புதன், 25 பிப்ரவரி, 2009

நரோடா பாட்டியாலா கூட்டுக்கொலையில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வுக்கு நேரடித் தொடர்பு

குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அமைச்சரவையைச் சார்ந்த மாயா கொத்நானிக்கு உள்ள நேரடித் தொடர்பை சிறப்பு புலனாய்வு குழு (SIT) குஜராத் உயர் நீதி மன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. மாயா தான் குண்டர்களை வழி நடத்திச் சென்றதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம்களை வெட்டிக் கொல்வதற்காக வாட்களையும் வழங்கினார் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயா வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கும்பலை ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தனது துப்பாக்கியை உபயோகித்து சுடவும் செய்தார், என்றும், கலவரப் பகுதிக்கு தனது அடியாட்களுடன் காரில் வந்து சேர்ந்த அவர் அனைவருக்கும் கொடுவாட்களை கொடுத்தார் எனவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட அஃபிடவிட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (SPECIAL INVESTIGATION TEAM) குஜராத் 2002 கலவரத்தில் பதியப்பட்ட 9 வழக்குகளை மீளாய்வு செய்து வருகிறது. அதில் தொடர்புடைய மாயா கொத்நானியின் பங்கை உறுதிபடுத்திக் கொண்ட SIT மறு விசாரணைக்கு சமூகமளிக்கும்படி மாயாவுக்கு சம்மன் அனுப்பியது. மாயா அதனை உதாசீனப்படுத்தியதால், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தனது அதிகார பலத்தால் பதுங்கி இருந்த மாயா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கீழ் கோhர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

முன் ஜாமீன் வழங்கிய கீழ் கோர்ட், SITயின் அஃபிடவிட்டையோ, வழக்கு சம்பந்தமான விசாரணை அறிக்கையையோ பொருட்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதே வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஏனையோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், (முதன்மை குற்றவாளி என அறியப்பட்ட) மாயாவிற்கும் ஜாமீன் வழங்குவதாக அந்நீதிபதி குறிப்பிட்டுள்ளார். (இதுவன்றோ சம நீதி ??? ...)

28, பிப்ரவரி 2002இல் நரோடா பாட்டியாலாவில் மட்டும் குறைந்தபட்சம் 95 முஸ்லீம்கள் ஆயிரத்துக்கும் அதிகமான வன்முறையாளர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.



மாயாவிற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை எதிர்த்தும், தனது விசாரணை விபரங்களின் அடிப்படையிலும் கடந்த வியாழனன்று குஜராத் உயர்நீதி மன்றத்தில் SIT – அஃபிடவிட் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மாயா கொத்நானி எனும் அந்த பெண், உயர் கல்விக்கான அமைச்சராக இப்பொழுதும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த வழக்கு ஃபிப்ரவரி 24ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட உள்ளது.

நன்றி : 2CIRCLES.NET

தமிழில் : அபூஹாஜர்
நன்றி : http://www.tmmk-ksa.com

கருத்துகள் இல்லை: