வியாழன், 16 ஜூலை, 2009

சிமிக்கு தடை! மாவோயிஸ்டுகளுக்கு வரவேற்பு!!கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம்!!!

ஆயுத பயிற்சியில் மாவோயிஸ்டுகள்

அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் சிமி உறுப்பினர்கள் (பழைய படம்)

-இனியவன்

மேற்குவங்க மாநிலம் லால்கரில் பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடி மக்கள் நிறைந்த லால்கர் பகுதி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களுடன் இராணுவம் மற்றும் அரசு இயந்திரங்களை தாக்கி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு இம் மக்களை புறக்கணித்தது அதன் விளைவு இம்மக்கள் அரசை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. அதுமட்டு மின்றி சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இம்மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளித்துவ சேவை செய்ய நினைத் ததுதான் ஏழைப் பங்காளர்களான தோழர்கள் பழங்குடி மக்களிடம் அடிவாங்க முதல் காரணமாய் அமைந்து விட்டது.

போலீசையும்,இராணுவத்தையும் ஆயுதம் கொண்டு பல ஆண்டுகளாக எதிர்த்து தனி அரசை நடத்தி வரும் மாவோயிஸ்டுகள் மீது இப்போதுதான் தடைவிதிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி தடையும் விதித்தது. இதுவரை மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டு அமைப்பு தடை செய்யப்படவில்லை என்பதுதான் காமெடி. மத்திய அரசு தடை செய்தவுடன் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு தடையை ஏற்பதா வேண்டாமா? என தவித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 'மாவோயிஸ்டுகள் மீதான தடையை ஏற்றுக் கொள்ள முடியாது. தடை போடுவதால் மட்டுமே அவர் களை அடக்க முடியாது.அரசியல் ரீதியாக மட்டுமே மாவோயிஸ்டு பிரச்சினை யில் தீர்வு காண வேண் டும்' என கரிசனம் காட்டியுள்ளார்.

ஆனால், இதுவரை அமைதி காத்த மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தடையை தனது அரசு ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். (அவர் வலி அவருக்குத்தானே தெரியும்). ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளுக்கு தடை விதிக்கத் தயங்கும் இந்தக் கம்யூனிஸ்டுகள்தான் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (சிமி) சட்டவிரோதமாக மத்திய அரசால் தடை செய்யப்பட்ட போது, எந்தக் கேள்வியையும் கேட்காமல் தனது மாநிலத்தில் சிமி அமைப்புக்குத் தடை விதித்தனர். அதன் தலைவர்களையும், உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிமியைத் தடை செய்த 8 மாநிலங்களில் சிமிஆளும் கேரளா மற்றும் மேற்கு வங்கமும் அடங்கும்.

சிமி தலைவர்களோ உறுப்பினர்களோ அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யவில்லை. நாட்டின் எந்தப் பகுதி யையும் பிடித்துக் கொண்டு விடுதலைப் பிரதேசமாக அறிவிக்கவில்லை. நாட்டில் நடந்த எந்த குண்டு வெடிப்பிலாவது சிமி அமைப்பு ஈடுபட்டது என்பதற்கான நேரிடையான எந்தவொரு ஆதாரத்தையும் மத்திய அரசு இதுவரை காட்டவில்லை. கம்யூனிஸ்டுகளும் காட்டவில்லை. மாவோயிஸ்டு பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் கம்யூனிஸ தோழர்கள் சிமி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜெயில் களி மூலமாக மட்டும்தான் தீர்வு காணுவார்களாம்.

முஸ்லிம் அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக காட்டுவது காங்கிரஸ், பிஜேபி மட்டுமல்ல முற்போக்கு வேடம் போடும் கம்யூனிஸ்டு கட்சியினரின் நிலைப்பாடும் அதுதான். முஸ்லிம்கள் முட்டாள்கள் என்றே இன்றும் மற்ற கட்சிகளோடு கம்யூனிஸ்டுகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான பாடத்தை சிறுபான்மை மக்கள் கடந்த தேர்தலில் புகட்டியது போல வரும் தேர்தல்களிலும் புகட்டுவார்கள்.ஏன் இந்த இரட்டை வேடம் தோழ்ர்களே ?.


சிமியை பற்றிய தெஹல்காவின் கட்டுரை

கருத்துகள் இல்லை: