செவ்வாய், 31 மார்ச், 2009

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்

சி.எம்.என். சலீம்

நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை நிர்ணயிப்பது, அவர்களுக்கு சின்னம் வழங்குவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச் சாவடிகளை கண்காணிப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, தகுதியிழக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் பரிந்துரைப்பது, அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்புதான் பொறுப்பு. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் வாழும் 110 கோடி மக்களை ஆளுகின்ற வர்க்கத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தேவை ஏற்படின் இடையில்) தேர்வு செய்ய அரசியல் சாசன சட்டம் 324ன் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சிப் பெற்ற அமைப்புதான் இந்த இந்தியத் தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகஷீமீ பட்டியலைப் பார்ப்போம். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இது வரையில் பொறுப்பில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

1. சுகுமார் சென் - 1950 - 1958
2. கே.வி.கே.. சுந்தரம் - 1958 - 1967
3. எஸ்.பி. சென் வர்மா - 1967 - 1972
4. டாக்டர் நாகேந்திர சிங் - 1972 - 1973
5. டி. சாமிநாதன் - 1973 - 1977
6. எஸ்.கே. ஷாக்தார் - 1977 - 1982
7. ஆர்.கே. திரிவேதி - 1982 - 1985
8. ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி - 1986 - 1990
9. வி.எஸ். ரமாதேவி - 1990 நவ26 - டிச 26வரை.
10. டி.என். சேசன் - 1990 - 1996
11. எம்.எஸ். கில் - 1996 - 2001
12. ஜே.எம். லிங்டோ - 2001 - 2004
13. டி.எஸ். கிருட்டிணமூர்த்தி - 2004 - 2005
14. பி.பி. டாண்டன் - 2005 - 2006
15. என். கோபாலசாமி - 2006 - இன்று வரை

நாடு விடுதலை பெற்று 61 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளில் இதுவரையிலும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக உஷீமீள முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர்
கூட நியமிக்கப்படவில்லையே ஏன்? இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கு ஏற்ற தகுதி மிக்கவர்களாக முஸ்லிம் சமூகத்தவர் போதுமான அளவில் இருந்தும் மத்திய அரசின் உயர் பதவிகளில் கூட நியமிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு அதிர்ச்சித் தகவலும் உண்டு. மத்திய அரசின் துறை வாரியான செயலகங்கள் மொத்தம் 83. இதில் தற்போது செயலர்களாக இருப்பவர்களில் ஒரு முஸ்லிமையும் நியமிக்கவில்லை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் இடம் பெற வேண்டும். அப்படி இடம் பெற்றால் தான் அது ஒரு முழுமை பெற்ற ஜனநாயகமாகத் திகழும். தேசிய நீரோட்டத்தில் பங்களிப்பு செளிணியாத எந்த சமூகமும் காலப் போக்கில் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அத்தகைய நிலையில் தான் இன்றைய முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம்கள் கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


இனி வருங்காலங்களில் இது போன்ற நிலையிலிருந்து மாற வேண்டும். இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் வேட்கையையும் இளம் உள்ளங்களில் விதைத்திட வேண்டும். அவர்களுக்கு வழிக்காட்டிட வேண்டும். அதை இந்தச் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தான் செய்ய வேண்டும்.

இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் நீதிபதி வஹாப்

சென்னை: ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ த‌லைவ‌ராக‌ நீதிய‌ர‌ச‌ர் அப்துல் வ‌ஹாப் தேர்வு செய்யப்பட்டார்.

ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ராக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ நீதிய‌ர‌ச‌ர் அப்துல் வஹாப் அவ‌ர்க‌ளுக்கு பொதுச்செய‌லாள‌ர் சேமுமு முஹ‌ம்ம‌த‌லி பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார்.

பொருளாள‌ர் ஏ.வி.எம். ஜாப‌ர்தீன், சென்னை புதுக்க‌ல்லூரி பேராசிரிய‌ர் முனைவ‌ர் ஹ‌.மு.ந‌த்த‌ர்ஷா, ஆலிமான் ஜியாவுத்தின் ம‌ற்றும் க‌ழ‌க‌த்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்றைக்குள் இறுதி முடிவு - மனித நேயக் கட்சி

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சி புதிதாய் பிறந்த மனித நேய மக்கள் கட்சி. தங்களுக்கு 6 சீட்டுக்கு ஒரு சீட் கூட குறையாமல் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு விலகி விடுவோம் என அக்கட்சி கூறியிருந்தது.

ஆனால் ஒரு சீட்டுக்கு மேல் ஒரு சீட் கூட ஒதுக்க முடியாது என திமுக கூறி விட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கே திமுக ஒரு சீட்தான் ஒதுக்கியுள்ளது.

மனித நேயக் கட்சி தங்களுக்கு கூடுதலாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நேரத்தில் தொகுதிப் பங்கீட்டை முடித்து அதை அறிவித்தும் விட்டார் கருணாநிதி.

இதனால் மனித நேய மக்கள் கட்சி அதிர்ச்சி அடைந்தது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் அக்கட்சித் தலைவர்கள் உள்ளனர்.

நேற்று மாலை ஐந்தரை மணிக்கு கட்சியின் நிலை குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இரவு வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பின்னர் இது குறித்து கட்சியின் மாநில துணை பொது செயலாளர் அன்சாரி கூறுகையில், காலையில் இருந்து எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவினர் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்ட தலைவர்களிடமும் கட்சியின் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.

இன்றைக்குள் இறுதி முடிவை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அன்சாரி தெரிவித்தார்.

மனித நேயக் கட்சி திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும். அங்கேயே இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் குறைந்தது 2 சீட்களாவது தர வேண்டும் என கோரி வருகிறதாம் மனித நேய மக்கள் கட்சி.

திங்கள், 30 மார்ச், 2009

தேர்தல் நிலைபாடு குறித்த மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை கூட்டம்

தமுமுக தலைமையகத்தில் இன்று காலை 11 மணியிலிருந்து தேர்தல் நிலைபாடு குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை கூட்டம் நடைபெற்று வருகிறது.


கூத்தாநல்லூர் மக்களே சிந்தியுங்கள் ! வாக்களியுங்கள்




அல்லாஹுடைய மஸ்ஜிதை நிர்வகிக்கக்கூடிய தகுதியை பற்றி அல்லாஹுதால தன் திருமறையில் கூறிய வசனங்கள்

இன்ஷா அல்லாஹ் இப்போது தான் நமது ஊருக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதை நாம் சரியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

நல்ல ஒரு தலைமை நமதூருக்கு வரவேண்டும் என்று பலருக்கு விருப்பம் இருப்பினும் அதற்க்கான முயற்சியை சிலர் நல்ல முறையில் செய்தார்கள், கண்டிப்பாக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றோம்.

இன்னும் இந்த நிர்வாக குழுவில் பாதி பெரியவர்களும் பாதி இளைஞர்களும் இருந்தால் கண்டிபாக அது அடுத்த தலைமுறைகளை உருவாக்க உதவியாக இருக்கும்.

அனுபவமுள்ள பெரியவர்கள் தங்கள் கீழ் உள்ள இளைஞர்களுக்கு தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்ல முறையில் ஜமாஅத்- எந்த பிரச்னையும் இன்றி வழி நடத்த இறைவன் நமக்கு உதவி செய்வான்.

கூத்தாநல்லூர் மக்களே! தயவு செய்து அரசியல்வாதிகளையும், பெருமைகுரியவரையும், பதவி ஆசை கொண்டவரையும் ஜமாஅத் நிர்வாகத்தில் நீங்களே அமர்த்தி விடாதீர்.....

உங்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று, அவர்களுக்கு நீங்கள் நல்ல முறையில் வாக்களித்து நல்ல ஒரு தலைமையை நமதூருக்கு உருவாக்கி தருவதில் உங்களுக்கு பெரும்பான்மையான பங்கு உண்டு.

நாளை மறுமையில் நாம் அல்லாஹ்-விடம் நல்ல ஒரு தலைமையை உருவாக்கி கொடுத்தவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இந்த தேர்தலில் நல்ல ஒரு முடிவை கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கே!

நாம் அல்லாஹ்-வின் வசனத்தை ஏற்று கொண்டு நடக்கவில்லை என்றால் நமக்கும் ஈமான் இல்லாதவருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

இது அல்லாஹுடைய பள்ளிவாசல் இதை நிர்வகிக்க அரசியல் தெரிந்தவர்கள் தேவை இல்லை, மார்க்க அறிவும், பொது அறிவும், ஈமானும், பொறுமையும் வேண்டும்...

உமர் (ரலி) அவர்கள் கூறுகையில், எவர் ஒருவர் மார்க்கத்தை மட்டும் விளங்கி கொண்டு, உலக விஷயம் தெரியவில்லையோ அவர் நம் வரலாற்றை அழித்து விடுவார் என்று நான் அஞ்சிகிறேன்.

கூத்தாநல்லூர் மக்களே! நமதூர் பள்ளியில் பயான் நடக்க வேண்டும், மாறாக கட்சி கூட்டம் நடந்து விட கூடாது.

நாம் கேள்வி பட்டிருக்கின்றோம் "ஜெயலலிதா பிறந்த நாள் பள்ளிவாசலில் கொண்டாட்டம்"

இது போல் நமதூரில் இனி நடந்து விடக்கூடாது, தவறுகளை தடுப்பது முஸ்லிம்களின் கடமை...

நாம் ஒரு பொருள் வாங்குவதென்றலும் அதன் தரம், திடம், கம்பெனி பெயர், ஆயுள் காலம் போன்றவற்றை பார்த்து நாம் வாங்குகிறோம்....
நம்மை வழி நடத்த கூடிய ஒரு அழகான தலைமையை உருவாக்க நாம் இது போன்றவற்றை கவனிக்க மறந்து விட கூடாது....

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் நல்ல ஒரு தலைமை உருவாக அல்லாஹ்-விடத்தில் தொழுது துஆ செய்வோம்....

அல்லாஹ் நமக்கு நல்ல தலைமையை கொடுத்து நல்ல வழி காட்டுவானாக!


எங்களுக்கு தெரிந்த சில தகுதிகள் இறைவன் கூறிய தகுதிகளுடன்

சிறியவர் முதல் பெரியவர் வரை ல் நல்ல ஆலோசனைகளை பொறுமையாக கேட்டு செயல்படுபவராகவும்

ஏழை, பணக்காரன், நண்பன், உறவினர், குடும்பம் என் பாரபட்சம் பார்க்காமல் நியாயமான தீர்ப்பு வழங்குபவராகவும்

மக்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில் உறுதுனையாக இருந்தவரையும், இருப்பவரையும்

அவசர, ஆபத்து காலங்களில் உறுதுனையாக இருந்தவராகவும், இருப்பவராகவும்

ஊர் மக்களின் சகல விதமான பிரச்சனைகளிலும் உறுதுனையாக இருந்து பாதுகாப்பு அளிக்க கூடியவராகவும்

சொத்து பிரிவினை, விவாகரத்து (தலாக்) நிர்வாகம் முதலியவற்றில் மார்க்க அறிவும் பொது அறிவும் உடையவராகவும்

மார்க்க விரோத காரியங்கள் செய்யதவராகவும், மோசடி செய்யதவராகவும்

ஊரிலயே தங்கி செயல்படுபவராகவும்

மக்களின் நம்பிகைக்குரியவரகவும், ஊரில் அவப் பெயர் பெறாதவரகவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடு படாதவராகவும், மிக மிக முக்கியமாக பொது வாழ்வில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்

அரசியல் வாதிகளை தேர்ந்தெடுத்து ஜமாத்தை அரசியல் ஆக்கி விடாதிர்கள், வாக்களிக்கும் விஷயத்தில் நண்பர்கள், உறவினர்கள், இயக்ககாரர்கள் கூறுவதை விட்டு அல்லாஹ் கூறிய படி ஊர் நலனுக்காக நன்கு யோசித்து நல்லவர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104



தலைமை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறுகையில்....

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் / இருக்க கூடாத பண்புகள்

மேலும் படிக்க இதை கிளிக் செய்யவும்.....

http://koothanallurmuslims.blogspot.com/2009/02/blog-post.html

நன்றி
கூணன் முஹம்மது பாரூக்
சேவுராய் நூர் முஹம்மது ( ஆரிப் )

சிறைக் காவலரின் மனமாற்றம்! இஸ்லாத்தில் சரணடைந்தார்!!


டெர்ரி ஹோல்டுப்ரூக்ஸ்!

குவாண்டனமோ சிறைச்சாலையின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். அதற்குமுன் சில காலம் அமெரிக்க இராணுவத்தில் சிறப்பு வீரராகப் பணிபுரிந்தவர். குவாண்டனமோ சிறைக்கைதி எண் 590 அஹ்மதிடம் உரையாடும் நிமிடம்வரை இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை அறியாதவர். அல்லது இஸ்லாத்தைப் பற்றி தவறான விளக்கம் கொடுக்கப்பட்டவர்.

2004இல் குவாண்டனமோ சிறைச்சாலை பணிக்கு நியமிக்கப்பட்ட இவர், சிறைக் கைதிகளை அவரவர் அறைகளில் இருந்து வெளியேற்றி, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்தார். தவிர, சிறைச்சாலையின் அறைகளுக்குள் கைதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதையும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதையும் தடுக்கும் கூடுதல் பொறுப்பிலும் இருந்தார்.


இத்தகைய பணியின் காரணமாக டெர்ரிக்கு, பெரும்பாலும் கைதிகளின் அசைவுகளை நுணுக்கமாக கவனிக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. பொழுது போக்கிற்காக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள கைதிகளிடம் வெளியில் நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். இத்தகைய சூழலில்தான் மொராக்கோவைச் சேர்ந்த அஹ்மது இராக்கிதி என்ற (எண் 590) கைதியுடன் உரையாடும் வாய்ப்பும் அவருக்கு அதிகமாகக் கிடைத்தது


அதிகமாகக் கிடைத்தது.
மனமாற்றத்தை ஏற்படுத்திய சிறைக்கைதி அஹ்மது!
பயங்கர சித்ரவதைகள் அரங்கேறும் குவாண்டமோ சிறைச்சாலையில் அத்திப்பூத்தாற் போன்று அபூர்வமாக ஒரு சில சிறைக் காவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர் என்கிறார் அஹ்மது.

சில காவலர்கள், இரவில் தனிமையைப் போக்க, தமது நேரங்களைக் கழிக்க, தூக்கத்தை விரட்ட இத்தகைய பரஸ்பர உரையாடல்களைக் கைதிகளுடன் நடத்துகின்றனர். அரசியல், மதம், இசை மற்றும் பொதுவான தலைப்புகளில் இத்தகைய உரையாடல்கள் நடைபெறும் - நியூஸ்வீக் பத்திரிகைக்கு தமது மொராக்கோ இல்லத்திலிருந்து இ-மெயில் மூலம் எழுதிய மடலில் அஹ்மது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்நாளில் ஐந்து வருடங்கள் குவாண்டனமோ சிறையில் கழித்த அஹ்மது கடந்த 2007 இல் விடுதலை செய்யப்பட்டார்.

அஹ்மது கலந்துரையாடிய சில சிறைக் காவலர்கள் இஸ்லாம் பற்றிய அடிப்படை உண்மைகளை அறிந்து வியப்பிலாழ்ந்திருந்தாலும் எவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தனது வியப்பிலிருந்து மாறாத ஹோல்டுப்ரூக்ஸ் மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிக் கொண்டேயிருந்தார்.

"டெர்ரியிடம் காணப்பட்ட இத்தகைய ஆர்வமும் உண்மையினை அறிந்த மாத்திரத்தில் ஏற்றுக்கொண்ட துணிவுமே அவர் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தினைக் தழுவக் காரணமாய் இருந்தது" என்கிறார் அஹ்மது.

பல்வேறு பொதுவிஷயங்களைப் பற்றி பேசினாலும், இஸ்லாம் பற்றிய விபரங்களை சிறைக்கைதி அஹ்மத் கூறக் கூற வியப்பிலாழ்ந்து போனார் டெர்ரி. ஏனெனில் அன்றுவரை தாம் கேள்விப் பட்டிருந்த இஸ்லாமும், அஹ்மத் கூறிய இஸ்லாமும் முற்றிலும் மாறுபட்டிருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இது பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உடனடியாக இஸ்லாம் தொடர்பான அனைத்து அரபிப் புத்தகங்களையும் மொழி பெயர்ப்புகளையும் வரவழைத்துப் படிக்கத் துவங்கினார்.

இடையிடையே தமக்குத் தோன்றும் கருத்துக்களையும் சந்தேகங்களையும் அஹ்மதிடம் அடுத்தடுத்த இரவுகளில் பகிர்ந்து கொள்வார். அதில் எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தொடர்புடைய புத்தகங்களையும் தேடிப் படிக்கலானார். பெரும்பாலும் நள்ளிரவில் நடக்கும் இத்தகைய உரையாடல்கள் தமது சிந்தனைகளை தூண்டிவிட்டதாகவும் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தெளிவினைத் தந்ததாகவும் இப்போது கூறுகிறார்.

ஒரு நாள் மாலைப் பொழுதில் சிறைக்கைதி அஹ்மத் உடன் ஏற்பட்ட மற்றொரு கலந்துரையாடலில் மனமுவந்து கூறும் ஷஹாதா என்ற ஒரு வரி வாக்குறுதி / பற்றுறுதியே ஒரு மனிதன் இஸ்லாத்தைத் தழுவிக்கொள்ளப் போதுமானதாகும் என்பதை அறிந்து கடும் வியப்பிலாழ்ந்தார். ["வணங்குதற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை; நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" என்பதே ஷஹாதாவாகும்]

உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாத டெர்ரி, ஆர்வம் மேலிட ஒரு பேப்பரையும் பேனாவையும் சிறைக் கம்பிகளின் கீழே தள்ளினார். சிறைக்கைதி அஹ்மதிடம் கூறி ஆங்கிலத்திலும் அரபி உச்சரிப்பிலும் அதனை எழுதிக் கொடுக்குமாறு கேட்டார். எழுதி வாங்கிய பேப்பரோடு குவாண்டனமோ சிறைச்சாலைத் தரையில் அமர்ந்து சப்தமிட்டு ஷஹாதாவை முன்மொழிந்தார் டெர்ரி. ஆம்; டெர்ரி இஸ்லாத்தைத் தழுவியது குவாண்டனமோ சிறைக் கொட்டடியில்!

குவாண்டனமோ பயங்கரங்கள்!

குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே!

2005இல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஹோல்டு ப்ரூக்ஸ் இக்கொடூரங்கள் பற்றிய தனது எண்ணங்களையும் அமெரிக்க ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார். கடந்த சில வாரங்களாக நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க இராணுவ வீரர்கள், விசாரணை அலுவலர்கள் கைதிகளிடம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்வது பற்றி விவரித்துள்ளார். அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 9/11 தாக்குதலுக்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு அமெரிக்கச் சிறைக் காவலர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

இத்துடன் நியூயார்க்கின் 9/11 சம்பவத்தில் புஷ்ஷின் அரசாங்கம் பெரும் சதியை அரங்கேற்றியுள்ளது என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மிகக் கொடியவர்கள் என்று பட்டப் பெயரிட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்படும் கைதிகளுக்கும், அவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனும் அளவிற்கு அவர்களின் நன்னடத்தை உள்ளது. இது பற்றி கடந்த 2002இல் பொறுப்பில் இருந்தபோதே தன் சக அலுவலர்களிடம் டெர்ரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவர்கள் ஏன் கைது செய்யப்பட வேண்டும். ஏன் இவர்கள் கீழ்த்தரமாகவும் கொடூரமாகவும் சித்ரவதை செய்யப்பட வேண்டும்? பின்பு ஏன் சில வருடங்களுக்குப் பின் குற்றமற்றவர் என்று வெளியேற்றப்பட வேண்டும்?

இத்தகைய கேள்விகள் குவாண்டனமோ சிறைச்சாலை அலுவலர்களிடையே ஆங்காங்கே உருப்பெற்று ஒரு சிலர் முதன் முறையாக அரசுக்கெதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.

விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர்.

"பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.

குவாண்டனமோ சிறை பற்றிய உண்மைகளை சத்தியமார்க்கம்.காம் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. சத்தியமார்க்கம்.காமின் முந்தைய ஆக்கங்களிலிருந்து சில சுட்டிகள்:

குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!

வல்லரசுகளின் விளையாட்டில் தொலைந்து போன டாக்டர் ஆஃபியா சித்திக்கீ

இஸ்லாமோ ஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 6)

மிக அதிக நபர்களைச் சிறையிலடைத்து அமெரிக்கா சாதனை

விக்கிபீடியாவில் CIA, FBI செய்த தகவல் குளறுபடி அம்பலம்!

இஸ்லாம் பரிந்துரைக்கும் அழகிய தோற்றத்தில் தற்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட டெர்ரி, தனது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் பெரும் குடிகாரனாகவும், மிகவும் சீர்கெட்ட நடத்தைகள் கொண்டு கழித்ததையும் எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுகிறார். கடந்த 2002இல் இராணுவத்தில் சேர்வதற்கு முன்பிருந்த சீர்கெட்ட வாழ்க்கையை இராணுவ ஒழுங்குமுறைகள் சீர்படுத்தவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

எந்த ஒரு வரையறையும் இன்றி, நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த தனது அவல வாழ்க்கையினை எண்ணிப் பார்க்கும் இவர், இராணுவம் தராத ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் தன்னுள் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

ஹிப்பிகளின் கலாச்சாரமான உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்ட உருவ அலங்காரங்களுடனும் பெரும் ஓட்டைகளை தனது காதில் இட்டு அதில் மரத்திலான தட்டுக்களை அலங்காரப் படுத்திக் கொண்டு திரிந்ததையும் நினைவுகூரும் இவர் "என் உடலில் இன்னும் எஞ்சியுள்ள இத்தகைய அசிங்கங்கள் என் கடந்த கால அவலத்தைப் பிறருக்கு எடுத்துக் கூற ஒரு சான்றாக இருக்கும்!" என்கிறார் உறுதியுடன்.

தமிழாக்கம்: அபூ ஸாலிஹா

ஞாயிறு, 29 மார்ச், 2009

சிறுத்தையை விட சிறுமையடைந்த முஸ்லிம்லீக்!


பாரம்பரிய வரலாறு கொண்டதும், ஜின்னா- காயிதே மில்லத், போன்ற மதிப்புக்குரியவர்களால் வளர்க்கப்பட்டதுமான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எனும் தாய்ச்சபை ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் பலமான அணியாகவும், சென்னை மாகாணத்தில் பலமுள்ள எதிர்கட்சியாகவும் இருந்த வரலாறு உண்டு. அத்தகைய சிறப்புடைய தாய்ச்சபை பின்னால்வந்த தலைவர்களின் சுயநல முடிவுகளால், பிறையை கொடியில் வைத்திருப்பதற்கு ஏற்றவாறு 'வளர்பிறை'யாக இல்லாமல் 'தேய்பிறை' யாக மாறி நிற்கிறது.

இப்படி கரையும் ஐஸ் கட்டியாக தாய்ச்சபை மாறியதற்கு காரணம் 'கொடுத்தவரைக்கும் லாபம்' என்று அரசியல் கட்சிகளிடம் அடமானம் ஆனதும்,உரிய நேரத்தில் தைரியமான முடிவுகள் எடுக்கதவரியதும்தான். உதிரிக்கட்சிகள் கூட எங்களுக்கு ஐந்து சீட்டு வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலையில் மறுபடியும் தி.மு.க. ஒதுக்கிய [பிச்சை போட்டது மாதிரி போட்ட] ஒரு சீட்டை 'மனநிறைவோடு' பெற்று வந்துள்ளது தாய்ச்சபை. வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் வாக்கு வங்கியுடைய சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகள்; தமிழகத்தில் முப்பது மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம் சமுதாய கட்சியான லீக்கு ஒரு இடம். இதுதான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

ஒரு தொகுதி ஒதுக்கியவுடன் தூக்கிவீசிவிட்டு சீறும் வேங்கையென தாய்ச்சபை வெளியேறி தனித்து போட்டி என அறிவித்து இருக்குமானால், தாய்ச்சபையின் மானமும் காக்கப்பட்டிருக்கும் அதோடு முஸ்லிம்கள் போடுவதை பொறுக்குபவர்களல்ல என்பதை அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கும். என்ன செய்ய! பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது கேரளாவில் காங்கிரசுடன் உள்ள உறவை முறிக்கவேண்டும் என்று பிரதான தலைவர்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புறந்தள்ளி காங்கிரஸ் உறவை தொடர்ந்தது தாய்ச்சபை. அதேபோல் இன்று கிள்ளுக்கீரையாக கருணாநிதி கருதியபோதும், தூக்கி போட்ட ஒரு எலும்பை கவ்விக்கிக்கொண்டு வாலாட்டுவதுதான் கடமை என தாய்ச்சபை கருதிவிட்டது போலும்.

சரி! வாங்கிய இந்த ஒரு சீட்டிலாவது தனி சின்னத்தில் நின்று வென்று தனித்தன்மையை நிலை நாட்டுவார்களா? அல்லது கடந்த முறை போன்று தி.மு.க. உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தது போன்று இந்த முறையும் தி.மு.க. உறுப்பினராக நாடாளுமன்றம் செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

thanks to : முகவை எஸ்.அப்பாஸ்

தமுமுக சார்பில் சமுதாய எழுச்சி மாநாடு

கோபி, மார்ச் 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கோபி நகரம் சார்பில் சமுதாய எழுச்சி மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோபி பெரியார் திடலில் வெள்ளிக்கிழமை நடந்தது.

ஈரோடு மாவட்டத் தலைவர் சையத் அகமத் பாரூக் தலைமை வகித்தார். நகர செயலாளர் அஜ்ரத் அலி வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் ரிப்பாயி, தலைமைக் கழகப் பேச்சாளர் செய்யது, ஈரோடு மாவட்ட செயலாளர் முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் பேசினர்.

இடஒதுக்கீட்டை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கோபி பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு விவசாயிகளின் நலன் கருதி குளிர்சாதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.

லக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு வருவாய்துறையால் மயானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சென்ட இடம் போதுமானதாக இல்லை. எனவே, அதிக இடம் ஒதுக்க வேண்டும். கோபியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட நகர கிளைச் செயலாளர்கள், ஜமார்த்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் முஜிப்புர் ரகுமான் நன்றி கூறினார்.

நன்றி : தினமணி

அதிக தொண்டர் பலம் உள்ள கட்சி - ம.ம.க

சென்னை மார்ச். 29- மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதியும் & ஒரு மேல் சபை சீட்டும் கேட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே தருவதாக கூறியது. இதை ஏற்க மனித நேய மக்கள் கட்சி மறுத்து விட்டது.

இதனால் தி.மு.க. கூட்டணியில் மனித நேயமக்கள் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரத்தில் அந்த கட்சியுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மனித நேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நாளை மாலை நடக்கிறது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல்சமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது்-

மாறிவரும் தமிழக அர சியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மனித நேயமக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட விருக்கிறது. எந்த நிலையிலும் தன்மான அரசியலை மனித நேய மக்கள் கட்சி விட்டுக் கொடுக்காது என்பதை தொண்டர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி. மு.க.வுடன் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே மனித நேயமக்கள் கட்சியை .தி.மு.. தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.



முஸ்லிம் அமைப்புகளில் அதிக தொண்டர் பலம் உள்ள கட்சி மனிதநேய மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி : மாலைமலர்

வருண்காந்தி மீது தேசியபாதுகாப்புச்சட்டம் - மாயாவதி ஆலோசனை

தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்பை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிலிஃபிட் தொகுதி வேட்பாளர் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாயாவதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது

வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பார(தீ)ய ஜனதா குண்டர்கள்டன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்


கருணையுள்ளம் உடைய தேசத் தலைவர்

கலிஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள். கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் ரளியல்லாஹு அன்ஹு: "குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?"

பெண்மணி: "அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்"

உமர் ரளியல்லாஹு அன்ஹு: "அடுப்பில் என்ன இருக்கிறது?"

பெண்மணி: "அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்".

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, "அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?" என்று வினவினார்.

"முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் (ரளியல்லாஹு அன்ஹு) எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, "இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!" என்றார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. "என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!"

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் ரளியல்லாஹு அன்ஹு

அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெண்மணியிடம் "அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா" என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், "உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்". அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!உமர் ரளியல்லாஹு அன்ஹு

அவர்களும் "தாம் இன்னார்" என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்" என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், "அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்."

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا

'அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!'. (அல்குர்ஆன் 18:07,08)


இவ்விரு வசனங்களில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!
மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும். இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.


எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச்செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான். இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது. இதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான். திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.


'அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரிச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வௌ;வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன'. (திருக்குர்ஆன் 6:99)


'பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய், கறி தானியங்களையும் ஒன்று போலவும் வௌ;வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை'. (அல்குர்ஆன் 6:141)


'இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும் கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான், இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன'. (அல்குர்ஆன் 13:04)


'அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்க) அத்தாட்சி இருக்கிறது'. (அல்குர்ஆன் 16:11)
'இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)'. (அல்குர்ஆன் 23:20)


'அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்'. (அல்குர்ஆன் 26:07)
'அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்'. (அல்குர்ஆன் 27:60)


'அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா? - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால்நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?'. (அல்குர்ஆன் 32:27)
'பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்'. (அல்குர்ஆன் 36:36)


'நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வௌ;வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது'. (அல்குர்ஆன் 39:21)


'(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?'. (அல்குர்ஆன் 56:63,64)
கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.


இனிப்பான மாம்பழத்தை மாமரம் உற்பத்தி செய்கிறது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை. அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்க வில்லை. ஊற்றுகின்ற தண்ணீரிலோ வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை. ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் 'சூப்பர் பவர்' உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.
இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்! அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.
அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை. மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லை. எப்போதும் தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும். நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயங்களாகத் தோன்றாது.


மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இதை மட்டும் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான். நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.


உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே! உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா? உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா? மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா? காற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் - அனலாய் கொதிக்கும் பூமியில் - மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?


இதற்கு இயற்கை என்று எவரும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.
இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு 'இயற்கை' என்று விடை கூற முடியாது. யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.

இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

thanks to : darulsafa.com

திமுகவுடன் தொகுதி உடன்பாடு மனிதநேய மக்கள் கட்சியின் நிலை என்ன?

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு முதல் கட்ட தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மனித நேயக் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக திமுக அறிவித்துள்ளது. தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் வெளியூரிலும், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளிநாட்டிலும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வெளியேயும் இருக்கின்றார்கள். நிர்வாகிகள் அனைவரும் திங்கட்கிழமை சென்னை திரும்புகிறார்கள். திங்கட்கிழமை கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடைபெறலாம் எனத் தெரிகிறது.


27.03.09 காலையில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பி. அப்துஸ் சமது ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீரசாமி. துரை முருகன். பொன் முடி ஆகியோருடன் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர். அன்று மாலை கோபாலபுரத்தில் கலைஞருடன் மனிதநேய மக்கள் கட்சியின் குழு சந்தித்து பேசியது. அப்போது இறுதியாக மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. திமுக தரப்பில் ஒரு தொகுதி மட்டும் தான் என்ற நிலையில் உறுதியாக நின்றது.


28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி தொண்டர்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.

சமுதாயத்தின் தன்மானம் முக்கியம் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே ஒரு தொகுதியை ஏற்பதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.


இறைவன் நாட்டப்படிதான் அனைத்தும் நடக்கும் என நம்புகிறோம்.


தலைமை நிர்வாக குழு
மனிதநேய மக்கள் கட்சி



thanks to : tmmk.in

சனி, 28 மார்ச், 2009

11வது ஜுபைல் இஸ்லாமிய மாநாடு - அழைப்பிதழ்


பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும்



குஜராத்; காவி காரிருளை கிழித்துக்கொண்டு ஒரு நீதியின் ஒளிக்கீற்று!


குஜராத்தில் பயங்கரவாதி நரேந்திரமோடியின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில், சுமார் 3000.முஸ்லிம்கள் கரிக்கட்டையானார்கள். முஸ்லீம் சகோதரிகளின் கற்புகள் சூறையாடப்பட்டது. முஸ்லிம்களுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் மோடியின் மிரட்டலால், குற்றவாளிகள் தப்பித்தாலும் நாளடைவில் மனிதநேயமிக்கவர்களின் முயற்சியால் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவது, அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் குஜராத் முஸ்லிம்களுக்கும், எம் சொந்தங்களின் நிலையை எண்ணி உள்ளத்தில் புழுங்கும் எம்போன்ற முஸ்லிம்களுக்கும் சட்டத்தின்மீதும், நீதியின் மீதும் சற்றே நம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த 2002 .ல் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம் இனப்படுகொலையில்,பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக குஜராத் பெண் அமைச்சர் மாயாபென் மற்றும் வி.ஹெஜ்.பி தலைவர் ஜெய்தீப் பட்டேல் ஆகியோர்மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் மாயாபென் தலைமறைவானதோடு, தான் கைது ஆகாமல் தப்பிக்க முன்ஜாமீனும் பெற்று இருந்தார். இதற்கிடையில் அவரது முன்ஜாமீனை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதி வகேலா அவர்கள், 'மத ரீதியான வன்முறை செயலகள் தீவிரவாத செயல்களுக்கு சமம்;இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எனவே இது போன்ற சம்பாவங்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் கூறினார். தனது ஜாமீன் ரத்தானதையடுத்து, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்த மாயாபென் மற்றும் ஜெய்தீப் படேல் ஆகியோர் சிறப்பு புலனாய்வு போலிஸ் அதிகாரிகள் முன் சரணடைந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை போன்ற பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அதிலும் குறிப்பாக 'மோடியின் ஆசியோடுதான் இந்த முஸ்லீம் இனப்படுகொலையை நிகழ்த்தினோம்' என்று தெஹல்கா பேட்டியில் ஒரு பயங்கரவாதி கூறியிருந்தான். எனவே, தெஹல்கா பேட்டியின் அடிப்படையில் மோடியையும் விசாரணைக்கு உட்படுத்தி நீதியை நிலைநாட்டினால்தான் பயங்கரவாதம் நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும். எம்மக்கள் கருகிவிட்டாலும், நீதி கருகாமல் காக்கப்படும் என்றே முஸ்லிம்கள் நம்புகிறோம்.

ஏப்ரல் 1 முதல் எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின் ஏடிஎம்மில் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதன்மூலம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இப்போது பிடிக்கப்படும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. எனவே, அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் எதனுடைய ஏடிஎம்மிலும் கார்டை நுழைத்து கட்டணம் இன்றி பணத்தை எண்ணியபடி வெளியேறலாம்.

தவிர, பண இருப்பை அறிவது, சுருக்கமான கணக்கு ஸ்டேட்மென்ட்டின் பிரின்ட் பெறுவது என அனைத்து சேவைகளும் ஏற்கனவே உள்ளதுபோல இலவசமாக நீடிக்கும்.

எனினும் இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பெரிய வங்கிகளுக்கு லாபம்: ஏடிஎம் சேவைக்காக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஆண்டுதோறும் வங்கிகள் ரூ.99 வரை பிடிக்கின்றன.

அதில் மற்ற எந்த வங்கிகளின் ஏடிஎம்மை தனது வாடிக்கையாளர் பயன்படுத்தினாலும் அவ்வங்கிகளுக்கு கட்டணம் செலுத்துகின்றன. அதன்படி எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற பெரிய வங்கிகள் அதிக ஏடிஎம்களை கொண்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தும் பிற வங்கி வாடிக்கையாளர்கள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.

பொதக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம்



திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் கடந்த 21.03.09 மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.




மமகவின் பொருளாளர் ஹாருன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக்கூட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இன்னும் 2 நாட்களில் நல்ல முடிவு : ஜவாஹிருல்லாஹ் தகவல்


சென்னை: ''தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்,'' என ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

அதன்பின் ஜவாஹிருல்லாஹ் கூறுகையில், ''லோக்சபாத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்க மாட்டோம். எங்களது கோரிக்கையைக் கேட்ட முதல்வர், அதை கனிவுடன் பரிசீலிப்பதாகக் கூறினார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்,'' என்றார்.

நன்றி: தினமலர்

ரூபாயின் வீழ்ச்சியும் அதன் விளைவுகளும்!

[பண வீக்கம் குறைந்து வரும் அதே வேளையில் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் குறித்து சந்தேகம் நிலவுவதால், அன்னிய முதலீடுகள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பச் செல்லத் தொடங்கிவிட்டன. குறிப்பாக டாலர் மிக அதிக அளவில் அமெரிக்காவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

இதனால் மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிறது.]

சர்வதேசச் சந்தையில் ஒருநாட்டின் மதிப்பு அந்நாட்டு பணத்தின் மதிப்பைப் பொருத்தே அமைகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாட்டின் பணம் எந்த அளவுக்கு மதிப்புடையது என்பதைக் கொண்டே பெரும்பாலும் சர்வதேச வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சமீபகாலமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது. சிலமாதங்களுக்குமுன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50-க்கு மேல் சரிந்தது.

இதனை திடீரென ஒரேநாளில் ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதி விட முடியாது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பொருளாதார நடவடிக்கைகளில் படிப்படியாக ஏற்பட்ட பின்னடைவுதான் இதற்கு முக்கியக் காரணம்.

உலகமெங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தன.

மேலும் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது. இவைபோன்ற காரணங்களால் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் குறைந்தது.

கடன் சந்தையில் நிலவி வரும் அச்சம் காரணமாக இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் கடன் வாங்க முடியாமல் போனது. இதனால் பணவரத்தும் குறைந்தது.

அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக்குப் பல சலுகைகள் அளித்தாலும் நிலைமை எதிர்பார்த்த அளவுக்கு மேம்படவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தின் விளைவாக இந்தியப் பொருள்களின் ஏற்றுமதியும் பெருமளவு குறைந்தது.

அதேசமயம், இறக்குமதியின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதனால் அன்னியச் செலாவணி வரத்து குறைவதுடன் இந்தியாவில் இருக்கும் அன்னிய முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

உலகெங்கும் நிலவிவரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணமாக அன்னியச் செலாவணி வைத்திருப்போர் பலரும் அதன் பாதுகாப்புக் கருதி அமெரிக்காவுக்கு (யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதற்கு ஏற்ப) எடுத்துச் செல்கின்றனர்.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் ரூ. 11,000 கோடியை பங்குச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளன.

இதுதவிர,
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வருங்காலம் குறித்து சந்தேகம் நிலவுவதால், அன்னிய முதலீடுகள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பச் செல்லத் தொடங்கிவிட்டன. குறிப்பாக டாலர் மிக அதிக அளவில் அமெரிக்காவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

இதனால் மற்ற உலக கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை என்றாலும் ஏற்றுமதி அளவு குறைவதால் அவர்களும் மகிழ்ச்சியடைய முடியாது. இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இதனால் ஓரளவு நன்மை ஏற்படலாம். ஆனால் பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக ஊதியக் குறைப்பு, ஆள்குறைப்பு என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்கு இதனால் பெரிய பயன் இருக்க முடியாது.

அதேநேரத்தில் இந்தியாவில் இறக்குமதியாகும் பொருள்களின் விலைகள் இன்னும் அதிகரித்து விலைவாசி மேலும் உயரும்.

ஒருநாட்டின் கரன்சி மதிப்பு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதன் அடிப்படையில்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய முன்வரும். அந்தவகையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதும் குறைந்து விடும். இதனால் உள்நாட்டில் பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும்.

ஏற்கெனவே வெளிநாடுகளில் அதிக அளவு கடன் வாங்கியுள்ள இந்திய நிறுவனங்கள் கடன், வட்டியைத் திரும்பச் செலுத்த சிரமப்படும். ஆக மொத்தத்தில் ரூபாயின் மதிப்புக் குறைவு, நாட்டின் பொருளாதார நலனுக்கு ஏற்புடையதல்ல என்பது மட்டும் உண்மை.

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்றவை இந்தியாவில் இப்போது பொருளாதார தேக்கநிலையாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இது பொருளாதார வீழ்ச்சியாக உருவெடுக்கக் கூடிய ஆபத்தும் உள்ளது.

பட்ஜெட் பற்றாக்குறை 6 சதவீதமென இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மதிப்பிட்டுள்ளார். கடன் பத்திரங்கள், உர மானியங்களும் இதில் சேர்க்கப்படவில்லை. அவ்விதம் சேர்த்தால் பற்றாக்குறை 11 சதவீதத்துக்கு மேல் உயரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தேர்தலை மையமாக வைத்து வரிச்சலுகை, கூடுதல் வரிவிதிப்பு ஏதுமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடுத்து வரும் புதிய அரசுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

நன்றி: சு. வெங்கடேஸ்வரன், தினமணி

மதவாதத்திற்கு விழுந்த மரண அடி!

சஞ்சய் காந்தி, மேனகா காந்தி தம்பதியினரின் ஒரே மகன் வருண்காந்தி. நேரு குடும்பத்தில் இருந்து மதவாதத்திற்கு தனி பாதை போட்டு வந்திருக்கிறார். உ.பி. பிலிபிட் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர். மேனகா காந்தி தன் மகனுக்காக விட்டுக் கொடுத்த அந்த தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்று முஸ்லிம்களுக்கு எதிராக பேசியிருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார். அவரது பேச்சு பதியப்பட்ட ஒலிப்பதிவை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. அதே கையோடு, வருணுக்கு கட்சியில் டிக்கெட் தரவேண்டாம் என்று பாஜகவுக்கு அறிவிக்கையும் அனுப்பியிருக்கிறது.


இதன்மூலம், அரசியல் ஆடுகளத்தில் பாஜகவுக்கு களமிறங்கிய நேரு குடும்பத்து விக்கெட்டை தேர்தல் ஆணையம் வீழ்த்தியுள்ளது. சீக்கிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மேனகா. இந்து மதவெறியராக வருணை வளர்த் திருப்பதில் ஒரு தாயாக மேனகா தோல்வி கண்டுள்ளார். மிருகங்கள் வதைபடுவதைக் கண்டு பதை பதைக்கும் மேனகா காந்தி தன் மகனின் வெட்டு பேச்சு பற்றி மௌனம் காப்பது இரக்க உணர்ச்சி பற்றிய அவரது மதிப்பீட்டை ஆய்வு செய்கிறது.


வருணின் தந்தையான சஞ்சய் காந்தி (இந்திரா காந்தியின் இளைய மகன்) அவசர நிலை காலத்தில் மேற்கொண்ட மனிதவிரோத செயல்களை இன்றைய தினத்தில் வரலாற்றுப் பக்கங்களே அறியும். சஞ்சய் காந்தியின் கோர மரணத்திற்குப் பின் மாமியாருடன் (இந்திரா காந்தி) நேர்ந்த மோதலால் குடும்பத்தை விட்டும், காங்கிரஸை விட்டும் வெளியேறினார் மேனகா. 90களுக்குப் பிறகு பாஜகவில் சீட் வாங்கி எம்.பி.யானார். அந்த தொடுதலில் இருந்து மதவெறி அரசியல் வருணுக்கும் தொற்றியிருக்கிறது. மோத்திலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று மிதவாதப் பாரம்பரியத்தில் இருந்து திசைமாறி இன்று பாஜகவின் மதப்பசிக்கு வருண் ப­யாகி இருக்கிறார். வம்பில் மாட்டிக் கொண்டார் வருண் என்று தெரிந்ததும் அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று முத­ல் நழுவிக்கொண்டது பாஜக. பாஜக சொல் கேட்டு சொந்த கட்சிக்குள் தடுக்கி விழுந்தவர்கள் பலர் உண்டு. உதாரணம் அன்று கல்யாண் சிங், இன்று வருண் காந்தி.


வருண் காந்தி அரசியல் அரிச்சுவடியின் அறிமுகப் பக்கத்தையே இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. அதிரடியாகப் பேசி தடாலடி யாக பிரபலப்பட அவர் விரும்பியிருக்கலாம். ஏற்கனவே விரித்துவைத்த வலையில் வருண் லாவகமாக வந்து சிக்கிக் கொண்டார் என்றும் சொல்லலாம்.


தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு பலருக்கும் எச்சரிக்கையாகவும் உள்ளது. முன்னர், மதவெறியைத் தூண்டி பேசினார் என்று 6 ஆண்டுகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய பால்தாக்கரேவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.


மதவெறி பேச்சாளர்கள் ஒரு கட்சிக்கோ, இயக்கத்துக்கோ தலைவராக, பொறுப்பாளராக நீடிக்கக் கூடாது என்றும் அவ்வாறு நீடிக்கும் கட்சி தடை செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் துணிச்சலுடன் அறிவிக்க வேண்டும்.
ஒரு கட்சி அறிவிக்கும் வேட்பாளர் குறித்து கருத்துச் சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று பாஜக கூறியிருக்கிறது. இதில், வருணை காப்பாற்றுவதைவிட, இத்தகைய மதவெறிப் பேச்சுக்களைக் காப்பாற்றுவது பாஜகவுக்கு அவசியப்படுகிறது.


எடுத்துரைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கும் கூட உரிமை இல்லை என்றால் பின்னர் இவர்களை யார்தான் இடித்துரைப்பது? 2000 உயிர்களை பலி கொண்ட நரேந்திர மோடி மீண்டும் முதல்வராவதைத் தடுக்க இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கோ, நீதித்துறைக்கோ அதிகாரம் இருந்ததாகத் தெரியவில்லை.
பாபர் பள்ளியை இடித்துவிட்டு ஆரத்தழுவி ஆழிங்கணம் செய்யும் அத்வானி, உமாபாரதியின் ஆனந்த தாண்டவத்தை, பளிங்கு திரைகளில் பார்த்த பிறகும் அவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தின் தூண்களுக்கு வலுவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்துக்கும் அனுமதி இல்லை என்றால் மதவெறியிடம் இருந்து மக்களாட்சியை யார், எப்படிக் காப்பாற்றுவது?