கோபி, மார்ச் 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கோபி நகரம் சார்பில் சமுதாய எழுச்சி மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோபி பெரியார் திடலில் வெள்ளிக்கிழமை நடந்தது.
ஈரோடு மாவட்டத் தலைவர் சையத் அகமத் பாரூக் தலைமை வகித்தார். நகர செயலாளர் அஜ்ரத் அலி வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் ரிப்பாயி, தலைமைக் கழகப் பேச்சாளர் செய்யது, ஈரோடு மாவட்ட செயலாளர் முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் பேசினர்.
இடஒதுக்கீட்டை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கோபி பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு விவசாயிகளின் நலன் கருதி குளிர்சாதனக் கிடங்கு அமைக்க வேண்டும்.
லக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு வருவாய்துறையால் மயானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சென்ட இடம் போதுமானதாக இல்லை. எனவே, அதிக இடம் ஒதுக்க வேண்டும். கோபியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நகர கிளைச் செயலாளர்கள், ஜமார்த்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் முஜிப்புர் ரகுமான் நன்றி கூறினார்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக