புதன், 28 ஜனவரி, 2009

மதரஸா மாணவிகளுக்கு இலவச சைக்கிள்! மாநில அரசு அறிவிப்பு!!


அன்சா தஸ்னீம்
மதரஸாக்கள் மக்களின் அறியாமை இருளை அகற்றி ஆன்மீக வெளிச் சத்தை வழங்கி வருகின்றன. அத்தோடு உலகக் கல்வியிலும் மதரஸாக்களின் பங்கு மகத்தான ஒன்றாக விளங்கி வருகிறது.

மதரஸாக்கள் அனைத்து சமூக மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கி சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்­ம் மாணவர்களை விட அதிகமாக ஹிந்து சமய மாணவ. மாணவிகள் மதரஸாக்களில் சேர்ந்து பயன்பெற்று வருகின்றனர் என்பது அண்மையில் நாம் ஊடகங்களில் பார்த்த செய்தியாகும்.


இந்நிலையில் பீகார்மாநில மதரஸாக் களில் மேல்நிலைக் கல்வியை கற்று வரும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிட பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது.


பீகார் மாநில அரசு 1,119 மதரஸாக் கல்விக் கூடங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி 4000 மதரஸாக் கல்விக் கூடங்களின் (அரபிக் கல்லூரிகள் உட்பட) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளையும் பீகார் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. (தமிழக அரசு கவனிக்க)

2,359 மதரஸாக்கள் அரசு உதவி யின்றி நடைபெறுகின்றன.

576 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவியின்றி நடைபெறும் கல்வி நிறுவனங்களாகும்.

32 பெண்கள் மதரஸாக்கள் அரசு உதவி பெறும் கல்விக் கூடங்களாகும். இந்தக் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் 4000 மாணவிகள் மாநில அரசின் அறிவிப்பின் மூலம் இலவச சைக்கிள் பெறுவார்கள்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மதரஸா மாணவிகளின் பட்டியல்களை தயார் செய்து வருகின்றனர். இத்தகவலை மதரஸா வாரிய சேர்மன் இஜாஸ் அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.
thanks to: tmmk.in

கருத்துகள் இல்லை: