குஜராத்: கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து முசுலீம்களை இனக்கருவறுப்பு செய்த வழக்கில் தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்திலுள்ள பாஜக எம்.எல்.ஏ காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
குஜராத்திலுள்ள ராஜ்கட் தொகுதியிலிருந்து பாஜக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர், ஃபதாசிங் சவுஹான். இவர், 2002 ஆம் ஆண்டு, முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சுமத்தப்பட்டவராவார். இவரைக் கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. எனினும் காவல்துறை இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்நிறுத்த இயலாததால், தலைமறைவானவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நீரற்றுஇவர் காவல்நிலையத்தில்சரணடைந்தார். அவரைக்காவல்துறை கைது செய்துநீதிமன்றம்முன்னிலையில்நிறுத்தியது.
தேவ்கட் பாரித் என்ற தாலுகாவிலுள்ள வாவ்குண்டலி என்ற கிராமத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இவர் தலைமை தாங்கினார் என்பதே இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனை விதிக்கும்படியான குற்றம் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக