
டெஹ்ரான்: ஈரானில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேர் நேற்று ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே உள்ள கராஜ் என்ற இடத்தில் உள்ள சிறையில் இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்கள் அனைவரும் கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களிடமிருந்து 700 கிலோ போதைப் பொருட்கள் பிடிபட்டன.
விசாரணைக்குப் பின்னர் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 20 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டு மதச் சட்டத்தின்படி கற்பழிப்பு, கொலை, ஆயுதங்களைக் காட்டி கொள்ளையடிப்பது, 5 கிலோவுக்கு மேல் போதைப் பொருளை வைத்திருப்பது கொலைக் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக