ஹாஜாகனி
இஸ்ரேல் இந்த பூமிப் பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது. ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.
இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக் கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.
அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர். அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.
இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது. மத்திய அரசின் உயர் அதிகாரி களையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது.
Israel International Co-operation Institute (IICI) என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் (ஈங்ற்ழ்ஹப் நங்ழ்ஸ்ங்ழ்) பதிவு செய்யப்படும்.
இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் (டங்ழ்ள்ர்ய்ஹப்) இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.
இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.
மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக