உ.பி.யில் கல்யாண்சிங் முதல்வராக இருந்தபோதுதான், அவரது கண்டுகொள்ளாமையினால்தான் பாபர்மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இப்போது கல்யாண்சிங் பீ.ஜே.பி யிலிருந்து விலகி, சமாஜ்வாடியின் ஆதரவாளராக மாறியுள்ளநிலையில் முஸ்லிம்களின் எதிர்ப்பை சமாஜ்வாடி சந்திக்க நேரிடும் என்று அரசியல்வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும்நிலையில்,
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு தார்மீகப்பொறுப்பேற்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் எனதுநிலையை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.என்று கல்யாண்சிங் கூறியுள்ளார்.
காலம் கடந்த நிலையில் கல்யாண்சிங்கின் மன்னிப்பு பாபர்மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்களுக்கு எந்த பயனையும்தராது. கல்யாண்சிங் மன்னிப்புகேட்பது அரசியலுக்காக அல்ல.மனப்பூர்வமானது என்பது உண்மையானால், பாபர்மஸ்ஜித் இடிக்கப்படும்போது 'கண்டுகொள்ளாமையை' கடைபிடிக்க தூண்டியது யார்? பாபர்மஸ்ஜித் இடிப்பில் சங்பரிவாரங்கள் போட்ட சதித்திட்டங்கள் என்ன? பாபர்மஸ்ஜித் இடிப்பில் சங்க்பரிவார தலைவர்களின் பங்களிப்பு என்ன? என்பதைப்பற்றி பாபர்மஸ்ஜித் பற்றிய லிபரகான் விசாரணைக்கமிஷன் முன்பும், மக்கள் மன்றத்திலும் கல்யாண்சிங் தெளிவு படுத்தவேண்டும்.
அதோடு பாபர்மஸ்ஜித் இடிப்பிற்கு எப்படி உறுதுணையாக இருந்தாரோ அதுபோல கட்டுவதற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று கல்யாண்சிங் கூறவேண்டும். இல்லையெனில், பாபர்மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் 'அதே இடத்தில் மீண்டும் கட்டித்தருவோம்' என்று வாக்குறுதியளித்து அல்வா கொடுத்த காங்கிரஸ் வாக்குறுதி மாதிரித்தான் என்று முஸ்லிம்கள் கணிப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக