குஜராத் இனப்படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குஜராத் இனப்படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்

இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சமூக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. உள்நாட்டில் அது தொடர்ந்து பேணிவரும் மதச்சார்பற்ற மாண்பும், சமதர்ம சமுதாயம் அமைப்பதே அது முக்கியக் குறிக்கோள் என்று அறிவித்ததும், வெளியுறவுக் கொள்கையளவில் இந்தியா கடைப்பிடித்து வரும் அணிசேரா நடுநிலைக் கொள்கையுமே இந்தியாவை உலக அளவில் தலைநிமிரச் செய்தது.

இத்தகைய சிறப்பினைப் பெற்றிருந்த இந்தியத் திருநாட்டின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு அமைந்தது. பாசிசவாதிகளின் இந்த தீய செயல் இந்தியாவின் வளர்ச்சியை குறைந்தபட்சம் கால்நூற்றாண்டு பின்தங்கச் செய்தது என்றால் அது மிகையல்ல. இந்த அறம் கொன்ற தேசவிரோதச் செயலில் குற்றவாளிகளாக 68 பேரை லிபர்ஹான் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த வேதனைச் செயல் நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவடைவதற்குள் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து உலகின் இதயங்களை ரணமாக்கியது. 21ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மோடி நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் கொடூரச் செயல்கள் அம்பலமானதால் மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செயல்கள் குறித்து சட்டை செய்யாத பாசிச சக்திகள் ஒரு மிகப்பெரிய நரித்தனத்தை செய்தன. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொலை செய்ததைப் பாராட்ட(!) வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ... மோடியை வளர்ச்சியின் நாயகன் என்றார்கள். மோடியை வல்லவர், நல்லவர் என கூசாமல் பொய்ப் புகழ் பரப்புரை செய்த காலக்கட்டத்தில் மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசுவும், திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தியும் கேரளாவில் ஏ.கே.அந்தோனியும் எளிமையும் திறமை யும் வாய்ந்த முதல்வர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் அவையெல்லாம் வெகுஜன ஊடகங்களுக்கு கண்ணில் படவேயில்லை.

மோடியைப் போல் உண்டா? மோடியே வளர்ச்சியின் நாயகன் என செயற்கையான முறையில் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். பாசிசவாதிகளின் ஐந்தரை கோடி குஜராத் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே நாட்டு மக்கள் நினைக்கத் தொடங்கினர். காரணம் குஜராத்தின் வளர்ச்சி மோடியால் விளைந்ததல்ல, நூற்றாண்டு காலமாக குஜராத் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள மாநிலம்தான். இருப்பினும் மோடியைத் தூக்கி நிறுத்துவதற்காகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் என்பதை விளக்கத் தேவையில்லை. மோடி மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என புதிய பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அடுத்த பிரதமர் என பொய்ப்பரப்புரை அனல் பறந்தன. இருப்பினும் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி அழைக்கப்படவே இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையில் உலகின் பிரபலமான 100 பேர் வரிசையில் மோடியும் பட்டியலிடப்பட்டார். மோடியின் அடிப்பொடிகள் ஆனந்தக் கூத்தாடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இணைய பயன்பாட்டாளர்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக வாக்குகளைக் குவித்தனர். மேல்தட்டு மக்கள் இதனையே அன்றாடக் கடமையாகக் கொண்டு திரிந்தனர். செயற்கையான பரபரப்பை ஏற்படுத்தி 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள் மோடி பெற்றார். ஆனால் சரித்திரம் சந்தித்திராத வகையில் இதுவரைக்கும் யாருக்குமே நிகழாத ஒன்று நிகழ்ந்தது.

ஆம் மோடிக்கு எதிர்வாக்குகள் 2 லட்சத்து 66 ஆயிரம் விழுந்தன. இந்த ஆண்டின் உலகில் அதிகம் வெறுக்கப்படும் நபர் என்ற பெயரை மோடி பெற்றுவிட்டதாகக் கூறியதோடு நவீன நீரோ மன்னன் என இந்திய உச்சநீதிமன்றம் இடித்துரைத்ததையும் டைம் இதழ் தனது அட்டைப் படத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இனப்படுகொலையாளன் உலக அளவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். மோடி விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


புதன், 15 பிப்ரவரி, 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?

FEB 09: ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே. ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன்.

அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY) பயின்றேன். பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன்.

சொந்த சமூகத்தின் மக்களை நாங்களே கொன்று விட்டு அதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்ட மிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான்.

காந்தியை கொன்ற கோட்சேயும் அவர் அங்கம் வகித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமுமே என் கூட்டாளிகள். வரலாறு ஹிட்லரை தூற்றினாலும், கொலைகாரன், பயங்கரவாதி என்று சொன்னாலும் அவரே எங்களின் பேச்சு மூச்சு, சித்தாந்தம். வரலாறு அவரை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை.

ஜெர்மனியில் அவர் கடைபிடித்த கொள்கைகளையும், சித்தாந்தத்தையுமே நன் குஜராத்தில் கடை பிடிக்கிறேன். அவரை பின்பற்றியே நான் குஜராத் இன அழிப்பை நடத்தினேன். அவர் உலகை ஆட்சி செய்ய நாசி படை நடத்தினார். நான் இந்தியாவை பிடிக்க ஆர்.எஸ்.எஸ். பாசிச படை நடத்துகிறேன். காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை எல்லாம் என்கைகளில்.

குஜராத் இனப்படுகொலை:: 2002 ஆண்டு மோடி தலைமையில் நடத்தப்பட்ட இன படுகொலையில் சுமார் 5000 பேருக்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். தெஹல்கா பத்திரிக்கை நடத்தி இரகசிய பத்திரிகை புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் அவர்கள் நிருபர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும், கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான கற்பழித்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் ஊற்றி மஸ்ஜிதுகளுடன் எரித்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் காவி பயங்கரவாதிகள்.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்று 72 பேரை பயங்கரமான முறையில் இந்தியாவில் காவிபோலீஸ் படையின் உதவியுடன் வெட்டியும், குத்தியும் கொலை கொலை செய்தனர் காவி பயங்கரவாதிகள். இவ்வினப் படுகொலைகளுக்கு நீதி வேண்டி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை உள்ளூர் கோர்ட்டே நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில், நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்தியாவை உலுக்கிய மாபெரும் இனப்படுகொலையை நடத்திய நரேந்திர மோடி அதில் இருந்து தப்பித்து கொண்டான். நீதி செத்தது இனி, முஸ்லிம்கள் உயிர் வாழ்வது என்பது கேள்விக்குறியே.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

நானாவதி கமிசன் அறிக்கையை சமர்பிக்கும் முன்பு உயர் காவல்துறை அதிகாரிகளையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்: CJP

அகமதாபாத்,ஆக19:2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வழக்குகளை குடிமக்களுக்கான நீதி அமைப்பு நடத்தி வருகிறது. இவ்வமைப்பு காவல்துறை கண்ட்ரோல் ரூமின் பதிவுகளில் இருந்து தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களைப் பற்றி சில உயர் அதிகாரிகளை குஜராத் கலவரத்தின் நீதி விசாரணைக்கான நானாவதி ஷா கமிசன் விசாரணைச் செய்ய வேண்டும் என கேட்டுள்ளது.

(Citizens for Justice and Peace) CJP இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டீஸ்ட்டா செடல் வாட் கூறுகையில் "காவல்துறை கண்காணிப்பு அறையில் இருந்து தற்போது கிடைத்துள்ள ரிப்போர்ட்டின்படி பிப்ரவரி 2002 இல் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அகமதாபாத் காவல் துறை கண்காணிப்பாளர் பி.சி.பாண்டேவிற்கு 15 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. இதே நேரத்தில் தான் நரோடா பாட்டியா, குல்பர்க் சொசிட்டி மற்றும் அகமதாபாத்தின் பல இடங்களிலும் கொடூரமான படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளது." என்றார்.

டீஸ்ட்டா செடல் வாட்டின் கருத்துப்படி தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் வருவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும். "ஒன்று முதலமைச்சர் அகமதபாத்தில் காவல்துறையை அவசராமக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கேட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் இனப்படுகொலை தொடர்ந்து நடப்பதை அனுமதிக்கும் வகையில் கலவரக் குமபல்களை சுதந்திரமாக செயல்படவிட்டு அவர்களை கலைக்கும் நடவடிக்கையில் மெதுவாக செயல்படக் கூறி இருக்க வேண்டும். ஆகவே நானாவதி ஷா கமிசன் உண்மையை வெளிக்கொண்டு வரும் முன் காவல்துறை கண்கானிப்பாளர் மற்றும் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளை விசாணை செய்ய வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.

CJP குழு "மாநில காவல்துறை ஆணையர் கே.சக்ரவர்த்தி, பாண்டே முன்னால் துணை காவல்துறை ஆணையர் M.K.தண்டன், உதவி காவல்துறை ஆணையர் P.B கோண்டியா மற்றும் ஓய்வுப் பெற்ற காவல்துறை ஆணையர் R.B.ஸ்ரீகுமார் ஆகியோரின் மீது மீண்டும் புதிய விசாரணை மேற்க்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அவர், காவல் துறை அதிகாரிகளுடனான விசாரணை விவாதங்களை விசாரணை கமிஷ்னர் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 27ம் நாள் மாலை நரேந்திர மோடி கோத்ராவில் ரயில் எரிந்த இடத்தில் பார்வையிட்டுக் கொண்டு இருக்கையில்,அதே நேரத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் பணி செய்யும் 6 மூத்த அதிகாரிகள் நரோடா-பாட்டியா மற்றும் மேகனி நகர் பகுதியில் இருந்ததாக மொபைல் போன் பதிவுகள் காட்டுகின்றன. என்றும் டீஸ்ட்ட செடல்வாட் கூறினார்.

முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் நரோடாவில் என்ன செய்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் கலவரத்திற்கு திட்டம் தீட்டுக் கொண்டிருந்தனரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

சனி, 10 ஜூலை, 2010

சி.பி.ஐ விசாரணைக் கோரும் ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கு

அஹ்மதாபாத்:2003 குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் இதுவரை சுமார் 24 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஷொராஹ்ப்தீன், அவர் மனைவி கவுசர் பீவி, இஸ்ரத் ஜகான், துளசிராம் ஆகிய பிரபல போலி என்கவுண்டர் மட்டும் தான் பெரும்பாலானோருக்கு தெரியும்.

2003ம் ஆண்டு குஜராத் போலீசாரால் நடத்தப்பட்ட ஸாதிக் ஜமால் என்கவுண்டரை மிக குறைவானோரே அறிவர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று, இவ்வழக்கைத் துரிதப்படுத்துமாறும், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோரியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸாதிக் ஜமாலின் அண்ணன் ஷபீர் ஜமால் மேஹ்தா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், செப்டம்பர் 2009 க்குப் பிறகு இவ்வழக்கு முகவரியே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஆதலால் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கை துரிதப்படுத்தக் கோரியுள்ள அவர், 2008ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டும், இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக,ஜனவரி 2003ல் ஸாதிக் ஜமால்(25) போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவருக்கு தாவூத் இப்ராஹிமுடனும், சோட்டா ஷகீலுடனும் தொடர்பு இருப்பதாகவும், மோடி, அத்வானி, தொகாடியா உள்ளிட்ட பல தலைவர்களை ஜமால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் வழக்கம் போல காரணங்கள் கூறப்பட்டன.

மனுதாரரின் கூற்றுப்படி, தன் தம்பி ஸாதிக் ஜமால் தீவிரவாதியில்லை என்றும், கொல்லப்படுவதற்கு முன் ஏற்கனவே போலீசாரின் பாதுகாப்பில் தான் அவர் இருந்துள்ளதாகவும்,ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டரில் தற்போது சிறையில் இருக்கும் டி.ஜி. வன்சாரா மற்றும் குஜாராத் கலவரத்தில் கலவரக்காரர்களை ஏவிவிட்ட பாண்டே ஆகிய அதிகாரிகளின் சதிச் செயல்களினால் தான் ஜமால் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
TOI

ஞாயிறு, 27 ஜூன், 2010

இஷ்ரத் வழக்கு:சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்இஷ்ரத் வழக்கு:சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அஹ்மதாபாத்:குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்றம் 2004ல் நடந்த இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் வழக்கில் சிபிஐ மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இஷ்ரத்துடன் கொல்லப்பட்ட ஜாவித் குலாம் ஷேக் என்கிற ப்ரனேஷ் குமார் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையின் மனுவைத் தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

நீதிபதிகள் ஜயந்த் பட்டேல் மற்றும் Z.K.சயீத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 'தன் மகனின் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்' என்ற கோபிநாத்தின் மனுவை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர்.

ஜூலை 5ம் தேதிக்குள் பதில் தருமாறு குஜராத் அரசு மற்றும் சிபிஐயை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மும்பை வாசிகளான இஷ்ரத் (19), மற்றும் ப்ரனேஷ், அம்ஜாத் அலி என்கிற ராஜ்குமார் அக்பர் அலி ரானா, ஜிஸான் ஜொஹர் அப்துல் கனி ஆகியோர் அஹ்மதாபாத் அருகே ஜூன் 15,2004ல் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

மத்திய புலனாய்வுத்துறை தந்த விவரங்களின் அடிப்படையில், இஷ்ரத் மற்றும் மூவர் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்தவர்கள், முதலமைச்சர் நரேந்திர மோடியை கொல்வதற்காகவே வந்தனர் என்று குஜராத் போலீஸ் விளக்கமளித்தது.

நீதிபதி S.P.தமாங்க், 'இது ஒரு போலி என்கவுண்டர் என்றும் சில போலீஸ் அதிகாரிகளால் சுய இலாபத்திற்காக செய்யப்பட்டது' என்று தனது விசாரணை அறிக்கையில் கூறியிருந்தார்.

தீவிரவாத எதிர்ப்பு படையின் SP கிரிஷ் சிங்கால் மற்றும் மாநில அரசின் மனுக்களையும் நீதிமன்றம் விசாரணை செய்யும்.

நீதிபதி தமாங்கின் செப்டம்பர் 2009 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கால், என்கவுண்டரை போலி என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நீதிபதிகளின் கோரிக்கையை எதிர்த்து வாதாடுகிறார். தமாங்கின் அறிக்கைக்கு மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மேலும் இது நீதிவிசாரணை அதிகாரத்தை மீறியதாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
siasat

சனி, 22 மே, 2010

பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!

குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி கடூன் என்ற தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.

கோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரெஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி கடூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் ""இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை?'' என பீபி கடூன் வருத்தத்துடன் கேட்கிறார்.

கைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக் கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது ""பொடா'' கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தனது மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக்கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தனது மகன்களிடம் ""நம்பிக்கை தளர வேண்டாம்'' என்றும் ""சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்'' அவர்களின் தந்தை உறுதியளித்தார்.

பீபியின் மூத்த மகனுக்கு பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகனுக்கு கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும் போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின் வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வேலை கொடுக்கவில்லை.

2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி கடூன். ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் என தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான ""ஹைட்ரோ கார்பனின்'' தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின் கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வழக்குத் தொடுத்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தை விட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.

இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்களது தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.

சிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தனது குடும்பத்தையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. ""அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள் கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்?'' என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச்சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தனது மகன்கள் மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். ""மகனே நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான எனது மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்'' எனக் கேட்கிறார்.

தன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: ""எனது மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா? அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா?''

• சுந்தர்

(தி இந்து நாளேட்டில் (பிப்ரவரி 27 2010)ஹர்ஷ் மந்தர் எழுதிய கட்டுரையின் சாரமான தமிழாக்கம்)

www.tamilcircle.net

வியாழன், 3 டிசம்பர், 2009

போலி என்கவுண்டர்: நீதிபதி தாமங்கின் அறிக்கையை நிறுத்தி வைத்த குஜராத் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!


குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹானின் கொலை வழக்கு குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இஸ்ரத்தின் தாயார் ஷமீமா கெளசர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த போலி என்கவுண்டர் குறித்து விசாரணை செய்த அகமதாபாத் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தாமங், 19 வயதான இஸ்ரத் நரேந்திர மோடியைக் கொலை செய்ய முயன்றதால் அவரை என்கவுண்டர் செய்தோம் என்று காவல்துறையினர் கூறியதை ஏற்க மறுத்து, இஸ்ரத் சொந்தக் காரணங்களுக்காக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறினார்.

மாஜிஸ்ட்ரேட் விசாரணையை எதிர்த்து குஜராத் மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாமங்கின் அறிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்தே இஸ்ரத்தின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

source:inneram

புதன், 1 ஜூலை, 2009

குஜராத் இனப்படுகொலை - பாஜக எம்.எல்.ஏ சரண்!


குஜராத்: கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முசுலீம்களை இனக்கருவறுப்பு செய்த வழக்கில் தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்திலுள்ள பாஜக எம்.எல்.ஏ காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

குஜராத்திலுள்ள ராஜ்கட் தொகுதியிலிருந்து பாஜக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர், ஃபதாசிங் சவுஹான். இவர், 2002 ஆம் ஆண்டு, முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சுமத்தப்பட்டவராவார். இவரைக் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. எனினும் காவல்துறை இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்நிறுத்த இயலாததால், தலைமறைவானவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீரற்றுஇவர் காவல்நிலையத்தில்சரணடைந்தார். அவரைக்காவல்துறை கைது செய்துநீதிமன்றம்முன்னிலையில்நிறுத்தியது.

தேவ்கட் பாரித் என்ற தாலுகாவிலுள்ள வாவ்குண்டலி என்ற கிராமத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இவர் தலைமை தாங்கினார் என்பதே இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனை விதிக்கும்படியான குற்றம் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.