புதன், 29 பிப்ரவரி, 2012

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

1 GB File ஒன்றை 10 MB ஆக குறைக்கும் மென்பொருள்

File களின் அளவுகள் எப்போதுமே எமக்கு பிரச்சினையான ஒரு விடயமாகவே இருக்கிறது. ஒரு கணினியில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்து செல்வதானாலும் சரி, இணையம் மூலம் Share பண்ணுவதானாலும் சரி, கூடிய அளவுள்ள File கள் பெரும் தலையிடியை கொடுக்கும். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு என்ன வழி?.

இதற்காகவே வந்துள்ளது ஒரு மென்பொருள். KGB Archiver எனப்படும் இம் மென்பொருள் 1 GB அளவுள்ள File ஒன்றை 10 MB அளவிற்கு குறைத்து Compress பண்ணுகிறது. இதனால் அதிக கொள்ளளவுள்ள File களையும் இலகுவாக பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.

முற்றுமுழுதாக இலவசமான இந்த மென்பொருள் Windows மற்றும் Linux ஆகிய இரு இயங்குதளங்களிலும் ஒத்துழைக்கிறது.


ஆனால் ஒரு சிறிய குறைபாடு. KGB Archiver மூலம் Compress பண்ணிய File ஒன்றை வேறு Compression மென்பொருட்களின் மூலம் Uncompress பண்ண முடியாது. KGB Archiver மூலமே Uncompress பண்ணமுடியும்.

Compression அளவுகளை உங்கள் விருப்பத்திற்கேற்ற முறையில் High, Maximum, Normal, Low, Very Weak என செட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்வதற்கு உங்கள் கணினி ஆகக்குறைந்தது
  • 256 MB RAM
  • 1.5 GHz Processor
ஆகிய தகுதியை கொண்டிருத்தல் அவசியம்.

அத்துடன் பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் File களை Compress பண்ணலாம். இதில் உள்ள இன்னுமொரு குறை வீடியோ Format களை Compress பண்ணமுடியாது.

இம் மென்பொருளை தரவிறக்க KGB Archiver

source : http://thamilsoft.com

சனி, 25 பிப்ரவரி, 2012

இந்திய தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் டெல்லி கருத்தரங்கில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 9,10,11 தேதிகளில் மூன்றுநாள் தேசிய அளவிலான பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தொகுதி வாரியான தேர்தல் முறைக்கு மாற்றாக ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் அமலில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெற்றது.

Campaign for Electoral Reforms in India - CERI என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையிலிருந்து சுருக்கமாக...

இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறையில் சிறுபான்மையினரும். ஒடுக்கப்பட்ட மக்களும் தேர்தல் அதிகாரத்தை எளிதில் நெருங்க முடியாத நிலை உள்ளது. யாருடனாவது கூட்டணி வைத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

இலங்கை, ஜெர்மனியில் உள்ளதுபோல் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாற்றாக; ஒரு கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் MP, MLAக்களை பெறும் முறைதான் வரவேண்டும்.

இது போன்ற தேர்தல் முறையை அயோத்திதாசர் பண்டிதர் அப்போதே வலியுறுத்தினார். முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா பாராளுமன்றத்தில் இது குறித்து பேசியபோது, அப்போதையை பா.ஜ.க. வின் சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி அது இந்தியாவுக்கு ஆபத்தானது என்று நிராகரித்தார்.

இத்தேர்தல் முறையை கொண்டு வரவும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் மனிதநேய மக்கள் கட்சி எல்லா வகையிலும் உதவும் என்றார்.

இது குறித்து CERI அமைப்பு வெளியிட்ட நூலை தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி வெளியிட்டார்.

இரண்டாம் நாள் அமர்வில் சச்சார் அறிக்கையை சமர்பித்து உலகப்புகழ் பெற்றவரான நீதீபதி ராஜேந்திர சச்சார் உரையாற்றினார். அவருடன் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உரையாடினார்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலையை துல்லியமாக அம்பலப்படுத்தினீர்கள். 20 கோடி முஸ்லிம்களும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என அவரிடம் கூறியதும், அவர் அப்படி நான் என்ன பெரிதாக செய்து விட்டேன் என்றார். இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து இருவரும் உரையாடினார்கள். அப்போது மக்கள் உரிமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜி.அத்தேஷ் உடன் இருந்தார்.

மூன்று நாள் நடைபெற்ற மாநாடு நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு வழிகோலியிருக்கிறது.


நிகழ்ச்சியில் உரையாற்றும் தேர்தல் ஆணையர் குரேஷி


சச்சாருடன் பொதுச் செயலாளரும், அத்தேஷ்வும்


நீதியரசர் ராஜேந்திர சச்சாருடன்


மாநாட்டில் பொதுச் செயலாளர்

உன்னால் முடியாவிட்டால் வேறுயாரால்....?


செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கூத்தாநல்லூரில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைதி கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நாளை 13.02.2012 நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்படி அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தீர்மானம்;

1. மின் இடை நிறுத்தம் செய்வது தமிழக அரசின் Go -அடிப்படையில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்யவேண்டும்.

2. பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வை கருத்தில் கொண்டு மின் நிறுத்தும் நேரத்தை சீர்படுத்தவேண்டும்.

இதுபோன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு 5-நாட்கள் கால அவகாசத்திற்குள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜனநாயக முறையில் எங்களது போராட்டம் தொடரும்....

இக்கூட்டத்தில் முஸ்லிம் லீக் - காங்கிரஸ் – C.P.M – D.M.K - தமிழக கட்டிட தொழிளாலர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சமுகநல ஆர்வலர்களும் கலந்துகடகொண்டனர்.

புதன், 15 பிப்ரவரி, 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?

FEB 09: ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே. ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன்.

அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY) பயின்றேன். பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன்.

சொந்த சமூகத்தின் மக்களை நாங்களே கொன்று விட்டு அதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்ட மிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான்.

காந்தியை கொன்ற கோட்சேயும் அவர் அங்கம் வகித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமுமே என் கூட்டாளிகள். வரலாறு ஹிட்லரை தூற்றினாலும், கொலைகாரன், பயங்கரவாதி என்று சொன்னாலும் அவரே எங்களின் பேச்சு மூச்சு, சித்தாந்தம். வரலாறு அவரை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை.

ஜெர்மனியில் அவர் கடைபிடித்த கொள்கைகளையும், சித்தாந்தத்தையுமே நன் குஜராத்தில் கடை பிடிக்கிறேன். அவரை பின்பற்றியே நான் குஜராத் இன அழிப்பை நடத்தினேன். அவர் உலகை ஆட்சி செய்ய நாசி படை நடத்தினார். நான் இந்தியாவை பிடிக்க ஆர்.எஸ்.எஸ். பாசிச படை நடத்துகிறேன். காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை எல்லாம் என்கைகளில்.

குஜராத் இனப்படுகொலை:: 2002 ஆண்டு மோடி தலைமையில் நடத்தப்பட்ட இன படுகொலையில் சுமார் 5000 பேருக்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். தெஹல்கா பத்திரிக்கை நடத்தி இரகசிய பத்திரிகை புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் அவர்கள் நிருபர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும், கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான கற்பழித்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் ஊற்றி மஸ்ஜிதுகளுடன் எரித்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் காவி பயங்கரவாதிகள்.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்று 72 பேரை பயங்கரமான முறையில் இந்தியாவில் காவிபோலீஸ் படையின் உதவியுடன் வெட்டியும், குத்தியும் கொலை கொலை செய்தனர் காவி பயங்கரவாதிகள். இவ்வினப் படுகொலைகளுக்கு நீதி வேண்டி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை உள்ளூர் கோர்ட்டே நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில், நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்தியாவை உலுக்கிய மாபெரும் இனப்படுகொலையை நடத்திய நரேந்திர மோடி அதில் இருந்து தப்பித்து கொண்டான். நீதி செத்தது இனி, முஸ்லிம்கள் உயிர் வாழ்வது என்பது கேள்விக்குறியே.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ராமனை எலக்க்ஷன் ஏஜன்டாக பயன்படுத்தும் ப ஜ க ?

அயோத்தி: ஜாதீய காரணிகள் முடிவை தீர்மானிக்கும் உ.பி மாநில தேர்தலில் வகுப்புவாத பிரிவினை மூலமாக வாக்குகளை கவர பா.ஜ.க நடத்திவரும் முயற்சிகள் தோல்வியை தழுவும் என கருதப்படுகிறது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் புராண ராமனின் கோயிலை கட்டுவது, சிறுபான்மை இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பா.ஜ.கவின் பிரச்சாரம் போதுமான சலனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

உமாபாரதியை கட்சியில் சேர்த்ததும், ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய பகுஜன் சமாஜ் தலைவர்களை கட்சியில் இணைத்ததும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவில் உட்கட்சி பூசலை உருவாக்கியுள்ளது.

80 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உ.பியில் பா.ஜ.கவின் நிலை பரிதாபமானால், 2014 ஆட்சி கனவு அதோகதிதான்! இதனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைமை உ.பி.யில் முகாமிட்டுள்ளது.

முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் உமாபாரதியை உ.பி அரசியல் களத்தில் இறக்கியதன் நோக்கம் வகுப்புவாத வெறியை தூண்டுவதற்காகும்.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு பெரும்பான்மை உணர்ச்சியை தூண்டுவதும் பா.ஜ.கவின் திட்டமாகும். மேலும் அயோத்தியில் ராமனுக்கு கோயில் போன்ற ஹிந்துத்துவா அஜண்டாக்களையும் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க வெளியிட்டது. ஆனால், இவையெல்லாம் அயோத்தியில் கூட பா.ஜ.கவுக்கு போதிய ஆதரவை பெற்றுத் தரவில்லை.

அயோத்தியின் டீ கடை பெஞ்சுகளில் கூட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை குறித்துதான் மக்கள் விவாதிக்கின்றனர். அயோத்தி அடங்கிய ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி எதிர்பாராத வெற்றியை பெற்றது. ஹிந்துத்துவா உணர்வை தூண்டிய பிறகும், அடித்தளமே ஆட்டம் கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் மக்கள் அக்கட்சிக்கு அளித்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயோத்தியா சட்டப்பேரவை தொகுதியில் ஐந்து தடவை வெற்றிபெற்ற லல்லுசிங் என்பவர்தாம் இம்முறையும் போட்டியிடுகிறார். ஆனால், கடுமையான போட்டி நிலவும் அயோத்தியில் லல்லுசிங் வெற்றி கேள்விகுறிதான். பல சன்னியாசிகளும் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ’தேர்தல் வரும் வேளையில் மட்டும் பா.ஜ.க ராமர் கோயிலை கூறி நாடகமாடும். ராமனை வெறும் எலக்‌ஷன் ஏஜண்டாக தரம் தாழ்த்திவிட்டது பா.ஜ.க’- என கொதிக்கிறார் ஆல் இந்தியா அகாடா பரிஷத் சேர்மன் மஹந்த் க்யான்தாஸ்.

கல்யாண் சிங்கைப் போல பிற்பட்ட மக்களின் பல்ஸை அறியும் தலைவர்கள் பா.ஜ.கவில் இல்லாதது அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என அயோத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். கடந்த முறை 51 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.கவுக்கு கிடைத்தது. இம்முறை காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களே கிடைக்கும் என்ற கவலை கட்சியை வாட்டுகிறது.

புதன், 8 பிப்ரவரி, 2012

சட்டசபையில் ஆபாச படம்: கர்நாடகா பா.ஜ.க அமைச்சர்களின் ஒழுக்கச் சீரழிவு அம்பலம்

Karnataka ministers filmed watching porn in Assembly

பெங்களூர்:பாரதீய கலாச்சாரம், பண்பாடு என வாய்க்கிழிய பேசும் சங்க்பரிவார கூட்டத்தின் ஒழுக்கச் சீரழிவு அடிக்கடி அம்பலமாகி வருகிறது. கலவரம் அல்லது இனப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் சங்க்பரிவாரத்தின் பாலியல் வக்கிரத்தின் உச்சக்கட்ட கோர முகத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போலவே பொதுவாழ்விலும் அவர்களின் வேடம் அடிக்கடி கலைந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய சட்டப்பேரவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைகுனிவான சம்பவம் கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்தது. இரண்டு பாஜக அமைச்சர்கள் சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர்!

இதனால் ஆளும் பாஜக.விற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு அமைச்சர் லஷ்மண் சவாடி, மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சி.சி. பாட்டீல் ஆகிய இருவரும் மொபைலில் ஆபாசப் படம் பார்த்ததாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வீடியோ ஒளிப்பதிவுடன் செய்தி வெளியிட்டது பரபரப்பாகியுள்ளது.

எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா இவர்கள் இருவரையும் அவைக்குள்ளேயே இனி அனுமதிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுவருடப் பிறப்பின் போது பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி சங்க்பரிவார்களால் ஏற்றப்பட்டது குறித்த சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த அமைச்சர்கள் மொபைல் வீடியோவில் ஆபாசம் படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இவர்களின் உறுப்பினர் பதவியை பறிக்கவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் சதானந்தா கவுடா கூறுகையில், “நடந்தது உண்மையென்றால் அவைத் தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். அவைத் தலைவர் போபையா, தான் இது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

வடக்கு கர்நாடகா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு அமைச்சர்களும் இந்த நிகழ்வு குறித்து பதில் கூறாமல் நழுவிவிட்டனர்.

முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி இது குறித்துக் கூறுஅகையில், “பாஜகவினர் மக்கள் இந்துக் கலாச்சாரத்தைப் பேணி காப்பது பற்றி வாய் கிழிய பேசி வருகிறது, ஆனால் அவர்கள் மனங்களிலும் செயல்களிலும் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறது பாருங்கள். கர்நாடகா சட்டசபை வரலாற்றிலேயே இச்சம்பவம் கறுத்த அத்தியாயமாகும்.” என்று கூறியுள்ளார்.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

வெவ்வேறு ஐ பி அட்ரஸ் இல் இருந்து டவன்லோட செய்ய

நாம் பொதுவாக இணையத்தில் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சர்வர் இல் இருந்து ஒரு குறுப்பிட்டநேரத்திற்குள் மட்டுமே நம்மால் டவுன்லோட் செய்யமுடியும்.அல்லது இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை பயன்படுத்தி தொடந்து டவுன்லோட் செய்யலாம்.

கடவு சொல் இணையத்தில் கிடைக்காத போது நாம் இதுபோன்று நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் அட்ரஸ்சை ஒரு குறுப்பிட்ட நேரத்திற்குள் மாறும்படி வைத்து நாம் டவுன்லோட் செய்வதை தொடரலாம். இதற்கான மென்பொருள் நிறைய கிடைகின்றன

1. இவற்றில் பிளாடினும் ஹைடு ஐ பி என்னும் மென்பொருள் நன்றாக உள்ளது
இல்லைஎனில் இங்கு கிளிக் செய்யவும்


http://www.megaupload.com/?d=VO6ZC8QQ


http://www.fileserve.com/file/jZb3FWk/PHI.3.1.2.8.rar


http://www.filesonic.com/file/2949126375/PHI.3.1.2.8.rar


http://www.wupload.com/file/1878702661/PHI.3.1.2.8.rar


https://rapidshare.com/files/575450205/PHI.3.1.2.8.rar


2.
டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பிறகு இது போன்ற வடிவில் ஓபன் ஆகும்


3. இதில் ரியல் ஐ பி என்பது நமது கணினியின் உண்மையான ஐ பி அட்ரஸ் ஆகும். (Fake )பெக்க் ஐ பி என்பது நமது கணினிக்கு ஒரு பொய்யான அட்ரஸ் கொடுத்து கொள்வது

.
4. ச்சூஸ் ஐ பி கவுன்டரிChoose Ip Country என்பது நாம் எந்த நாட்டில் இருந்துகொண்டு டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை காட்ட .


5.
அவ்வளவுதான் இப்போது நீங்கள் ஒரே சர்வர் இல் இருந்து தொடர்ந்து டவுன்லோட் செய்யலாம் வேறு வேறு நாட்டில் இருந்து அச்செஸ் செய்வது போல்
http://wikileek.blogspot.com/2012/02/blog-post_05.html

வியாழன், 2 பிப்ரவரி, 2012

மீலாது நபி விழா - சில கேள்விகள்நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான்.

ஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு.

முதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன்.

மவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை.

நபியவர்களின் காலத்தில்/காலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு இல்லாத நேசமா நபியவர்கள் மீது நமக்கு இருந்திடப்போகின்றது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள்.

தேவையா இந்த விழா?

"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.

தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185

குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம்.

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா?

நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா?

இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா?

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்ல வேண்டிய வரும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா?

இதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா?

இதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது? முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து தானே கொண்டிருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது?

சிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு:

இன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ்

முஸ்லிமல்லாதவர்களுக்கு:

தயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

இறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

http://www.ethirkkural.com/2012/02/blog-post.html