செவ்வாய், 14 ஜூலை, 2009

காந்திமாநிலத்தை கள்ளச்சாராய மாநிலமாக்கிய மோடி!


குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை, குஜராத்தை தொழில் துறையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் அளவுக்கு முன்னேற்றியவர். இவர் பிரதமராவதற்கு மிக தகுதி படைத்தவர் என சோ போன்ற 'அவாள்கள்' மோடிக்கு ஒரு புறம் புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்க, குஜராத்தை மோடி எந்த துறையில் முன்னேற்றி இருக்கிறார் என்று அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டுதான் இருக்கிறது. 'லேட்டெஸ்ட்' ஆக குஜராத்தை கள்ளசாராய சந்தையாக மாற்றியுள்ள சாதனை வெளியாகியுள்ளது.

பூரண மது விலக்கு அமலில் உள்ள மாநிலமான குஜராத்தில், கள்ளசாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறதோ என்று என்னும் அளவுக்கு கள்ளச்சாராயம் குடித்து மரணித்தவர்களின் எண்ணிக்கை இரு நூறை நெருங்குவதாகவும், சுமார் 227 பேர் மருத்துவ-மனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. சாவு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அகிம்சையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் குடித்து தங்களை கோட்சேவின் வாரிசுதான் என்று நிரூபித்தவர்கள், 'மதுவெனும் அரக்கனை ஒழிக்கணும்' என்ற காந்தியின் கொள்கைக்கு மாற்றமாக,
ஒருபுறம் நாங்கள் எங்கள் மாநிலத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தியிருக்கிறோம் என்று மார்தட்டிக்கொண்டு மறுபுறம் சாராய முதலைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இன்று குஜராத்தில் ஒரு புறம் பிணம் எரிய மறுபுறம் குடும்பத்தலைவனை- மகனை- சகோதரனை இழந்தவர்களின் வயிறு எரிகிறது.

இந்த கள்ளசாராய சாவை அடுத்து குஜராத்தில் சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் மோடிக்கு எதிரான குரல் பலமாக ஒழிக்க ஆரம்பித்துள்ளது. தார்மீக பொறுப்பேற்று மோடி பதவி விலகவேண்டும் என பிரதான கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. குஜராத்தில் மக்கள் மத்தியிலும் மோடிக்கு எதிரான சிந்தனை துளிர் விட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கோபுரத்தில் ஒட்டியுள்ள குப்பை வெகு விரைவில் வீழும். அங்கே ஆட்சி மாற்றம் நிகழும் என்பதே அரசியல் கணிப்பாக நமக்கு புலப்படுகிறது. [இன்ஷா அல்லாஹ்]

கருத்துகள் இல்லை: