சனி, 25 ஜூலை, 2009

பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

புதுடெல்லி:ஜாமிஆ நகர் பாட்லா ஹவுஸில் நடந்த என்கவுண்டரில் டெல்லி காவல்துறையினரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கிய தேசிய மனித உரிமை கமிஷனுக்கெதிராக முஸ்லிம் எம்பிக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் இந்நிகழ்வைகுறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும் முஸ்லிம் எம்.பிக்களான ஜனதாதளத்தைச்சார்ந்த இஜாஸ் அலி, ராஷ்ட்ரிய லோக்தளத்தைச் சார்ந்த மஹ்மூத் மதனி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதேவேளையில் உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வுக்குழுவைக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆக்டிவ் நவ் ஃபார் ஹார்மனி அன்ட் டெமோக்ரஸி என்ற அமைப்பின் தலைமையில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: