இஸ்ரேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்ரேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 அக்டோபர், 2009

இஸ்ரேலிய இராணுவத்தில் சேர இஸ்ரேலிய மாணவர்கள் மறுப்பு



இஸ்ரேலில் 80 க்கும் மேலான மாணவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் நாடு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அடக்குமுறையை கையாளுவதாகவும் அதனால் தாங்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த மாணவர்கள் இதனை டெல் அவிவில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

அந்த மாணவர்கள், "நாம் உண்மையை மறுக்க முடியாது, இந்த ஆக்கிரமிப்பு வன்முறையானது, இனவெறி பிடித்தது, மனித தன்மை இல்லாதது, சட்டத்திற்கு புறம்பானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, முறைகேடானது மற்றும் இது எல்லா வகையிலும் இரு நாடுகளுக்கும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது" என்று கூறினர்.

"மேலும் சுதந்திரம், நீதி, நேர்மை, அமைதி ஆகியவற்றைப் பற்றி போதிக்கப்பட்ட நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ புறக்கணிப்பு கடிதமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வழங்கப்பட்டது. இதில் 84 மாணவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதில் நான்கு பேர், "இராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாதது தங்களை சிறையில் தள்ளக்கூடும் என்று தங்களுக்கு தெரியும் என்றும் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அதன் கோட்பாடுகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்ததினால் தான் இதனை மறுக்கிறோம்" என்று கூறினர்.

19 வயது நிரம்பிய பென் டேவிட் என்ற மாணவர் கூறுகையில், "நாங்கள் ஆக்கிரமிப்பின் போது தான் பிறந்தோம், இன்று எங்களில் பலர் இந்த ஆக்கிரமிப்பை இயற்கையான ஒன்று என்று பார்க்கப் பழகிவிட்டனர்" என்று கூறினார்.

பென் டேவிட் நவம்பர் தொடக்கத்திலிருந்து இராணுவத்தில் இணைய சட்டப்பூர்வமாக கட்டுப்பட்டு இருக்கிறார்.
ஆனால் அவர், "நான் என் கண்களை திறந்து விட்டேன், என்னை சுற்றியுள்ள இக்கட்டான இஸ்ரேலிய சமுதாயத்தை நான் கண்டேன். நான் மேற்குக் கரை சென்று பாலஸ்தீனியர்களை காணும் போது என்னுடைய பார்வையை நான் மாற்றிக்கொண்டேன்" என்று கூறினார்.

அமெலியா மார்கொவிச் என்ற மாணவியிடம், "அவர் வேறு விதமான சமூக சேவை ஏதும் செய்வாரா என்று கேட்டதற்கு, சமூக சேவையில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய செயல். நாம் கட்டாயமாக செய்யவேண்டும் என்பதற்காக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் செய்வதின் பெயர் சமூக சேவையல்ல" என்று கூறினார்.

"சிறையில் இருப்பது, என்னுடைய சமூக சேவை செய்யும் எண்ணத்தை பாதிக்காது, நான் அதனை சிறையிலிருந்து வெளி வந்ததும் செய்து கொள்வேன்" என்று கூறினார்.

இராணுவத்தில் சேர மறுத்த மாணவர்களில் மற்றுமொருவரான எஃபியீ பிரேன்னேர் அவருடைய அனுபவத்தை கூறினார். "நான் இராணுவத்தில் சேரப்போவதில்லை என்று கூறிய போது என் பெற்றோர்கள் மோசமாக நடந்து கொண்டனர். என்னை வீட்டை விட்டு விரட்டியடிக்கப் போவதாக மிரட்டினர்" என்று அவர் கூறினார்.

எப்படியானாலும் மூன்று வருடகாலம் இராணுவத்தில் பணிபுரிவது இது போன்ற அறிக்கை விடுவதையும் சிறையில் அடைபடுவதையும் விட எளிதானது. நான் இராணுவத்தில் சேர மறுத்த காரணங்களுள் ஒன்று, "எல்லா இஸ்ரேலியர்களும் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதரவானவர்கள் இல்லை என்றும் சிலர் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றார்கள் என்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.

"நாங்கள் இங்கு செய்வதை அறிந்த பாலஸ்தீனியர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்து எங்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

பிரேன்னேர், "மேலும் நாங்கள் இராணுவத்தின் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளோம் என்பதனை முன்னதாகவே சட்டப்பூர்வமாக அறிவித்துவிட்டோம்" என்று கூறினார்.

இது போன்ற கடிதங்கள் ஆண்டாண்டு காலமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இராணுவத்தில் பணிபுரிய மறுத்து வெளியிடப்பட்ட கடிதம் இஸ்ரேலில் முதன் முதலில் 1979 ஆம் வருடம் கொடுக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

நன்றி
அல் ஜசீரா.

வியாழன், 10 செப்டம்பர், 2009

கணக்கு தெரியாத இஸ்ரேல்

இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு ஒன்று, 22 நாட்கள் இஸ்ரேல் அநியாயமாக பாலஸ்தீன் மீது நடத்திய ஆக்கிரமிப்பு தாக்குதலில் பலியானவர்களில் பாதிக்கும் மேலானோர் அப்பாவிப் பொதுமக்களே என்று கூறியுள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இஸ்ரேல் தாக்குதலின் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராளிகள் என்று கூறியது பொய் என்று தெரிய வந்துள்ளது.

B'Tselem என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1387 பாலஸ்தீனியர்கள் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 773 பேர் அப்பாவிப் பொது மக்கள் என்றும், 330 பேர் போராளிகள் என்றும், 248 பேர் காவல்துறையினர் என்றும் 36 பேர் போராளிகளா இல்லை பொதுமக்களா என்று அடையாளம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

அந்த அறிக்கை மேலும் கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 320 பேர் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கையின்படி 1166 பேர் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்ற போது கொல்லப்பட்டதாகவும், அதில் 709 பேர் போராளிகள் எனவும், 295 பொதுமக்கள் என்றும், 162 பேர் யார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

தற்பொழுது B'Tselem வெளிட்டுள்ள அறிக்கையைப் பற்றி இஸ்ரேல் அதிகாரிகளிடம் கேட்டதிற்கு அவர்கள் அதனை மறுத்துள்ளனர். B'Tselem ன் கணக்கெடுப்பு தவறானது என்றும் அது வலையுலக தகவலை வைத்து இந்த முடிவிற்கு வந்ததாக கூறியுள்ளனர்.

இதனை மறுத்த B'Tselem, அது காசாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்று இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறியுள்ளது. அது மேலும் இஸ்ரேலிய அரசை இது தொடர்பான சுதந்திரமான விசாரணையை தொடங்க கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாவது, இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் சர்வதேச சட்டம் ஒழுங்கை பேணி நடந்தது என்று கூறியுள்ளனர். (இந்த ஆக்ரமிப்பு தாக்குதலில் இஸ்ரேல் நடத்திய அத்துமீறல்கள் நாம் அனைவரும் அறிந்ததே....)

இஸ்ரேலின் இந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி இஸ்ரேலிய

வியாழன், 16 ஜூலை, 2009

இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!

ஹாஜாகனி

இஸ்ரேல் இந்த பூமிப் பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது. ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.

இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக் கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது. நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.

அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர். அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.

இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது. மத்திய அரசின் உயர் அதிகாரி களையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது.

Israel International Co-operation Institute (IICI)
என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர். 14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் (ஈங்ற்ழ்ஹப் நங்ழ்ஸ்ங்ழ்) பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் (டங்ழ்ள்ர்ய்ஹப்) இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.

மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம்.