வியாழன், 19 பிப்ரவரி, 2009

அடுத்த பிரதமர் யார்?

நாடாளுமன்றத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கான ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பயணிகள் கட்டணம் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டது. சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் சமர்ப்பித்த 6வது பட்ஜெட் இது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் கட்டணம் உயர்த்தப் படவில்லை. அத்துடன் சென்ற ஆண்டு இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது இடைக்கால பட்ஜெட்டிலும் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களைத்தவிர பிற நகர் ரயில்களில் 10 கிலோ மீட்டர் தூரத் துக்கு நான்கு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஏற்கனவே ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டது. இப்போது 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ரூ 50 வரையுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் ஐம்பது ரூபாய்க் கும் மேல் உள்ள கட்டணங்கள் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளிர்சாதன இருக்கை, முதல் வகுப்பு, இரண்டுஅடுக்கு குளிர்சாதன வகுப்பு, மூன்றடுக்கு குளிர்சாதன வகுப்பு ஆகியவற்றுக்கான கட்டணங் களும் இரண்டு சதவீதம் குறைக்கப்படு வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் குளிர்சாதன முதல் வகுப்பு கட்டணம் 28 சதவீதமும் இரண்டு அடுக்கு குளிர் சாதன கட்டணம் 20 சதவீதமும் குறைக்கப்பட்டதால் ஆகாய மார்க்க மாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து ரயில்களில் உயர் வகுப்பில் பிரயாணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு ரயில்வேத் துறைக்கு லாபமும் அதிகரித்தது.

இவ்வாண்டு புதிதாக 43 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலே சாதனை படைத்தார் ஒடுக்கப்பட்ட சமுதாயத் தில் பிறந்த லாலு.

மிகவும் பின்தங்கிய நிலையில் தேறவே தேறாதோ என அனைவ ராலும் கைவிடப்பட்ட ஒரு துறையை மறு மலர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று அசத்தியிருக்கிறார் லாலு.
சமீபத்திய சாதனையாளர்களில் முதலிடத்தில் வைத்து பாராட்டத் தக்கவர் லாலு.

இவர் மேட்டுக்குடி சமூகத்தில் பிறந் திருந்தால் இவரை தலைமேல் தூக்கி வைத்து உச்சி மோர்ந்து மெச்சிப் புகழ ஒரு கூட்டமே ஊடக வட்டாரத்தில் உருவாகியிருக்கும். ஆனால் உழைக் கும் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்ததி னால் லாலு சாதனை மேல் சாதனை நிகழ்த்தியிருந்தாலும் கூட அவரது சாதனைக்கு முழுமையான அங்கீகாரம் இந்த நாட்டில் கிடைத்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை.

கடந்த ஐந்தாண்டுகளில் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றிய அமைச்சர்களில் லாலு முதல் நிலை வகிக்கிறார் எனில் அது மிகையாகாது. உயர்கல்வி நிறுவனங்களின் இவரது சாதனைகளை பாடமாக வைக்கும் அள விற்கு சிறப்பு வாய்ந்தவராக மாறியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வெகு அருகிலேயே இருக்கும் நிலையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் வேட் பாளர்களின் பெயர்களை பார்க்கும் போது வேதனை கலந்த சிரிப்புதான் ஏற்படுகிறது.

மதவெறி யாத்திரைகளின் மூலம் இந்த தேசத்தை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி தள்ளிய பழமைவாத, பிரிவினைவாத கூட்டத்தின் தலைவர் எல்.கே.அத்வானி, இருபதாம் நூற் றாண்டின் இணையற்ற இனப்படு கொலையாளரும் இரண்டாவது ஹிட்லருமான நரேந்திர மோடி போன்றவர்கள் பிற்போக்குவாதிகளால் முன் நிறுத்தப்படுகிறார்கள்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதிய பாத்திரத்தில் பழைய பதார்த்தம் என்பதைப் போல மன்மோகன் சிங் பெயர் முன்மொழியப்படுகிறது. இடதுசாரிகளோ மாயாவதியின் பெயரை பரிசீலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. செல்வி மாயாவதி யின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் த­த் சமூகத்தின் வளர்ச்சி யின் விரோதிகளுக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கி வருகிற நிலையில் இடதுசாரிகளால் முன் நிறுத்தப்போகும் நபர் அவ்வளவு தெளிவான தெரிவாக இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. சமாஜ்வாதி கட்சி சரத்பவாரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் ஆதரிப் போம் என புதிய ஒரு குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. செயலாற்றல் கொண்ட தலைவர் களுக்கு இந்த நாட்டில் பஞ்சம் இல்லை.

லாலுவும், சமூக நீதி தத்துவத்தில் சளைக்காத உறுதிகாட்டும் அர்ஜுன் சிங்கும் (உடல்நிலை தளர்ந்தவராயிற்றே என வினாக்கள் எழலாம் வாஜ்பாய் பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பேயை விட இவர் உடல்நிலை யில் சளைத்தவர் இல்லை என்பதே உண்மை)
ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற சமூக நீதிப் போராளிகளை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதில் இவர்களுக்கு ஏன் தயக்கம்?
செயலாற்றல் மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாள ராக முன்னிறுத்துவதே நாளைய இந்தியாவை வல்லமையுடன் கட்ட மைக்க உதவிகரமாக அமையும் என்பதே நாட்டு மக்களின் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை: