சப்ரன் ஹபீப்
தமிழகத்தில் பாஜக அநாதையானதைப் போலவே அகில இந்திய அளவில் பாஜக அநாதையாகும நிலையும் ஏற்பட்டிருக்கிறது,
தமிழகத்தில் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்து கைகழுவிவிட, அதேகதியாகி நிற்கிறது பாஜக.
தமிழகத்திலாவது பரவாயில்லை, பிற கட்சிகளின் தோளில் ஏறி நான்கைந்து இடங்களைத்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கும், அந்த இடங்களை மட்டும்தான் பாஜக இழந்திருக்கும் தமிழகத்தில் மட்டும். ஆனால் அகில இந்திய அளவில் கைவிடப்பட்ட சக்தியாக பாஜக விழி பிதுங்கி நிற்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என ஓட்டம் பிடித்தன.
ஓட்டம் பிடித்த கட்சிகளில் முதடத்தை பிடித்தது பிஜு ஜனதா தளம். 11 ஆண்டுகள் ஒரிசாவை ஆண்ட பிஜு ஜனதா தளம் பாஜகவுடனான உறவை முறித்தது. பிஜு ஜனதா தளமும் பாஜகவும் ஒரிசாவில் மதவாதக் கொள் கையைப் புகுத்தி மாநிலத்தை சீரழித்தன.
பாஜகவுடன் சேர்ந்ததன் பலனாக ஒரிசாவில சங்பரிவார் கும்பல் இழைத்த அனைத்து குற்றங்களுக்கும் பிஜு ஜனதா தளமும் உடந்தையாக இருக்க வேண்டிய அவல நிலையை அடைந்தது.
11 ஆண்டுகள் ஒரிசா மாநிலத்தை ஆட்சி செய்த பிஜு ஜனதா தளம் மக்களின் அதிருப்தியை சம்பாதித் திருந்தது. பாஜகவோ தனது மக்கள் விரோதக் கொள்கையால் செல்வாக்கை இழந்தது. செல்வாக்கிழந்த இரு அணியும் கூட்டணியை முறித்துக் கொண்டன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாகவே பாஜகவின் தேர்தல் முடிவுகள் தெரிநது விட்டன என்கிறீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக