திங்கள், 6 ஜூலை, 2009

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்: லாலு பிரசாத்

ஓரினச் சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம். அதை அனுமதித்தால் சமுதாயம் சீரழிந்து விடும் என்று லாலு பிரசாத் ஆவேசமாக கூறினார்.

ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓரினச் சேர்க்கைக்கு எக்காரணம் கொண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்கக் கூடாது. அதை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். ஓரினச் சேர்க்கை என்பது ஒரு கிரிமினல் குற்றம். அந்த செயலை நம் நாட்டில் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் சமுதாயம் சீரழிந்து விடும். அதற்கு இடம் தரக்கூடாது. இது ஆபாசமான செயல். அது பற்றி மேலும் பேச விரும்ப வில்லை.

இது போன்ற செயல்களை நமது நாடும் நமது கலாசாரமும் ஏற்றுக் கொள்ளாது. இந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது. ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: