுக்கு குளிர் சாதன கட்டணம் 20 சதவீதமும் குறைக்கப்பட்டதால் ஆகாய மார்க்க மாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து ரயில்களில் உயர் வகுப்பில் பிரயாணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு ரயில்வேத் துறைக்கு லாபமும் அதிகரித்தது.

இவ்வாண்டு புதிதாக 43 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலே சாதனை படைத்தார் ஒடுக்கப்பட்ட சமுதாயத் தில் பிறந்த லாலு.

மிகவும் பின்தங்கிய நிலையில் தேறவே தேறாதோ என அனைவ ராலும் கைவிடப்பட்ட ஒரு துறையை மறு மலர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று அசத்தியிருக்கிறார் லாலு.
சமீபத்திய சாதனையாளர்களில் முதலிடத்தில் வைத்து பாராட்டத் தக்கவர் லாலு.

இவர் மேட்டுக்குடி சமூகத்தில் பிறந் திருந்தால் இவரை தலைமேல் தூக்கி வைத்து உச்சி மோர்ந்து மெச்சிப் புகழ ஒரு கூட்டமே ஊடக வட்டாரத்தில் உருவாகியிருக்கும். ஆனால் உழைக் கும் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்ததி னால் லாலு சாதனை மேல் சாதனை நிகழ்த்தியிருந்தாலும் கூட அவரது சாதனைக்கு முழுமையான அங்கீகாரம் இந்த நாட்டில் கிடைத்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை.

கடந்த ஐந்தாண்டுகளில் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றிய அமைச்சர்களில் லாலு முதல் நிலை வகிக்கிறார் எனில் அது மிகையாகாது. உயர்கல்வி நிறுவனங்களின் இவரது சாதனைகளை பாடமாக வைக்கும் அள விற்கு சிறப்பு வாய்ந்தவராக மாறியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வெகு அருகிலேயே இருக்கும் நிலையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் வேட் பாளர்களின் பெயர்களை பார்க்கும் போது வேதனை கலந்த சிரிப்புதான் ஏற்படுகிறது.

மதவெறி யாத்திரைகளின் மூலம் இந்த தேசத்தை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி தள்ளிய பழமைவாத, பிரிவினைவாத கூட்டத்தின் தலைவர் எல்.கே.அத்வானி, இருபதாம் நூற் றாண்டின் இணையற்ற இனப்படு கொலையாளரும் இரண்டாவது ஹிட்லருமான நரேந்திர மோடி போன்றவர்கள் பிற்போக்குவாதிகளால் முன் நிறுத்தப்படுகிறார்கள்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதிய பாத்திரத்தில் பழைய பதார்த்தம் என்பதைப் போல மன்மோகன் சிங் பெயர் முன்மொழியப்படுகிறது. இடதுசாரிகளோ மாயாவதியின் பெயரை பரிசீலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. செல்வி மாயாவதி யின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் த­த் சமூகத்தின் வளர்ச்சி யின் விரோதிகளுக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கி வருகிற நிலையில் இடதுசாரிகளால் முன் நிறுத்தப்போகும் நபர் அவ்வளவு தெளிவான தெரிவாக இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. சமாஜ்வாதி கட்சி சரத்பவாரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் ஆதரிப் போம் என புதிய ஒரு குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. செயலாற்றல் கொண்ட தலைவர் களுக்கு இந்த நாட்டில் பஞ்சம் இல்லை.

லாலுவும், சமூக நீதி தத்துவத்தில் சளைக்காத உறுதிகாட்டும் அர்ஜுன் சிங்கும் (உடல்நிலை தளர்ந்தவராயிற்றே என வினாக்கள் எழலாம் வாஜ்பாய் பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பேயை விட இவர் உடல்நிலை யில் சளைத்தவர் இல்லை என்பதே உண்மை)
ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற சமூக நீதிப் போராளிகளை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதில் இவர்களுக்கு ஏன் தயக்கம்?
செயலாற்றல் மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாள ராக முன்னிறுத்துவதே நாளைய இந்தியாவை வல்லமையுடன் கட்ட மைக்க உதவிகரமாக அமையும் என்பதே நாட்டு மக்களின் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு.

புதன், 18 பிப்ரவரி, 2009

தமிழக அரசுக்கு நன்றி ! நன்றி !!

சென்னை: உலமாக்கள் நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி.

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், முஸ்லிம் அநாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக "உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர் நலவாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

தமிழக அரசுக்கு நன்றி ... நன்றி...

புளியங்குடி அப்துர் ரஷீத் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!
நெல்லை மாவட்டம் புளியங்குடி கீழப்பள்ளி வாசல் ஜமாஅத்தை சார்ந்தவர் அப்துர் ரசீத். சாதாரண டீக் கடை மூலமாக தனது குடும்பத்தை நடத்தி வந்தார். 2000 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் புளிங்குடியில் இருந்து பாளையங் கோட்டை கிரசண்ட் நகருக்கு தப்லீக் குழுவினருடன் இஸ்லாமிய ஊழியம் செய்வதற்காக புறப்பட்டார். காலை சஹர் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நேரம் அது. கைகளில் அரிவாள், கூர்மையான கத்திகளுடன் பள்ளிவாசலுக்குள் திபுதிபுவென புகுந்த சங்பரிவார கும்பல் ஒன்று கண் இமைக்கும் நேரத்திற்குள் அப்துர் ரஷீத் மீது வெடிகுண்டை வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

பள்ளிவாசலில் நடந்தேறிய இந்த படுகொலை சம்பவம் தமிழக முஸ்­ம் களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவரின் படுகொலையைக் கண்டித்து புளியங்குடி, தென்காசி, மேலப் பாளையம், நெல்லை உள்பட தமிழகத் தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வீரியமாக நடைபெற்றன. தடையை மீறிய ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் வீரியமான போராட்டங்கள், பேரணி என போராட்டங்கள் பல கட்டங்களை எட்டியது. இதனை ஒடுக்குவதற்காக அன்றைய நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) கண்ணப்பன் ஆங்காங்கே விக்ரக பீடங்களில் உடைப்பு ஏற்படுத்தி, அநியாயமாக மேலப்பாளையம் ரசூல் மைதீன் உள்ளிட்ட 4 தமுமுகவினர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்தோடு மட்டுமில்லாமல் கடையநல்லூர் காவல்துறை உதவியாள ராக இருந்த சக்கரவர்த்தி, மைதீன் பிச்சை மற்றும் மாரியப்பனை அடித்து சித்தர வதை செய்து தாங்கள்தான் குற்றவாளி கள் என வாக்குமூலம் வாங்கி இந்த கொலை வழக்கின் திசையை மாற்றினர். இதில் மைதீன் பிச்சை என்பவர் படு கொலை செய்யப்பட்ட அப்துல் ரஷீதின் மகன் ஆவார். மகனே தந்தையை படு கொலை செய்த பயங்கரம் என தமிழக மக்களின் மனநிலையை மாற்ற காவல் துறை நடத்திய மாபெரும் நாடகம் அது. சங்பரிவார கும்பல்களின் சதியை மறைத்து அப்துர் ரஷீதின் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது காவல்துறை.

அடக்குமுறைக்கு எதிராகவே களம் கண்டு வந்த தமுமுக காவல்துறையின் சதியை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்த பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையத்தில் அப்துர் ரஷீதின் படுகொலைக்கு நீதி கேட்டு சுமார் 30,000க்கும் மேற்பட்ட முஸ்­ம்கள் கலந்து கொண்ட கண்டன பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி '' 15 நாட்களுக்குள் உண்மை குற்றவாளி களை பிடிக்கவில்லையெனில் தொடர்ச்சி யான சிறை நிரப்பும் போராட்டங்களின் மூலம் தமிழகத்தையே ஸ்தம்பிக்க செய்வோம் எனக் கூறினார். தமுமுகவின் சிறை நிரப்பும் போராட்ட அறிவிப்பின் எதிரொ­யாக தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தர விட்டது. மைதீன் பிச்சை மற்றும் மாரியப்பன் குற்றவாளி இல்லையென நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட னர். ஆனால் அரசு அறிவித்த உதவித் தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அரசு வேலையும் அந்த குடும்பத்திற்கு வழங் காமல் காலங்கடத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமுமுக தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை நடத்தியது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக அப்துர் ரஷீத் கொலை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் ஒன்று கடையநல்லூரில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடந்தது. இதில் 3,000க்கு மேற்பட்ட முஸ்­ம்கள் கலந்து கொண்டனர். நெல்லை பாளையங்கோட்டையில் அடைமழையையும் பொருட்படுத்தாது தமுமுக சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானோர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் 18.12.2008 அன்று தமிழக காவல் துறை தலைவர் ஜே.பி. ஜெயின் நெல்லை வந்தபோது தமுமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து நிறுத்தி வைக்கப்பட்ட உதவித் தொகையை வழங்க வலியுறுத்தினர். இதன் விளைவாக கடந்த 09.02.2009 அன்று அப்துர் ரஷீத் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையான ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை அரசு வழங்கியது.


என் வாழ்வில் இருளை கிழித்து ஒளியை கொடுத்ததே தமுமுக தான்!
''நானும் எனது தந்தையும் தான் டீக் கடை நடத்தி வந்தோம். எனது தந்தையையே நான் கொன்று விட்டதாக கூறி காவல்துறை என்னை கைது செய்தது. ஆனால் அல்லாஹ்வின் உதவியால் தமுமுகவினர் என்னைக் காப்பாற்றி காவல்துறையின் பொய் முகத்தை கிழித்தனர். என் வாழ்வில் இருளை அகற்றி ஒளி ஏற்றியது தமுமுகதான்'' என்றார்.

சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட

தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக தமுமுக பொதுச் செயலாளர்
செ. ஹைதர் அலி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப் பேற்றார். அப்போது பத்திரிகையாளர் களை சந்தித்த அவர், ''ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் வக்ப் நிலங்களை மீட்பதுதான் எனது முதல் பணி'' என்று சூளுரைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். அப்போது சென்னையில் கடற்கரை அருகே திருவல்லிக்கேணி யில் டாக்டர் பெசன்ட் சாலையில் திவான் சாஹிப் கபரஸ்தான் வக்புக்குச் சொந்தமான 25 கிரவுண்டு நிலம் 1917ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும் அதை மீட்டெடுக்க நீதிமன்றங்கள் மூலம் முயற்சிக்கப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளதும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இதனை மீட்டெடுக்கும் பணியில் வாரியத் தலைவர் தீவிரம் காட்டினார்.
இந்த வக்ப் நிலத்தில் அருணா கார்டன் என்ற பெயரில் தோட்டத்தை உருவாக்கி அதனை வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடமாக ஆக்கிரமிப் பாளர்கள் உபயோகித்து நான்கு தலை முறையாக லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். மேலும் மூன்று அடுக்கு மாடி வீட்டையும் கட்டியுள்ள னர். ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடியாகும்.


இந்த வக்ப் நிலத்தை காலி செய்து வாரியத்திடம் ஒப்படைக்குமாறு பிறப் பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கு கடந்த 11.02.2009 அன்று தள்ளுபடி ஆனது. இதையடுத்து வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரனை தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் செயலாற்றி நிலத்தை மீட்டு வாரியத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மைலாப்பூர், திருவல்லிக்கேணி வட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரனிடம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் பகுதி காவல் துணை ஆணையரை தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கு மாறும் கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவலர்கள் துணையுடன் கடந்த 12.02.2009 அன்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் வக்ப் வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் இருந்தனர். இந்த விஷயத்தை கேள்வி யுற்ற திருவல்லிக்கேணி மற்றும் மைலாப் பூர் பகுதி தமுமுகவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாரியத் தலைவர், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைப் பார்வையிட்டுச் சென்றார்.


பரபரப்பான கட்டத்தில்...


பகல் 2.00 மணியளவில் அங்கு பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வாகனங் களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. நான்கு சக்கர வாகனங் களை அப்புறப்படுத்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 40 கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களின் உதவியுடன் 30 ஆட்டோக்கள், 50 இருசக்கர வாகனங் களை வக்ப் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, அங்கு கட்டப்பட்டிருந்த கூடாரங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இவையனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் குவிந்ததால் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.


இதனிடையே சுமார் ஒன்றரை கிரவுண்ட் நிலத் தில் கட்டப்பட்டிருந்த மூன்று அடுக்கு மாடியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் கோரியதால் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் 12 மணி நேரம் கால அவகாசம் வழங்கினார். இதையடுத்து அதை மட்டும் விடுத்து 23 1/2 கிரவுண்டு நிலத்திற்கான முக்கிய நுழைவு வாயிலை பூட்டி வட்டாட்சியர் சீல் வைத்தார்.
மீட்கப்பட்ட இடம் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து கடந்த 13.02.2009 அன்று காலை 10 மணியளவில் மீண்டும் வட்டாட்சியர் காவல்துறை படையுடன் அப்பகுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே திமுக கவுன்சிலர் காமராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரை சூழ்ந்து கொண்டு அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த னர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி தடை யாணை பெற முயன்றனர். வக்ஃப் வாரிய வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக் கவே வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.


ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். இதற்கு முன்னர் இருந்த வக்ப் வாரிய தலைவர்கள் எடுத்த முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது. வக்ப் இடம் இப்படி அநியாயமாக கைவிட்டுப் போகிறதே என்று நாங்கள் வருத்தத்தில் இருக்கையில் தற்போதைய வாரியத் தலைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு இந்த நிலத்தை மீட்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். பல ஜமாஅத் பெரியவர்கள் ஒன்றுகூடி இதுகுறித்து பேசுகையில் உணர்ச்சி மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மேலும் அவர்கள், நிலத்தை மீட்டதோடு நின்றுவிட்டால் மீண்டும் இதனை ஆக்கிரமிக்க முயற்சிப்பார்கள். எனவே இதனை முஸ்லிம்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமனையோ, மேல் நிலைப் பள்ளியோ, ஐ.டி.ஐ. நிறுவனமோ, திருமண மண்டபமோ கட்ட வேண்டும் என்றார்கள். வேறு சிலர், இப்பகுதியில் வணிக வளாகம் கட்டினால் வக்புக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்றனர்.


வாரியத் தலைவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொதுமக்கள்
ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


கடந்த அதிமுக ஆட்சியின் போது வாரியத் தலைவராக இருந்த திருமதி. பதர் சயீத் அவர்கள் சென்னை ராயபுரம் கௌஸ் முகைதீன் பேட்டை என்கிற ஜி.எம்.பேட்டையில் உள்ள காஜி சர்வீஸ் இனாம் (எ) முகமதியர் கபரஸ்தான் வக்ஃபுக்குச் சொந்தமான நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு வக்ஃப் நிலத்தை ஒப்படைத்தார். இந்த 552 குடியிருப்பு களில் 452 குடியிருப்புக்களை மீனவர் களுக்கு ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 100 குடியிருப்புக்களையும், பெருங்குடியில் கட்டப்பட்டுள்ள 276 குடியிருப்புக் களில் 176 குடியிருப்புக்களையும் வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்கி, ஒதுக்கீடு உரிமை மற்றும் வாடகை வசூலிக்கும் உரிமையை தன் வசம் எடுத்துக் கொண்டு அதற்கான விண்ணப்பங் களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

வாரியத்தின் மற்றொரு சாதனை!இந்த விஷயம் தன் கவனத்திற்கு வந்தபோது வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள், குடியிருப்புக் களை குடிசை மாற்று வாரியம் கட்டி யிருந்தாலும் அந்த நிலம் வக்புக்குச் சொந்தமானது என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 100 குடியிருப்புக்கள் உட்பட 276 குடியிருப்புக்களின் ஒதுக்கீடு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் வாரியத் திற்கு ஒதுக்கக் கோரி வாரியக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். மேலும் இதுதொடர் பாக தமிழக முதல்வரையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார். வக்ஃப் வாரியத் தலை வரின் தொடர் முயற்சிகளின் பயனாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து மேற்குறிப்பிட்ட 276 குடி யிருப்புகளை வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து, இந்தக் குடியிருப்புக்களின் ஒதுக்கீட்டு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாராட்டுக்குரியவர்கள்.

இதுகுறித்து வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் கூறுகையில்
,

''இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வக்ஃப் வாரியத்திற்கு ஆதரவாக 11.02.2009 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை களை மேற்கொண்டோம். அதன் பயனாக மறுநாளே (12.02.2009) வட்டாட்சியர் உதவியுடன் ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளோம்.

இந்த விஷயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்களின் பணி மகத்தானதாகும். வட்டாட்சியர் மூலம் அவர் எடுத்த உறுதியான நடவடிக்கை களே ஒரே நாளில் 24 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை அவர் நிரூபித்து விட்டார். (திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திரு. கருப்பன் ஐ.ஏ.எஸ். அவர்களின் மகளாவார்).

சென்னையின் முக்கியப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்த நிலத்தை பார்த்த போது அதிர்ச்சி யடைந்து இதனை மீட்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்தேன். இந்த நிலத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தின் உதவி மிக அவசியம் எனக் கருதி யதால் தமிழ்நாட்டில் சிறந்த வழக்கறி ஞர்களில் ஒருவரான திரு. லஷ்மி நாராயணன் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைத்தேன். அவர் இந்த வழக்கை மிகுந்த ஈடுபாட்டோடு அணுகி, இந்த வழக்கில் வக்ப் வாரியத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தார். மேலும் ஆக்கிரப்பாளர்கள் தடையாணைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை அணுகியபோது அவர் அருகிலிருந்து தடையாணை கிடைக்கவிடாமல் செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலமும், மூன்று அடுக்கு மாடி இருக்கும் இடமும் வக்ஃபுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் பதிவு செய்துள்ளது'' என்று கூறிய வாரியத் தலைவர், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீட்டை காலி செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள் ளது. இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து தடையாணை பெற முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதை முறியடிப் பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வக்ஃப் வாரியத்தின் நன்மைக்காக திரு. லஷ்மி நாரா யணன் அவர்களை தான் நியமித்த போது அதனை சிலர் கடுமையாக விமர்சித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

thanks to :tmmk.in

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அபாண்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகடாக்டர் ராமதாஸ் அபாண்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.

ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.

அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
- காயல் மகபூப்.
மாநில செயலாளர்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பிரார்த்தனை - ஓரு சிறந்த வணக்கம்!

அல்லாஹ் மிக அருகில் இருக்கிறான் : -

அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)

பிடரி நரம்பை விட சமீபமாக அல்லாஹ் இருக்கிறான்: -அல்லாஹ் கூறுகிறான் : மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)

பிரார்த்தனை தான் வணக்கம்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிரார்த்தனை தான் வணக்கம்’ அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.

அல்லாஹ் கூறுகிறான் : உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல்-குர்ஆன் 40:60)

பணிவுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்: -


அல்லாஹ் கூறுகிறான்: ‘பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்’ (அல்-குர்ஆன் 7:55)

இறைவனிடம் ஒரு அடியான் நெருக்கமாக இருக்கும் நேரம் : -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் ஸூஜூதில் இருக்கும் போது தான். எனவே (அந்த நிலையில்) அதிகம் துஆ செய்யுங்கள்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

மூன்றில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி, ஆதாரம்: திர்மிதி

பிரார்த்திப்பவரை வெருங்கையுடன் திருப்பிவிட வெட்கப்படும் அல்லாஹ்: -

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)

அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

thanks to : suvanathendral

திங்கள், 16 பிப்ரவரி, 2009

உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்

உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்
( Don't miss to read it )

ரஹ்மத் ராஜகுமாரன்

செல்: 94434 46903

'உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?' (51:21)

'நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்' (76:28)

'திட்டமாக நாம் மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்' (95:04)

மேற்கண்ட வசனங்கள் மனிதனாகிய நம்முடைய படைப்பு நம்முடைய அமைப்பு, நம்முடைய அவயங்களின் மீது அல்லாஹ் தன் முத்திரையை பதித்திருப்பதை, இது போன்ற வசனங்கள் குர்ஆன் நெடுக காணமுடிகிறது.

தன்னை அறிந்து கொண்டவன் அல்லாஹ்வை அறிந்து கொண்டான்: இந்த கட்டுரை மூலம் ஒரு சில அவயங்களின் புள்ளி விபரங்களையும், சில அவயங்களின் பணிகளையும் மிகச் சொற்பமாகவே சுட்டிக் காட்டியுள்ளேன். அதுவும் 100 புள்ளிகளில். ஒவ்வொரு அவயத்தின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது படைத்த அல்லாஹ்வே புகழுக்குரியவன், என நம் வாய்முணு முணுக்கிறது அத்தனை ஆச்சரியங்களையும் எழுதி முடித்துவிட முடியாது. உதாரணத்திற்கு, நமது மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிகமிக சொற்பமானது தான் இன்னும் தெரியாத புரியாத விளங்கிக் கொள்ள முடியாத விநோதங்கள் ஏராளம், ஏராளம்.
அல்லாஹ்! நீயே மகத்துவமானவன்; நீயே சிறந்த படைப்பாளன்:

நீயே சிறந்த பாதுகாவலனும் கூட

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது.

நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்;கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்றுமுன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இதுவி~யத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

7. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்துவிடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப்பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
12. மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு.

14. மனிதமுளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.

16. நம் ஒடல் தசைளின் எண்ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.

19. மண்டை ஓடு மனினதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கிவிடலாம்.21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக்காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது. கவனிக்கவும்.

24. பெண்களை விட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

26. நமது தலையின் எடை 3.175 கிலோகிராம்.

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்துவிடும்.

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது.

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பார்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது.

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.

37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. அப்புறமாக புது கேசம் வளர்கிறது.
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர்வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது.41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது.

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.

49. நம்முடைய தலை ஒரே எலும் பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.

50. மனித உடலில் 50 லட்சம் முடிக் கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது.51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்.

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

56. நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)

58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்குமு;.

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6கிராம் ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமு; ஏற்படும்.

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம் காவல் துறையில் வேலை.

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள 'ஆலவியோலி' என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டுட் 30 கோடியாகும் புகைப்பிடித்தல் கூடாது.
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை. நாக்கு.

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ்பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வரு~த்திற்கு 4கோடி தடவை. உங்க வயசை 4கோடியால் பெருக்கிப் பாருங்கள். அல்லாஹ்வின் பேரருள் தெரியும்.
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டா...வி விடுகிறோம்.

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. உங்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.

99. ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கைகளில் வலதுகையில் அரபு எண் 1ÙÙ1(18) என்கிற வடிவ ரேகையும், இடதுகையில் Ù1(81) என்கிற வடிவரேகையும் உள்ளது. இரண்டையும் கூட்டினால் 99 (அல்லாஹ்விற்கு அழகிய 99 திருநாமங்கள் உள்ளன). உங்கள் உள்ளங்கையில் அல்லாஹ் தெரிகின்றானா?
100. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5 மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.வி. முன் மணிக்கணக்கில் உட்கார்ந்தால் எவ்வளவு காலம் வாழ்நாளில் வீணாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதையே நன்மையின் பால் அதாவது தொழுகை, திக்ர் என்று கழித்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் யோசியுங்கள் செயல்படுங்கள்.

thanks to : www.nidur.info