இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 21 ஜனவரி, 2009
சிறுபான்மையினருக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்!
வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்கள் நடத்த உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இரா. வாசுகி தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு நிதி உதவியுடன் அக்கௌண்டிங் சாப்ட்வேர் (டாலி), எம்.எஸ். வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட் ஆகியவற்றில் 3 மாத காலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள், மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அதற்கு மேல் படித்திருப்பின் அதற்குரிய நகல், வருமான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை வெள்ளைத் தாளில் எழுத வேண்டும். எந்தப் பயிற்சியில் சேர்ந்து பயில வேண்டும் என்பதை குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தின் மேல் பகுதியில் மற்றும் அஞ்சல் தபாலில் குறிப்பிட வேண்டும்.
பயிற்சி பெற விரும்புபவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு ஜன.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக