செவ்வாய், 10 மார்ச், 2009

கோவிலிலிருந்து தலித் மாணவிகள் வெளியேற்றம்!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கோயிலில் சேவைப் பணி செய்ய வந்த தலித் மாணவிகளை கோயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒக்காடு மேலையூர் கிராமத்தில் திருவிளங்கி, ஈசுவரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோயிலில் தூய்மைப்பணி மேற்கொள்ள, ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் சென்றுள்ளனர்.

அவர்கள் கோயிலில் தூய்மைப் பணி செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் தாழ்த்தப்பட்ட மாணவிகள் கோயிலுக்குள் இருக்க அனுமதி இல்லை. எனவே, தாழ்த்தப்பட்ட மாணவிகள் வெளியேறி விடுங்கள் என்றும், உங்களால் கோவிலின் புனிதம் கெட்டு விடும் என்று கூறி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் புகார் சொல்லி அழுதுள்ளனர்.

கோவிலுக்கு தூய்மைப்பணி செய்ய வந்த மாணவிகளை, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: