சனி, 31 ஜனவரி, 2009

மாணவர்களுக்கு ரூ. 500 விலையில் கணினி!


புதுதில்லி: ரூ. 500 விலையில் மாணவர்களின் கல்விக்கான கணினிகள் தயாராகி வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இவை விற்பனைக்கு வரும்.

இந்த கணினிகள் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தங்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன. இது குறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் உயர்கல்வித் துறை செயலாளர் ஆர்.பி. அகர்வால் தெரிவித்ததாவது:

தகவல் சேமிக்கும் திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதி, பிற கணினிகளுடன் இணைக்கும் வசதி, வை-ஃபீ வசதி ஆகியவை இந்த சிறிய கணினியில் இருக்கும். மேலும், அனைத்து பாடங்கள் தொடர்பான மின்னணுத் தகவல்களையும் அரசு இலவசமாக வழங்கும். 2 வோல்ட் மின்சாரத்தில் இந்தக் கணினி இயங்கும்.

மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வகை கணினியை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். மாணவர்கள் மேலும் மின்னணுத் தகவல்களைப் பெற்று அவற்றை தங்கள் கணினியில் பதிவு செய்துகொள்ளலாம். கல்வி நிறுவனங்களுக்கு அரசு இவற்றை சலுகை விலையில் வழங்கும்.

இவ்வகை கணினிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்களுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் தேசிய கல்வி (ஐசிடி) எனும் மத்திய அரசு திட்டம் மூலம் இந்தக் கணினி தயாரிக்கப்படுகிறது. இப்புதிய ஐசிடி திட்டம் மூலம், நாட்டில் உள்ள 100 மத்திய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் அகலக்கற்றை அலைவரிசை இன்டர்நெட் மூலம் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஐஐடி பேராசிரியர்கள் அளிக்கும் விரிவுரையை மாணவர்கள் ஆன்-லைன் மூலம் பெற முடியும். மேலும் தங்களின் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த ஐசிடி திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய கமிட்டி ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.4,612 கோடி செலவாகும். இதில் 40 சதவீதத் தொகை மின்னணுத் தகவல்களைத் தயாரிக்க செலவிடப்படும். இத் தகவல்கள் கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 420 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் துறைகள் பயன்பெறும்.

எஜுசாட் செயற்கைக்கோள் மூலம் 100 கல்வி அலைவரிசைகளைத் தொடங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குக்கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வழியேற்படும் என்றார் அகர்வால்.

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும்

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும்
வினாடி வினா போட்டி - தடுத்து நிறுத்திய தமுமுக



-புகாரியின் புதல்வன்

கடந்த பாஜகவின் ஆட்சியின் பொழுது பாடப் புத்தகங்களில் காவி கலந்தது. இதனால் இந்திய மதச்சார்பின்மைக் கொள்கையில் விரிசல் ஏற்பட்டது. கல்வித் துறையே காவி மயமாக்கப்பட்டது.

''வரலாற்றையே மாற்றி எழுதுவது என்பது வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்''. இதனை செய்வதில் சங்பரிவாரத்தினர் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளனர். கல்வித்துறையில் காவி கலக்கும் பொழுதெல்லாம் போர்க்குரல் தொடுத்து அதனை வென்றெடுப்பதில் தமுமுக முதலில் நிற்கும்.

கடந்த 24.01.09 சனிக்கிழமை அன்று ஸ்ரீ கலைவாணி ஆன்மீகம் மற்றும் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை என்ற அமைப்பு பள்ளி மாணவ மாணவியர் களுக்கு ஆன்மீக வினாடி வினா போட்டி நடத்துவதற்காக சென்னையி லுள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் வினாடி வினா மாதிரிப் படிவங்களை அனுப்பியது.

கேள்வி: ஆலயங்களை சூறையாடிய இஸ்லாமிய கொள்ளையர்களின் நோக்கம் என்ன?

பதில்: இந்து மதத்தை அழிப்பதும், பொருள்களை கொள்ளையடிப்பதும் அவர்களின் நோக்கமாக இருந்தது.

கேள்வி: இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதன் முத­ல் நடை பெற்ற கோயில் திருப்பணி எது?

பதில்: குஜராத் மாநிலத்தில் முஸ்­ம் கொள்ளையர்களால் சூறையாடப்பட்ட சோமநாதர் ஆலயத்தை செப்பனிட்டு இந்தியாவில் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் கும்பாபிஷேகம் நடத்தினார்.

இவையெல்லாம் அந்த வினாடி வினாப் படிவத்தில் உள்ள சாம்பிள் கேள்விகள் தான்?

அந்த வினாடி வினாப் படிவங்களின் மாதிரிகள் அனைத்திலுமே முஸ்­ம், கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின மக்களை கொச்சைப் படுத்தும் வகையில் கேள்விகளை வடிவமைத்திருந்தனர். இதன் மூலம் இளம் பிஞ்சுகளின் உள்ளங்களின் காவி விஷத்தை கலப்பதே இவர்களின் எண்ணம்.

இந்நிலையில் அந்த வினாடி வினாப் படிவத்தை கண்டதும் தி. நகர் பகுதியைச் சேர்ந்த தென் சென்னை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோரி (எ) அபூ பக்கர் மற்றும் தி. நகர் பொருளாளர் கே. நாசர் உடனே அதனை தென் சென்னை மாவட்ட தமுமுகவிற்கு கொண்டு சென்றனர். தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது தலைமையில் மாவட்டப் பொருளாளர் கே. அப்துல் சலாம், மாவட்ட துணைச் செயலாளர் ஏ. முகம்மது யூசுப் மற்றும் பகுதி நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் உடனடியாக வினா விடை தாளை வெளி யிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க காவல் துறையிலும், கல்வித் துறையிலும் புகார் அளித்தனர்.

இதனை உடனே பரிசீலனை செய்த காவல்துறையும், கல்வித்துறையும் நடைபெற இருந்த காவி வினாடி வினாப் போட்டியை உடனே தடை செய்தனர்.

24.01.09 அன்று வினாடி வினாவிற்கு கலந்து கொள்ள சில குழந்தைகள் பெற் றோர்களுடன் வரவே வினாடி வினா போட்டி தடை செய்யப்பட்ட விஷயத்தை சொல்ல அவர்களும் கலைந்து சென்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் வரலாற்றை திரித்தும் காவியை புகுத்தும் நிறுவனங் களின் உரிமத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது மட்டுமே அவை மீண்டும் தலையெடுப்பதை தவிர்க்க முடியும். இவற்றால் மட்டுமே இந்திய மதச்சார்பின்மையில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய முடியும்.

புதன், 28 ஜனவரி, 2009

இஸ்லாம் பார்வையில் "அன்பளிப்பு"

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பைக் கொண்டு சென்றேன். அப்பொழுது அவர்கள் நீர் இஸ்லாத்தைத் தழுவி விட்டீரா? என்று வினவினர். அதற்கு நான் இல்லை என்றேன். அப்பொழுது அவர்கள் நிச்சயமாக நான் இணை வைப்பவர்களுடைய அன்பளிப்பையும் நன்கொடையையும் ஏற்பதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளேன் என்று கூறினர் (அறிவிப்பவர்: இயான் இப்னுஹிமாஸ் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்,திர்மிதீ)

நிச்சயமாக ஒரு காட்டரபி நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்பாக அனுப்பினார். அதற்குப் பகரமாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அவருக்கு ஆறு ஒட்டகங்களை அன்பளிப்புச் செய்தனர். எனவே அவர் சினந்து கொண்டார். ஆனால் இச்செய்தி நபி صلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரியவரவே அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அவனைத் துதி செய்துவிட்டு பின்னர், நிச்சயமாக, இன்னார் எனக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். எனினும் நான் அவருக்கு அதற்குப் பகரமாக ஆறு ஒட்ட்கங்களை அன்பளிப்பு செய்தேன். ஆனால் அவர் அதற்காகச் சினந்து கொண்டார். எனவே நான் (இனிமேல்) குறைஷிகளிடமிருந்தோ, அன்ஸாரிகளிடமிருந்தோ, ஸகஃபீகளிடமிருந்தோ, தவ்ஸீகளிடமிருந்தோ அன்றி வேறு எவரிடமிருந்தும்) அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

ஒருவருக்காக எவரேனும் பரிந்துரைத்து (சிபாரிசு செய்து) அதற்காக அவர் தமக்குப் பரிந்துரைத்தவருக்கு அன்பளிப்புச் செய்து அதனை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நிச்சயமாக அவர் பெரும்பாலும் வட்டியின் தலை வாயிலில் நுழைந்தவராவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்:அபூ உமாமா َضِيَ اللَّهُ عَنْநூல் அபூதாவூத்)

நபி صلى الله عليه وسلم அவர்களின் திண்ணைப் பள்ளி மாணக்கர்களான ஸுஃப்பாவாசிகளில் சிலருக்கு நான் எழுத்துக் கலையையும் குர்ஆனையும் கற்றுக் கொடுத்தேன். எனவே அவர்களில் ஒருவர் எனக்கு வில் ஒன்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அப்பொழுது நான், என்னிடம் பொருள் இல்லாததால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்துவேன் என்று கூறி பின்னர், அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் ஒருவருக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்து வந்தேன். அவர் என்னிடம் பொருள் இல்லாததால் நான் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்வேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள், நரக நெருப்பு வளையம் உம்முடைய கழுத்தில் போடப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாபித் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்)


ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெருவது ஆகுமானதாகும். மற்றோர் அறிவிப்பின்படி, எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் َضِيَ اللَّهُ عَنْ,இப்னு உமர் َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

நிச்சயமாக என் தந்தை என்னை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அழைத்துச் சென்று, நாயகமே நிச்சயமாக நான் இந்த என்னுடைய மகனுக்கு ஓர் அடிமையை நன்கொடையாக அளித்தேன் என்று கூறினார். அதற்கவர்கள், இவ்விதமாகவே உம்முடைய எல்லா மக்களுக்கும் நன்கொடை அளித்திருக்கின்றீரா? என்று வினவினர். அதற்கு என் தந்தை இல்லை என்று மறுமொழி பகர்ந்தார். (அது கேட்ட) நபி صلى الله عليه وسلم அவர்கள், அவ்விதமாயின் அவ்வடிமையைத் திரும்பப்பெற்றுக் கொள்ளும் என்று கூறினர். (அறிவிப்பவர்: நூமான் இப்னுபஷீர் َضِيَ اللَّهُ عَنْ நூல் முஅத்தா, அபூதாவூத்,திர்மிதீ,நஸயீ)

நபி صلى الله عليه وسلمஅவர்கள் எனக்கு நன்கொடைகள் அளித்து வந்தனர். அப்பொழுது நான் என்னைவிட அதிக தேவையுள்ளவர்களுக்கு இவற்றை அளியுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளும் அன்றி, நீர் கோராமலும் நீர் விரும்பாமலும் எந்தப் பொருளையும் நீர் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவ்விதமாக எந்தப் பொருள் மீது நீர் நாட்டம் வைக்காதீர் என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுஸ் ஸயீத் அவர்கள் உமர் َضِيَ اللَّهُ عَنْ மூலமாக அறிந்து நூல் புகாரீ, முஸ்லிம்)

ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு கிஸ்ரா (எனும் ஈரான் நாட்டு மன்னர்) அன்பளிப்பு அனுப்பினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அன்றி, (மற்ற) அரசர்களும் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு அன்பளிப்பை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏற்றுக் கொண்டனர். (அறிவிப்பவர்: அலீ َضِيَ اللَّهُ عَنْ நூல் திர்மிதீ)

thanks to :அமைதி ரயில்

இன்சுலின் என்றால் என்ன?

இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தியாகி, ரத்த ஓட்டத்தில் கலக்கும் முக்கிய ஹார்மோன் ஆகும்.இது ரத்தத்தில் சர்க்கரையோடு கலந்து மனிதர்கள் செயல்படுவதற்க்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இன்சுலின் பற்றாக்குறை ஏற்படும் நிலையில்,ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது . விளைவு "தீர்வில்லா சர்க்கரை நோய்"

மதரஸா மாணவிகளுக்கு இலவச சைக்கிள்! மாநில அரசு அறிவிப்பு!!


அன்சா தஸ்னீம்
மதரஸாக்கள் மக்களின் அறியாமை இருளை அகற்றி ஆன்மீக வெளிச் சத்தை வழங்கி வருகின்றன. அத்தோடு உலகக் கல்வியிலும் மதரஸாக்களின் பங்கு மகத்தான ஒன்றாக விளங்கி வருகிறது.

மதரஸாக்கள் அனைத்து சமூக மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கி சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்­ம் மாணவர்களை விட அதிகமாக ஹிந்து சமய மாணவ. மாணவிகள் மதரஸாக்களில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர் என்பது அண்மையில் நாம் ஊடகங்களில் பார்த்த செய்தியாகும்.


இந்நிலையில் பீகார்மாநில மதரஸாக் களில் மேல்நிலைக் கல்வியை கற்று வரும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிட பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது.


பீகார் மாநில அரசு 1,119 மதரஸாக் கல்விக் கூடங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி 4000 மதரஸாக் கல்விக் கூடங்களின் (அரபிக் கல்லூரிகள் உட்பட) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளையும் பீகார் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. (தமிழக அரசு கவனிக்க)

2,359 மதரஸாக்கள் அரசு உதவி யின்றி நடைபெறுகின்றன.

576 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவியின்றி நடைபெறும் கல்வி நிறுவனங்களாகும்.

32 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவி பெறும் கல்விக் கூடங்களாகும். இந்தக் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் 4000 மாணவிகள் மாநில அரசின் அறிவிப்பின் மூலம் இலவச சைக்கிள் பெறுவார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மதரஸா மாணவிகளின் பட்டியல்களை தயார் செய்து வருகின்றனர். இத்தகவலை மதரஸா வாரிய சேர்மன் இஜாஸ் அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.
thanks to: tmmk.in

செவ்வாய், 27 ஜனவரி, 2009

உப்புத் தண்ணீரில் குளித்தால் தலைமுடி கொட்டுமா?

தலைமுடி என்பது உயிரற்ற செல்களால் ஆன ஒன்று. அதாவது இறந்துபோன புரோட்டீன்கள். இவை உப்புத்தண்ணீரால் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாது. ஒருவருடைய தலைமுடி உதிர்வதற்குக் காரணம் அவருடைய பரம்பரை சார்ந்த ஜீன்கள்தான். அப்பாவுக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கு வழுக்கை விழ வாய்ப்புகள் அதிகம். இதுதவிர அனீமியா, சத்துக்குறைவு நோயுள்ளவர்களுக்கும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் வழுக்கை விழ வாய்ப்புண்டு. அதிகமாக பொடுகு இருந்தாலும் தலைமுடி கொட்டும். மற்றபடி உப்புத் தண்ணீரில் குளித்தாலோ, கடல் தண்ணீரில் குளித்தாலோ முடி கொட்டாது. 

நேர்வழியில் கொரிய ராணுவ வீரர்கள்


37 கொரிய ராணுவ வீரர்கள் இஸ்லாத்தை எற்றனர்
அல்லாஹ் நாடினால் அந்த 37 பேர் மூலமாக 37 ஆயிரம் பேரை இஸ்லாத்திற்குள் கொண்டு வர வைத்து விடுவான்.
ஈராக்கை அடித்து நிர்மூலமாக்கப்படுவதற்காக விஷேசப் பயிற்சிகள் அளித்து ஈராக்கிற்குள் நுழைக்கப்பட்ட பண்ணாட்டு ராணுவ வீரர்களில் பலர் தொடர்ந்து அமைதியை போதிக்கும் சத்திய மார்க்கத்தால் கரவப்பட்டு கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர்.
ஏகஇறைவனை வன்மையாக நிராகரிக்கும் கூட்டத்தின் தலைவர்கள் முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே இறைவன் மற்றொரு புறத்தில் அவர்களிலிருந்தே திறமையானவர்களை இஸ்லாத்தில் நுழைவிக்கச்செய்து அவர்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கானோரை முஸ்லீம்களாக மாற்ற வைப்பான் .
சமீபத்தில் ஈராக்கில் நிலைகொண்டுள்ள பண்ணாட்டுப் படையினரில் கொரிய ராணுவ வீரர்களில் 37 பேர் சத்திய இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாயினர் அல்லாஹ் பெரியவன். இறைவன் நாடினால் அந்த 37 பேர் மூலமாக 37 ஆயிரம் பேரை இஸ்லாத்திற்குள் கொண்டு வர வைத்து விடுவான்.
இதற்கு முன்பொரு முறை இதே பண்ணாட்டுப் படைகள் ரியாத்தில் முகாமிட்டிருந்தவர்களில் பலரை இஸ்லாத்தை புதிதாக ஏற்ற பிலால் பிலிப்ஸ் ( அபு ஆமினா ) அவர்கள் மூலமாக 3500 பேரை மாற்றி இறைவன் சாதனைப் படைத்தான்.
இஸ்லாம் வாளால் பரவியது என்ற அவதூரு பிரச்சாரம் செய்பவர்கள் மேற்கானும் சம்பவங்களை பார்த்து சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றனர்
மேற்கானும் இரண்டு சம்பவங்களும் ஆயுத தாரிகளாகிய வலிமை வாய்ந்த நேட்டோ படையினர்; என்பது குறிப்பிட தக்கது அவர்களிடம் இவர்கள் எந்த ஆயுதத்தைக் காட்டியும் மிரட்டி இஸ்லாத்திற்குள்; நுழைத்திருக்க முடியுமா ? முடியாது !
இஸ்லாம் உலகுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை அதனுடைய சகோதர சமத்துவக் காற்றை சுவாசித்து மனதால் எற்றுக் கொண்டவர்களே என்பதை இன்றைய கண்முன் நிகழும் சம்பவங்களைக் கொண்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.

Ahead of Iraq Deployment, 37 Korean Troops
Convert to Islam
I became a Muslim because I felt Islam was more humanistic and peaceful than other religions. And if you can religiously connect with the locals, I think it could be a big help in carrying out our peace reconstruction mission." So said on Friday those Korean soldiers who converted to Islam ahead of their late July deployment to the Kurdish city of Irbil in northern Iraq . At noon Friday, 37 members of the Iraq-bound "Zaitun Unit," including Lieutenant Son Hyeon-ju of the Special Forces 11th Brigade, made their way to a mosque in Hannam-dong, Seoul and held a conversion ceremony
The soldiers, who cleansed their entire bodies in accordance with Islamic tradition, made their conversion during the Friday group prayers at the mosque, with the assistance of the "imam," or prayer leader.
With the exception of the imam, all the Muslims and the Korean soldiers stood in a straight line to symbolize how all are equal before God and took a profession on faith.
They had memorized the Arabic confession, " Ashadu an La ilaha il Allah, Muhammad-ur-Rasool-Allah," which means, "I testify that there is no god but God (Arabic: Allah), and Muhammad is the Messenger of God."
Moreover, as the faithful face the "Kaaba," the Islamic holy place in Mecca , Saudi Arabia , all Muslims confirm that they are brothers.
For those Korean soldiers who entered the Islamic faith, recent chances provided by the Zaitun Unit to come into contact with Islam proved decisive.
Taking into consideration the fact that most of the inhabitants of Irbil are Muslims, the unit sent its unreligious members to the Hannam-dong mosque so that they could come to understand Islam. Some of those who participated in the program were entranced by Islam and decided to convert.
A unit official said the soldiers were inspired by how important religious homogeneity was considered in the Muslim World; if you share religion, you are treated not as a foreigner, but as a local, and Muslims do not attack Muslim women even in war.
Zaitun Unit Corporal Paek Seong-uk (22) of the Army's 11th Division said, "I majored in Arabic in college and upon coming across the Quran, I had much interest in Islam, and I made up my mind to become a Muslim during this religious experience period [provided by the Zaitun Unit]."
He expressed his aspirations. "If we are sent to Iraq , I want to participate in religious ceremonies with the locals so that they can feel brotherly love and convince them that the Korean troops are not an army of occupation but a force deployed to provide humanitarian support."
(englishnews@chosun.com)

முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் வசித்த இல்லம்

<
This is the house where prophet صلى الله عليه وسلم lived for 28 years


Syedah Khadeejah رَضِيَ اللَّهُHouse


The room of Prophetصلى الله عليه وسلمwith Syedah Khadeejah

Enterance of Prophet's صلى الله عليه وسلم room


Guest Room


The place where prophet صلى الله عليه وسلمprays

Birth place of Syedah Fatimah Zahra رَضِيَ اللَّهُ


House plane

thaks to : M.Abdul Rahman ,www.nidur.info

திங்கள், 26 ஜனவரி, 2009

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தினவிழா


சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 59வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுமு தலைவர் ''நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சி அடைகின்றது.


250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலவிய வெள்ளை ஏகாதிபத்திய ஆதிக்கத்தை இந்துக்கள் முஸ்­ம்கள் கிறிஸ்த்தவர்கள் சீக்கியர் என நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகம் செய்ததினால் முறியடித்து 1947ல் விடுதலைப் பெற்றோம். அத்தகைய ஒற்றுமை உணர்வும், நல்­ணக்கப் பண்பாடும் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.


குடியரசு தினம் நாம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பதை மீண்டும் பிரகடனம் செய்யும் தினமாகும். இத்தினத்தில் நாட்டின் இறையாண்மையை காக்கவும், நாட்டில் தீவிரவாத சிந்தனை வேரறுக்கப்படவும், அனைத்து சமூகங்களிடையே நல்­ணக்கம் மேலோங்கவும் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோமாக'' என்று அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியின் போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் எம். தமிமுன் அன்சாரி, அப்துஸ் சமது, மாநில உலமா அணிச் செயலாளர் எஸ்.பி. யூசுப், மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது மற்றும் வட சென்னை மற்றும் தென் சென்னை தமுமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் உரிமை குடும்பகத்தினர்களும் முன்னிலை வகித்தனர்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

short key : கூகிள் குரோம்

Ctrl+N Open a new window
Ctrl+Shift+N Open a new window in incognito (private) mode
Ctrl+T Open a new tab
Ctrl+Shift+T Reopen the last tab you’ve closed.
Press Ctrl, and click a link Open link in a new tab
Press Shift, and click a link Open link in a new window
Ctrl+Tab or Ctrl+PgDown Switch to the next
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp Switch to the previous tab
Ctrl+W or Ctrl+F4 Close current tab or pop-up
Alt+Home Open your homepage


Ctrl+B Toggle bookmarks bar on and off
Ctrl+H View the History page
Ctrl+J View the Downloads page
Shift+Escape View the Task manager


Ctrl+P Print your current page
Esc Stop page loading
Ctrl+F5 or Shift+F5 Reload current page, ignoring cached content
Ctrl+U View source
Ctrl+D Bookmark your current webpage
Ctrl++ Make text larger
Ctrl+- Make text smaller
Ctrl+0 Return to normal text size

thank to: tamilnenjam.org

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு

டெல்லி: மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு சமமாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசாக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், சிபிஎஸ்இ மாணவ, மாணவியருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளன.

உதாரணத்திற்கு மதரசாவில் ஒரு மாணவன் ஐந்தாவது வகுப்பு படிப்பதாக இருந்தால், அதே வயதுடைய சிபிஎஸ்இ மாணவன், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான்.

இதனால் மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மத்திய அரசு கூறப்பட்டு வந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை, சிபிஎஸ்இ சான்றிதழ்களுக்கு நிகராக மதிப்பிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதரசாக்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிகரான அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அகமது சிராஜ் என்ற 13 வயது மாணவன் டெல்லி சாந்தினி சவுக் மதராசாவில் 5ம் வகுப்பு படிக்கிறார். ஆனால் மற்ற பள்ளிகளில் பயிலும் இவன் வயதுடைய மாணவர்கள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிராஜ் இன்னும் மூன்று ஆண்டுகளில் கல்லுரியில் சேர வேண்டும். ஆனால் இவர் இதுவரை மத புத்தகங்களை மட்டுமே படித்துள்ளார். கல்லுரியில் தான் முதன்முறையாக ஆங்கிலம் மற்றும் கணிதத்தை படிக்க இருக்கிறார்.

இவரது சீனியர்கள் பலரும் உருது மற்றும் யுனானி கற்று வருகின்றனர். ஆனால் தான் வித்தியாசமாக சமஸ்கிருதம் படிக்க போவதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரபி மொழியை பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது போல தான் சமஸ்கிருதமும். அடுத்து சமஸ்கிருதம் படிப்பேன். சிபிஎஸ்இயின் அறிவிப்பு எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார் சிராஜ்.

ஜெய்சுமுதீன் என்பவர் கூறுகையில், அரசின் முடிவால் தற்போது எங்களால் டாக்டர் மற்றும் என்ஜீனியர்களாக முடியும். பிபிஓக்களிலும் வேலை பார்க்க முடியும் என்றார்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், தேவைப்பட்டால் மதரசா மாணவர்களுக்கு பாடங்களை அடிப்படையிலிருந்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

இஸ்லாம் பார்வையில் "கோபம்"

அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)


அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். ”(அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூதர் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” (மிஷ்காத்)



அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி)
thanks to : அமைதி ரயில்

இஸ்லாம் பார்வையில் "தற்பெருமை"

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்

அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)

அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நான் அண்ணல் நபி அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)


அறிவிப்பாளர்: இப்னு உமர்

ண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )”

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள். (புகாரி)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்

அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

thanks to : அமைதி ரயில்

புதன், 21 ஜனவரி, 2009

சிறுபான்மையினருக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்!


வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்கள் நடத்த உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு நிதி உதவியுடன் அக்கௌண்டிங் சாப்ட்வேர் (டாலி), எம்.எஸ். வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட் ஆகியவற்றில் 3 மாத காலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்கு மேல் படித்திருப்பின் அதற்குரிய நகல், வருமான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை வெள்ளைத் தாளில் எழுத வேண்டும். எந்தப் பயிற்சியில் சேர்ந்து பயில வேண்டும் என்பதை குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தின் மேல் பகுதியில் மற்றும் அஞ்சல் தபாலில் குறிப்பிட வேண்டும்.

பயிற்சி பெற விரும்புபவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு ஜன.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



நன்றி: தினமணி

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

எட்டு வயது சிறுவனால் என்ன செய்ய முடியும்?


சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்? நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை அப்படி என்ன சாதனை செய்து விடப்போகிறது என அலட்சியமாக நினைக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அவர்களின் வளரும் வயதிலேயே அவர்களுக்குள் ஒளிந்துள்ள திறமையை இனம் கண்டு, அதில் போதிய பயிற்சியைக் கொடுத்தால், சாதிப்பதற்குச் சாதனை வயது என ஒன்று தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் எட்டு வயதான அமன் ரஹ்மான்.


ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு. அதனை இனம் காண வேண்டியது பெற்றோர்களின் கடமை. தலைக்கு மேல் வளர்ந்தாலும் அவன்/அவள் எங்களுக்குச் சிறு குழந்தை தான் என பெற்றோர்கள் கூறுவது வழக்கம். இதனை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களை அந்தத் தரத்திலேயே வளர்க்கவும் செய்கின்றனர். இதற்கு படித்தவர்கள், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை.

இதற்கு மாற்றாக ஆங்காங்கே சிலர் மட்டும், மிகச் சரியாக தங்களின் குழந்தைகளின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை அவர்களின் விருப்பத்துறையில் சரியாக திருப்பி விடுகின்றனர். இவ்வாறு தூண்டுதலைச் சரியான திசை நோக்கிக் கொடுக்கும் பொழுது, மிகக் குறுகிய காலத்திலேயே அக்குழந்தைகள் தமது துறையில் பிரகாசிக்கத் துவங்கி விடுகின்றனர். இதற்கான மற்றொரு உதாரணமே அமன் ரஹ்மான்.

இவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் படங்களுக்கான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று சர்வதேச அளவில் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளார். வட இந்தியாவின் உத்தராகந்த் மாநிலத்தின் தெஹ்ராடனைச் சேர்ந்தவரான இந்த எட்டு வயது சுட்டி, இப்போது பெரியவர்களுக்கு அனிமேஷன் கற்றுக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களை அமன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், கின்னஸ் புத்தகத்தில் "இளம் வயது சாதனையாளர்கள்" பட்டியலில் இடம் பெற முயற்சிகள் செய்து கொண்டுள்ளார்.

எட்டு வயதிலேயே தெஹ்ராடனில் உள்ள கலைக் கல்லூரியில் பயிற்சியாளராக உள்ள அமன் ரஹ்மான், மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை படிப்பறிவற்றவர்; ஸ்கூட்டர் மெக்கானிக்காக உள்ளார். நான்கு குழந்தைகளுள்ள அமன் ரஹ்மானின் தந்தைக்கு இவர் நான்காவது பிள்ளை.

தெஹ்ராடன் பகுதியில் "லிட்டில் பில் கேட்ஸ்" என்று யாராவது கேட்டால் அவர்களின் கையைப் பிடித்து அமன் ரஹ்மான் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் அங்குள்ள மக்கள்.

மூன்று வயது முதலே கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் அமன் ரஹ்மானுக்கு அதிகரித்து விட்டதெனக் கூறுகிறார் இவரின் தாயாரான ஷப்னம் ரஹ்மான். பெரிய மகனுக்காக சிரமப்பட்டு வாங்கி வந்த பழைய கம்யூட்டர் ஒன்றில், அடிக்கடி அமர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வாராம் அமன் ரஹ்மான். இதைக் கண்ணுற்ற உறவினர்களும் நண்பர்களும் அமன் ரஹ்மானை கம்ப்யூட்டர் வல்லுனர்களிடம் சென்று பயிற்சி பெற பெற்றோர்களைத் தூண்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இண்டராக்ட்டிவ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற கல்லூரி சென்று தன் மகனைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அமன் ரஹ்மானின் தந்தை. அமனைப் பரிசோதித்து வியந்த கல்லூரி நிர்வாகம் அவரது கல்விக்காக ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்து கொடுத்தது. கல்லூரியில் இணைந்த ஒரே மாதத்தில் அமன் ரஹ்மான் எழுதிய கம்யூட்டர் புரோக்ராம் ஒன்று அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. காரணம், கணினி வல்லுனர்களால் பதினைந்து மாதங்கள் கால அவகாசம் எடுத்து எழுதக் கூடிய நிரல் துண்டினை ஒரே மாதத்தில் உருவாக்கியிருந்தார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி மாநில அரசு இவருக்கு லேப்டாப் ஒன்றும், ஒரு இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து ஊக்குவித்துள்ளது.

அத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இளம் வயது சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருக்கிறார் அமன் ரஹ்மான். இதில் தமக்குக் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.

அமன் ரஹ்மானின் திறமையைக் கேள்விப்பட்ட உடனேயே, ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று அவரை ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறது. தமது குடும்பத்தினரோடு சேர்ந்து இதனை மறுத்துள்ள அமன் ரஹ்மான், தமது சேவை இந்தியாவிற்கு உதவிடும் வகையில் தாம் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்புவதாகக் கூறியுள்ளார்.

ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அமன் ரஹ்மான் போன்ற இளம் விஞ்ஞானிகளை அலட்சியப் படுத்தி ஒதுக்கிவிடாமல் இனம் கண்டு, தகுந்த பயிற்சியும் முறையான உதவிகளையும் செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதோடு வளரும் குழந்தைகள், அவர்கள் விரும்பும் துறை எது என்பதைச் சரியாக இனம்கண்டு அதன்பால் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பெற்றோர்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
thanks to : சத்தியமார்க்கம்

சனி, 17 ஜனவரி, 2009

உங்கள் கைத்தொலைபேசிகள் ஒரிஜினலா



உங்கள் கைத்தொலைபேசிகள் ஒரிஜினலா என்று கண்டு பிடியுங்கள்

Type *#06#

15 இலக்க எண்களை காட்டும்.
உதாரணமாக:

43 4 5 6 6 1 0 6 7 8 9 4 3 5

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 02 or 20 என இருந்தால் தொலைபேசி ஐக்கிர அரபு எமிரேட்டில் தயாரிக்கப்பட்டது. தரம் குறைந்த போன்.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 08 or 80 என இருந்தால் தொலைபேசி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை ரகம்.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 01 or 10 என இருந்தால் தொலைபேசி பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. தரம் வாய்ந்தது.

அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 00 என இருந்தால் தொலைபேசி பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மிகச்சிறந்த தொலைபேசியாகும்.

வியாழன், 15 ஜனவரி, 2009

பாஸ்வேர்டை பராமரிக்க இலவச மென்பொருள்

பாஸ்வேர்டை பராமரிக்க இலவச மென்பொருள்

இந்த மென்பொருட்களின் உதவியுடன் எந்தத்தளங்களில் என்ன username, என்ன password பயன்படுத்துகிறோம் என்பதை ஒரு Database பதிவு செய்யவேண்டும்.

What is KeePass?Today you need to remember many passwords. You need a password for the Windows network logon, your e-mail account, your homepage's FTP password, online passwords (like website member account), etc. etc. etc. The list is endless. Also, you should use different passwords for each account. Because if you use only one password everywhere and someone gets this password you have a problem... A serious problem. The thief would have access to your e-mail account, homepage, etc. Unimaginable.

KeePass is a free open source password manager, which helps you to manage your passwords in a secure way. You can put all your passwords in one database, which is locked with one master key or a key file. So you only have to remember one single master password or select the key file to unlock the whole database. The databases are encrypted using the best and most secure encryption algorithms currently known (AES and Twofish). For more information, see the features page.


Is it really free?
Yes, KeePass is really free, and more than that: it is open source (OSI certified). You can have a look at its full source and check whether the encryption algorithms are implemented correctly.

As a cryptography and computer security expert, I have never understood the current fuss about the open source software movement. In the cryptography world, we consider open source necessary for good security; we have for decades. Public security is always more secure than proprietary security. It's true for cryptographic algorithms, security protocols, and security source code. For us, open source isn't just a business model; it's smart engineering practice.
Bruce Schneier, Crypto-Gram 1999/09/15

http://keepass.info/

புதன், 14 ஜனவரி, 2009

இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள்...

அழகான வீடியோ எடிட்டிங்கை எளிமையாகச் செய்து முடிக்க உதவும் அற்புதமான மென்பொருள் இது. வீடியோ சேர்ப்பு , நீக்கு , புகைபட வெட்டு , ஒட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிடும். வீடியோவில் தலைப்பு வேலைகளையும் இதன்மூலம் செய்யலாம்.

To download these Pinnacle Video Editing Software please Right click the word Download and select "Save Target As"Direct download link click herehttp://cdnexpress.pinnaclesys.com/akdlm/cdn/videospin/1_1/videospin_1_1_setup.எெ

திங்கள், 12 ஜனவரி, 2009

திருக்-குர்ஆன் -அத்தியாயம்-1

அத்தியாயம்-1
அல்ஃபாத்திஹா - தோற்றுவாய்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1;:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.