பீகார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீகார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கன்னியாஸ்திரிகளை கடத்தி வன்புணர்வு!

பேருந்துக்கு காந்திருந்த கன்னியாஸ்திரிகளை கடத்தி வன்புணர்வு செய்த 'ஜர்கண்ந்த் சிறப்பு காவலர்' உட்பட நான்கு பேரை தேடி வருகிறார்கள் பிகார் காவல் துறையினர்। பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தில் உள்ள மோகனியா காவல் வட்டத்தில் உள்ள 'ஜர்கண்ந்த் சிறப்பு காவலர்'' இந்த வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். "இரவில் பேருந்துக்கு காந்திருந்த கன்னியாஸ்திரிகளை ஒரு கும்பல் கடத்தி ஆளில்லாத இடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர். அதில் ஒருவர் ' 'ஜர்கண்ந்த் சிறப்பு காவல்துறையை' சேர்ந்த ரஞ்சித் சிங் ஆவார். மற்றவர்கள் தர்மேந்திரா ராம், ராகேஷ் சாஹு மற்றும் பாரு குப்தா ஆவார்கள். இவர்களின் மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்துள்ள புகாரின் பேரின் இந்திய ஃபினல் சட்டப்படி எஃப்.ஐ.ஆர். சம்பந்த பட்ட வழுக்குக்ளின் அடிப்படையில் பதிவு செய்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது" என டி.எஸ்.பி பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.


திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பீகாரில் முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தர தயார்- பாஸ்வான்

பாட்னா,ஆக30:பீகாரில் அடுத்த தேர்தலில் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.

பாஸ்வான்,தனது சகோதரர் பசுபதி குமார் பரஸை துணை முதல்வர் பதவியில் அமர்த்தப் பார்க்கிறார்.தங்களது கூட்டணி வென்றால் முஸ்லிமுக்கு முதல்வர் பதவி என அறிவித்த பாஸ்வான் இப்போது அதுபற்றியே பேசாமல், துணைமுதல்வர் பதவியையும் தனது சகோதரருக்கே கொடுத்திட போராடிவருகிறார் என ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன.

இந்நிலையில் நிருபர்களிடம் சனிக்கிழமை பாஸ்வான் கூறியதாவது: "எங்களது கூட்டணி தேர்தலில் வென்றால் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது பற்றி பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். பீகாரிலும் பிற இடங்களிலும் உள்ள முஸ்லிம்கள் முன்னேற்றம் காண எங்களது கூட்டணி அயராது பாடுபடுகிறது என்றார்" பாஸ்வான்.

புதன், 7 ஜூலை, 2010

முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி

பாட்னா தனது சமூகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக பீகாரை சேர்ந்த ஜீஷான் அலி என்ற மாணவி 'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனமான USIEF இப்பட்டத்தை ஜீஷான் அலிக்கு வழங்கவுள்ளது.இப்பட்டத்தை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி பெறுவது இதுவே முதன் முறையாகும்.

"இச்செய்தியை கேட்டதும் நான் வியப்படைந்தேன், அளவு கடந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன், நான் உண்மையாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன்" பாட்னா பல்கலைகழக Ph.D மாணவி ஜீஷான் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

USIEFன் முழுத்திறன் அந்நிய மொழி கற்பித்தல் உதவியாளர் (FLTA) என்ற திட்டத்தின் மூலம் இவர் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 21-29 வயதுள்ள இந்தியர்கள் தற்போது கல்லூரிகளில் ஆங்கில ஆசிரியராகவோ அல்லது ஆங்கில ஆசிரியராக பயிற்சி எடுப்பவராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அவர்களின் 9 மாத அமெரிக்க கல்லூரி வாழ்க்கையில் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி அல்லது உருது சொல்லித்தர வேண்டும்.

இப்போட்டியில் சுமார் 150 நாடுகளிலிருந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஆனால் 60 நாடுகளை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மவ்லானா ஜாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஜீஷான் அலி, இத்திட்டத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிப்பார். இது தவிர, அமெரிக்காவிற்கான கலாச்சார தூதராகவும் பதவி வகிப்பார். இது தொடர்பாக, ஜூலை இறுதியில் இவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.

பீகாரில் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமல்படுத்துகிறார் நிதீஷ்குமார்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் குற்றச்சாட்டு

பாட்னா:ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரகசிய கொள்கைகளை முதல்வர் நிதீஷ்குமார் பீகாரில் அமல்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் துணைத் தலைவர் ஷகீல் அகமது கான், பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் முதல்வர் நிதீஷ்குமார் ஆட்சி நடத்தி வருகிறார்.

தற்போது, அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரகசிய கொள்கைகளை பீகாரில் அமல்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை பீகார் அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

உருது ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'இந்தியா அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் 7,256 வீடுகளைக் கட்டும் திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு தவறி விட்டது. இதனால், சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ஆட்சியில்,35 ஆயிரம் உருது ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால்,அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் காலியாக உள்ள பணியிடங்களில் 5 ஆயிரம் உருது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மேற்கு வங்க அரசும், கேரள அரசும் 400 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளன. ஆனால், பீகார் அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றார் ஷகீல் அகமது கான்.

புதன், 28 ஜனவரி, 2009

மதரஸா மாணவிகளுக்கு இலவச சைக்கிள்! மாநில அரசு அறிவிப்பு!!


அன்சா தஸ்னீம்
மதரஸாக்கள் மக்களின் அறியாமை இருளை அகற்றி ஆன்மீக வெளிச் சத்தை வழங்கி வருகின்றன. அத்தோடு உலகக் கல்வியிலும் மதரஸாக்களின் பங்கு மகத்தான ஒன்றாக விளங்கி வருகிறது.

மதரஸாக்கள் அனைத்து சமூக மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கி சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்­ம் மாணவர்களை விட அதிகமாக ஹிந்து சமய மாணவ. மாணவிகள் மதரஸாக்களில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர் என்பது அண்மையில் நாம் ஊடகங்களில் பார்த்த செய்தியாகும்.


இந்நிலையில் பீகார்மாநில மதரஸாக் களில் மேல்நிலைக் கல்வியை கற்று வரும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிட பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது.


பீகார் மாநில அரசு 1,119 மதரஸாக் கல்விக் கூடங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி 4000 மதரஸாக் கல்விக் கூடங்களின் (அரபிக் கல்லூரிகள் உட்பட) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளையும் பீகார் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. (தமிழக அரசு கவனிக்க)

2,359 மதரஸாக்கள் அரசு உதவி யின்றி நடைபெறுகின்றன.

576 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவியின்றி நடைபெறும் கல்வி நிறுவனங்களாகும்.

32 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவி பெறும் கல்விக் கூடங்களாகும். இந்தக் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் 4000 மாணவிகள் மாநில அரசின் அறிவிப்பின் மூலம் இலவச சைக்கிள் பெறுவார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மதரஸா மாணவிகளின் பட்டியல்களை தயார் செய்து வருகின்றனர். இத்தகவலை மதரஸா வாரிய சேர்மன் இஜாஸ் அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.
thanks to: tmmk.in