மைசூர்: மைசூரில் மதக் கலவரம் வெடித்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் 15 வயது சிறுவன். இந்த சிறுவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கலவரம் வெடித்துள்ள உதயகிரி, மந்தி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். இருப்பினும் மகாதேவபுரா சாலையில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் அங்கு சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், உள்ள ஹூலியம்மா கோவில் அருகே மசூதி கட்டப்பட்டது. இதை எதிர்த்து ஹூலியம்மா கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மசூதி கட்டுவதற்கான வேலைகளை சிலர் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அந்த இடத்தில் பன்றியின் சிதைந்த உடல் பகுதிகளை சிலர் அங்கு போட்டுள்ளனர். இதையடுத்து இன்று கலவரம் வெடித்தது. காலை எட்டரை மணியளவில் கலவரம் வெடித்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். உடனடியாக கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
சம்பவம் நடந்த பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக